தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

அறிவிப்பு பீ.ஜைனுல் ஆபிதீன் பொறுப்பும் அமானிதமே

பொறுப்பும் அமானிதமே
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் சமுதாயத்தில் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் ஏற்படுத்தினான். இந்த ஜமாஅத்தின் கொள்கையை எதிர்ப்பவர்களும் இந்த ஜமாஅத்தைப் போல் நம்பகமான இயக்கம் வேறு இல்லை என்று நம்பும் அளவுக்கு அல்லாஹ் இந்த ஜமாஅத்துக்குப் பேரருள் புரிந்துள்ளான்.
இந்த ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டது முதல் என்னால் இயன்றவரை அப்பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன். ஆனால் சமீபகாலமாக உடல் நலனில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் காரணமாக பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற இயலாமல் போவதை நான் உணர்கிறேன். என்மீது சுமத்தப்பட்ட மாபெரும் அமானிதத்தில் குறை வைக்கக்கூடாது என்பதற்காக நான் ஓய்வில் இருக்கும் காலம் வரை யாராவது இப்பொறுப்பைச் சுமந்து கொள்ள வேண்டும் என்று பலமுறை நான் நிர்வாகக் குழுவில் வலியுறுத்தியும் அல்லாஹ்வின் அருளால் இப்போது தான் இதற்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.
எம்.ஐ.சுலைமான் அவர்கள் இப்பொறுப்பைச் சுமந்திட ஒப்புக் கொண்டுள்ளார். தலைவராகப் பொறுப்பேற்குமாறுதான் நான்  அவரை வற்புறுத்தினேன். ஆனால் உயர்நிலைக் குழுவும் இதை ஏற்கவில்லை. சுலைமானும் ஏற்கவில்லை. செயல்தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கி எம்.ஐ.சுலைமான் செயல்தலைவராக இருக்கட்டும் என்ற அளவுக்குத் தான் உயர்நிலைக் குழு இதை ஏற்றுக் கொண்டது.
சேலம் மதரஸாவின் கல்வி ஆண்டு முடிந்தவுடன் அனேகமாக ஜூன் மாதம் முதல் எம்.ஐ.சுலைமான் எனது பணிகளைக் கவனிப்பார். தேவைப்படும் போது எனது ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வார். அதுவரை என்னால் இயன்ற அளவுக்குப் பொறுப்பை நிறைவேற்றுவேன். ஏற்கனவே நான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை இன்ஷா அல்லாஹ் நடத்திக் கொடுப்பேன். கிறித்தவர்களுடனான விவாதங்கள் உள்ளிட்ட அனைத்து விவாதங்களிலும் எனது பணி எப்போதும் போல் இருக்கும் இன்ஷா அல்லாஹ். அவசர நேரங்களில் எனது உடல் நலனைப் பொருட்படுத்தாமல் பாடுபடுவேன். துஆச் செய்யுங்கள்!

உயர்நிலைக் குழுவின் ஒப்புதலோடு இதை வெளியிடுகிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்

வியாழன்

சிங்கள மொழியிலும் சூடுபிடிக்கும் தாவாப்பணி


இலங்கையில் புத்த மதத்தைப் பின்பற்றுவோர் சிங்கள் மொழி பேசுவோராகவும், இந்து, முஸ்லிம் கிறித்தவர்கள் தமிழ் மொழி பேசுவோராகவும் உள்ளனர். புத்த மதம் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான மதமாக இருப்பதாலும் சிங்கள மொழி பிரதான மொழியாகவும் உள்ளதால் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாத தமிழர்களும் சிங்கள மொழியையும் படிக்கிறார்கள். ஆனால் சிங்கள மொழி பேசுவோர் பெரும்பாலும் தமிழ் மொழியைப் படிப்பதில்லை. எனவே சிங்கள் மக்கள் மத்தியில் சத்தியப் பிரச்சாரம் சென்றடைய வேண்டுமானால் சிங்கள் மொழியில் நூல்கள் வெளியிடப்பட்டால் தான் சாத்தியமாகும்.

