தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

பொதுத் தேர்வுக்கான பயிற்சி!


12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப் பட்டு விட்டன (மார்ச் 8). இன்றைய சமுக சூழல் ஒரு மாணவனின் அறிவாற்றலை அவன் பெறும் மதிப்பெண்களை கொண்டு தீர்மானிக்கிறது. ஒவ்வொரு மதிப்பெண்ணும் ஒரு மாணவனின் ஒட்டு மொத்த வாழ்க்கை சூழலையும் இல்லை என்றால் குறைந்தபட்சம் பல ஆண்டுகளுக்காவது தீர்மானிக்க கூடியதாக உள்ளது.  பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அந்த மாணவன் தன் கல்விக்காக வருங்காலங்களில் செலவிட போகும் பணத்தை அவன் தந்தையோ தாயோ படப்போகும் சிரமத்தைத் தீர்மானிக்கிறது.
இச்சூழ்நிலையில் மாணவர்கள் கல்வியின் ஆற்றலை உணர வேண்டும். மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக மதிப்பெண்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். என்ன படித்தாலும் மதிப்பெண் வரவில்லை எனும்; குரலை பல இடங்களில் கேட்டிருப்போம். படிப்பது ஒரு முறை என்றால் அதைப் பரிட்சையில் வெளிப்படுத்துவது மற்றொரு முறை.
தேர்வில் எப்படி எழுதினால் அதிக மதிப்பெண்களைப் பெறலாம் என்பதற்கான குறிப்புகளும் சில நுனுக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டிலேயே பயிற்சி செய்து பார்ப்பதன் மூலம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற இயலும்.

 படித்ததை எல்லாம் வெளிப்படுத்துவதற்கல்ல தேர்வு. தேவையானவற்றை தெளிவாக உணர்த்துவது தான் நல்ல விடைகள்.

அதிகமாக எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் எனும் தவறான மனப்பான்மை மாணவர்களிடம் காணப்படுகிறது. அதிக பக்கங்கள் அதிக மதிப்பெண்களை பெற்று தராது. 

வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள். முழுவதுமாக எழுதி முடித்தவுடன் வினாவை மறுபடியும் வாசித்தால் அவர்கள் எழுதிய பதிலுக்கும் வினாவிற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியும். வினாவின் தொடக்கத்தை மட்டும் படித்து விட்டு எழுதியதால் இது போன்ற பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே வினாத்தாளை முழுவதுமாக வாசிக்க வேண்டும்.

பத்து நிமிடங்கள் எந்த வினாவிற்கும் பதில் எழுதாமல் நன்கு தெரிந்த வினாக்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்

எல்லாத் கேள்விகளுக்கும் விடை தெரியும் என்றால் அவற்றில் நன்கு தெரிந்த பதிலை முதலில் எழுதுவது நல்லது. திருத்துபவர் மனதில் முதலில் ஏற்படுத்தும் தாக்கம் சிறந்த தாக்கமாக அமையும். எனவே நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதுவது நல்லது.

நன்றாக தெரிந்த வினாவிற்கு தேவைக்கு அதிகமாக எழுதி தேர்வின் பாதி நேரத்தை வீணடித்து விடக்கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்க வேண்டும்.(எ.கா. 3 மணி நேரம் பரீட்சை என்றால் 10 நிமிடம் கேள்வித்தாளை முழுவதுமாக ஒரு பார்வை பார்க்க: 5 நிமிடம் தெரிந்த விடைகளை தேர்ந்தெடுத்து விரிசைப்படுத்த: அடுத்து ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்கி எழுத வேண்டும்.)

பொதுத் தேர்வுக்கு முன் பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கூறிய முறையை பயிற்சி செய்து கொள்ளவும். அழகிய முறையில் எவ்வாறு தேர்வு எழுதுவது என்பதையும் காண்போம்.

தேர்வில் அழகாக மற்றும் தெளிவாக எழுதுவதன் மூலமாக திருத்துபவரின் சிரமம் குறைகிறது. அவர் சிரமம் குறைந்தால் நம் மதிப்பெண் அதிகரிக்கும்.

தேர்வுத்தாளை திருத்துபவர் எல்லா பலவீனங்களும் கொண்ட மனிதன் என்பதால் அழகாக இல்லை என்றாலும் குறைந்த பட்சம் தெளிவாக எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. எழுத்தைக் கொண்டே ஒருவருடைய மனப்பான்மையை ஒரு வகையில் யூகிக்க முடிகிறது என்று கூறுகிறார்கள். அதிக அடித்தல் திருத்தலுடன் எழுதுவது ஒருவருடைய நிலையற்ற மனப்பான்மையை எளிதில் காட்டி விடும்.

அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவற்கு பெரும் சாதனை செய்ய வேண்டியதில்லை. பொதுத்தேர்வு தொடங்க இன்னும் நாட்கள் உள்ள இந்த தருணத்தில் வெறும் படிக்க மட்டும் செய்யாமல் படித்ததை சிரமம் பார்க்காமல் எழுதிப் பார்த்து விடுவது நாம் பரிட்சையில் செய்யும் பல தவறுகளை நமக்கு அடையாளம் காட்டி விடும். பயிற்சித் தேர்விலும் பொதுத் தேர்விலும் கீழ்கண்ட முறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக சிறந்த முடிவுகளைப் பெற முடியும்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் வரிக்கும் இடையில் போதுமான இடைவெளி விட்டு எழுதவும்.

ஒரு பகுதியில் உள்ள முக்கியமானக் கருத்துக்களை அடிக் கோடிட்டு காட்டவும்.

வண்ண எழுதுகோல்கள் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. ஏனெனில் முட்டாள்தனமான வண்ணங்களை அடிக்கோடிட உபயோகிப்பது திருத்துபவரின் எரிச்சலை கூட்டும். நம் மதிப்பெண்ணைக் குறைக்கும். எனவே சற்று கூடுதல் கருமையான பென்சில்களை உபயோகிப்பது நல்லது. 

அறிவியல் பாடங்களில் வரையும் படங்களை அழகாக வரைவதுடன் அனைத்துப் பாகங்களையும் கட்டாயம் குறித்துக் காட்டுங்கள். முடிந்தால் நகல் எடுத்தது போல் வரைவது நல்லது. (இதற்காக அதிக நேரத்தை விணாக்க வேண்டாம்). 

முதல் கேள்வியில் அழகாக எழுதத் தொடங்கி செல்ல செல்ல கோழிக் கிறுக்கலாக மாறி விட கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்கி எழுதுவதன் மூலமாக தேர்வில் கடைசி நிமிடத்தில் நடைபெறும் இது போன்ற தவறுகளைத் திருத்தி கொள்ளலாம். கடைசி நிமிடம் வரை படிப்பதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

எவ்வாறு கேள்வித்தாளை வாங்கியவுடன் எழுத ஆரம்பிக்க கூடாதோ அதைப் போலவே கடைசி வினாடி வரை எழுதவும் கூடாது. குறைந்தது 5 நிமிடங்களுக்கு முன்னதாக எழுதி முடித்துவிட்டு கீழ்க்கண்டவற்றை சரி பார்க்கவும்.

ஒவ்வொரு பதிலுக்குமான கேள்வியின் எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என சரி பார்க்கவும். இது மிக மிக முக்கியம்.

ஒவ்வொரு பதிலிலும் முக்கியமான புள்ளிகள் அடிக்கோடிடபபட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

சூத்திரங்கள் பெட்டிக்குள் எழுதப்பட்டுள்ளதா என்பதை சரி பர்க்கவும்.

மிக முக்கியமான ஒன்றை கவனத்தில் கொள்ளவும். எக்காரணம் கொண்டும் 786, நாகூர் ஆண்டவர் துனை, பிஸ்மில்லாஹ் முருகன் துனை போன்ற வாசகங்களை விடைதாளில் எழுத வேண்டாம். இது முதல் பார்வையிலேயே உங்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தலாம். திருத்துபவர் மாற்று நம்பிக்கையாளராகவோ அல்லது இறை நம்பிக்கை அற்றவராகவோ இருக்கும் பட்சத்தில் இவை எதிர் மறை விளைவுகளை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே பக்தியை எழுத்தில் காட்டாமல் மனதில் நினைத்து எழுத தொடங்கி விடுவது நல்லது. (786, நாகூர் ஆண்டவர் துனை என்பதெல்லாம் இஸ்லாத்திற்கெதிரானது)

எல்லாவற்றிக்கும் மேலாக கடின உழைப்பும் அதிகமாக பயிற்சி செய்து தேர்வுகளை எழுதுவதும் உங்களின் மதிப்பெண்ணைக் கூட்ட உதவும். 

நன்றி: உணர்வு வார இதழ்

புதன்

ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் -2000/ மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக   இரண்டு சிறுநீரகமும் பழுதாகியுள்ள ஏழை சகோதரருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக கடந்த23.12.2011 அன்று  மருத்துவ உதவியாக  ரூபாய் -2000/  வழங்கப்பட்டது.

