தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக தனி நபர் தாவா

TNTJ கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக 27.02.12 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது. இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்ப்ட்டது.

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 25.02.2012 “மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்” தெரு முனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 25.02.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் “மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....

ஆசாத் நகர் கிளையின் ஆலோசனை கூட்டம் 19.02.12

கோவை மாவட்டம்  ஆசாத் நகர் கிளையின் ஆலோசனை கூட்டம் 19.02.12 அன்று மஃக்ரிப்  தொமுகைக்கு பிறகு  நடைபெற்றது. இதில் மாநிலத்திற்கு இடம் வாங்குவதற்கு பணம் வழங்குவது தொடர்பான ஆலோசனையும் ,   ஆசாத் நகரில் உள்ள நமது மஜ்ஸிதுல் முபீன் பள்ளியின் கட்டுமான பணிகள்  குறித்த ஆலோசனைகளும் செய்யப்பட்டன.

திங்கள்

இஸ்லாம் கூறும் எளிய முறை திருமணங்கள்.



கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் 19.02.12 நபிவழிப்படி எளிய முறையிலான திருமணங்கள் இரண்டு  நடத்தி வைக்கப்பட்டது. இதில TNTJ மாநில துணை தலைவர் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் ”இஸ்லாம் கூறும் எளிய முறை” திருமணம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு உரையை கேட்டு பயன் பெற்றனர்.

சனி

ஆசாத்நகர் கிளையில் பெண்கள் தர்பியா – 18.02.12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் பெண் ஆலிமா காதிரா அவர்கள் தலைமையில்  18.02.12 பெண்கள் தர்பியா – ஆசாத்நகர் மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து  நடைபெற்றது.  இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 18.02.12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 18.02.12அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில்  பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 12.02.12

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில்  பெண்கள் பயான்  12.02.12 நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா பயான் உரை ஆற்றினார். பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளி

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக ரூபாய் 2500 மருத்துவ உதவி

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட எட்டு வயது சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவியாக  ரூபாய் 2500  17.02.12வழங்கப்பட்டது.

புதன்

நன்றி...! நன்றி...! நன்றி...!


: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோவையில் நடைப்பெற்ற பிப்ரவரி 14 முஸ்லிம்களின் மாபெரும் போராட்டத்திற்கு வருகை தந்த சகோதர, சகோதரரிகளுக்கும், இளைஞர்களும், குழந்தைகளுடன் கலந்து தாய்மார்களுக்கும் TNTJ கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!


அதேபோல் இந்த போராட்டதிற்கு பொருளாதார உதவி செய்த  சகோதரர்களுக்கும், இதற்காக இரவு, பகல் பாராமல் உழைத்த சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்யட்டும்.

எல்லாவற்றிக்கும் மேலாக போராட்டதை வெற்றிகரமாக நடத்தி தந்த அல்லாஹ்விற்கே எல்லாம் புகழும்

The twocircles.net: TNTJ holds Muslim quota protests across Tamil Nadu


அன்புள்ள சகோதரர்களே! நமது உரிமைமீட்புப் போராட்டம் குறித்து வட இந்திய முஸ்லீம்களால் நடத்தப்படும் Twocircles.net என்ற இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி.இந்த இணையதளம் மும்பை,போபால்,டெல்லி போன்ற நகரங்களில் மிகவும் பிரபலமானது. இதன் Alexa web Ranking:11,256 (In India).சகோதரர்கள் அந்த இணையத்தில் தங்கள் கருத்தை பதியுமாறும், தங்களோடு பணியாற்றும் இந்திய இஸ்லாமிய நண்பர்களையும் கருத்திடுமாறும் கேட்டுக் கொள்ளுங்கள்.
Chennai: Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) on 14th February organised protest demonstration in all district headquarters across Tamil Nadu demanding 10 per cent reservation for Muslims in education and employment opportunities in the Union Government and 7 per cent reservatin in Tamil Nadu.State President of TNTJ Moulavi P. Jainul Abedeen hit out at Congress-led UPA government at the center for not implementing the Muslim quota recommendation of its own Justice Rajindar Sachar Committee and Justice Ranganath Misra Commission. He also cornered Tamil Nadu Chief Minister Jayalalitha for not keeping her election promise to raise the present state Muslim quota of 3.5 per cent.





