தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

வரலாறு -கோட்சே வாக்குமூலம்


1948 மே 15 அன்று ஒரு வழியாக அரசிதழ் வெளிவந்தது. காந்திஜி படுகொலை தொடர்பாக ஒன்பது பேர் மீது குற்றம் சுமத்தப்படிருந்தது. ஆத்ம சரண் ஐசிஎஸ் என்பவர் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்படிருந்தார். செங்கோட்டையில் வழக்கு நடைபெற்றது. அந்த ஒன்பது பேர் மீநாதுராம் கோட்சே. நாராயண ஆப்டே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா, சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்சே, டாக்டர் பார்ச்சுரே, சாவார்க்கர், திகம்பர் பட்கே ஆகியோர்.

இதில் கடைசியாக வருகிற திகம்பர் பட்கே அரசுக்கு ஆதரவாக அப்ரூவராக மாறினான். அவனது வாக்குமூலமே வழக்கின் முதுகெலும்பாக இருந்தது. அவன் ஆரம்பம் முதல் கடைசிவரை இவர்களோடு இருந்தவன். அவனது வாக்குமூலத்தைக் கேளுங்கள்:

‘1948 ஜனவரி 14 அன்று ஆப்டே, கோட்சேயோடு நானும் பம்பாயில் உள்ள சாவார்க்கர் சதன் போயிருந்தேன். என்னைக் காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்தி விட்டு ஒரு பையோடு அவர்கள் இருவர் மட்டும் உள்ளே போனார்கள். ஐந்து அல்லது பத்து நிமிடம் கழித்து அதே பையோடு திரும்பி வந்தார்கள். ஜனவரி 15 அன்று பம்பாயில் தீட்சித்ஜி மகாராஜாவின் காம்பவுண்டில் ஆப்டே என்னைப் பார்த்து தில்லிக்கு தன்னோடு வருகிறாயா என்று கேட்டான். காந்தி, நேரு, சக்கரவர்த்தி ஆகியோர் தீர்த்துக்கட்டப்பட வேண்டுமென்று சாவார்க்கர் முடிவு செய்து விட்டார். அந்த வேலையை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார் என்றான். கடைசியாக ஒருமுறை சாவார்க்கரை தரிசனம் செய்து கொள்வோம் என்று நாதுராம் கோட்சே கூறியபடி அவனும் ஆப்டே, பட்கே ஆகியோரும் ஜனவரி 17 அன்று சாவர்க்கரைப் பார்க்கச் சென்றார்கள்.]

அந்த வீட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள அறையில் நான் உட்கார்ந்திருந்தேன். கோட்சேயும் ஆப்டேயும் மேலேயிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது ‘வெற்றியோடு வாருங்கள்' என்று சாவார்க்கர் அவர்களிடம் கூறியதைக் கேட்டேன். திரும்பி வரும்போது காந்திஜியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும், இவர்களுடைய வேலை நிச்சயம் வெற்றிகரமாக நிறைவேறும் என்றும் சாவர்க்கர் கூறியதாக ஆப்டே என்னிடம் கூறினான். சாவர்க்கரின் உத்தரவு என்று ஆப்டே கூறியதால் அவனோடும் கோட்சேயோடும் நான் டில்லி சென்றேன்.

உலகப் புகழ் பெற்ற தலைவர் ஒருவரைக் கொலை செய்வதென்றால் நிதி பலமும், ஆள் பலமும், ஸ்தாபன பலமும் இல்லாமல் முடியாது. ஒரு தபால்காரரின் மகனாகிய நாதுராம் கோட்சேக்கு பம்பாய்க்கும் தில்லிக்கும் பறந்து செல்ல பணம் வேண்டியிருந்தது. துப்பாக்கி வாங்குவதற்காகவும் இதர ஏற்பாடுகளுக்கும் பணம் வேண்டியிருந்தது. பத்திரிகை நடத்தவே பணம் கொடுத்தவர் சாவர்க்கர். அப்படியிருக்க கோட்சே ஒருவனால் மட்டுமே இந்தக் காரியத்தை செய்திருக்க முடியாது. ஆனால், நாதுராம் கோட்சே தனது வாக்குமூலத்தில் அடித்துச் சொன்னது என்னவென்றால் சகலமும் தான் ஒருவன் மட்டுமே திட்டமிட்டுச் செய்து முடித்தது என்பதாகும். கொலைகாரர்கள் பொய்யர்களாவும் இருப்பது இயல்பேயாகும்.