ர் கிளை சார்பாக ஏழை சகோதரருக்கு ரூபாய் -2000 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக   ஏழை சகோதரருக்கு  இருதய நோய் சிகிச்சைக்காக கடந்த 25.12.2011 அன்று  மருத்துவ உதவியாக  ரூபாய் -2000/  வழங்கப்பட்டது. 

ஞாயிறு

மாதவிடாயில் உடலுறவுக்குப் பரிகாரம்?


மாதவிடாய் நேரத்தில் மனைவியுடன் கூடினால் அதற்குரிய பரிகாரம் என்ன?  அப்துல்லாஹ்
பதில்
மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
இத்தடையை மீறியவர்கள் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும். இதுவே அந்தப் பாவத்துக்குரிய பரிகாரமாகும்.
230حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ حَدَّثَنِي الْحَكَمُ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ قَالَ أَبُو دَاوُد هَكَذَا الرِّوَايَةُ الصَّحِيحَةُ قَالَ دِينَارٌ أَوْ نِصْفُ دِينَارٍ رواه أبو داود
இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் கூறுகிறார்கள் :

சனி

ஸஃபர் மாதமும்! நாமும்!!


மறைவான ஞானங்களை தெளிவாகத் தெரிந்திருக்கும் மகத்தான ஆற்றலாளனாகிய அல்லாஹ் தன் அரும்மறையில் கூறுகின்றான்...

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.(அல்குர்ஆன் 6:59)

வெள்ளி

ரேஷன் கார்டு : கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டு) செல்லுபடி கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டை வழங்க கால அவகாசம் தேவைப்படும் என்பதால், தற்போது உபயோகத்தில் உள்ள குடும்ப அட்டைகள் 31.12.2012ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் என முதல்வர் கூறியுள்ளா

வியாழன்

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

போராட்டங்களால் பெற்ற இரண்டாவது வெற்றி

தமிழகத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற நமது போராங்களால் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு நமக்கு கிடைத்தது. அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெற்ற முதல் வெற்றி! 

முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு தரவேணடும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றது. வருகின்ற பிப்ரவரி 14ம் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவடடங்கள் தோறும் மாபெரும் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டு தற்போது வீரியத்துடன் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் 4.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! 

இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது தான் எனினும் நம்முடைய போராட்டங்களின பயனாக விளைகின்ற பலனை முதலில் அறுவடை செய்வோம். பிற்காலங்களில் அது அதிகரித்திடவும் தேவையான பணிகளை செய்வோம். இன்ஷாஅல்லாஹ்.

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.aa
Thanks : DINAMALAR

ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் -1000/ மருத்துவ உதவி

ஆசாத் நகர் கிளை சார்பாக இதய நோயால் பாதிக்கப்பட்ட சகோருக்கு மருத்துவ உதவியாக  ரூபாய் -1000/ மருத்துவ உதவியாக அவர் மனைவியிடம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் 500/ உதவி

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக  ஆசாத் நகர் பகுதியிலுள்ள  சத்துணவு கூடத்திற்கு கேஸ் அடுப்பு வாங்குவதற்கு ரூபாய் 500/   வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் மார்க்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 18.12..2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது. இதில் TNTJ மாநில துணை தலைவர் கோவை அப்துர் ரஹீம்  அவர்கள்  "நஷ்டம் அடைந்தோர்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து பயன் பெற்றனர்

ஆசாத் நகர் கிளையில் ஆலோசனை கூட்டம்.

கோவை மாவட்டம்  ஆசாத் நகர் கிளையின் ஆலோசனை கூட்டம் 18.12.11 அன்று அஸர் தொமுகைக்கு பிறகு  நடைபெற்றது. இதில் தவ்ஹீத் வளர்ச்சி பணிகள் பற்றிய ஆலோசனையும்,  தவ்ஹீத் எனும்  ஓர்இறை கொள்கையை பெண்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளும் கேட்கப்பட்டன. விரைவில் தெருமுழுனை கூட்டங்கள் அதிகம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஞாயிறு

இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?


இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?
கலிமா சொன்ன ஒரு முஸ்லிம் இணைவைத்துவிட்டால் அதற்கு பரிகாரம் செய்து மீண்டும் இஸ்லாத்தில் நுழைய முடியுமா?
ரிஸ்வான் நுஃமான்
பதில்
இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் இணைவைத்து விட்டால் அவர் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறி விடுகின்றார். இவர் மீண்டும் இஸ்லாத்தில் இணையவேண்டுமானால் முதலில் இவர் செய்து கொண்டிருந்த இணைவைப்புக் காரியத்திலிருந்து முழுவதுமாக விடுபடவேண்டும். இந்த பாவத்துக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு லாயிலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதியானவர் இல்லை) என்று கூற வேண்டும்.