Sachar Committee had conducted in-depth probe on the living conditions and social status of the Muslims across the country and then recommended to the Union Government that 10 per cent reservation in education and employment opportunities should be given to uplift the community. Subsequently, the recommendations were tabled in the Parliament for its approval. Justice Ranganath Misra Committee even went a step ahead to say that the Union Government should give 15 per cent reservation to the Minorities and 10 per cent reservation for Muslims within this reservation to change the living condition of Muslims across the country.
“The Congress party, which came to power two times successively in the centre, had promised in its manifesto that the party would give a 10 per cent reservation to the Muslims if was voted to power. However, the ruling Congress, which was yet to take any step in this connection, promised in its manifesto for the Uttar Pradesh Assembly polls that it would give 4.5 per cent reservation for minorities, which is nothing but cheating the Muslims,” said Moulavi Abedeen.


“During the assembly election campaign, ruling Anna Dravida Munnetra Kalagam (ADMK) president Ms. Jayalalitha had promised the Muslims that she will increase the percentage of reservation from 3.5 per cent if was voted to power. We also demand 7 per cent reservation for Muslims in jobs and education in the state,” Moulavi Abedeen demanded.
To press the demands, TNTJ organized protest demonstration in sevral districts including Thiruvallur, South Chennai, North Chennai, Nellai, Thiruvarur, Thanjore, Tuticorin, Madurai, and Trichy. On this issue, TNTJ has already conducted a conference at Island Grounds in Chennai on July 4, 2009.



Moulavi Abedeen said that “only reservation will be the permanent solution for improving the socio-economic conditions of the Muslims. And if ruling Congress party goes on betraying the Muslims then it should face the consequences in the coming Lok Sabha elections.”
Police had imposed ban on the demonstration in Coimbatore citing February 14 as the anniversary of the bomb blast that had happened in the city in 1998. Security in the city was tightened. But defying the ban, hundreds of Muslims participated in the TNTJ protest on Tuesday. However, police took action and started many demonstrators. They were kept in a marriage hall and all were released by 9 pm.
TNTJ leaders urged the central and state government to hear their voice on reservation. If not, they will organise such protest at bigger levels.
TNTJ holds Muslim quota protests across Tamil Nadu

பிப்ரவரி-14 தொலைக்காட்சிகளில்.......














                                            
                                           சன்நியூஸ் தொலைக்காட்சியில்

                                            இமயம் தொலைக்காட்சியில்

                                 கலைஞர் தொலைக்காட்சியில்

                                                          ராஜ் தொலைக்காட்சியில்
                                                 


                                                 மக்கள் தொலைக்காட்சியில்
         

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

தடையை தகர்த்தெறிந்த கோவை வாழ்வுரிமை போராட்டம்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப்ரவரி-14  அன்று வாழ்வுரிமை போராட்டம் நடத்த நெல்லையில் நடந்த மாநில பொதுக்குழுவில் தீர்மானிக்கபட்டது. இதையடுத்து கோவையில் பிரம்மாண்ட அளவில் போராட்டம் நடத்த மாவட்ட நிர்வாகிகள் ஆயத்தமாயினர். முஸ்லிம்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி நடத்தப்படுகின்ற இந்த வாழ்வுரிமை போராட்டத்திற்கு முறைப்படி காவல்துறைக்கு அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடிதம் அளிக்கப்பட்டது.
மக்கள் பிரச்சினைகளுக்கு எளிதில் செவி சாய்க்காத காவல்துறை, வாழ்வுரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் மக்களாகிய நமக்கு உடனடியாக போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவித்தனர். காவல்துறையின் அனுமதி மறுப்பு மூலம் போராட்டத்திற்கு மக்களை அழைப்பதற்காக விளம்பரங்கள் எதுவும் செய்ய இயலாத இக்கட்டான நிலைக்கு மாவட்ட நிர்வாகிகள் தள்ளப்பட்டனர்.


எனினும் பிப்ரவரி-14 அன்று தடையை மீறி வாழ்வுரிமை போராட்டத்தை நடத்த வேண்டும் என தீர்மானிக்கபட்டது. இதனடிப்படையில் பிப்ரவரி-14 அன்று செஞ்சுலுவை சங்கம் முன்பு மாலை 5 மணியளவில் தடையை மீறி வாழ்வுரிமை போராட்டம் என அறிவிக்கப்பட்டது. சரியாக மாலை 5:30 மணியளவில் அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்துடன் போராட்டம் ஆரம்பித்தது. மக்கள் வெள்ளம் நாளப்புறத்திலிருந்தும் வந்து கொண்டு இருந்தது. கமிஷனர் அலுவலகம் அருகிலிருந்து ஒரு கூட்டம் பேரணியாகவும்,   DSP அலுவலக பஸ் நிறுத்ததிலிருந்து மக்கள் வெள்ளம், நீதிமன்ற சாலையிலிருந்து மக்கள் வெள்ளம் என திரும்பிய திசையெல்லாம் மக்கள் ஆர்பரித்து கோஷங்களுடன் போராட்ட களத்திற்கு வந்தடைந்தனர். இது போன்று அனைத்து திசைகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் ஆர்பரித்ததும் காவல்துறையினர் செய்வதறியாது வெளவெளத்து   போயினர். மீடியா நண்பர்களும் எங்கிருந்து வரும் மக்களை படமெடுப்பது என்று சற்று குழம்பித்தான் போயினர். புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே…

