தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

ஜனவரி 28 இட ஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம் கோவை

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது, முஸ்லிம்களின் நிலை இந்தியாவில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அந்த தகவலில் உள்ளது.

புள்ளி விபரங்கள்: 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை பள்ளிக்கூடத்துக்கு செல்லக்கூடிய முஸ்லிம்கள் 65%பேர்,

5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை செல்லக்கூடிய முஸ்லிம்கள் 100பேர்களில் 15% முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்
85%பேர் 5ஆம் வகுப்புக்குமேல் பள்ளிக்கு செல்வதில்லை,

10ஆம் வகுப்புவரை செல்பவர்கள் 10 முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்,

12ஆம் வகுப்புவரை செல்பவர்கள் 4 முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள்,

பட்டபடிப்பு படித்தவர்கள் 100க்கு 3 முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்,

இதில் கையெழுத்து போடத்தெரிந்தவர்கள் 100 முஸ்லிம்களில் 59பேர்தான் உள்ளனர்,

இந்த நிலையில்தான் முஸ்லிம்களின் கல்வி உள்ளது.

இதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சி இடஒதுக்கீட்டை போராடி பெற வேண்டும். 


இன்ஷாஅல்லாஹ் 


வருகின்ற ஜனவரி 28, 2014 அன்று கோவை, சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய 4 பெருநகரங்களில் சிறைசெல்லும் போராட்டம் நடைபெற உள்ளது,

அதில் அனைத்து முஸ்லிம்களும் குடும்பத்துடன் பங்கு பெற்றால்தான் இடஒதுக்கீட்டை வெல்ல முடியும்.

அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

கோவை மாவட்டம்.