சனி

கோவை மாட்டம் ஆசாத் நகர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 12.12..2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது. இதில்காஜா அவர்கள்  உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து பயன் பெற்றனர் ....

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வரதட்சணை இல்லாத நபி வழி திருமணம்.

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக வரதட்சணை நபி வழி திருமணம் மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர்  நாசர் அவர்கள் ”எளிய திருமணங்கள் ”  என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் -1000/ மருத்துவ உதவி

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக  சார்பாக கடந்த18.10.2011 அன்று ஏழை சகோதரருக்கு  மருத்துவ உதவியாக  ரூபாய் -1000/  வழங்கப்பட்டது. 

ஆசாத்நகர் கிளையில் ரூ.5000 வாழ்வாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் கடந்த 04.12.11  அன்று M.C.R.நகரை சேர்ந்த சகோதரருக்கு குர்பானி தோல் விற்ற பணத்தின்  மூலமாக   யாக வழங்கப்பட்டது....

செவ்வாய்

இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!

இன்றைய நவீன உலகில் பல விதமான பிரச்சினைகள் இருப்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி பல வழிகளிலும் மனிதன் முயன்று கொண்டிருக்கிறான் ஆனால் அவனால் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாமல் அவதிப் படுகிறான்.

ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்றால் ஒன்று உண்டென்றால் அது இஸ்லாமிய மார்க்கம் தான் என்பதை பலர் அறியாமலேயே இருக்கின்றார்கள்.

இன்றைய நாட்களில் உள்ள சிக்கள்களில் முதன்மையானதாக இருப்பது உடல் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் செக்ஸ் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் பலதரப்பட்ட விளக்கங்களைச் சொன்னாலும் அந்த விளக்கங்களால் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை என்பதே உண்மை.அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாவகரமான செயல்தான் சுய இன்பம் என்பதும்.

பிரம்மாண்டமாய் கூடிய 13 வது மாநிலப் பொதுக்குழு:

பாராட்டுப் பத்திரங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 11/12/2011 அன்று திருநெல்வேலி மாநகரத்தில் இருக்கும் பார்வதி சேஷ மஹாலில் காலை 10.30 க்கு கூடியது. மேலாண்மைக் குழுத்தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அலை கடலென திரண்ட நிர்வாகிகள் :
கடந்த 2011 ஜனவரி மாதம் சேலத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், மாநிலத்திற்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பொதுக்குழு அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இதில் 3000க்கும் அதிகமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

திங்கள்

நெல்லையில் நடந்த TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு

கடந்த 11-12-2011 அன்று நெல்லை பார்வதி மஹாலில் TNTJ மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழு தலைவர் சகோ.ஷம்சுல் லுஹா அவர்களின் ’தவ்ஹீத் குடும்பம்’ என்ற தலைப்பில் அடங்கிய உரையுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு சிறப்பாக துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ் !
முதல் கட்டமாக ஜமாத்தின் வரவு செலவு கணக்குகளை மக்கள் முன்பு தணிக்கை குழு தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் வாசித்து காண்பித்து விளக்கினார்கள். பைலா திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இப்பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. ஆர்வத்துடன் கையில் பைலா புத்தகம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் ஆயிரக்கணக்கான பொதுக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...!.

வியாழன்

மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் – ஆசாத் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 07.12.2011 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ஷிஹாப் உல் ஹக் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது?” நிகழ்ச்சியை நடத்துவது குறித்து பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

“ஆசுரா நோன்பு ஏன்?” ஆசாத் நகர் கிளை தெருமுனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 04.12.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் யஹ்யா  அவர்கள் “ஆஷுரா நோன்பு ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்…

புதன்

ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 04.12..2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் முஹர்ரம்  மாதத்தின் சிறப்புகள் உலகில் நடக்கும் பித்அத்துகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

திங்கள்

தவ்ஹீத் ஜமாஅத்தால் உறவுகள் முறிவு


இஸ்லாத்திற்கு முரணான திருமணங்கள் மற்றும் அனாச்சாரமான, நிகழ்ச்சிகளுக்கு சொந்த உறவினர்கள் வந்து அழைத்தாலும் தவ்ஹீத் நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தவிர்க்கிறார்கள். மாற்றுக் கொள்கையுடையவர்கள் இந்த தவ்ஹீத் ஜமாஅத் வந்ததில் இருந்து உறவுகள் முறிகின்றன என்று சொல்வது சரியா ?
- கிள்ளை யூசுப்,
? உறவுகள் முறியும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அசத்தியத்தை எதிர்த்து யார்  களம் இறங்குகிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த நிலையைச் சந்தித்தே உள்ளனர். தீமைகளைக் கண்டு யாருக்குக் கோபம் வருகிறதோ

பெண்கள் பூ வைக்கலாமா?

