தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

காவல்துறை மிருகங்களை கண்டித்து அவசர தந்தி அனுப்ப வேண்டி வாசகங்கள்!

பின் வரும் வாசகம் அடங்கிய அவசர தந்தியை அனைவரும் இதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு உடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்
Please take action against Chennai Triplicane Assistant commissioner of police Senthil Kumaran and Chintadripet D.C Mr.Giri who unlawfully enter Muslim’s houses in midnight and abuse the Muslim women and arrested innocent Muslims, also lathicharge against the Muslims who condemn this criminal offense of the police
முதலமைச்சர் முகவரி :
Chief Minister’s Special Cell
Secretariat, Chennai 600 009
கவர்னர்
Dr. K. Rosaiah
Governor of Tamil Nadu
Raj Bhavan, Chennai – 600 022
தலைமை செயலாளர் : Chief Secretary
Thiru Debendranath Sarangi IAS
Chief Secretary to Govt
Secretariat, Chennai – 600 009
உள்துறைச் செயலர் : Home Secretary
Thiru R Rajagopal IAS
Principal Secretary to Government,
Secretariat, Chennai – 600 009
டிஜிபி
Mr. K. Ramanujam, IPS
Director General of Police
Chief Office, Dr. Radha Krishnan Salai, Chennai – 600 004.

காவல் துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்
வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்
நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்
முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.
பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.
அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்

 

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்




சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்!

மாயன் நாட்காட்டியின் அடிப்படையில் கடந்த 21-12-2012 அன்று உலகம் அழியும் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது. ஊடகங்களிலும் இது குறித்து தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில்இந்த மூடநம்பிக்கையை அகற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகமெங்கும் விழிப்புணர்வு பரப்புரைகளை துண்டு பிரசுரங்கள் விநியோகம் சுவரொட்டிகள் மூலம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், சென்னை ஜாம்பஜார் கிளை நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் இந்து மதத்தை இழிவாக குறிப்பிட்டுள்ளதாக கூறி,    துண்டு பிரசுரம்  விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத்விநாயகர் சதுர்த்தி விழாக்குழு உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்கள், சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிர்வாகிகளை கைது செய்யவேண்டும் என பிரசுரம்  வெளியிட்டனர்.

மேலும்  விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், ஜாம்பஜார் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில்காவல்துறையினர் யாகூப் என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது, பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நுழைந்து அராஜகமாக சோதனை செய்த காவல்துறையினரை  கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நேற்று மதியம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கானோர் திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, காவல்துறை கூடுதல் ஆணையாளர்  ரவிகுமார், உதவி ஆணையாளர்கள் பவானீஸ்வரி, கிரி, ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான  காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

திருவல்லிக்கேணி  காவல் நிலையம் முன்பு போராட்டம் செய்த அனைவரையும் காவல்துறையினர்  கைது செய்து  வாகனத்தில் ஏறும்படி கூறினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் அடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர்  தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து  சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் ஆண்களும் பெண்களும், ஏராளமானோர் அங்கு வந்து குவியத் தொடங்கினர். அவர்களில் 500-க்கும்  மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். மீதமுள்ளவர்கள் காவல்துறைக்கு  எதிராக முழக்கம் எழுப்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் யூசுப், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"டிசம்பர் 21-ந் தேதி உலகம் அழிந்துவிடும் என்று ஏற்பட்ட வதந்தியால் பொதுமக்கள் பலர் அச்சமடைந்தனர். இதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜாம்பஜார் கிளை நிர்வாகிகள் துண்டு பிரசுரம் வெளியிட்டனர். இதுகுறித்து இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், யாகூப் என்பவரை கைது செய்துள்ளனர்.

ஆனால் இந்த துண்டு பிரசுரத்துக்கு தொடர்பே இல்லாத மைலாப்பூர் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் வீட்டுக்குள் நடு இரவில் புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், காவல்துறை உதவி ஆணையாளர் செந்தில்குமரன் அத்துமீறி உள்ளே நுழைந்து சோதனை செய்துள்ளார்.

பிற மதத்தை புண்படுத்தும் விதமாக செயல்பட்டு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தியுள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.