தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

காவல்துறை மிருகங்களை கண்டித்து அவசர தந்தி அனுப்ப வேண்டி வாசகங்கள்!

பின் வரும் வாசகம் அடங்கிய அவசர தந்தியை அனைவரும் இதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு உடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்
Please take action against Chennai Triplicane Assistant commissioner of police Senthil Kumaran and Chintadripet D.C Mr.Giri who unlawfully enter Muslim’s houses in midnight and abuse the Muslim women and arrested innocent Muslims, also lathicharge against the Muslims who condemn this criminal offense of the police
முதலமைச்சர் முகவரி :
Chief Minister’s Special Cell
Secretariat, Chennai 600 009
கவர்னர்
Dr. K. Rosaiah
Governor of Tamil Nadu
Raj Bhavan, Chennai – 600 022
தலைமை செயலாளர் : Chief Secretary
Thiru Debendranath Sarangi IAS
Chief Secretary to Govt
Secretariat, Chennai – 600 009
உள்துறைச் செயலர் : Home Secretary
Thiru R Rajagopal IAS
Principal Secretary to Government,
Secretariat, Chennai – 600 009
டிஜிபி
Mr. K. Ramanujam, IPS
Director General of Police
Chief Office, Dr. Radha Krishnan Salai, Chennai – 600 004.

காவல் துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்
வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்
நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்
முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.
பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.
அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்

 

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்




சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்!

மாயன் நாட்காட்டியின் அடிப்படையில் கடந்த 21-12-2012 அன்று உலகம் அழியும் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது. ஊடகங்களிலும் இது குறித்து தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில்இந்த மூடநம்பிக்கையை அகற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகமெங்கும் விழிப்புணர்வு பரப்புரைகளை துண்டு பிரசுரங்கள் விநியோகம் சுவரொட்டிகள் மூலம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், சென்னை ஜாம்பஜார் கிளை நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் இந்து மதத்தை இழிவாக குறிப்பிட்டுள்ளதாக கூறி,    துண்டு பிரசுரம்  விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத்விநாயகர் சதுர்த்தி விழாக்குழு உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்கள், சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிர்வாகிகளை கைது செய்யவேண்டும் என பிரசுரம்  வெளியிட்டனர்.

மேலும்  விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், ஜாம்பஜார் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில்காவல்துறையினர் யாகூப் என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது, பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நுழைந்து அராஜகமாக சோதனை செய்த காவல்துறையினரை  கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நேற்று மதியம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கானோர் திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, காவல்துறை கூடுதல் ஆணையாளர்  ரவிகுமார், உதவி ஆணையாளர்கள் பவானீஸ்வரி, கிரி, ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான  காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

திருவல்லிக்கேணி  காவல் நிலையம் முன்பு போராட்டம் செய்த அனைவரையும் காவல்துறையினர்  கைது செய்து  வாகனத்தில் ஏறும்படி கூறினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் அடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர்  தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து  சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் ஆண்களும் பெண்களும், ஏராளமானோர் அங்கு வந்து குவியத் தொடங்கினர். அவர்களில் 500-க்கும்  மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். மீதமுள்ளவர்கள் காவல்துறைக்கு  எதிராக முழக்கம் எழுப்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் யூசுப், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"டிசம்பர் 21-ந் தேதி உலகம் அழிந்துவிடும் என்று ஏற்பட்ட வதந்தியால் பொதுமக்கள் பலர் அச்சமடைந்தனர். இதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜாம்பஜார் கிளை நிர்வாகிகள் துண்டு பிரசுரம் வெளியிட்டனர். இதுகுறித்து இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், யாகூப் என்பவரை கைது செய்துள்ளனர்.

ஆனால் இந்த துண்டு பிரசுரத்துக்கு தொடர்பே இல்லாத மைலாப்பூர் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் வீட்டுக்குள் நடு இரவில் புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், காவல்துறை உதவி ஆணையாளர் செந்தில்குமரன் அத்துமீறி உள்ளே நுழைந்து சோதனை செய்துள்ளார்.

பிற மதத்தை புண்படுத்தும் விதமாக செயல்பட்டு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தியுள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.
 

வெள்ளி

12 மாடுகள் குர்பானி – ஆசாத் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக இந்த ஆண்டு (2012) 12 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

கோவை ஆசாத்நகர் கிளை ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.

திங்கள்

வெள்ளி கிழமை ஜும்ஆ நாளில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் ? அத்தஹிய்யாத் அமர்வுதான் ஓர்விளக்கம்




இரண்டு உரைகளுக்கு இடையில் இமாம் அமரும் போது துஆ செய்ய வேண்டுமா?

பதில் :
ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கு இடையில் இமாம் சிறிது நேரம் அமருவார். இந்த சிறிய இடைவெளியில் பிரார்த்தனை செய்தால் அந்த பிரார்த்தனை ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில் சிலர் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்கள். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
1409و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ح و حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا مَخْرَمَةُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه  ُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاة رواه مسلم

அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ  அவர்கள் கூறுகிறார்கள் :
என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?'' என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அது, இமாம்  அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.
முஸ்லிம் (1546)
இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று இந்த ஹதீஸில் உள்ளது. இமாம் அமர்வது என்பது மிம்பரில் ஏறியவுடன் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா? அல்லது இரண்டு குத்பாக்களுக்கு இடையே அமர்வதைக் குறிக்கிறதா? அல்லது அத்தஹிய்யாத்தில் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா என்பதை நாம் ஆய்வு செய்து சரியானதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் பாங்கு சொல்லப்படும். அப்போது துஆ செய்ய கூடாது பாங்குக்குத் தான் பதில் கூற வேண்டும். அதன் பின் உரை ஆரம்பமாகும். அப்போது உரையைக் கேட்க வேண்டுமே தவிர துஆ செய்து கொண்டிருக்கக் கூடாது. அதன் பின் தொழுகை ஆரம்பமாகி விடும். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யும் நேரம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்காது.
இரண்டு குத்பாக்களுக்கு இடையே இமாம் அமர்வது சிறிதளவு நேரம் தான். அமர்ந்து உடனே எழுந்து விடுவதாலும் அதன் பின்னர் இரண்டாம் உரையும் அதைத் தொடர்ந்து தொழுகையும் ஆரம்பமாகி விடும். எனவே இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்க முடியாது. ஏனெனில் இமாம் இடையில் அமர்ந்தடு முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யாமல் வேறு காரியங்களில் ஈடுபடும் அவசியம் உள்ளது.
இமாம் உரையாற்றும் போது அவருடைய உரையை கவனமாக கேட்பது மக்களின் பொறுப்பாகும். உரையில் கவனம் செலுத்தாமல் வேறு விசயத்தில் கவனம் செலுத்தினால் அந்த விசயம் நல்ல விசயமாக இருந்தால் கூட ஜும்ஆவின் நன்மையை இழக்க நேரிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
883 حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ ابْنِ وَدِيعَةَ عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى  رواه البخاري