பெண்கள் பூ வைக்கலாமா?
முஹம்மத் ஃபத்தாஹ் தஞ்சை
பதில்
பூ என்பது நறுமணப்பொருளாகவும் அலங்காரமாகவும் உள்ளது. பெண்கள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்கள் இஷாத் தொழுகைக்கு பள்ளிக்கு வரும்போது நறுமணம் பூசிக்கொண்டு வரக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பூ வைத்துக் கொண்டு இரவில் பள்ளிக்கு வரக்கூடாது.
பள்ளி அல்லாத மற்ற இடங்களுக்கு பூ வைத்துக்கொண்டு செல்லலாம். பூ அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம் இதை வெளிப்படுத்துவது கூடாது.

ஞாயிறு

கோவையில் இஸ்லாம் ஓர் இனியமார்க்​கம்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மதுக்கரை கிளையின் சார்பாக 04.12.2011 அன்று இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் பிறமத சகோதரர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். பிறமத சமுதாய மக்கள் இஸ்லாத்தை

வியாழன்

தரகுத் தொழில் கூடுமா?


நூர்தீன்
பதில்
பொதுவாக தரகு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. நமக்கு ஒரு வீடு வாடகைக்கோ விலைக்கோ தேவை என்றால் அதற்கேற்ற வீடுகள் எங்கெங்கே உள்ளன என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்க முடியாது. நாம் நமது வீட்டை அல்லது ஏதாவது சொத்தை விற்க நினைத்தால் யார் வாங்கும் எண்ணத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிய முடியாது. இதற்காகவே சிலர் முயற்சித்து தகவல்களைத் திரட்டி தருவதை தமது முழு நேரத் தொழிலாக செய்து வருகின்றனர். தரகர்கள் இல்லாவிட்டால் இது போன்ற பல வியாபாரங்கள் தடைபட்டு விடும்.

ஆசூரா நோன்பு

  முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆம் பிறையில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.
ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1592

வெள்ளி

விரலசைக்காமல் தொழுதால் தொழுகை கூடுமா?


விரலசைக்காமல் தொழுதால் தொழுகை கூடுமா?
ஸீனத்
பதில்
தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைக்காமல் தொழுபவர்கள் இரண்டு வகையினராக இருக்கின்றனர்.
ஒரு வகையினர் விரலசைப்பது தொடர்பாக வரும் நபிமொழியை அறியாது இருத்தல் அல்லது அந்தச் செய்தி பலவீனமானது என்று கூறும் சிலருடைய தவறான கூற்றைச் சரி என்று நம்புதல் இது போன்ற காரணங்களால் விரலசைக்காமல் தொழுவார்கள்.

புதன்

குண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களை மட்டும் தொடர்பு படுத்துவது பிரித்தாளும் சூழ்ச்சி - பிரஸ் கவுன்சில் தலைவர் பேச்சு!


"குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்களை மட்டும் தொடர்புபடுத்திச் செய்தி வெளியிடுவது பிரித்தாளும் சூழ்ச்சி" என பிரஸ் கவுன்சில் தலைவரான நீதியரசர் மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு சென்னையில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கான‌ கருத்தரங்கில் பேசியதாவது:
"நண்பர்களே,
என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில்தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன்.

தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால் என்னுடைய பணியைச் சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன்.

இந்தக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன். அதிகார மையங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் போடப்பட வேண்டும் என்றும் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

சமீபத்தில் மத்திய அரசாங்கம் புதிதாக தொடங்கப்பட உள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கென்று விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19 (1) (a) கருத்துச் சுதந்திரத்தோடு ஊடகத்துக்கான சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளதுசானால் அந்தச் சுதந்திரம் கட்டுப்பாடற்ற வகையில் இருக்க முடியாது. நியாயமான சில கட்டுப்பாடுகள் வேண்டும். பாரபட்சமில்லாமல் உண்மைத்தன்மையோடு மக்களுக்கு செய்திகளைத் தர வேண்டியது, ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் கடமை. ஆனால், இந்திய ஊடகங்கள் இந்தச் செயலை பொறுப்போடு செய்கின்றனவா?