இதை அவனின் தம்பி கோபால் கோட்சேயே ஒப்புக் கொண்டிருக்கிறார். கோன்ராட் எல்ஸ்ட் என்பவர் ‘காந்தியும் கோட்சேயும் '' என்கிற நூலை எழுதியிருக்கிறார். 2001ம் ஆண்டில்தான் அது வெளிவந்திருக்கிறது. அவருக்கு கோபால் கோட்சேயும் மதன்லால் பாவாவும் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். சதித்திட்டம் இருந்தது என்பதை இருவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். கோபால் கூறியிருக்கிறார்.

‘ஆமாம். அதில் நானும் ஈடுப்பட்டிருந்தேன். ஆனால் அதை மறுக்கிற உரிமை எனக்கிருந்தது. நாதுராம் தூக்கில் தொங்கப் போவது நிச்சயம். மற்றவர்களுக்கு அதிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருந்தது. எனவே நாதுராம் உள்ளிட்ட நாங்கள் அனைவருமே சதித் திட்டம் என்பதை மறுத்து வாதாடினோம்'' நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை 1948 நவம்பர் 8 அன்று சமர்ப்பித்தான். 150 பத்திகள் கொண்ட அந்த 92 பக்க வாக்குமூலம் இந்துத்வாவாதிகளின் அரசியல் ஆவணம் எனலாம். இந்து மதவெறியும், மகாத்மா மீது கொண்ட வெறுப்பும் ததும்பி வழிந்தது. இத்தகையதொரு அரசியல் சித்தாந்த அறிக்கையை தயாரிக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டவன் அல்ல நாதுராம். இதைத் தயாரித்து தந்தது சாவர்க்கரே என்று ஒரு கருத்து வலுவாக உள்ளது.

இந்த அறிக்கை நீதிமன்றத்தில் வாசித்து முடிக்கப்பட்டதும் அது வெளியிடுவது தடை செய்யப்பட்டது. எனினும் 1960களில் இந்திய மொழிகளில் அதனது மொழியாக்கம் வெளிவரத் துவங்கியது.

1977ல் கோபால் கோட்சே மூல ஆங்கிலப் பிரதியை ‘தங்களை இது மகிழ்விக்கலாம் நீதிபதி அவர்களே'' (may it please your honour?) என்கிற எச்சரிக்கை மிகுந்த தலைப்பில் ஏன் மகாத்மா காந்தியைக் கொலை செய்தேன்?'' (Why I assassinated Mahatma Gandhi?) என்கிற தலைப்பிலேயே வெளியிட்டார். இடையில் ஏற்பட்டிருந்த அரசியல் மாற்றங்கள் இந்த தைரியத்துக்கு காரணமாக இருக்கலாம். நாதுராம் கோட்சே பேசுகிறான்

‘நாக்பூரைச் சார்ந்த மறைந்த டாக்டர் ஹெட்கேவோர் மராத்தி பேசும் பகுதிகளிலும் 1932 வாக்கில் ஆர்.எஸ்.எஸ்.சை ஆரம்பித்தார். அவரது பேச்சாற்றல் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தச் சங்கத்தில் ஒரு தொண்டனாகச் சேர்ந்தேன். ஆரம்ப கட்டத்திலேயே சங்கத்தில் சேர்ந்த தொண்டர்களில் நானும் ஒருவன். அதனுடைய அறிவுசார் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். இந்துக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வந்தபோது அவர்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அவசியம் என்று பட்டது. எனவே சங்கத்தை விடுத்து, இந்து மகாசபையில் சேர்ந்தேன்''

காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை. கொலைகாரன் நாதுராமோ, தான் அந்த அமைப்பில் இருந்ததைப் பெருமையோடு கூறியிருக்கிறான். அரசியல் நடவடிக்கைகளில் இறங்குவதற்காகவே அதிலிருந்து விலகி இந்து மகாசபையில் சேர்ந்ததாகச் சொல்லியிருக்கிறான். மற்றபடி சித்தாந்த வேறுபாட்டின் காரணமாக அல்ல.