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக்கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக்கொள்கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பிறகு இமாம்  உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.
இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
            புகாரி (883)
934 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் நீ "மௌனமாக இரு!' என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி (934)
இமாம் உரையாற்றத் தொடங்கிவிட்டால் வானவர்கள் வேறு காரியங்களில் ஈடுபடாமல் அந்த உரையை கேட்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
929حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ وَقَفَتْ الْمَلَائِكَةُ عَلَى بَابِ الْمَسْجِدِ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ثُمَّ كَبْشًا ثُمَّ دَجَاجَةً ثُمَّ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ وَيَسْتَمِعُونَ الذِّكْرَ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை நடக்கும்) பள்ளி வாசலின் நுழைவாயிலில் நின்றுகொண்டு முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். நேரத்தோடு (ஜுமுஆ வுக்கு) வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றாவார்கள். இமாம் (உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து) விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி (929)
இமாம் உரையாற்றும் போது அதைக் கேட்பதில் தான் மக்களின் கவனம் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்யலாம் என்றால் மேற்கண்ட நபிமொழிகளை மீறும் நிலை ஏற்படும்.
இமாம் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை என்ற பொருள் தான் சரியாகத் தெரிகிறது. ஏனெனில் இறைவனைப் புகழ்ந்து போற்றவும் அதன் பின் சலவாத் ஓதி பின்னர் துஆ செய்வது தான் அந்த இருப்பின் நோக்கம்.
பார்க்க :
இந்தக் கருத்து தான் சரியானது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக்குகிறது.
و حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك ح و حدثنا قتيبة بن سعيد عن مالك بن أنس عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال فيه ساعة لا يوافقها عبد مسلم وهو يصلي يسأل الله شيئا إلا أعطاه إياه زاد قتيبة في روايته وأشار بيده يقللها
அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் "அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிலிம் அடியார்  தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அது மிகக் குறைந்த நேரம் என் பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்'' என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
நூல் : முஸ்லிம் (1543)
துஆ ஏற்கப்படும் அந்த நேரம் தொழுகைக்குள் தான் உள்ளது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. தொழுகையில் துஆ செய்யும் நேரங்கள் இரண்டு உள்ளன. ஒன்று சஜ்தா செய்யும் போது துஆ செய்தல். மற்றொன்று அத்தஹிய்யாத்தில் துஆ செய்தல். இமாம் அமர்ந்த்து முதல் என்ற ஹதீஸுடன் இந்த ஹதீஸை இணைத்துப் பார்க்கும் போது சஜ்தாவை இது குறிக்காது என்று தெரிகிறது. இருப்புக்குப் பின் சஜ்தா இல்லை. சஜ்தாவுக்குப் பின்னர் தான் இமாம் இருப்புக்கு வருவார். எனவே அத்தஹிய்யாத்தில் அமர்வதைத் தான் இது கூறுகிறது என்பது உறுதியாகிறது.
புகாரி 935, 5295, 6400 ஆகிய ஹதீஸ்களில் நின்று தொழும் போது என்ற வாசகம் உள்ளது.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا رواه البخاري
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) பற்றிக் குறிப்பிடுகையில், "ஜுமுஆ நாளில் ஒரு நேரம் இருக்கின்றது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்ப தில்லை. அ(ந்த நேரத்)தைப் பற்றிக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தி னார்கள்.
நூல் : புகாரி (935)
நின்று தொழும் போது என்று இதில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்படத்தேவை இல்லை.
இது தொழுகையில் நிற்கும் நிலையைக் குறிக்காது. ஏனெனில் நிற்கும் நிலையில் துஆ ஏதும் இல்லை. அது துஆ செய்வதற்கான நேரமும் அல்ல. நிற்குதல் என்பது வணங்குதல் என்ற கருத்திலும் ஏராளமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. தொழுது வணங்கும் போது அடியான் துஆ செய்தால் அது ஏற்கப்படும் என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.
தொழுது வணங்கும் போது இமாம் அமர்ந்த பின்னர் துஆ செய்யும் இடம் ஒன்றே ஒன்று தான் உள்ளது. அது அத்தஹிய்யாத் அமர்வுதான். அதில் ஜும்மாவில் அத்தஹிய்யாத் அமர்வில் சிறிய நேரம் உள்ளது. அந்த நேரத்தில் நமது துஆ அமைந்து விட்டால் அது கட்டாயம் ஏற்கப்ப்டும் என்று கருத்துக் கொள்வது தான் அனைத்து ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் முடிவாகும்
சஹீஹ் இப்னி ஹுஸைமாவில் இதே செய்தி இடம்பெற்றுள்ளது. அதில் இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சரியான அறிவிப்பு இல்லை.
صحيح ابن خزيمة  - كتاب الجمعة المختصر من المختصر من المسند على الشرط الذي ذكرنا
 جماع أبواب فضل الجمعة -  باب ذكر وقت تلك الساعة التي يستجاب فيها الدعاء من يوم

 حديث : ‏1633‏8500  
نا أحمد بن عبد الرحمن بن وهب ، نا عمي ، أخبرني مخرمة ، عن أبيه ، عن أبي بردة بن أبي موسى الأشعري قال : قال لي عبد الله بن عمر : أسمعت أباك يحدث عن رسول الله صلى الله عليه وسلم في شأن ساعة الجمعة ؟ قال : قلت : نعم , سمعته يقول : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : " هي ما بين أن يجلس الإمام على المنبر إلى أن تقضى الصلاة " . نا أحمد بن عبد الرحمن , نا عمي , حدثني ميمون بن يحيى وهو ابن أخي مخرمة , عن مخرمة , عن أبيه بهذا الإسناد مثله سواء *

இதில் அஹ்மது பின் அப்திர் ரஹ்மான் பின் வஹப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். எனவே மனனத் தன்மை பாதிப்புக்குள்ளான இவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்கக்கூடாது.
குறிப்பு : இதற்கு முன்னர் அந்த நேரம் எது என்று தெளிவுபடுத்தப்பட்டவில்லை என்று நாம் சொல்லி இருக்கிறோம். அந்தக் கருத்தில் இருந்து நாம் விலகிக்கொள்கிறோம் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம்
                              thanks; online.pj.com

செவ்வாய்

PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்

PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்

எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' 
என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, 
எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை 
என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் 
மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலை
முறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்
வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி 
சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!


நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் 
அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். 
பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் 
ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக 
மீண்டும்  எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 
'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 
'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு
 மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் 
அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... 
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... 
அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே 
மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து 
ஒதுங்கி விட்டேன்.
ஆனால்.... அதே ஆண்டுகளில்... வெறும்  2 MP மட்டுமே வைத்து இருந்த பாஜக,
 பாபர் மஸ்ஜிதை இடிக்கும் ஓட்டுப்பொறுக்கி அஜன்டாவை கையில் எடுத்தவுடன்... 
88 MPக்களுடன் ஆளுங்கட்சி கூட்டணி என்றாகி... மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிப்பு
 ரத யாத்திரை மூலம் 120 MP க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகி... 'கரசேவை
' என்ற சட்டத்துக்கு எதிரான மறைமுக பயங்கரவாதம் செய்து பாபர் மஸ்ஜிதை 
இடித்தனர். ஆனால், இதன் பிறகு... ராமர் கோவில் கட்டும் ஆர்வத்திலிருந்து 
அவர்களின் ஆதரவாளர்களை ஆட்சிக்கு வந்தவுடன் அதுபற்றி பார்ப்போம்... 
என்று திசை திருப்பி... ஹிந்துத்துவா வெறியூட்டப்பட்ட மக்களை தக்க 
வைப்பதற்கு பாஜக எடுத்த... அடுத்த அரசியல் ஓட்டுப்பொறுக்கி ஆயுதம் 
 தான் 'பொது சிவில் சட்டம்'. இது எந்த அளவு முட்டாள்த்தனமானது என்று 
இப்போது எல்லாருக்கும் தெரியும். அப்போது, இதுபற்றி அந்த அளவு விழிப்புணர்வு
 மக்களிடம் இல்லை. மிகச்சிலருக்கே இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு 161
 அப்புறம் 182 சீட் எல்லாம் வந்தது.
இந்நிலையில் ஒருநாள் (1993 /94 என்று நியாபகம்) அதிராம்பட்டினத்தில் 
ஒரு சம்பவம் நடந்தது. செக்கடிப்பள்ளி எதிரே வற்றி இருந்த செக்கடி 
குளத்திடலில் மவுலவி பீஜே வின் பொதுக்கூட்டம். மேடை லைட் எல்லாம் 
முதல் நாளே போட்டு விட்டார்கள். ஊர் முழுக்க போஸ்டர். 'PJ பேசுகிறார்' 
என்று. 'என்ன பேசுகிறார்... எதைப்பற்றி பேசுகிறார்' என்பதெல்லாம் யாருக்கு 
வேணும்...? 'அதெப்படி நம்ம எதிரி நம்ம இடத்துக்கு வந்து பேசலாம்...?' 
அவ்ளோதான் மேட்டர். விளைவு...? எல்லா போஸ்டரும் கிழிக்கப்பட்டது. 
அடுத்தநாள், காலையில்... பரபரப்பான தகவல் பஸ் ஸ்டாண்டில் நியூஸ் 
பேப்பர் வாங்கும்போது நண்பர்களால் பரிமாறப்பட்டது. அதாவது..
. PJ மீட்டிங்கிற்காக போடப்பட்டு இருந்த மேடை உடைக்கப்பட்டு... 
கீற்று பிய்த்து எறியப்பட்டு...  மைக் செட் லைட் எல்லாம் நொறுக்கப்பட்டு... 
சொற்பொழிவு இன்று நடத்த முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டு விட்டது 
என்ற நியூஸ்..!
'இந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு 
 காதில் விழாத பாதுகாப்பான(?) தூரத்தில்தான் இருக்கேன் நான்' என்ற நிம்மதியான 
எண்ணத்தில் இருந்த எனக்கு... வந்தே விட்டது அவரின் உரை எனது காதுக்குள்..! 
இது எப்படி..? ஆமாம்.! அந்த மீட்டிங் கேன்சல் ஆக வில்லை..! இடம் தான் 
கேன்சல் ஆகியது. எனவே, மீட்டிங் எங்கள் வீட்டு அருகே இருந்த 'சாரா 
கல்யாண மண்டபத்தில்' மாற்றப்பட்டு அங்கே நடந்தது.  நான் என்னதான் 
காதை பொத்திக்கொண்டு இருந்தாலும்... வீதி எங்கும் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள்
 மூலம் எனது செவிப்பறையை தட்டி எனது சிந்தைக்குள் சென்ற அவர் 
சொன்ன விஷயம் இதுதான்...........
"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே 
வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... 
 இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல் செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? 
நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன எழுதுவாங்க தெரியுமா..? '
அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேச 
வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.' 
இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் 
மார்க்கம்  பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் 
என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.
அதுதான்... நான் அவர் விஷயத்தில் யோசிக்க ஆரம்பித்ததன் முதல் படி. 
அந்த பேச்சை முழுதாக செவி தாழ்த்தி சொற்பொழிவை கேட்க 
ஆரம்பித்தேன். 'அடடே... நல்லாத்தானே பேசுறார். நேர்மையான 
கேள்விகள்தானே இவை. எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வந்து
 இருக்கார்..! ஒருவேளை மக்கள் இவர் மேலே சொல்றது தப்பா 
இருக்குமோ..? என்று நினைத்துக்கொண்டு... அத்தோடு அவரை மறந்தும் 
விட்டேன்..! காரணம், எனக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆரம்பகால இன்புட் 
அவரை அந்நியராக்கி வைத்திருந்தது. ஆனால், இரண்டு நாள் கழித்து... 
அவர் சொன்ன மாதிரித்தான் தினமலரில் பெட்டி செய்தியாக ஓர் ஓரத்தில் 
வந்தது. "பொது சிவில் சட்டம் : அதிரை முஸ்லிம்கள் ஆதரவு". :-)
இதேகாலகட்டத்தில்... பல வருடங்களாக மத்ஹப் சட்டங்களை படித்து
 (ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம் : ஹனபி & ஷாபி) அதில் உள்ள 
குளறுபடிகளை கண்டு நெருடலாக இருந்து... 'ஒரே விஷயத்தில், 
ஹனபி ஒன்றாக ஷாபி வேறாக இருந்த மசாயில்களில் எது மார்க்க 
ரீதியில் நபி ஸல் அவர்களின் சரியான செயலாக இருக்கும்' என்று குழம்பி 
தத்தளித்துக்கொண்டு இருந்து... 'இரண்டுமே சரிதான் தம்பி' என்ற பதிலை 
இருவரிடமும் பெற்று... 'அப்படின்னா... இரண்டில் எது சிறந்ததோ அதை
 மட்டும் நான் எடுத்து இரண்டிலிருந்தும் மிக்ஸ் பண்ணி பின்பற்றலாமா' 
என்றாலும் கூடாதாம்... ஏதாவது ஒன்னை மட்டுமே பின்பற்றனுமாம்... 
இறுதியில்... அந்த மதஹப் சட்டங்களில் இது நிச்சயம் பிழையான
வையாகத்தான் இருக்கும் என்று சுயமாக சிந்தித்து ஒவ்வொன்றாய் 
வெறுத்து... (உதாரணம்:- திருட செல்லுவதற்கு முன்னர் திருடன் ஓத
