தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு இன்று (14-4-2013) கும்பகோணத்தில் கூடியது.

இப்பொதுக்குழுவில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது .

மாநில தலைவராக சகோ. பீஜே அவர்களும்

மாநில பொதுச்செயலாளராக சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்

மாநில பொருளாளராக சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்
மாநில துணை தலைவராக சகோ. செய்யது இப்ராஹிம் அவர்களும்

மாநில துணை பொதுச்செயலாளராக சகோ. யூசுஃப அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் துணை செயலாளர்களாக கீழக்கண்ட சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டுளனர்.

1. சகோ. எக்மோர் சாதிக்
2. சகோ. ஆவடி அப்துல் ஜப்பார்
3. சகோ. கோவை அப்துர் ரஹீம்
4. சகோ. நெல்லை யூசுஃப்
5. சகோ. ஆவடி இப்ராஹிம்
6. சகோ. மதுரவாயல் இ.முஹம்மது
7. சகோ. திருவாரூர் அப்துர் ரஹ்மான்
8. சகோ. வடசென்னை பதருல் ஆலம்
9. சகோ. தொண்டி சிராஜ்
10.சகோ. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

அல்ஹம்துலில்லாஹ்....

சவூதியில் வேலைபுரிபவர்களின் கவனத்திற்கு!

சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியலை 08.04.2013 அன்று வெளியிட்டுள்ளது..
இந்த விபரங்கள் 
பின்வருமாறு:

1.
இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.

மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்

2.
அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்


மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

3.
எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால் முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

4.
இக்காமா தொலைந்து விட்டால் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

5.
ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.

6.
விசிட், பிஸினஸ் அல்லது உம்ராஃஹஜ் விசாவில் வருபவர்கள் அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன் சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும் உம்ராஃஹஜ் விசாவில் வந்தவர்கள் மக்கா ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.

மீறினால்: சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும் யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.

7.
விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.

மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் வெளிநாட்டவராக’ (இக்காமா வைத்திருப்பவர்) இருந்தால் அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்

8.
இக்காமா ஃ விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல் இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.

மீறினால்: SR 10000 அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.

9.
ஹஜ்ஃஉம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்.

மீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.

10.
தன்னுடைய கஃபீல் ஃ நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் பிற கஃபீல்ஃநிறுவனம்ஃசொந்த தொழில் செய்வது பணி புரிவது குற்றம். மேலும் தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி தற்போது பணிபுரியும் நிறுவத்தில் கஃபாலத் ஸ்பான்ஸர்ஷிப்மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.

மீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது

11.
தொழிலாளியின் கஃபீல் ஃ நிறுவனத்தில் வேலை செய்யாமல் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.

மீறினால்: SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்

12.
மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும் அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.

மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை – SR 5000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 50000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும் சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.

13.
இக்காமா இல்லாதவர்களையோ இக்காமா காலாவதி ஆனவர்களையோ விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.

மீறினால்: முதல் முறை – SR 10000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 30000 அபராதம் ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும் இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

14.
வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்

மீறினால்: SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.

15.
ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.

மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை

16.
ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்

ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.

17.
தொடர்ந்து எந்த காரணமுமின்றி எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில் அவருடைய கஃபீல்ஃநிறுவனம் புகார் செய்ய வேண்டும்.

மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்..... 

நன்றி பயனுள்ளதகவல்கள் தளம் 

அமல்கள் – ஆசாத் நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 05.4.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் காஜா உசேன் அவர்கள் அமல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஏழைச் சகோதரிக்கு ரூபாய் 2,500 மருத்துவ உதவி- ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம்  ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 5.4.13 அன்று ஏழைச் சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,500 வழங்கப்பட்டது

இணைவைத்தல் – ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 06.4.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில்  சகோதரி கதிஜா   அவர்கள்   இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

நாவடக்கம் – ஆசாத் நகர் கிளை வாராந்திர பயான்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 07.4.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது இதில் சகோதரர் ஆமானுல்லாஹ் நாவடக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

”பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் கவணத்திற்கு” -ஆசாத் நகர் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்


 

 கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று ”பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் கவனத்திற்கு” என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…

”சத்தியமே வெல்லும்” – ஆசாத் நகர் கிளை வாரந்திர பயான்


கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.காஜா அவர்கள் ”சத்தியமே வெல்லும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மழைவேண்டி சிறப்பு தொழுகை – ஆசாத்நகர் கிளை


கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த  24-03-2013அன்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது .இந்த செய்தி அன்றும்,மறுநாளும் மாலை மலர்,தமிழ் முரசு,தினகரன்,தினத்தந்தி ஆகிய பத்திரிக்கைகள் வெளியானது.

குர்ஆன் பயிற்சி வகுப்பு – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த18-03-2013 அன்று வாரந்திர குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ரஷீத் அவர்கள் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.

மழைத் தொழுகை – ஆசாத்நகர் கிளை


கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 24-03-2013 அன்று  அன்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது . இதில் சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

ஏழை சகோதரருக்கு ரூ. 2,775/- மருத்துவ உதவி” – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 21-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2,775/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூ.7000 /- மருத்துவ உதவி – ஆசாத் நகர்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 08 -02-2013  அன்று ஏழை சகோதரருக்கு ரூ .7000 மருத்துவ உதவியாக அவரது உறவினரிடம் வழங்கப்பட்டது …

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 25-1-13 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் –ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 11-02-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது….

”டிவிடி விநியோகம்” –ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை மாணவரணி சார்பாக கடந்த 09-02-2013 தரகாக்களில் நடப்பது என்ன? என்ற DVDகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது….

மாணவர்கள் படிப்தற்கு இடம் மற்றும் மின்சாரவசதி ஏற்பாடு! – ஆசாத் நகர் கிளை



கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை மாணவரணி சார்பாக 08-02-2013 அன்று முதல் தினந்தோறும் மாலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரை10,12 வகுப்பு  படிக்கும் அணைத்து மாணவர்களுக்கும்
படிப்தற்கு (மின்சாரம் போவதால்) இடவசதி மற்றும் மின்சாரவசதி செய்து கொடுக்கப்பட்டு வருகி்னறது.

”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 20-1-13 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ.ஜமால் உஸ்மானி அவர்கள் உரையாற்றினார்கள்.

மௌலூது கூடாது” விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஆசாத்நகர் கிளை


கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 25-1-13 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கு
”மௌலூது கூடாது” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – ஆசாத்நகர் கிளை


கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 16-12-12 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயித்து கயிறுகள் கழற்றி எறியப்பட்டது.

“சாதித்துக்காட்டுவோம்” பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 09/12/12 அன்று பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  “சாதித்துக்காட்டுவோம்”  என்ற  பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.

“எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்” ஆசாத் நகர் கிளை பயான்


கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 11.11.2012  அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் “எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.