கோபால் கோட்சேயோ ஆர்.எஸ்.எஸ்.லிருந்து தனது தமையன் விலகியதேயில்லை என்கிறார். நாதுராமுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதாக பி.ஜே.பி. தலைவர் எல்.கே. அத்வானி பேசியபோது அதை மறுத்து ‘பிராண்ட் லைன்' ஏட்டிற்கு (28.1.94) பேட்டி கொடுத்தார் கோபால். உள்ளூர் மட்டத்தில் நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.சின் ஓர் அறிவுஜீவி அலுவலகராகவும், தொண்டராகவும் இருந்தார். மூத்தவர் நாதுராமின் தூண்டுதலால் நான்கு கோட்சே சகோதரர்களும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகவே வளர்ந்தார்கள். அவர்களது செயல்பாட்டு மையம் சற்று மாறிய போதிலும், ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து அவர்கள் விலகியதில்லை. இதுவே கோபால் பேட்டியின் சாரம். நாதுராமின் நீதிமன்ற அறிக்கை பற்றிக் கேட்கப்பட்டபோது கோபால் கூறினார் ‘காந்தி கொலைக்குப் பிறகு கோல்வாக்கரும் ஆர்.எஸ்.எஸ்.சும் பெரும் சிரமத்திலிருந்த காரணத்தால் அப்படிக் கூறியிருந்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ்சை விட்டு அவர் விலகவில்லை.''

இந்த அளவுக்கு உண்மையை ஒப்புக் கொண்டவரை கோபால் நாணயஸ்தரே. நாதுராம் தொடர்ந்து பேசுகிறான்.

‘இந்து மகாசபையின் தலைவராக இந்தக் காலத்தில் வீர் சாவார்க்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது காந்தயமான தலைமையாலும், சூறாவளிப் பிரச்சாரத்தாலும் இந்து இயக்கம் மிகுந்த உத்வேகப்பட்டது. செழுமைப்பட்டது. இந்து லட்சியத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ளவர். திறமைமிகு தலைவர் என்ற முறையில் லட்சக்கணக்கான இந்து இயக்க வாதிகள் அவரைத் தங்களின் நாயகராகப் பார்த்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். மகாசபையின் நடவடிக்கைகளில் பக்தி பூர்வமாக ஈடுபட்டேன். எனவே, சாவர்க்கர்ஜியோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு ஏற்பட்டது.''

இப்படிக் கூறிய நாதுராம், தானும் ஆப்டேயும் பத்திரிகை துவங்கியபோது சாவார்க்கர் நிதி கொடுத்து உதவியதையெல்லாம் வெளிப்படையாக ஒப்புக் கொண்டான். சொந்த நிதி பலம் இல்லாத நாதுராம் காந்திஜியைக் கொலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மட்டும் எப்படிப் பணம் புரட்டினான் எனும் கேள்வி இயல்பாகவே எழுந்து விடுகிறது. இது ஒருபுறமிருக்க, சாவர்க்கர் மீது பக்திமயமான ஈடுபாட்டோடு இருந்திருக்கிறான். நாதுராம் என்பது நிச்சயமாகிறது. சித்தாந்த ரீதியிலும் தனிப்பட்ட முறையிலும் தனது தானைத்தலைவராக சாவர்க்கரை கொண்டிருந்திருக்கிறான் நாதுராம்.

மேற்கண்ட பகுதிகள் ‘கோட்சேயின் குருமார்கள்' என்ற அ.அருணன் எழுதியுள்ள நூலில் இடம் பெற்றவை. இந்த நூலினை வசந்தம் வெளியீட்டகம், 69/24, ஏ, அனுமார் கோவில் படித்துறை, சிம்மக்கல், மதுரை625 001. விலை ரூ.25.
source:keetru

கம்ப்யூட்டர் படிப்புகளை கண்ணை மூடி தேர்வு செய்யலாம் ?? : வழிகாட்டி நிகழ்ச்சியில் தகவல்

"கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்ப படிப்புக்கு பிரமாதமான எதிர்காலம் உள்ளதால், மாணவர்கள் இப்படிப்புகளை கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யலாம்' என்று, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.



இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்ட, "தினமலர்' நாளிதழ் சார்பில், "உங்களால் முடியும்' என்ற நிகழ்ச்சி கோவையில் நடந்தது. எஸ்.வி.எஸ்.இன்ஜி., கல்லூரியுடன் இணைந்து, வடகோவை கிக்கானி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, அண்ணா பல்கலை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் தெளிவான விளக்கம் அளித்தனர்.