பொறுப்பற்ற முறையில் ஊடகங்கள் செயல்படுவது குறித்த சில சம்பவங்களைப் பார்ப்போம்.

ஊடகங்கள் பல நேர்வுகளில் செய்திகளைத் திரித்து வெளியிடுகின்றன.

உச்ச நீதிமன்ற நீதிபதி க்யான் சுதா மிஷ்ராவோடு நான் உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் பல மாதங்கள் அமர்ந்திருக்கிறேன். ஒரு நாள் இந்தியாவின் முக்கிய செய்தித் தாள் ஒன்று முதல் பக்கத்தில் நீதிபதி மிஷ்ராவின் புகைப்படத்தை வெளியிட்டு "தன் மகள்கள் கடன் சுமை (liability) என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கிறார்" என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தி முழுக்க முழுக்க திரிக்கப் பட்ட உண்மைக்குப் புறம்பான செய்தி; அதுவும் பிரபலமான ஆங்கில செய்தித் தாளின் முதல் பக்கத்தில் வந்தது.

உண்மை நிலவரம் என்னவென்றால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்துக்களையும் கடன்களையும் வெளியிட வேண்டும். கடன்கள் என்ற பிரிவில், நீதிபதி மிஷ்ரா "இரண்டு மகள்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். மிகச் சரியாகப் பார்த்தால், இதைக் குறிப்பிட வேண்டியதே இல்லை. கடன்கள் என்றால் வீட்டுக் கடன், கார் கடன் போன்றவைதான் அடங்கும். ஆனால் நீதிபதி மிஷ்ரா எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணத்துக்கு ஏராளமான பணம் செலவு ஆகும் என்ற பொருளில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒருவருக்குத் திருமணம் ஆகி விட்டது. மற்ற இருவருக்கும் இனிதான் திருமணம் செய்ய வேண்டும். நீதிபதி மிஷ்ரா நிச்சயமாக தன்னுடைய மகள்களைக் கடன் சுமை என்ற பொருளில் அவ்வாறு குறிப்பிடவேயில்லை. பிரசுரிக்கப் பட்ட அந்தச் செய்தி முழுக்க முழுக்க பொய்யானதும், ஆட்சேபகரமானதும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பிரசுரிக்கப் பட்ட செய்தி.

இந்தச் செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கு மட்டும் துயரத்தையும் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்த வில்லை. அவரின் குடும்பத்தினருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கும் அவர் குடும்பத்துக்கும் எத்தனை வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும் என்பதை அநக்ச் செய்தித்தாளின் பொறுப்பாளர்கள் உணர்ந்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. அவரின் நோக்கம் செய்தியைத் திரிப்பதன் மூலமாக பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே.

அப்படியே தன் மகள்களைப் பற்றி நீதிபதி மிஷ்ரா எழுதியது தவறு என்று வைத்துக் கொண்டாலும், அடுத்தவருக்கு எத்தனை வேதனையை ஏற்படுத்தும் என்று உணராமல் இந்தத் தவறை திரித்து செய்தியாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? இங்கே குழுமியிருக்கும் ஊடகத்துறையினரே நீங்களே சுயபரிசோதனை செய்து இதற்கான விடையைத் தேடிக் கொள்ளுங்கள்.

சமீப காலமாக, பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடும் போக்கு வளர்ந்து வருகிறது. 2009 தேர்தலில் இது பெரிய சர்ச்சையானது. இதை எப்படித் தடுப்பது என்பதை நாம் விவாதித்து முடிவு காண வேண்டும். 19.09.2011 நாளிட்ட தலைமை தகவல் ஆணையரின் உத்தரவுப் படி பிரனஞ்சோய் குஹா தாகுர்தா மற்றும் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஆகியோர் அடங்கிய, இந்த விவகாரம் குறித்து ஏற்படுத்திய ஆய்வுக் கமிட்டியின் அறிக்கை ப்ரஸ் கவுன்சிலின் இணைய தளத்தில் ஏற்றப் பட்டுள்ளது. இந்த அறிக்கையை ப்ரஸ் கவுன்சில் தனது 26.04.2010 நாளிட்ட கூட்டத்தில் நிராகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

அடுத்ததாக ஊடகங்கள் உண்மையான விவகாரங்களைச் செய்தியாக்காமல், அவசியமற்ற விவகாரங்களைச் செய்தியாக்குவது அடிக்கடி நடக்கிறது. நம் நாட்டில் கவனிக்கப் பட வேண்டிய விஷயங்கள், வறுமை, வேலையின்மை, போதுமான வீட்டு வசதி சுகாதார வசதியின்மை, 80 சதவிகித மக்கள் மோசமான பொருளாதார சூழ்நிலையில் வாழ்வது ஆகியவையே கவனிக்கப் பட வேண்டிய செய்திகள். ஆனால் இந்த விவகாரங்களை புறந்தள்ளி விட்டு, ஊடகங்கள் சினிமா நடிகரின் மனைவி கர்ப்பமானது, அவர் ஒரு குழந்தை பெற்றெடுப்பாரா, இரட்டை குழந்தை பெற்றெடுப்பாரா என்பது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. இதுவா இந்தத் தேசத்தை பீடித்திருக்கும் முக்கிய பிரச்சினைகள்?

