தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

ஜும்மா தொழுகைக்கு தடை போட்ட காவல் துறை, புரட்சியுடன் நடந்த புதிய ஜும்மா

S 
கோவை மாவட்டம் ஜீ.எம் நகர் (கௌஸ் முஹைதீன் நகர்) கிளை தொடங்கி பல ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த மாதம் மாநில புள்ளி பட்டியலில் கோவை ஆறாவது இடத்தில் (கிளைகளின் தரவரிசையில் ஜீ.எம் நகர் பதினோராவது இடம்) வந்தமைக்கு காரணம் இந்த கிளைதான், பல கிளைகளுக்கு முன்னுதாரணமாக தாவா பணிகள் செய்த காரணத்தினால் வல்ல ரஹ்மான் கருணையினால்  குறைந்த விலையில் இடமும் முன்பணம் கொடுத்தவுடன் இடத்தின் உரிமையாளர் இடத்தை பயன்படுத்திகொள்ளவும் அனுமதி தந்துவிட்டார்.

ஜமாத்தின் அலுவலகம் அமைக்கும் பணியை கிளை நிர்வாகிகள் செய்துவந்தனர், இந்த வாரம் ஜும்மா துவங்கலாம் என்ற முடிவோடு பணிகள் துரிதமாக நடைபெற்றன. வியாழன் அன்று தாசில்தார் அவர்கள் நம்முடைய இடத்திற்கே வந்து முறையாக கடிதம் கொடுங்கள், நாங்கள் அனுமதி தருகிறோம் என்றார், கிளை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்ள மாநில நிர்வாக ஆலோசனையுடன் கீழ்க்கண்ட கடிதம் கொடுக்கப்பட்டது

இக்கடிதம் பூரண உடல்நலதுடனும் ஏக இறைசிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக, சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக,
கோவை மாவட்டம் ஜீ.எம் நகர்(கௌஸ் முகைதீன் நகர்) பகுதியில் எங்களுடைய ஜமாத்தின் கிளைக்கான  அலுவலகம்  அமைத்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்,
மாநில மாவட்ட நிர்வாகம் செயல்படுத்திவரும் பணிகளான முதியோர் இல்லம், ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் இல்லம், கல்விப்பணிகள், ஏழைகளுக்கான கல்வி உதவிகள், இலவச ட்யூஷன் வகுப்புகள், மாணவர்களுக்கான கோடைகால வகுப்புகள், இலவச கணினி வகுப்புகள், மக்களுக்கான நலத்திட்டங்கள், இஸ்லாம் கூறும் ஏழைகளுக்கான ரமளான்-பக்ரீத் உதவிகள், இலவச மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள்  போன்ற இன்னும் சிறப்பான பணிகளை செய்ய உள்ளோம், தாங்களும் தங்கள் நிர்வாகமும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கடிதம் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கிளை அலுவலகத்திற்கு நேரில் வந்து தொழுகை உட்பட எந்த பணிகளும் தற்போது செய்யக்கூடாது, ஆர்.டீ.ஓ விசாரணைக்கு பின்புதான் அனுமதிப்போம் என்று காவல்துறை துணையுடன் தடை செய்தனர், மீறினால் கைது செய்வோம் என்றும் எச்சரிக்கை செய்தனர், கிளை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தனர் கிளைக்கு சென்ற மாவட்ட இந்நாள் மற்றும் முன்னால் நிர்வாகிகள் அதிகாரிகளின் மிரட்டலுக்கு அஞ்சவேண்டாம் என முடிவு செய்து தடை மீறி தொழுவோம் காவல்துறை கைதுசெய்துகொள்ளட்டும் என்று கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அதன் அடிப்படையில் புரட்சியுடன்  புதிய ஜும்மா தொடங்கியது.

மாவட்ட செயலாளர் சகோ.நவ்சாத் அவர்கள் ஜும்மா உரையாற்றினார், அப்பகுதி மக்களும்-கொள்கை சகோதரர்களும் பெண்களும் பெரும்திரளாக கலந்துகொண்டனர், ஜும்மா உரையில் காவல்துறை கைது செய்தாலும் தயாராக இருப்போம் என்று குறிப்பிட்டதால்  தொழுகை முடிந்தவுடன் கைதுக்கு  தயாராகவே மக்கள் வெளியே வர அரசு இயந்திரம்  சலசலப்பு இல்லாமல் சென்றுவிட்டது…

பொது இடங்களில், தங்களின் வழிபாட்டிற்க்காக, அரசு நிலங்களை ஆக்கிரமிக்கும் சக்திகளை எதிர்க்க ஆண்மையற்ற இந்த அரசு இயந்திரம், முஸ்லிம்கள் மக்களிடமிருந்து வசூலித்த பணத்தில் சொந்தமாக இடம் வாங்கி அதில் தொழுகை நடத்த முயன்றால் அதை தடுக்க ஓடோடி வருகிறது சூடு சொரணையற்ற இந்த கருங்காலி கூட்டம்… 

உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும்   அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.  திருமறை:47:31
ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக்கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்த பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனைவிட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும். திர்மிதி-2322

செவ்வாய்

இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்?