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: "கட்-ஆப்' மதிப்பெண் 198க்கு மேல் பெறும் அனைத்து மாணவர்களும் "டாப்' கல்லூரிகளில் சேர்வதையே விரும்புவர். படிப்பை தேர்வு செய்வதற்கு முன், கோர் இன்ஜினியரிங் படிப்புடன் ஐ.டி., படிப்பை ஒப்பிடக் கூடாது. கோர் இன்ஜினியரிங் படிப்புகளை தேர்வு செய்பவர்கள், "கேட்' தேர்வுக்கும் தயார் ஆவது நல்லது.
பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் முன்னுரிமை கிடைக்கும். எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜி., படிப்பை முடித்து விட்டு ஐ.டி., படிக்க நினைப்பது முட்டாள்தனம். மெக்கானிக்கல் இன்ஜி., துறையை பொறுத்தவரையில், அத்துறையில் டிப்ளமோ படித்தவர்களையே நிறுவனங்கள் அதிகளவில் தேர்வு செய்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு இருந்த மவுசு, இன்னும் இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. எதிர்கால வேலை வாய்ப்புக்கேற்ற படிப்புகளை தேர்வு செய்வதே சிறந்தது. கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி., படிப்புகளை முடிப்பவர்களுக்கு பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கிறது. அதனால், ஐ.டி., படிப்பை கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்யலாம்.

"மொபைல் கம்ப்யூட்டிங்', "கிளவுட் கம்ப்யூட்டிங்' பணிகளுக்கு மூன்று லட்சம் பேர் தேவை என்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். 2009ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போல் மீண்டும் வந்தால், இத்துறையில் வேலை கிடைக்காது என நினைப்பது தவறு. ஒரு சுனாமியோ, பூகம்பமோ வந்தால் கூட பொருளாதாரத்தை புரட்டிப் போடலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கும் ஐ.டி., படிப்புக்கும் வேறுபாடு எதுவுமில்லை. ஒரு குறிப்பிட்ட கல்லூரியை, படிப்பை தேர்வு செய்வதற்கு முன், அக்கல்லூரியில் நடந்த வளாக நேர்காணல்களில் தேர்வு பெற்ற மாணவர் எண்ணிக்கை விவரம், பங்கேற்ற நிறுவனங்கள் குறித்து விசாரித்துக் கொள்வது நல்லது.

இந்த ஆண்டு இன்ஜி., இடங்கள் அதிகமாக உள்ளதால் கட்-ஆப் மதிப்பெண் 1-1.15 உயரவுள்ளது. ஒரே கட்-ஆப் மதிப்பெண்ணில் 450-500 பேர் களத்தில் உள்ளதால் போட்டி அதிகம். கட்-ஆப் மதிப்பெண் 198க்கு மேல் பெற்றவர்கள், கல்லூரியை விட படிப்பை தேர்வு செய்வதில் அதிக கவனமாக இருக்க வேண்டும். கட் -ஆப் மதிப்பெண் 195 உள்ளவர்கள் குறைந்தது நான்கு கல்லூரிகளை தேர்வு செய்து கொண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்பதே நல்லது. "டாப்' கல்லூரிகளில் இரண்டாம் நிலை படிப்புகளை கூட தேர்வு செய்யலாம். தகவல் தொடர்பு துறையில் நாம் இன்று ஒரு நிலையான இடத்தை அடைந்து விட்டோம். அடுத்தபடியாக மின்சாரம் மற்றும் ஆற்றல் துறைக்கு எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புகள் உள்ளன.

எதிர்காலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை பெரிதாக வளர்ச்சி பெறவுள்ளது. ஏரோநாட்டிக்கல் படிப்பை முடிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிதாக இல்லை. இதே படிப்பை ஐ.ஐ.டி.,யில் படித்தால் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில்(டி.ஆர்.டி.ஓ.,) வேலை கிடைக்கலாம். பயோ டெக்னாலஜி துறையிலும் குறைந்த வேலை வாய்ப்புகளே உள்ளன. கணித பாடத்தில் 190 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் 13 ஆயிரம் பேர் உள்ளனர். இயற்பியலில் 600 பேர் சென்டம் பெற்றுள்ளனர். வேதியியலில் ஏராளமானோர் 195க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மூன்று பிரதான பாடங்களிலும் சென்டம் பெற்றவர்கள் 65 பேர்.