லாக்மே இந்திய ஃபேஷன் விழா நடக்கையில் அரசு அங்கீகாரம் பெற்ற 512 செய்தியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாடல்கள் பருத்தி ஆடைகளை அணிந்து அணி வகுப்பதைக் கவனமாக செய்தியாக்கும் செய்தியாளர்கள் அந்த விழா நடக்கும் இடத்திலிருந்து விமானத்தில் ஒரு மணி நேரத்தில் செல்லக் கூடிய இடத்தில் இந்த பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை வசதியாக மறந்து விட்டார்கள். ஓரிருவரைத் தவிர விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி யாருமே கவலைப் படுவதில்லை.

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா? இந்தியாவின் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களின் மோசமான பொருளாதார சூழலைக் கண்டுகொள்ளாமல், கவர்ச்சியும் பரபரப்பும் இருக்கும் போலியான இடங்களில் தங்கள் கவனத்க்ச் செலுத்துவது முறையான செயலா? மக்களுக்கு ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்று சொன்ன ராணி மேரி அன்டோனியெட் போல ஊடகங்கள் நடந்து கொள்ளவில்லை?

ஊடகங்கள் விவசாயிகளின் தற்கொலைகள், விலைவாசி உயர்வு, என முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் இது 5 முதல் 10 சதவிகிதமே. மொத்த ஊடகத்தின் கவனமும், திரைப்பட நட்சத்திரங்களின் வாழ்க்கை, பாப் இசை, பேஷன் பரேடுகள், கிரிக்கெட் மற்றும் ஜோதிடத்திலேயே இருக்கிறது.

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அருகேயும், மும்பாய், பெங்களுரிலும் குண்டு வெடிப்புகள் நடந்தன. குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே டிவி சேனல்கள் இந்தியன் முஜாஹிதீன் அல்லது ஜெய்ஷ் ஏ முகம்மது அல்லது ஹர்கத்துல் ஜிஹாத் ஏ இஸ்லாம் போன்ற அமைப்புகள் ஈமெயில் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டன என்று செய்திகள் வெளியிடுகின்றன. இது போன்ற இயக்கங்களின் பெயர்கள் எப்போதுமே இஸ்லாமியப் பெயர்களாக இருக்கும். ஒரு ஈமெயிலை யாரோ ஒரு விஷமி எளிதாக அனுப்பமுடியும். ஆனால் இதை டிவிக்களில் செய்தியாக காட்டுவதும், செய்தித் தாள்களில் அச்சிடுவதும் இந்தியாவில் உள்ள அத்தனை இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற போக்கு உள்ளது.

உண்மை என்னவென்றால் அனைத்து சமூகங்களிலும், இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ அல்லது எந்த ஜாதியோ அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களில் 99 சதவிகிதத்தினர் நல்லவர்கள். ஆனால் இது போலச் செய்திகள் வெளியிடுவதால், எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்கும். தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக எஸ்எம்எஸோ ஈமெயிலோ அனுப்பும் நபரின் நோக்கம் நிச்சயமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இடைவெளியை உருவாக்குவதுதான். இது பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி. தெரிந்தோ தெரியாமலோ இந்திய ஊடகம் இந்தத் தந்திரத்தைக் கையாளுவது சரியா?

ஊடகத்துறையில் உள்ள சில குறைகளை சுட்டிக் காட்டினேன். ஊடகத்தில் மட்டுமல்லாமல், நீதித் துறை அரசு நிர்வாகம் போன்ற துறைகளிலும் குறைகள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் அனைவரும் இணைந்து இந்தக் குறைகளை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

ஊடகத்துறையில் உள்ள குறைகளைப் போக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலம் தீர்க்கும் ஜனநாயக வழி. மற்றொன்று அரசு விளம்பரங்களை நிறுத்துவது, கடுமையான அபராதம் விதிப்பது என்ற கடுமையான வழி.