இடஒதுக்கீடு மட்டுமே எங்கள் கோரிக்கை அதை விடுத்து எங்களுக்கு எதுவுமே வேண்டாம் என மக்கள் கோஷங்கள் மூலம் தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தினர். மாநில செயலாளர் முஹம்மத் யூசுப் அவர்களின் கண்டன உரை முத்தாய்பாய் அமைந்தது. கண்டன உரைக்கு பிறகு கைது படலம் ஆரம்பமானது. முதலில் காவல்துறை கொண்டு வந்திருந்த வாகனங்களில் பெண்கள் மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறிது நேரத்திலேயே காவல்துறை வாகனம் போதவில்லை. 1500 மக்கள் வருவார்கள் என்று கூறினீர்கள். ஆனால் நாங்கள் 2000 மக்களை ஏற்றி செல்வதற்கு தயாராக வாகனங்களை கொண்டு வந்திருந்தோம். 3500கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று சொல்லி இருந்தால் அதற்குண்டான ஏற்பாட்டை செய்திருப்போம் என காவல்துறை அதிகாரிகள் கூறினர். இத்தனை மக்கள் வருவார்கள் என எங்களுக்கே தெரியாது என மாவட்ட நிர்வாகிகள் கூறியது அல்லாஹ்வின் வல்லமையை காட்டியது.  வாகனங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தால், கோவை காந்திபுரம் செல்லக்கூடிய பயணிகள் பேருந்துகளை காவல்துறையினர் கைது செய்து மக்களை மண்டபம் கொண்டு செல்ல உபயோகித்தனர்.
கூடுதல் வாகனங்கள் வர தாமதம் ஆனதாலும், மக்ரிப் தொழுகைக்கான நேரம் வந்ததால் போராட்ட காலத்திலேயே மக்கள் தொழுகைக்கு தயாராகினர். இது பெருநாள் திடல் தொழுகையை மக்களுக்கு நினைவூட்டியது. புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே…
கைது செய்யபட்டு மண்டபத்தில் இருந்த 3500கும் அதிகமான மக்கள் இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
முஸ்லிம்களின் போராட்டத்திற்கு தடைவிதித்து அதை ஒடுக்கி விடலாம், நசுக்கி விடலாம், என்று கனவு கண்ட கோவை காவல்துறைக்கு கிடைத்த இரண்டாவது சாட்டையடி இந்த தடையை மீறிய வாழ்வுரிமை போராட்டம். ஏற்கனவே கடந்த பிப்ரவரி-5 அன்று கோவை மாவட்ட மாணவரணியின் வரதட்சணை  ஒழிப்பு பேரணிக்கு காவல்துறை தடைவிதித்தது. வரதட்சணை  ஒழிப்பு பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் தடையை மீறி கலந்து கொண்டனர். வல்ல ரஹ்மானின் வல்லமையால் தடைகளை தகர்த்தெறிந்து வென்று காட்டினோம். புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே…

கூடுதல் புகைப்படங்கள் & போராட்டக்கள வீடியோ காட்சிகள் இன்ஷா அல்லாஹ், நாளை வெளியிடப்படும்

      

திங்கள்

விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”.

RASMIN M.I.Sc

இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன.

# முத்தமிடுவோர் தினம்,

# நிர்வாணமாக இருப்போர் தினம்,

# இறுகக் கட்டியணைப்போர் தினம்,

# ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்,

# பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் 

என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக மேற்குலகு கருதுகின்றது.

கடந்த ஜனவரி மாதத்தில் நிர்வாணமாக இருப்போர் தினம் என்றொன்றை ரஷ்ய மக்கள் கொண்டாடியதும், ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் நிர்வாணமாக காட்சி தந்ததையும் மிகப் பெரிய சாதனையாக ஊடகங்கள் கொண்டாடின.