இந்த முறை மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் கடினமாக உள்ளதால், இன்ஜினியரிங் படிப்பை விட போட்டி அதிகம். ஆகவே பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், ஓராண்டு மட்டும் நன்கு படித்தால், அடுத்த 50 ஆண்டுகள் ஜாலியாக இருக்கலாம். ஓராண்டு ஜாலியாக இருந்தால், அடுத்த 50 ஆண்டுகள் சிரமப்பட வேண்டும் என்பதை உணர்ந்து படிப்பது நல்லது. இவ்வாறு, ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்.

பங்கேற்ற அனைவருக்கும் "தினமலர்' சார்பில் இன்ஜி., கவுன்சிலிங் குறித்த விளக்க புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. எஸ்.வி.எஸ். கல்வி நிறுவனங்களின் இயக்குனர் மோகன்தாஸ், துணைத் தலைவர் ராகவேந்திரன், இன்ஜி., கல்லூரி முதல்வர் கண்ணன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

100 சதவீத ஒளிவுமறைவின்றி இன்ஜி., கவுன்சிலிங்

அண்ணா பல்கலை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் பேசியதாவது: கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கவுள்ள படிப்பு மற்றும் கல்லூரிகள் குறித்த தெளிவான விவரங்களுடன் வர வேண்டும். ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே வந்து விடுவது நல்லது. இன்ஜி.,கவுன்சிலிங் 100 சதவீதம் ஒளிவு மறைவின்றி நடைபெறும். விரும்பிய இடம் பெற்றுத் தருவதாக கூறி திரிபவர்களை நம்ப வேண்டாம். "கட்-ஆப்' மதிப்பெண்ணின் அடிப்படையில் மட்டுமே படிப்பு ஒதுக்கப்படும்.
பொதுப் பிரிவினர் 5,000 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 1,000 ரூபாயும் டிபாசிட் செலுத்த வேண்டும். மொத்த கட்டணத்தில் இருந்து இத்தொகை "அட்ஜஸ்ட்' செய்து கொள்ளப்படும். டிபாசிட் தொகையை வரைவோலை எடுக்க, கவுன்சிலிங் நடைபெறும் வளாகத்திலேயே வங்கி வசதி உள்ளது.

கல்லூரி வாரியாக காலியாக உள்ள படிப்புகள் குறித்த விவரம், கவுன்சிலிங் நடைபெறும் அறைக்கு வெளியே உள்ள பெரிய திரையில் ஒவ்வொரு நிமிடமும் "டிஸ்ப்ளே' செய்யப்படும். கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளே செல்வதற்கு முன், குறைந்தது நான்கு கல்லூரிகளை "சாய்ஸ்' அடிப்படையில் தயாராக வைத்திருக்க வேண்டும். இரண்டு, மூன்று நிமிடங்களுக்குள் கல்லூரி, படிப்பை தேர்வு செய்து விட வேண்டும். ஒருமுறை தேர்வு செய்து விட்டால் மாற்ற முடியாது.

ஒரே பெயரில் பல கல்லூரிகள் உள்ளதால், கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை பின்பற்றுவதே நல்லது. நண்பர்கள், பக்கத்து வீட்டார், விளம்பரங்களை நம்பாமல் கல்லூரிகளுக்கே நேரில் சென்று உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர், வேலை வாய்ப்பு விவரங்களை விசாரிக்க வேண்டும். அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களை விசாரித்தாலே கல்லூரியின் தரம் விளங்கி விடும்.

அனைத்து படிப்பும் சிறந்த படிப்புதான். ஒரு குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்வதற்கு முன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அப்படிப்புக்கான வேலை வாய்ப்புகள் குறித்து விசாரித்து தெரிந்து கொள்வது நல்லது. பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்த பின், அவர்களிடம் நண்பர்களைப் போல் பழகுவது நல்லது. அதிகமாக கண்டித்தால், கல்லூரியில் நடைபெறும் பல விஷயங்கள் பெற்றோருக்கு தெரியாமலே போய் விடும். இவ்வாறு, ரைமண்ட் உத்தரியராஜ் பேசினார்.
dinamalar

வன்முறை எதிர்ப்பு மசோதா குறித்து பிஜேபி மீது காங்கிரஸ் குற்றசாட்டு

காங்கிரஸ் கடந்த வெள்ளியன்று மதச்சாயம் பூசப்படும் வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்படும் மசோதாவை பிஜேபி தவறான கண்ணோட்டதிருக்கு கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மதவாத செயல் புரியும் கட்சி இதுபோன்ற மசோதாவைப் பற்றி கவலை கொள்வது இயற்கையானது எனவும் தெரிவித்துள்ளது.