வேண்டிய துவா) அடுத்து எப்படி, எந்தப்பக்கம் செல்வது, என்ன செய்வது, 
என்று குர்ஆன் தர்ஜுமாவை மட்டும் படித்துக்கொண்டு இருந்தபோதுதான்... 
தூத்துக்குடியில் நான் டிவி வாங்கிய பிறகு... (அதற்கு முன்னர் எங்கள் 
வீட்டில் டிவி இல்லை) ஒருநாள், விஜய் டிவியில் ஒருவரின்
 சொற்பொழிவை எதேச்சையாக 'பார்க்கும்' வாய்ப்பு ஏற்பட்டது. 
'அடடே... எல்லாம் சரியா சொல்றாரே..! மத்ஹபில் தப்பா இருக்கும்
 இது... உண்மையில் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று 
நாம் நினைச்ச படியே நம்ம மார்க்கத்திலும் முன்னமேயே இருக்கே...'
 என்று வியப்போடும் மனநிறைவுடனும் நன்றியுணர்வோடும் அவரைப்
பார்த்துக்கொண்டு இருந்த போதுதான்... நண்பன் அதிரை ஹாரிஸ் சொன்னான்... 
'இவர்தாண்டா அவர்' என்று..!
அதற்கு முன்னர் 13 வருடங்களாக அவரை பண்டாரவாடையில் 'ஜெய்லாவுதின்
' என்றும், அதிரையில் 'PJ' என்றும் அறிந்திருந்த நான் அன்றுதான்... அவரை
 'மவுலவி P.ஜைனுல்ஆபிதீன் உலவி' இவர்தானா என்று பரவசத்துடன் 
பார்த்தேன். அவரது ஆய்வுத்திறனும் அரபிப்புலமையும் பேச்சாற்றலும் 
அவர்மீது எனக்கு ஒருவித மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியது.  
அதேநேரம், 'இவரையா இத்தனை காலம் நாம் நம்மைவிட்டு தள்ளி 
வைத்து நம்மை நாமே பாழ்படுத்திக்கொண்டோம்..?' என்று உள்ளுக்குள்
 துணுக்குற்றேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மத்ஹப் காரர்களின்
பேச்சை கேட்காது இருந்து சுயமாக ஆராய வேண்டும் என்ற கொள்கையில்
 இருந்த நான்... 'இவரை மட்டும் சுயமாக ஆராயாமல்.. இவ்வளவு காலம்
 அவர்கள் பேச்சை கேட்டு எப்படி விலகி ஓடினேன்' என்று என்னை நானே 
அவமானத்தால் நொந்து கொண்டேன்.
சகோ.பிஜேவின் சொற்பொழிவுகள், ஆய்வுகள், கேள்வி- பதில்கள் 
போன்றவற்றை, 'இவர் ஒரு சிறந்த இமாம்' என்று நான் அறிந்த ஸ்பிக் நகர் 
பள்ளியின் சுன்னத் ஜமாஅத் மவுலவியிடம் சொல்லி விவாத்தித்த போது... '
மவுலவி பிஜே சொல்றதுதான் சரி' என்று ஏறக்குறைய எல்லா விஷயத்திலும் 
அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 
அப்படியாக, ஓரிரு வருடம் கழித்து, குடந்தை-மேலக்காவேரியில் ஒரு 
மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில் சந்தித்து 
சலாம் சொல்லி அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத 
அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ் தந்த உத்வேகம்தான் புஹாரி 
ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை வாங்க வைத்தது. 
அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா 
உள்ளது , கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை 
தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று 
கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்த
புகாரி ஏழாவது பாகம்  யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை.
 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே 
குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க 
ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர். 
இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று 
அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து 
இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை
 என்னை மிகவும் பாதித்தது. ஆமாம்..! அவர் உரையின் படி...  நான்
 சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், 
குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று 
எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! 
அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! 
ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் 
எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? 
இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 
'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..? 
அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி 
கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு 
வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். 
அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் 
இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்க
வைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
 .
மேலும்,  விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், 
DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் 
நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் 
செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற 
விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின 
அவரது உரைகளும் எழுத்துக்களும்.
அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் 
எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால்  
அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து 
சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..! ஒருவர் மார்க்க
 விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு 
செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் 
வேண்டுமே. மாஷாஅல்லாஹ்.
இப்படி, என்னைப்போல... எண்ணற்றோர் சரியான இஸ்லாமிய பாதையை
 தேர்ந்தெடுக்க அவர் ஒரு கருவியாக இருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து.
கடந்த 27 வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு 
உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி 
அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் 
பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், 
அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக
 நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை 
தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட 
அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும்
 ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், 
இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். 
யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.

