தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

மாணவர்களுக்கான சாதித்து காட்டுவோம் நிகழ்ச்சி கோவை மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ கோவை மாவட்ட மாணவரணி சார்பாக 10 வது மற்றும் 12 வது படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, எதிர்வரும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற சாதித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி 1-12-13 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் கோவை, கரும்புக்கடை J.B மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கும், தேர்வு காலங்களில் மாணவ, மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பதற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர்கள் S.ஷமீம் அப்துல் காதர், மற்றும் M.Y.உமர் ஃபாரூக் அவர்களும் தகுந்த விளக்கமளித்தனர். மேலும் சாதித்துக்காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த முக்கிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.