அதே ஜனவரி மாதத்தில் முழு உடம்பையும் காட்டிக் கொண்டு திரியும் சுமார் இருபத்தி ஐயாயிரம் பெண்களை ஓரிடத்தில் கூட்டி உலகிலேயே அதிகமான நிர்வாணிகள் ஒன்றினைந்த இடம் என்ற உலக சாதனையை(?) படைத்தமை ஒழுக்க விழுமியங்களை பேணிப் பாதுகாப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.

இது வரைக்கும் பல நாடுகளிலும் ஒழுக்க சீர் கேட்டை ஆதரிக்கும் தருதலைகள் முன்வைத்த ஒரு கோரிக்கைகளில் ஒன்றுதான் பாலியல் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். அதில் ஆண் பெண் வித்தியாசமின்றி பாலியல் தொடர்பான செய்திகள் செயல்பாட்டுடன் விபரிக்கப்பட வேண்டும் என்பது.

பல நாடுகளும் இந்தக் கோரிக்கையை கண்டு கொண்டாலும், வெளிப்படையாக அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்தன. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் பாலியல் தொடர்பான கற்கைகள் மற்றும் செயல்பாட்டு விளக்கம் கொடுக்கும் கல்லூரியை ஒரு பெண் ஆசிரியர் (?) ஆரம்பித்துள்ளார்.

தாய்ப் பாலில் “ஐஸ் க்ரீம்”

குழந்தைக்காக தாயிடம் இருந்து கிடைக்கும் தாய் பாலை விற்பனைப் பொருளாக ஆக்கிய கொடுமையை தற்கால நவீன (?) யுகத்தில் நாம் பார்க்கக் கிடைக்கிறது எவ்வளவு பெரிய அவலம்?

ஆம் தாய்ப் பால் மூலம் செய்யப்பட்ட “ஐஸ் க்ரீம்” ஆஸ்த்ரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. வெட்கக் கேட்டின் உச்சத்திற்கே மேற்கத்தேயம் சென்று விட்டது.

விபச்சாரத்திற்கு துணை போகும் பெற்றோர்கள்.

மேற்கு நாடுகளின் தற்போதைய நிலை எந்தளவுக்கு மோசமான காலாசாரத்தை தோற்றுவித்துள்ளது என்றால், ஒரு பெண் பிள்ளை சக மாணவர்களுடன் சுற்றுலா செல்கிறாள் என்றால் குறிப்பிட்ட பிள்ளையின் பெற்றோர் பிள்ளையில் கைப் பையில் (ஹேன் பேக்) கருத்தடை மாத்திரைகளை வைத்து அனுப்ப வேண்டும். இல்லாத பட்சத்தில் அரசாங்கம் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கும்.


நவீனம் என்ற பெயரில் ஒழுக்க நாகரீகம் கேள்விக் குறியாக்கப்படும் அவலம் நிகழ்வதை எத்தனை பெற்றோர்கள் உணர்கிறார்கள்?

கழிசடைகளுக்கு ஒரு தினமா?

கலாசார சீர்கேட்டுக்கு தினங்களை உண்டாக்கிய கழிசடைகள் சிலர் பெப்ரவரி 14ம் தேதியை காதலர்கள் தினம் என்று அழைக்கிறார்கள்.

கிறித்தமத போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
நமது இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாசாரம் என்ற பேயரில் ஒழுக்கம் இங்கும் கேள்விக் குறியாக்கப் படுகின்றது.
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி அடப்பாவி உனக்கு காதலியே இல்லையா? நீயேல்லாம் வாழ்ந்தே பயனில்லை என்று நண்பர்கள் (?) பேசிக்கொள்ளும் அளவிற்கு முக்கியமான விஷயமாக மாறி விட்டது.
கவலைக் குறிய விஷம் என்னவெனில் இஸ்லாமிய இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வோ இஸ்லாமிய ஒழுக்க வாழ்வைப் பற்றிய நம் பெற்றோர்களிடத்திலும், பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.
மனிதத் தன்மையின் அடிப்படை வெட்கமே!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான், "நீ வெட்கப்படவில்லை என்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள்'' என்பதும்.
அபூ மஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள், (புகாரி – 3483)

வெட்க உணர்வு இல்லாதவர்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நபியவர்கள் சொல்வதிலிருந்து வெட்கம் என்ற உணர்வு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமன்றி வெட்கம் இஸ்லாமியனிடம் இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளிலும் ஒன்றாகும்.

விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.
ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)

மேற்கூறிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல்  பாதுகாக்க வேண்டும்.
ஆனால்  மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை  பார்க்கின்றனர்.
விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க  யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
செல்போனும் குழந்தைச் சீரழிவும்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.
செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளம் பெண்களிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளக மாறாமல் தடுக்கலாம்.
இந்த காதல் என்ற சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. இதன் காரணமாக தற்காலத்தில் திருமணததிற்கு முன் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் மாத்திரம் காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி – தமிழ்நாடு பதிப்பு 8-5-2010).
என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசிட் ஊற்றினான் போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு  ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் கள்ளக் காதலன் கொலை”  அல்லது கள்ளக் காதலி கொலைஎன்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு  தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக்  கொண்டிருப்பதினால்  தான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14  ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது (தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).

அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல்  கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.

குறிப்பு :
காதலர் தினம் என்ற வார்தைப் பிரயோகம் முஸ்லீம்களின் உரிமை மீட்பு தினம் என்ற அடை மொழிக்கு மாற வேண்டும், சமுதாய சீர்கேடு தவிர்க்கப்பட வேண்டும் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக பெப்ரவரி 14ம் தேதி “முஸ்லீம்களின் வாழ்வுரிமை தினமாக அறிவிக்கப்பட்டு அத்தினத்தில் முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மாநிலம் தழுவிய போராட்டத்தை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

செவ்வாய்

உரிமை பேரணி ஏன்?


தடை போட்ட காவல்துறை! தகர்த்தெறிந்த டிஎன்டிஜே!