முஹம்மது ஆஷிக் Citizen of the world என்ற இணையதளத்தில்

வெள்ளி

பி.ஜேயின் சொத்து விபரம் வெளிவந்தது..! பலருக்கு ஏமாற்றம்..!



“மூஃமின்களே (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாலங்கள் இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவி, துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலரை பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன்”. Al - Quran (49:12)

ஜனனமும் கல்வியும்:


பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில், எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்று, மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்று, பட்டம் பெற்றார்.





இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு எழுதும் போது, தனது கல்வி பற்றி பீஜே குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு தருகின்றேன்.

என்னைப் பற்றியும் என் சகோதரர் பற்றியும் சில விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும்.

நானும் என் சகோதரர் பீ ஷைக் அலாவுதீன் என்ற பி.எஸ்.அலாவுதீனும் மதீனாவில் படிக்கவில்லை. உம்ராபாத்திலும் படிக்கவில்லை. மத்ஹப், ஷிர்க், தரீக்கா மற்றும் எல்லா பித்அத்களையும் ஆதரிக்கும் கல்விக் கூடங்களில் தான் பயின்றோம். அது தான் மார்க்கம் என்று போதிக்கப்பட்டோம். படித்து முடித்து வெளி வந்தவுடன் நாங்கள் நண்பர்களாக விவாதித்துக் கொண்டே இருப்போம். அப்போது தான் தர்கா வழிபாடு தவறு என்று எங்களுக்குத் தோன்றியது. இது குறித்து நாங்களே ஆய்வு செய்து, ஆதாரங்களைத் திரட்டி, ஷிர்க்கை மட்டும் எதிர்த்தோம். மத்ஹப், தரீக்கா இன்ன பிற பித்அத்களை அந்தக் கால காட்டத்தில் நாங்கள் எதிர்க்கவில்லை.

அவற்றைத் தவறு என்று கூட அறியவில்லை.தர்காவை எதிர்க்கின்ற அனைவரும் தவ்ஹீத் வாதிகள் என்று கருதியதால் அது போன்ற எல்லா இயக்கங்களிலும் தொடர்பு வைத்தோம். இதனால் தான் 280 நாட்கள் நான் தப்லீக் ஜமாஅத்தில் இந்தியா முழுதும் சென்றேன். அதுபோல், என் சகோதரர் ஜமாஅதே இஸ்லாமி, சிம் போன்ற இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். அந்தக் கால கட்டத்தில் நாங்கள் தப்லீகையும் விரும்பினோம். ஜமாஅதே இஸ்லாமியையும் விரும்பினோம்.

தர்கா வழிபாட்டை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால்.இந்தக் கால கட்டத்தில் தான் ஃபீ ழிலாலில் குர்ஆன் என்ற சையித் குதுப் எழுதிய நூலை ஒரு நிறுவனத்துக்காக என் சகோதரர் மொழி பெயர்த்துக் கொடுத்தார்கள். தர்கா வழிபாட்டை சையித் குதுபும் எதிர்த்ததால், அந்த நூலிலும் தர்கா வழிபாட்டுக்கு ஆதரவான கருத்து இல்லாததால் நாங்கள் சரி என்று நம்பிய போது, அது மொழி பெயர்க்கப்பட்டது.

குர்ஆன் ஹதீஸில் உள்ள பல விஷயங்களை தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமீ ஆகியவை நிராகரிப்பதையும் மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கியதையும் படிப்படியாக கண்டு, வெறுத்து ஒதுங்கிய சில மாதங்களில் என் சகோதரர் இளம் வயதில் மரணித்த்து விட்டார். இதன் பின் என் சகோதரர் மொழி பெயர்த்த அந்த நூலை சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று பாக்கர் வெளியிட்டார்.

அது எனக்குத் தெரிய வந்த போது, அது குறித்த விளம்பரத்தை உணர்விலும் வெளியிட மறுத்தேன். அவர் நடத்திய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் அந்த விளம்பரத்தைப் போடக் கூடாது என்றேன். எனது மூன் பப்ளிகேஷனில் மட்டுமன்றி, அவரது மீடியா வேல்டிலும் விற்கக் கூடாது என்று கண்டிப்புடன் தடுத்து விட்டேன். தவறான கருத்து அதில் இருக்கும் போது, அதை விற்பது எப்படி ஹலாலாகும் என்பதே இதன் காரணம். ஆயிரக்கணக்கில் அந்த புத்தகம் பாகரிடம் தேங்கி இருந்தது.) சமூகத்தில் பெரும் மாற்றங்களை நிகழ்திக் காட்டிய பெரிய அறிஞர்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் போது, ஓர் உண்மையையை நான் உணர்ந்து கொண்டேன்.

அவர்கள் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டததைக் கற்று பட்டம் பெறவர்களில்லை.இமாம் இப்னுத்தைமிய்யா,முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்,அல்பானி போன்ற அறிஞர்கள் குடும்ப சூலழில் கற்று தமது சுய ஆய்வு முயற்சியால் மகத்தான் பணியாற்றியவர்கள்.அந்தப் பின்னணியிலேயே பீஜேவுடைய பணியும் மதிப்பிடப்படவேண்டும்.

பல்கலைக்கழகக் கோட்பாட்டுப் பாடத்திட்டத்திற்குள் சிறைப்பட்ட பலரின் நிலையை நாம் இன்று பார்க்கின்றோம்.அவர்கள் கோட்பாட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள்.சத்தியத்திற்கு மாற்றமான பாடத்திட்டத்தைப் போதிக்கின்ற ஓரு மதரசாவில் பீஜே கல்வி கற்றாலும், உண்மையை விளங்கிக் கொண்ட நாள் முதல் சந்தனக் கூடு, முரீது வியாபாரம், வரதட்சணைக் கொடுமை, தரீக்கா, ஷிர்க்-பித்அத், சமூகக் கொடுமைகள், ஆட்சியாளர்களின் அராஜகம் போன்றவைகளைக் கடுமையாக எதிர்த்து வருகின்றார். இதனால், பலமுறை கடுமையான தாக்குதலுக்கும் வெட்டுக்குத்துக்கும் உள்ளாகி, உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார். பல முறை சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.

திருமணம்:


1980ஆம் ஆண்டு வரதட்சணை வாங்காமலே திருமணம் செய்தார். வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடும் ஒரு நாட்டில், வரதட்சணை வாங்காத இவரின் வீரமிக்க இச்செயல், அன்று வினோதமாக நோக்கப்பட்டுக் கொச்சைப்படுத்தப்பட்டது. அதை அவர் கண்டு கொள்ளவில்லை. அதன் விளைவாக இன்று பலவாயிரம் இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யத் துணிவு பெற்றுள்ளனர். அத்தோடு, வரதட்சணைக் கொடுமையை அறியாமல் அப்போது வாங்கிய தொகையை, பகிரங்கமாக திருப்பிக் கொடுக்கின்றனர்.