 

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரீ 990
இரவுத் தொழுகையின் நேரம்
இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1340
ரக்அத்களின் எண்ணிக்கை
8+3 ரக்அத்கள்
“ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா! என்
கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா, நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1344
12+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1138,183 முஸ்லிம் 1400,1402,
10+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1339
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1341
4+5 ரக்அத்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ”சின்னப் பையன் தூங்கிவிட்டானோ?” அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின் முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது (சுபுஹத்) தொழுகைக்கு புறப்பட்டார்கள் நூல் : புகாரி (117)
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1341)
9 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139
7 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139 5,3,
1 ரக்அத்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி), நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

திங்கள்

ஆசாத்நகர் கிளையின் சார்பாக சிறுவர்கள் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  11-07-12  அன்று சிறுவர்களுக்கான தர்பியா நடைப்பெற்றது இதில் சகோ. அன்சர் அவர்கள் “நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் பயிற்சி செய்தார்கள்....

ஆசாத்நகர்கிளையின் சார்பாக மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்கிளையின் சார்பாக கடந்த  10.07-2012 அன்று   மருத்துவ உதவியாக ரூபாய் 2000  வழங்கப்பட்டது.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக 10.07.12 பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  10.07.12 பெண்கள் பயான்   நடைபெற்றது. இதில் சகோதரர் காஜா அவர்கள் “யார் அவுலியாக்கள்  ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அதிகமான  பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக11-07-12 தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  11-07-12 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்  உமர் பாரூக்“ அவர்கள்  ”பித்அத் எனும் வழிகேடு ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக கணிப்பொறி மூலமாக தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  07-07-12 ஆண்களுக்குகான  தர்பியா  நிகழ்ச்சியில் சகோதரர்  காஜா அவர்கள் கணிப்பொறி மூலமாக விளக்கங்கள் கொடுத்து  தர்பியா நடைபெற்ற்து.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 07.07.12 பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  07.07.12 பெண்கள் பயான்   நடைபெற்றது. “வேண்டாமே பித்அத்கள்  ” என்ற தலைப்பில் உரையாற்றிப்படட்து. இதில் அதிகமான  பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆசாத்நகர்கிளையின் சார்பாக காது கேளாத சிறுவனுக்கு காது மிஷின் வாங்குவதற்கு ரூ.10,000/- பத்தாயிரம் உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்கிளையின் சார்பாக கடந்த  07.07-2012 அன்று 10 வயது காது கேளாத சிறுவனுக்கு  காது மிஷின் வாங்குவதற்கு ரூ.10,000/- பத்தாயிரம்  உதவியாக அவருடைய தந்தையிடம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 05-07-12 தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  05-07-12 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்  சல்மான அவர்கள் “பாராத் இரவு ஓர் வழி கேடு  ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

ஆசாத்நகர் கிளை சார்பாக ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் 06.07.12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 06- 07 – 2012 அன்று  ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டதன் விளைவாக தாயத்து கயிறை தானே  கழற்றி ஏரியப்பட்ட காட்சி....

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  06-07-12 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டு தர்ஹா வழிபாடு சம்பந்தமான   சி.டி வழங்கப்பட்டடது.

புதன்

ஆசாத்நகர் கிளையின் சார்பாக நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  03-07-12 யார் இவர் என்ற தலைப்பில் நோட்டீஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  02-07-12 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டு ஏகத்துவம் சம்மந்தமான சி.டி வழங்கப்பட்டடது.

ஆசாத்நகர் கிளை சார்பாக மாணவர்களுக்கான தர்பியா

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 01 07 – 2012 அன்று  மாணவர்களுக்கான தர்பியா மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது

ஆசாத்நகர் கிளை சார்பாக ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 01 07 – 2012 அன்று  ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறுகள் கழற்றி ஏரியப்பட்டது....

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 01-07-12 தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  01-07-12 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்  அப்துல் அஜீஸ்“இணைந்து வாழ்வோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

ஞாயிறு

கொட்டும் மழையில் நடைபெற்ற கோவை கல்வி விழிப்புணர்வு பொது கூட்டம்


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவர் அணியின் சார்பாக இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு பொது கூட்டம் 30.06.2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொது கூட்டம், 7:15  மணிக்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.. ஆனால், இரவு 7  மணியிலிருந்தே மழை பெய்த வண்ணம் இருந்தது.மழை பெய்து கொண்டு இருந்தாலும், சரியாக 7:30 மணியளவில் பொதுக் கூட்டம் ஆரம்பமானது. பொது கூட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டவுடன், சிறு பிள்ளைகள் ஓடி வந்து மழையையும் பொருட்படுத்தாமல்  இருக்கைகளில் வந்து அமர்ந்தது ஒரு கணம் ஆடித்தான் போனோம். குழந்தைகளின் ஆவலை தொடர்ந்து பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் கொட்டும் மழையில் இருக்கைகளில் வந்து அமர்ந்து கொண்டனர். மாநில மாணவர் அணி செயலாளர் அல் அமீன் அவர்கள், கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார், மாநில துணை தலைவர் MI சுலைமான் அவர்கள், அனுமதியா? கட்டளையா? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இறுதியாக மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் பொது கூட்ட தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் நவ்சாத் அவர்களின் நன்றி உரையுடன் வல்ல ரஹ்மானின் அருளால் இப்பொதுக் கூட்டம் நிறைவுற்றது. இதில் மாவட்ட தலைவர் ஜலால், பொருளாளர் சஹாப்தீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.