தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

............இஸ்லாமியர் இடஒதுக்கீடு - பரிணாமங்கள் ............

இடஒதுக்கீடு சாத்தியமல்ல ! என்று விரக்தியில் இருந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு சாத்தியமே! என்ற நம்பிக்கை உணர்வை மட்டுமல்ல நம்பிக்கை ஒளியையும் ஊட்டி, அதற்கான வழியைக் காட்டியவர்கள் தவ்ஹீது கொள்கையினர்தான். !

அந்த இடஒதுக்கீட்டு கோரிக்கை பயணத்தில் அவர்கள் கண்ட முதல் மைல்கல்தான் முஸ்­லிம்களின் வாழ்வுரிமை மாநாடு. !

1999 ல் அவர்கள் சென்னை கடற்கரையில் கூட்டிய இம்மாநாடு ஆட்சியாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரிடம் இஸ்லாமிய சமுதாயத்தின் இடஒதுக்கீடு அவசியத்தை உணர்த்தியது.

அரசியல் கட்சிகளின் 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு இடம்பிடிக்க இம்மாநாடே வழிகோ­லியது.

தவ்ஹீது வாதிகள் நடத்திய 2004 தஞ்சைப் பேரணி அரசியல் கட்சிகள் ஆட்சியாளர்கள் கவனத்தை மேலும் ஈர்த்தது.

குடந்தையை குலுக்கிய டிஎன்டிஜே வின் இடஒதுக்கீடு கோரிக்கைப் பேரணி அப்போதைய அதிமுக அரசையே ஆணையம் அமைக்க வைத்தது.

டிஎன்டிஜே வின் தொடர் முழக்க தர்ணா பேரணி திமுக அரசின் மவுனத்தையும் மரண உறக்கத்தையும் கலைத்தது.

டிஎன்டிஜே நடத்திய நாடுதழுவிய சிறைநிரப்பும் போராட்டம் மாநில அரசை மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கச் செய்தது.

இறையருளால் மாநிலத்தில் இவ்வாறு இடஒதுக்கீடு பெற்றுத் தருவதில் பலசோதனைகளைக் கடந்து சாதனை படைத்த டிஎன்டிஜே போராட்ட களத்தில் போர்க்குணத்துடன் நின்று இடஒதுக்கீட்டை வென்று தந்தது.

இன்றைய தேர்தலை குறியாக கொள்ளாமல் நாளைய தலைமுறையை குறியாகவும் வெறியாகவும் கொண்ட டிஎன்டிஜே, மத்தியில் ரங்கனாத் மிஸ்ரா பரிந்துரைப் படி பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு பெற்றுத் தர மீண்டும் ஜூலை-4 சென்னை தீவு திடலில் 15 லட்சம் முஸ்லிம்களை ஒன்று திரட்டியது.

மத்தியில் 10 சதவிகிதமும் மாநிலத்தில் 7 சதவிகிதவும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி-14, 2012 அன்று இடஒதுக்கீடு என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டியது...

ஜனவரி-28, 2014 ஒட்டு மொத்த இந்திய மீடியாக்களும், ஆட்சியாளர்களும் தமிழகத்தை திரும்பி பார்க்க வைக்கும் நாள்....; இன்ஷா அல்லாஹ்