பீஜே அவர்களும் காலம்சென்ற அவரது அண்ணன் அறிஞர் பீ.எஸ். அலாவுத்தீன் மன்பயீ அவர்களும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ததற்கு ஒரு வாத்தியாரின் பரிதாபகரமான தற்கொலை முடிவு காரணமாக அமைந்தது. பல பெண் குழந்தைகளையுடைய அவர் தனது பெண் குமருகளை கரை சேர்க்கப் வரதட்சணைப் பணம் இல்லாததால் ஆயுள் காப்புறுதி செய்து விட்டு, லாரியில் மோதி தற்கொலை செய்து கொண்டார்.

இது தற்கொலை என்பதால் அவரது குடும்பம் குடும்பத் தலைவனையும் இழந்து காப்புறுதிப் பணமும் கிடைக்காமல் தவித்தது. வரதடசணையின் இக்கோர முகம் இவர்களது வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.அப்போது, ஏகத்துவக் கொள்கையில் பெரியளவு தெளிவு கிடைக்காத நேரம். இப்போதது, வரட்சணைக்கு எதிரான பிரசாரத்தை பீஜே அளவுக்கு யாரும் செய்யவில்லை. அறியாமல் வாங்கிய வரத்சணையை திரும்பக் கொடுக்கும் அளவு பெரும் தாக்கத்தை அவரது பிரசாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார நிலை :

மார்க்கப் பிரசாரப் பணியில் ஈடுபடுகின்றவர்களின் பொருளாதாரம் சரியானதாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.அதனால்,பீஜேவுடைய பொருளாதார நிலை பற்றி முதலில் இங்கு குறிப்பிடுகின்றோம். இன்று மார்க்கப் பிரசாரத்திற்காக பலர் அறபு நாடுகளில் சம்பளம் பெற்று,தமது வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றனர். இன்றைய உலமாக்களில் பலர் மார்க்கப் பிரசாரம் செய்கிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளில் ரியால்,தீனார்,திர்ஹம் எப்பவற்றிற்காக தஞ்சமடைந்தவர்களாகவே உள்ளனர். அல்லது வெளிநாட்டுக் காசை நம்பி உள்நாட்டில் மார்க்க வியாபாரம் செய்பவர்கள். சொகுசாக இருந்து கொண்டு,ஒன்றிரண்டு பயான்கள் செய்து,உப்புச் சப்பில்லாத கட்டுரை எழுதிக் கொண்டு,பீஜேவுடைய பயானைக் கேட்டு கட்டுரைகளைக் காப்பி  பண்ணிவிட்டு பிரசாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள்.


இத்தகையவர்களில் ஒருவராக இருந்துகொண்டு, அற்ப நலன்களுக்காக ஜால்ராப் போடும் சிலர் பீஜே பொருளாதாரம் பற்றி அண்மையில் கேள்வி எழுப்பினர் அவதுாறு பரப்பினர். அதற்குப் பீஜே அளித்த பதிலை இங்கு தருகின்றோம். 

எனது சொத்து, எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை.இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்துப் பேசும் போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து, பேசுவோர் பேசிக் கொள்ளட்டும் என்று இருந்து வருகின்றேன். இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.முதல் எனது சொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன்.

நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு, ஒரு சிலர் பள்ளிவாசல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன். உள்ளது. இரண்டு கிரவுன்ட் அளவு.
நான் தற்போது சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு செண்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒர் அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன்!பைண்டிங் செய்வேன்!இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாஃவா பணியையும் செய்து வந்தேன்.

தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன்.எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போதுஇ அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார். அதை விற்று (அப்போது ஐந்து இலட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள சிறு வீடு கட்டினேன். 

அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டி வந்திருந்தார்.) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.(இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும், எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசிய வருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலபி வகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆராய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்குக் குடியிருக்கும் சிறிய வீட்டையும் எனக்கு என்று சொந்தமாக எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.)

வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒர் இலட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒர் இலட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு வயல் வாங்கினேன்.எனது பூர்வீக வீடும் அந்த வயலும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.மதுரையில் இருந்த போது, நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
என் பெயரிலோ என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன்.என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்து சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல.

இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ என் மனைவி பெயரிலோ என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் சலபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன். அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ என் மனைவி மக்கள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.  

எனக்கு இருக்கும்(?) சொகுசு பங்களாக்கள், கார்கள், பண்ணை வீடுகள் அனைத்தையும் இஸ்மாயீல் ஸலபிக்குத் தந்து விடுகிறேன்.அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன்.இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கு ஒரு மனிதன் பதில் சொல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?

நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போது, சில இளைஞர்கள் வந்தனர். பத்துப் பேர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.அவர்கள் வந்த போது, கையால் இயக்கப்படும் கட்டிங் மிஷினில் நான் பேப்பர் கட்டிங் செய்து கொண்டிருந்தேன். வந்தவர்கள் என் காலையே பார்த்தார்கள். என்ன விபரம் என்று கேட்ட போது, நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் செருப்பு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தான் பார்க்க வந்தோம் என்று கூறினார்கள். நான் ஹவாய் செருப்பு அணிதிருந்ததையும் உடலுழைப்பு செய்ததையும் பார்த்து விட்டு அதன் காரணமாக தவ்ஹீதுக்கு வந்தார்கள்.இது போல் நீங்கள் அவதூறு பரப்பியதால் தால் சத்தியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.இப்படி எல்லாம் சிலர் நினைப்பதற்குக் காரணம் உள்ளது.

 (பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர் (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:273)

மூடர்கள் பார்த்தால் செல்வந்தர்கள் என்று நினைக்கும் அளவுக்கு நபித்தோழர்கள் சுயமரியாதையுடன் நடந்ததை அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். அதை இஸ்மாயீல் ஸலபி மூலம் அல்லாஹ் என் விஷயத்திலும் மெய்யாக்கி விட்டான். அல்ஜன்னத்தில் 2000 சம்பளம் வாங்கிக் கொண்டைருந்தவன் தானே என்று அவர் கூறுவதன் உள் நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே அதாவது மார்க்கப் பணியின் மூலம் நான் பணம் திரட்டினேன் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.