இதில் தமிழ் கூறும் முஸ்லிம் அமைப்புகள் போதுமான அளவுக்கு அக்கறை செலுத்தாமல் இருந்த குறையை இலங்கையில் SLTJ (ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கைப் பிரிவு) ஓரளவுக்கு நிவர்த்தி செய்து வருகின்றது.
இது வரை 17 நூல்களை சிங்கள் மொழியில் SLTJ வெளியிட்டுள்ளது. SLTJ யின் இலங்கை பொதுச் செயலாளர் அப்துர்ராஸிக் அவர்கள் இந்த நூல்களை சிங்கள் மொழியில் மொழிபெயர்த்து இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளியிடப்பட்ட்து.
பீஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கமும் சிங்கள மொழியில் மாற்றம் செய்யும் பணிகளும் முடியும் தறுவாயில் உள்ளது.
இதன் மூலம் சிங்கள மக்கள் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு இஸ்லாத்தில் ஈர்க்கப்பட்டும் வருகின்றன. அல்ஹம்து லில்லாஹ்
சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட நூல்களில் சில




புத்தகம் கிடைக்குமிடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தக நிலையம் இல 241யு, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை மாளிகாவத்தை கொழும்பு -10.
தொடர்புகளுக்கு 0112677974 0774781472

புதன்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 20.3.2012 அன்று மே 6மாநாடு விளம்பர பேனர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்  கிளையின் சார்பாக 20.3.2012 அன்று மே 6 கோவை மாவட்ட  குடும்பவியல் மாநாடு விளம்பர பேனர்கள் 10 மேற்ப்பட்டவை ஆசாத்நகர் பகுதிகளில் வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 20.03.2012 மாற்று மத தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 20.03.2012 அன்று மாற்று மத தஃவா செய்யப்பட்டது. மாற்று மதத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. மற்றும் அவர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களும் வழங்கப்படடன.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக குர்ஆன் வகுப்பு 19.03.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக குர்ஆன் வகுப்பு கடந்த 19.03.12 அன்று பேச்சாளர் ஆனைமலைஅன்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக18.03.2012 அன்று தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்  கிளையின் சார்பாக18.03.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சாரமேடு ஜாகீர்  அவர்கள் “ஓழுக்கம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் 17.03.2012 அன்று பெண்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் 17.03.2012 அன்று பெண்கள் தர்பியா  நடைபெற்றது. இதில் காதிரா அவர்கள் “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 15.03.2012 தனிநபர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 15.03.2012 அன்று தனிநபர் தஃவா செய்யப்பட்டது....

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் 12.03.2012 அன்று பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் 12.03.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் காதிரா அவர்கள் “மறுமை வெற்றி” என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு 11.03.12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக குர்ஆன் வகுப்பு கடந்த 11.03.12 அன்று பேச்சாளர் அன்சர்கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

செவ்வாய்

கோவையில், “இஸ்லாமிய குடும்பவியல் மாவட்ட மாநாடு” 18-கும் மேற்பட்ட அரங்கங்களுடன்…..





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக இன்ஷா அல்லாஹ் மே-6 ஆம் தேதி, இஸ்லாமிய குடும்பவியல் மாவட்ட மாநாடு” நடைபெற உள்ளது. இதில் P. ஜைனுல் ஆபிதீன், சம்சுல்லுஹா, பக்கீர் முஹம்மத் அல்தாபி, ரஹ்மத்துல்லாஹ், M.I.சுலைமான்,  M.S.சுலைமான், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி,  உள்ளிட்ட மார்க்க அறிஞர்களின் உரைகளுடன், 18-கும் மேற்பட்ட பயனுள்ள அரங்கங்கள் அனைத்தும்  உங்களுக்காகவே………….
உங்கள் பிள்ளைகளின் கோடை விடுமுறையை குடும்பத்துடன் பயனுள்ளதாக மாற்ற கோவை நோக்கி படையெடுங்கள்!

மாநாட்டில் இடம்பெறவுள்ள அரங்கங்களில் சில உங்கள் பார்வைக்கு….

பேய், பிசாசு, ஜின் மூட நம்பிக்கை என்ன என்பதை விளக்கும் வகையில் அரங்கம்.

தர்கா வழிபாடு இணைவைப்பு கொள்கை ஒழிப்பு அரங்கம்
தமிழகம் மற்றும் இந்தியாவில் இட ஒதுக்கீடு ஓர் பார்வை என்பதை விளக்கும் விதமாக  அரங்கம்.

முஸ்லீம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியின் ஓர் பகுதியாக எளிய மார்க்கம் அரங்கம்.
அரசு நலத்திட்ட உதவிகள் பற்றிய அரங்கம்                           (முதியோர், விதவைகள், ஆதவற்றோர், மாற்று திறனாளிகள், உதவித்தொகை பெறுவது தொடர்பாகவும் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவது எப்படி !!!)
போதை-புகை தீமைகளை விளக்கும் அரங்கம்

இலவச மருத்துவம் மற்றும் இரத்தவகை கண்டறிதல் அரங்கம்.

