மதுரை,
டிச 30 : இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல
தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய
வேண்டும். இதன்
மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல்
குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்
கூறியுள்ளார்.
இதுகுறித்து
அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம்.
கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக
இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.
இதேபோல
தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது
அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப
முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார்
ஆதீனம்.
தமிழகப் பெண்கள் ஆபாச உடை அணிவதாகவும் அனைவரும் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தாம் பேசியது சரியே என்றும் பெண்கள் அமைப்பிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். அருணகிரிநாதரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் அருணகிரிநாதரோ தாம் பேசியது சரியே மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். "நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது.
அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றார் அவர்.