எனவே, இது குறித்தும் நான் விரிவாகச் சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.


நான் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் செல்வந்தர்கள் வீடுகளுக்குச் சென்று வாசலில் காத்துக் கிடப்பதையும் செல்வந்தர்களைக் கண்டதும் எழுந்து நிற்பதையும் மலேசியா சென்று கவுரவப் பிச்சை எடுத்ததையும் கண்ட போது, நானும் சுய மரியாதை உள்ள என் சக மாணவர்களும் கூனிக் குறுகி விடுவோம். இந்தப் பணத்தாசை தானே உண்மையைச் சொல்வதை விட்டும் இவர்களைத் தடுக்கிறது என்று பேசிக் கொள்வோம். இவ்வாறு பேசிக் கொண்டவர்களில் முஹம்மது கான் பாக்கவி மட்டும் என் நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் நினைவில் இல்லை.

சின்ன வயசில் நான் அப்போதே சபதம் எடுத்தேன். எந்த நிலையிலும் செல்வந்தர்களிடம் போய் நிற்கக் கூடாது. கூனிக் குறுகக் கூடாது. நமக்காக் எதையும் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்து கொண்டேன். அல்லாஹ்வின் அருளால் 29 ஆண்டுகள் இந்த சபதத்தில் உறுதியாக இருந்து வருகிறேன்.
மிக மிக நெருக்கமான சில நண்பர்களிடம் கடன் வாங்கியதுண்டு. அல்லாஹ்வின் அருளால் இன்று என் உறவினர் தவிர வேறு எவருக்கும் நான் பத்துப் பைஸா கூட கடனாளி இல்லை.
எத்தனையோ தடவை வெளி நாடுகளுக்கு நான் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். எனக்கு எந்த அன்பளிப்பும் தரக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் சென்று வந்தேன். சில பொருட்களை நான் வாங்கி வந்தேன் என்றால் எனது சொந்தப் பணத்தில் வாங்கியது தான்.
அதனால், பணத்துக்காக சத்தியத்தை மறைக்கும் இஸ்மாயீல் ஸலபீ போன்றவர்களின் செயல் எனக்கு வெறுப்பாகத் தெரிகிறது.அதனால் தான் நீங்கள் கற்பனை செய்வது போல் நான் சொத்து சேர்க்கவில்லை.அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே நான் பெரிய செல்வமாகக் கருதுகிறேன்.நான் செய்யும் மார்க்கப் பணிக்காகவோ, சமுதாயப் பணிக்காகவோ எந்த ஊதியமோ வேறு ஆதாயமோ அடையக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கின்றேன். 

மார்க்கத்துக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை வழங்கலாம் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. மேற்கண்ட வசனத்திலேயே அதற்கு அனுமதி உள்ளது. இல்லாவிட்டால் தாவா ப்ஃணிகள் அறவே நடைபெறாத நிலை ஏற்படும் என்பதையும் நான் அறிவேன். ஆனாலும் நான் அந்த நிலையை என் விஷயத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஆனாலும் இதுவக்காலத்தில் எனக்கு வேறு வழி தெரியாத நிலையில் நஜாத் பத்திரிகையில் ஐஏசி அமைப்பின் மூலம் மாத ஊதியம் (சுமார் ஒருவருடம் இருக்கலாம்) வாங்கினேன். அப்போது கூட அந்த ஊதியம் எனது மார்க்கப் பணிக்காக இருக்கக் கூடாது என்பதற்காகப் பத்திரிகைகளை சந்தாதாரர்களுக்கு அனுப்புதல், ஸ்டாம்ப் ஒட்டுதல், பார்சல் கட்டுதல் ப்ரூஃப் திருத்துதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வாங்கிய ஊதியத்துக்காக உடல் உழைப்பு செய்தேன்.

அடுத்து, அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன். அதில் நட்டம் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை. எனது அச்சகத்தின் வருமானத்தையும் அது சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்ட போது, மக்களிடம் நன்கொடை கேட்டால் தருவார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள்.ஒரு இயக்கம் நன்கொடை கேட்கலாம். தனி நபர் நன்கொடை கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, ஜாக் இயக்கமே எடுத்துக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி ஒப்படைத்து விட்டேன்.

அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன்.இதன் பிறகு தான் அல்ஜன்னத் பத்திரிகை சென்னைக்கு மாறியது. அப்போது தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதைத் தான் ஸலபி குறிப்பிடுகிறார்.அந்த உறுத்தலைத் தவிர்பபதற்காக எழுத்துப் பணி அல்லாத வேறு பணிகளையும் நான் செய்தேன். (அது ஒரு தனிக் கதை) சில காலம் (எவ்வளவு காலம் என்பது நினைவில் இல்லை.) இந்த ஊதியத்தைப் பெற்றாலும் சமுதாயப் பணிகள் செய்ய ஜாக் இயக்கம் முட்டுக்கட்டை போட்டதாலும் ஆசிரியரான எனது எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்ததாலும் நான் விலகிக் கொண்டேன்.

சென்னையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த எனக்கு அந்தச் சம்பளம் வாடகைக்குக் கூட போதுமானதாக இல்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.சென்னை வந்ததும் நூல்கள் எழுதி, தனியார் புத்தக வெளியீட்டாளர்களிடம் கொடுத்து, வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் இலாபம் தான் எனது வருமானமாக இருந்தது. அதன் பின் நானே புத்தகம் வெளியிடலானேன்.
எனக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டு சீரியஸான நிலையில் தமுமுக நிர்வாகிகள் என்னை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது, அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவானது. அதை உணர்வு இதழில் இருந்து செலுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர். இவ்வளவு காலம் உணர்வு பணியைச் சம்பளம் இல்லாமல் செய்தீர்கள். அதற்கான ஊதியமாக இருக்கட்டும் என்று கூறியதை அப்போது நான் ஏற்றுக் கொண்டேன். தர்மமாக வாங்காமல் உழைப்புக்காக வாங்கினோம் என்ற மனத் திருப்தி ஏற்பட்டது.

ஆனால், நூல்கள் வெளியிட ஆரம்பித்த பின் கிட்டத் தட்ட பத்து ஆண்டுகளாக நான் எந்தப் பணிக்கும் எந்த ஊதியத்தையும் பெற்றதில்லை. உணர்வில் கட்டுரை எழுதுதல், கேள்வி - பதில் எழுதுதல், பிழை திருத்தல் மற்றவர்களின் கட்டுரைகளைத் தணிக்கை செய்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் நான் செய்து வந்த போதும் இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த ஊதியமும் பெற்ற்தில்லை.