கல்வி விழிப்புணர்வு அரங்கம்.

ஜனாஸா  கடமைகள் செய்முறை விளக்கங்களுடன் அரங்கம்.

ஹஜ்  செய்முறை விளக்கங்களுடன் அரங்கம்
          அறிவியலும் இஸ்லாமும் அரங்கம்.
      
         குடும்ப பிரச்சினைகளை இஸ்லாம் கூறும் முறையில்தீர்க்கும்                   விதமாக ஆலோசனை அரங்கம்

இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்கள்  அரங்கம்

தமிழகத்தில் ஏகத்துவ வளர்ச்சி அரங்கம்.

கணிணி மூலம் மார்க்கத்தை அறிந்து கொள்வது எப்படி?அரங்கம்

ஜமாத்தின் பணிகள் ஓர் அரங்கம் (அனாதை அர்ரஹ்மான், முதியோர்-அர் ரஹீம், தாவா சென்டர், ஏகத்துவம் – தீன்குலப்பெண்மணி – உணர்வு ஓர் அரங்கம்).
           கோவை மாவட்ட பணிகள் ஓர் அரங்கம்.

மேற்கண்ட அரங்கங்களில் இடம் பெறுபவைகளை பற்றிய தனி தனி தொகுப்பு, இன்ஷா அல்லாஹ் நாளை….
மாநாட்டில் உரையாற்றுபவர்களின் தலைப்பு இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் எதிர் பாருங்கள்……

புதன்

ரேஷன் கார்டு புதுப்பிக்கலயா...


ரேஷன் கார்டு புதுப்பிக்கலயா...கவலைப்படாதீங்க... ஆன்லைனில் அசத்துங்கஉங்கள் ரேஷன் கார்டை புதுப்பிக்க தவறிவிட்டீர்களா... கவலைப்படாதீங்க... மீண்டும் ஒருவாய்ப்பை அரசு வழங்கியுள்ளது. இந்த முறை உங்கள் நேரத்தை செலவிட்டு ரேஷன் கடைக்கு வரவேண்டாம். ஆன்லைனில் உங்கள் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம்.

 இது உண்மைதாங்க.தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த ரேஷன் கார்டுகள் கடந்த ஆண்டுடன் காலாவதி ஆகிவிட்டது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் வகையில், 2012ம் ஆண்டு முதல் குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாளம் ஆகிவற்றுடன் ‘பயோமெட்ரிக்’ முறையில் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடித்து வழங்கப்பட்ட இருந்தது. ஆனால், அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால், இந்த ஒருவருடத்திற்கு மட்டும் தற்போதுள்ள ரேஷன் கார்டுகளையே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜனவரி 2 முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.

அதோடு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர்கள் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமையும் கார்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.ஆனாலும், பலரால் வெளியூர் சென்றதாலும், பணி காரணமாகவும் ரேஷன் கார்டை புதுப்பிக்க முடியாததால், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட அரசு, இம்மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்த காலத்திற்குள் தங்களது ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது.இந்த முறை கார்டை புதுப்பிக்க ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டாம். மாறாக, ஆன்&லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

அதாவது, http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். இதில், ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012ம் ஆண்டிற்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும் மற்றொரு நகலை உரிய ரேஷன் கடையில் கொடுத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்பவர்கள் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே பயன்படுத்துவோர் ஒருநகலை அவர்கள் ரேஷன் கார்டில் ஒட்டிக் கொண்டாலே போதுமானது.இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க...

வெள்ளி

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக ரூபாய் 1000 மருத்துவ உதவி

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக இருதய நோயால்  பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ  உதவியாக  ரூபாய் 1000 29.02.12 வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக ரூபாய்1000 மருத்துவ உதவி 28.02.12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  நோயால்  பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ  உதவியாக  ரூபாய் 1000 28.02.12 வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக வாழ்வாதார உதவி 28.02.12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  அண்ணா காலனியை சேர்ந்த முதியவருக்கு சைக்கிள் வாங்குவதற்கு உதவியாக 28.02.12 அன்று ரூபாய் 550வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக ரூபாய் 1000மருத்துவ உதவி 27.02.12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  சிறுநீரக நோயால்  பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ  உதவியாக  27.02.12  அன்று ரூபாய் 1000 வழங்கப்பட்டது.