இம்மசோதா குறித்து காங்கிரெசின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி கூறியதாவது இன்னும் மசோதாவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் பலவேறு சாராரிடம் அறிவுரைகள் கேட்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் பிஜேபி தன்னுடைய மதவாத கொள்கையால் முன்கூட்டியே இம்மசோதாவின் வரையறை ஆய்வில் இருக்கும் போதே எதிர்த்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பிஜேபி யின் இந்த செயல் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

பிஜேபி தலைவர் அருண் ஜெட்லி கடந்த வியாழன் அன்று மதம் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறை தடுப்பு மசோதா குறித்து கூறும் போது இது மாநில அரசுகளின் சட்டத்தில் தலையிடுவதாக உள்ளது எனவும் மத நல்லிணக்கத்தில் பிளவு ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பிஜேபி-யின் கூற்றுக்கு பதிலளித்துள்ள சிங்வி பிறப்பிலிருந்து எந்த கட்சி மத கொள்கைகளை பற்றி பிடித்துக் கொண்டுள்ளது என நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் எனவும் மேலும் எந்த கட்சி குஜராத் கலவரம், கர்நாடக ஊழல் மற்றும் பாப்ரி மஸ்ஜித் பிரச்னை ஆகியவைகளை அவமான சின்னங்களாக கொண்ட RSS இன் கருவறையில் இன்னும் இருப்பது யாரென்று நாடறிந்த ஒன்று எனவும் கூறியுள்ளார். எனவே பிஜேபி-யின் கவலை இயற்கையானதே எனவும் தெரிவித்துள்ளார்.

இம்மசோதாவை பற்றி பிஜேபி-யின் பொய்பிரச்சாரம் குறித்து குற்றம் சாட்டிய சிங்வி மசோதாவின் 60 பிரிவுகளில் ஒரு பிரிவு மட்டுமே மத கலவரங்கள் தொடர்ந்தால் மத்திய அரசு தலையிடலாம் என தெரிவிப்பதாகவும் அதுவும் மாநில அரசு எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மட்டுமே ஆகும் என தெரிவித்தார்.

மதச்சார்பின்மை இந்திய தேசத்தின் கட்டமைப்பில் ஒரு பகுதி எனவும். இதை காக்க மத்திய அரசிடம் சில அதிகாரங்கள் இருந்தால் என்ன பிரச்னை எனவும் வினவினார். மத கலவரத்திற்கு எதிரான மசோதா சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பிர்காகவும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடந்தால் இம்மசோதா கடுமையான சட்டங்களை கொண்டு நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.

மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் கபில் சிபல் கூறும் போது மத கலவரத்திற்கு எதிரான மசோதாவை நடுவண் அரசு பிஜேபி-யின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுத்துச் செல்லும் என கூறியுள்ளார். 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தை போன்றும் அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மோடி அரசு போல் இனி எந்த மாநில அரசும் செயல் படாத வகையிலும் இது போன்ற வன்முறைகளுக்கு மாநில அரசோ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கும் வகையில் இம்மசோதா அமையும் எனவும் தெரிவித்தார்.
source:thoothu

திங்கள்

ஊட்டியில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைத்திறன் மேம்படுத்தும் பயிற்சி முகாம்