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக வரதட்சணை என்னும் சமூகக் கொடுமையை எதிர்த்து, “மாபெரும் வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணி” மற்றும் பொதுக்கூட்டம் நடத்த கோவை மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். வரதட்சணையின் கேடுகளை விளக்கி கோவையில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக ஆண்களும், பெண்களும் ஊர்வலமாகச் சென்று, வீடுவீடாக தெருக்கள் தோறும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தும், தட்டி பேனர்களைக் கையில் ஏந்தியும், முக்கிய தெருக்களில் 6 இடங்களில் தெருமுனைக் கூட்டத்துடனும், பேரணியின் இறுதியில் மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றும், மாபெரும் வரதட்சணை விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தையும் நடத்த நமது நிர்வாகிகள் முடிவு செய்து முறையாக காவல்துறை அனுமதி கேட்டிருந்த நிலையில், பல்வேறுகட்ட இழுத்தடிப்புகளுக்கு பிறகு நிகழ்ச்சி நடைபெற இருந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று அனுமதி மறுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெகுண்டெழுந்த டிஎன்டிஜே :
வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணிக்கும், பொதுக்கூட்டத்திற்கும் தடை போட்டுள்ளோம் என்றால் நமது மக்கள் தலையாட்டிக் கொண்டு சும்மா சென்றுவிடுவார்களா என்ன? தடை என்ற வார்த்தையைக் கேட்டாலே, அததகைய தடைகளை வல்ல இறைவனின் கிருபையால் தகர்தெறிந்து சாதனை படைக்கும் டிஎன்டிஜே சகோதரர்கள், காவல்துறை போட்டுள்ள இந்த்த் தடையைத் தகர்த்தெறிந்து பேரணியாகச் சென்று சமுதாய விழிப்புணர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என முடிவெடுத்து களத்தில் குதித்தனர்.
காவல்துறை குவிப்பு :
இது போன்ற சமூகத்தீமைகளை எதிர்த்து களம் காணும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஆதரவாக காவல்துறையும் களத்தில் நின்று இத்தகைய நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இதை ஊக்குவிக்க வேண்டிய காவல்துறையே, இத்தகைய ஒரு நிகழ்ச்சிக்கு தடைபோட்டது பெரிய ஆச்சரியமான விஷயமாக உள்ளது. டிஎன்டிஜே சகோதரர்கள் தடையை மீறி பேரணி செல்ல இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மர்கஸைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட போலீஸ் படையைக் குவித்தனர்
காவல்துறையின் தடையையும் மீறி ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கோவையின் முக்கிய பகுதியாக உள்ள மதீனா நகர், வள்ளல் நகர், பிலால் நகர், பாத்திமா நகர், ராயல் நகர், சாரமேடு, பொன்விழா நகர், இலாஹி நகர், பிஸ்மி நகர், அல் அமீன் காலனி, ஆகிய பகுதியில் பேரணியாக வந்து உக்கடம் லாரி பேட்டை பகுதியில் வந்து குழுமினர்.
பொதுச்செயலாளரின் எழுச்சி உரை :
ஆயிரக்கணக்கணக்கான மக்கள் காவல்துறையினர் போட்ட தடையையும் மீறி ஆண்களும், பெண்களுமாக அதுவும் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது இந்த சமுதாயம் மறுமை வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளது என்பதை பறைசாற்றுவதாக அமைந்தது.
நமது மக்கள் உக்கடம் லாரிப்பேட்டைப் பகுதியில் குழுமியவுடன் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார். இத்தகைய சமூகத்தீமைகளுக்கு எதிராக களம் காணுபவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டிய காவல்துறை அதற்குத் தடைபோடுவது வெட்கக்கேடு என்றும், எத்தகைய தடைகளைப் போட்டாலும் அதைத் தகர்த்தெறிய தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தனது உரையில் வரதட்சணை எனும் சமூகத்தீமையின் அவலங்களையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் அவர் பட்டியலிட்டார். அவரது கண்டன உரைக்குப் பிறகு கைதுப்படலம் ஆரம்பமானது.
கைது செய்ய வாகனங்கள் போதாமல் காவல்துறையினர் திணறல் :
காவல்துறையினர் தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனங்கள் அனைத்திலும் நமது சகோதர, சகோதரிகளைக் கைது செய்து மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். நமது சகோதரர்களைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் கொண்டு வந்த வாகனங்கள் போதாத காரணத்தினால், கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் போல் தடைகளைத் தகர்த்தெறிந்து பேரணி சென்ற நமது சகோதரர்களைக் கைது செய்ய முடியாமல் திக்குமுக்காடிய காவல்துறையினர் கூடுதல் வாகனங்களை வரவழைத்து பிறகு கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
தடையை மீறி நீங்கள் பேரணி நடத்தியுள்ளதால் உங்கள் அனைவர் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டு 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கப் போகின்றோம் என்று போலீஸார் பயம் காட்டியுள்ளனர். அதற்குப் பதிலடியாக, “எங்கள் அனைவர் மீதும் எஃப்.ஐ.ஆர் போட்டு ஜெயிலில் தள்ளுங்கள்; அதற்கெல்லாம் இந்த சமுதாயம் பயப்படாது; மேலும், அவ்வாறு எஃப்.ஐ.ஆர் போட்டால் பெயிலுக்கு கையெழுத்துப்போட வரும் போதெல்லாம் அதுவும் பேரணியாகத்தான் இருக்கும்” என்று காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தெரிவிக்க தக்பீர் முழக்கம் விண்ணைத் தொட்டது.
அதைத் தொடர்ந்து பின்வாங்கிய காவல்துறை ஒரு பேரணிக்கு தடைபோட்டால் வாராவாரம் இவர்கள் பேரணி நடத்தினாலும் நடத்துவார்கள் போல என்று அஞ்சி நம் சகோதரர்கள் அனைவரையும் இரவு 9மணிக்கு விடுதலை செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
தடை போடக் காரணம் என்ன? :
இத்தகைய சமூக அவலத்தைத் துடைத்தெறியும் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப்பணிக்கு காவல்துறை ஏன் தடை போட வேண்டும் என நாம் ஆய்வு செய்ததில், சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களை சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள் தான் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்த பின்புலமாக இருந்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
வரதட்சணை ஒழிப்புப் பிரச்சாரம் வீரியமடைந்தால் தங்கள் ஜமாஅத்துக்கு வரும் வரதட்சணை பணத்திற்கான கமிஷன் கிடைக்காமல் போய் விடும் என்று பதறிவிட்டார்களோ என்னவோ! பெரும்பாலும், இவர்கள் நம்மை எதிர்ப்பதற்கு இவர்களது வருமானம் தடைபடுகின்றது என்பதுதான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
பெண்ணுரிமைக்கு எதிராக ஒரு பெண் அதிகாரி :
வரதட்சணை என்னும் இந்த சமூகக் கொடுமையால், பெண்கள்தான் பெருவாரியாக பாதிக்கப்படுகின்றனர். அதை பெண்களே உணர்ந்த பாடில்லை. இந்த வரதட்சணை ஒழிப்பு – விழிப்புணர்வு பேரணிக்கு தடைபோட்டது துணைஆணையாளராக உள்ள ஹேமா என்ற பெண் அதிகாரிதான் என்பது இன்னுமொரு துயரமான செய்தி