தஃவா சென்டரில் பாடம் நடத்திய போதும் அதற்காக நான் எந்த ஊதியமும் பெற்றதில்லை.தவ்ஹீத் ஜமாஅத் தலைமைப் பொறுப்பில் எனது முழு நேரத்தையும் செலவிட்ட போதும் அதற்காக ஊதியமோ ஊக்கத் தொகையோ நான் பெற்றதில்லை.நான் பொறுப்பு வகித்த எந்த இயக்கத்திலும் பண வரவு - செலவை நான் கையாள்வதில்லை. சில நெருக்கடியான் நேரத்தில் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு நிர்வாகி, அல்லது சில நிர்வாகிகள் துணயுடன் தான் கையாண்டிருக்கிறேன். எந்தக் கடனும் ஜமாஅத்தில் பெற்றதில்லை.தலைமைப் பொறுப்பின் மூலம் நான் ஆதாயம் அடைந்தவனாக இருந்தால் நான் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகாமல் தொடர முடியும்.

நான் பொறுப்பில் தொடர்வதைத்தான் மக்களும் விரும்பினார்கள். ஆதாயத்துக்காக பொறுப்பில் உள்ளவன் என்றால் இதை விட்டு விலகிக் கொள்ள மாட்டார்.ஜாக் தலைமைப் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.தமுமுக பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகியதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எனது தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க இந்தப் பொறுப்புக்கள் தடையாக இருப்பதும் முக்கிய காரணமாகும்.

தேர்தல் திருவிழாக்கள் வரும் போது, இயக்கத் தலைவர்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும்.ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் தனியாக எந்த அரசியல் தலைவரையும் சந்தித்தது இல்லை. பல நிர்வாகிகள் அல்லது பல இயக்கத்தினருடன் தான் சந்தித்துள்ளேன். கடந்த தேர்தல் திமுகவை ஆதரித்தோம் இட ஒதுக்கீட்டுக்காக தேர்தல் முடிந்த சில மாதங்களில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் அறிவிக்க முடிந்ததற்குக் காரணம் எனக்கோ நான் சார்ந்துள்ள இயக்கத்துக்கோ எந்த ஆதாய எதிர்பார்ப்பும் இல்லாததே காரணம்.

ரமலான் மாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விளம்பரம் மூலம் நடத்தப்பட்ட போது, பல இலட்சங்கள் லாபம் கிடைத்தது. உங்கள் உரை தானே ஒளிபரப்பாகிறது. இதை நீங்களே விளம்பரம் பிடித்து நடத்தலாமே என்று பல நண்பர்கள் என் நிலைமை அறிந்து என்னிடம் கூறினார்கள். நான் மறுத்து விட்டேன். அந்த வருவாய் அப்போது தமுமுகவுக்கு பயன்பட்டது. இப்பொது தவ்ஹீத் பணிக்குப் பயன்படுகிறது. இதை நான் நடத்தினால் யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால், இவன் ஆதாயத்துக்குத் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் நினைத்து சத்தியத்தை மறுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்தேன்.

மீடியா வேல்டு மூலமும் தொலைக்காட்சி மூலமும் குறுந்தகடுகள் விற்பனை மூலமும் தனி நபர் சம்பாதிக்கிறார். நீங்களே நடத்தலாமே என்று கூறிய போது அதையும் நான் மறுத்து விட்டேன்.என்னால் ஜமாஅத் ஆதாயம் அடையும் வகையில் தான் அன்றும் இன்றும் நடந்து வருகிறேன். இனியும் நடக்க துஆ செய்யுங்கள்.

ரமலானுக்கு முன் ஒரு சிறு கடையை வாடகைகுப் பேசி வைத்திருந்தேன். எனக்கு என்று தெரிந்தவுடன் தர மறுத்து விட்டனர். வாடகைக்கு வீடு பேசிவிட்டு வந்தால் மறு நாள் இல்லை என்று கூறி விடுவார்கள். இதற்கெல்லாம் கூட இடையூறு செய்பவர்கள் உள்ளனர். இப்படி பல விதமான இழப்புகள் தான் எனக்குக் கிடைத்துள்ளது.




மார்க்கத்தை தொடர்புபடுத்தி நான் சம்பாதிப்பதாக யாரேனும் கூறுவதாக இருந்தால் நான் புத்தகம் எழுதி விற்பனை செய்வதைத் தான் கூற முடியும். புத்தகத்தின் எழுத்துக்காக நான் எந்த விலையும் வைப்பதில்லை. பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் 40 பக்க புத்தகம் 100 ரூபாய் விலை போடப்படும். அப்படி எல்லாம் நான் போடவில்லை.புத்தகம் தயாரிக்கும் செலவு, அதை விற்பனை செய்யும் இடத்துக்கான வாடகை, அட்வான்ஸ், மின் கட்டணம், ஊழியர் சம்பளம் ஆகிவற்றுக்கு நான் முதலீடு செய்த அடிப்படையில் தான் அதில் லாபம் கிடைக்கிறது.

மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அதில் எனக்கு வருமானம் வருகிறது. அதில் உள்ள முதலீட்டை எடுத்து வேறு ஏதாவது வழியில் பயன்படுத்தினால் எனக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். அது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதியிலுள்ள ஜாலியாத்கள் இலவசமாக வெளியிட்டுள்ளன. அதனால், எனக்குப் பாதிப்பு என்று நான் சிந்திக்காமல் அனுமதித்தேன். பீஜே நூல்களுக்கு சவூதியில் தடையா என்ற கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்.


பீஜே நூல்களுக்கு சவூதியில் தடையா என்ற கட்டுரையை காண Kindly Visit the below Link : 




ஏசுபவர்கள் ஏசட்டும்! அவதூறு கூறுபவர்கள் அவதூறு கூறட்டும்!சகோதரர் பீஜே அவர்களின் பணி தொடர வல்ல ரஹ்மானிடம் துவா செய்வோம்...


பீஜேயின் சொத்து விபரம் வெளிவந்தது!..பலருக்கு ஏமாற்றம்..! வரலாறு இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்...


குறிப்பு : பீஜேயின் சொத்து குறித்து பலர் பித்னா செய்கின்ற காரணத்தால் இதை இங்கு விலகி கூற வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளோம்.

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். Al - Quran (49:6