என்னுடைய கருத்தில் ஜனநாயகபூர்வமான வழியை முதலில் கடைபிடிக்க வேண்டும். இதன் பொருட்டு, நான் ஊடகத் துறையினரை, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத்துறையினரை அடிக்கடி சந்தித்து உரையாடலாம் என்று திட்டமிட்டுள்ளேன். அந்த விவாதங்களின் போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லாமல், நாமே சுயபரிசோதனை செய்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறியலாம். இந்தக் கலந்துரையாடல்கள் இரண்டு மாதங்களுக்கோ, மூன்று மாதங்களுக்கோ ஒரு முறை நடக்கலாம். அப்போதுதான் மக்களுக்கு ஊடகம் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

ப்ரஸ் கவுன்சிலின் கட்டுப்பாட்டுக்குள் தொலைக்காட்சி ஊடகம் வராது என்றாலும் கலந்து உரையாடுவதில் தவறேதும் இல்லை. அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகம் இரண்டுக்கும் சமமான பொறுப்பு உள்ளது.

ஒரு வேளை ஊடகங்கள் ஒத்துழைக்க மறுத்தால் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துத் தான் ஆக வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக விவாதங்களின் மூலம் சுய கட்டுப்பாடு விதித்துக் கொள்ளலாம். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு தொலைக்காட்சிகளுக்குக் கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளைக் கூட தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இது வரை ப்ரஸ் கவுன்சிலின் பணி தாவாக்களை தீர்த்து வைப்பது மட்டுமே. ஆனால் நான் ப்ரஸ் கவுன்சிலைச் சமரச மையமாக மாற்ற வேண்டும் என்றும், அதுவே ஜனநாயகபூர்வமான வழி என்றும் கருதுகிறேன். இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

இந்தியா மிக முக்கியமான மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. விவசாயச் சமூகமாக இருந்து வந்த இந்தியா தற்போது தொழில் சார்ந்த சமூகமாக மாறி வருகிறது. 16 முதல் 19ம் நூற்றாண்டு வரையிலான ஐரோப்பிய வரலாற்றைப் படித்திருப்பீர்களேயானால் தொழில் புரட்சி நடந்த அந்தக் காலகட்டத்தில் கடும் கலவரமும், குழப்பங்களும், போர்களும் நடந்தது என்பதைக் காண முடியும். அந்த நெருப்பில் குளித்த பிறகே ஐரோப்பா தற்போது உள்ளது போல நவீன சமுதாயமாக மாறியது. தற்போது இந்தியா அந்த நெருப்பில் இறங்கியுள்ளது. இன்னும் 20 ஆண்டுகளுக்கு இந்தியா ஒரு நவீன தொழில் சார்ந்த சமூகமாக மாறும் வரை மிகுந்த வேதனையான காலகட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஊடகங்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சமூகத்திற்கு உதவ வேண்டும். சாதி உணர்வு, மத உணர்வு போன்றவற்றுக்கு எதிராக எழுதி நவீன விஞ்ஞான உணர்வுகளை வளர்க்கலாம்.

முடிக்கும் முன்பாக அஜ்மீர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மருத்துவர் டாக்டர் கலீல் க்ரிஸ்டியை விடுவிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொள்கிறேன். கலீல் சிஸ்டி 80 வயதானவர். அவர் இன்னும் நீண்ட நாள் வாழப் போவதில்லை. அவர் மிகச் சிறந்த மருத்துவர். கராச்சி மருத்துவக் கல்லூரியில் படித்து விட்டு, எடின்பர்க் பல்கலைகழகத்தில் பிஎச்டி முடித்தவர். அவர் ஒரு இதய நோயாளி. மேலும் பல்வேறு நோய்களும் அவருக்கு இருக்கிறது. அவரால் நடக்க முடியாது. மனிதத்தன்மையோடு அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். விடுதலை செய்யப் பட்டால் அவர் கராச்சியில் உள்ள தனது மனைவியோடும் மகளோடும் அவர் இறுதிக் காலத்தை கழிக்க முடியும். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்டிருந்த கோபால் தாஸ் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசு அவரை விடுதலை செய்தது. ஆனால் இந்திய அரசு பல மாதங்களுக்கு முன்னால் உள்துறை அமைச்சர், பிரதமர், ராஜஸ்தான் மாநில ஆளுனர் ஆகியோருக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நாம் இவரை விடுதலை செய்தால், இந்தியாவின் நன்மதிப்பு கூடும். ஆனால் இவர் இந்தியச் சிறையில் இறந்தால், நமக்கு தீராத அவப்பெயர் உண்டாகும்."
இவ்வாறு அவர் பேசினார்.