கடந்த 2011 மே 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைத்திறன் மேம்படுத்தும் பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள YWC மஹாலில் சிறப்பாக நடந்து முடிந்தது.
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் முன்கூடியே மாவட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்டு, இந்த நிகழ்ச்சியில் முழுமையாக இரண்டு நாட்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுவேன் என்ற உறுதிமொழி
அடங்கிய போஸ்ட் கார்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டு அதை மாவட்ட நிர்வாகிகள் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அனுப்பிவைக்க, அதனடிப்படையில் முன்கூட்டியே அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் பெயர் மற்றும் பொறுப்புகளுடன் பிரிண்ட் செய்யப்பட்ட நுழைவுச்சீடுக்கள் வழங்கப்பட்ட பிறகே மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சி அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளை காணும் போதே மாநில நிர்வாகத்தின் திட்டமிடுதலை அறியமுடிந்தது.
நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் தலைமையேற்று இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம் ஏன் என்பதையும் இந்த பயிற்சி முகாமின் அவசியத்தை விளக்கமாக எடுத்துரைத்தும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
முதலில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் குர்ஆன் ஹதீஸை மட்டுமே ஏன் பின்பற்ற வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அடுத்ததாக மாநிலச் செயலாளர் யூசுஃப் அவர்கள் தகவல் தொடர்பு கொள்வதில் எத்தகைய வழிமுறைகளை நிர்வாகிகள் கையாள வேண்டும் என்ற செய்திகளைத் தொகுத்து வழங்கினார்.
அதைத் தொடர்ந்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் தமுமுக என்ற இயக்கம் தவ்ஹீத்வாதிகளின் ரத்தத்தால் தான் வளர்க்கப்பட்டது என்ற செய்திகளையும், எத்தகைய அடக்குமுறைகளையெல்லாம் தாண்டி தமுமுக என்ற இயக்கத்தை நாம் வளர்த்தோம் என்பதையும் உலக ஆசையின் காரணமாக அவர்கள் எந்த அளவிற்கு தற்போது தடம்புரண்டு சென்றுள்ளார்கள் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் பிரிண்ட் அவுட்களாக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் நிர்வாகம் செய்யும் முறையை நிர்வாகிகளுக்கு விளக்கினார்.
அத்துடன் முதல் நாள் உணவு மற்றும் தொழுகை இடைவேளைக்குப் பிறகு பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தொழுகை செய்முறைப் பயிற்சியை நடத்திக் காட்டினார்.
அதைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் நாம் ஏன் பிற மேடைகளில் ஏறுவதில்லை; பிற கொள்கையுடையவர்களை நம் மேடையில் நாம் ஏன் ஏற்றுவதில்லை என்பதை விளக்கி அதனால் ஏற்படும் விபரீதங்களையும் விவரித்தார்.
அதைத் தொடர்ந்து மாநில துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் அவர்கள் நம்முடைய ஜமாஅத்திலிருந்து பொருளாதார மோசடி மற்றும் பெண் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கையும் களவுமாக பிடிபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்கியெறியப்பட்டவரின் தற்போதைய வழிகெட்ட கொள்கைகளை விவரித்தார்.
அதைத் தொடர்ந்து மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் ஹாஜா நூஹ் அவர்கள் ஜாக் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் அது வழிகெட்டு எந்த அளவிற்கு தற்போது ஷிர்க் மற்றும் பித்அத்களுக்கு ஆதரவாக நின்று தவ்ஹீத் என்ற பெயரில் மக்களை வழிகெடுத்து வருகின்றது என்பதை ஆதாரங்களுடன் பட்டியலிட்டார். அவர் பட்டியலிட்ட ஆதாரங்கள் அனைத்தும் பிரிண்ட் அவுட்களாக வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து மாநிலத்தலைவர் பீஜே அவர்கள் “நாம் ஏன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கின்றோம்” என்ற தலைப்பில் நம் ஜமாஅத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை இந்த ஜமாஅத்தின் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்வதின் மூலம் எந்த அளவிற்கு நன்மைகளை அடைந்து கொள்கின்றார்கள் என்பதனைப் பட்டியலிட்டார். இந்த ஜமாஅத்தின் நான்கு விதமான முக்கிய செயல்திட்டங்களை மிக அழகான முறையில் விவரித்தார்.
அத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.
இரண்டாம் நாள் துவக்கத்தில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடுகள் குர்-ஆன் ஹதீஸில் அடிப்படையில் எடுக்கப்பட்டதன் விபரங்களை விவரித்ததுடன் வரதட்சணை திருமணங்களைப் புறக்கணித்ததன் விளைவாக ஏற்பட்ட கொள்கை உறுதியைத் தெளிவுபடுத்தினார். மேலும் தேர்தலில் போட்டியிட்டால் எந்த அளவிற்கு கொள்கைகெட்டுப் போகவேண்டிய நிலை ஏற்படும் என்பதனையும் விவரித்தார்.
அதைத் தொடர்ந்து காவல்துறையை அணுகும் முறையை மாநிலச் செயலாளர் சாதிக் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
பத்திரப்பதிவு மற்றும் இடம் வங்கும் போது அக்ரிமெண்ட் போடுவதற்குண்டான விதிமுறைகள் மற்றும் வங்கிக் கணக்கு துவங்குதல் போன்றவற்றிற்கான விதிமுறைகளை மாநிலச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் நிர்வாகிகளிடத்தில் விளக்கினார்.
அதைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் நம்முடைய ஜமாஅத்தை நோக்கி பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பொதுமக்கள் நம்மை அணுகுகின்றார்கள். அந்தப் பிரச்சனைகளில் நிர்வாகிகள் எத்தகைய அணுகுமுறைகளைக் கையாள்வது என்பதனை விவரித்தார். அத்தோடு நிர்வாகிகளிடத்தில் இருக்க வேண்டிய முக்கிய பண்புகளைப் பட்டியலிட்டு இந்தப் பண்புகளை நிர்வாகிகள் வளர்த்துக் கொண்டால் தான் நாம் திறம்பட நிர்வாகம் செய்ய முடியும் என்பதனைத் தெளிவுபடுத்தினார்.
டிரஸ்ட் என்று பதிவு செய்வதால் ஏற்படும் கேடுகளையும், சங்கப்பதிவு மூலம் ஏற்படும் நன்மைகளையும் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பட்டியலிட்டார்.
நலத்திட்ட உதவிகள் குறித்தும் அதனைப் பெரும் வழிமுறைகளையும் ஹாஜா நூஹ் அவர்கள் எடுத்து வைத்தார்கள்.
இறுதியாக தவ்ஹீத் ஜமாஅத் இந்த தவ்ஹீத் எழுச்சிப் பயணத்தை ஆரம்பித்தது முதல் தற்போது எந்த அளவிற்கு எழுச்சி கண்டுள்ளது என்பதனை தணிக்கை குழு உறுப்பினர் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் எடுத்துக் கூற இரண்டு நாள் தர்பியா நிகழ்ச்சி மிகுந்த மனநிறைவுடன் நிறைவு பெற்றது.
இரண்டு நாட்களுக்கான காலை மற்றும் இரவு சாப்பாடுகளுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களும், இரண்டு நாட்களுக்கான மதிய உணவுகளுக்கான ஏற்பாடுகளை ஊட்டி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களும் சிறப்பாகச் செய்து கொடுத்திருந்தன.
மேலும், மாநிலத் தலைமையகம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவசியம் கருதி ஏற்பாடு செய்த இந்த மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைத்திறன் மேம்படுத்தும் பயிற்சி முகாமிற்கு ரியாத் மண்டலம் அறுபதாயிரம் ரூபாயும், தம்மாம் மண்டலம் இருபதாயிரம் ரூபாயும் பொறுப்பேற்றுக் கொண்டு மாநிலத் தலைமையகத்தின் பொருளாதார சுமையை குறைத்து தங்களது பங்களிப்பைச் செய்தனர்.
புதிய விஷயங்கள் பலவற்றைத் தெரிந்து கொண்டு புத்துணர்வு பெற்றவர்களாக மாவட்ட நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

ஞாயிறு

இஸ்லாதில் அனுமதிக்கப்பட்ட புகழ்

அல்லாஹ்வை மறந்து தன்னை மட்டுமே முன்னிலைபடுத்தாத வகையில் உண்மையை உரைக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் புகழ்ந்து கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களிலும் நடந்துள்ளது.

உண்மை கூற வேண்டிய சந்தர்ப்பத்தில்...
நாங்கள்நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைனிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது சில பேர் நபி (ஸல்) அவர்களிடத்தில் அதிகமாக (போர் பொருட்களை) கேட்டுகொண்டேயிருந்தனர். இறுதியாக (நபி) அவர்களை ஸமுரா என்ற முள் மரத்தில் தள்ளி கொண்டு சென்றனர். இதனால் நபி(ஸல்) அவர்களின் மேலாடை அந்த மரத்தில் சிக்கி கொண்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நின்று விட்டு சிக்கி கொண்ட மேலாடையை எடுக்க விடுங்கள். மிகப் பெரிய இந்த முள் மரம் அளவுக்கு எனக்கு அருட்கொடை இருந்தால் அதனை நான் உங்களுக்கு பங்கு வைத்து கொடுத்திருப்பேன். அப்போது என்னை கஞ்சனாகவும் பொய்யனாகவும் கோழையாகவும் பார்க்க மாட்டீர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஸுபைர் இப்னு முத்யீம் (ரலி) நூல் : புகாரி 2821

மக்கள் தம்மை தவறாக நினைக்கும் நேரத்தில் தன்னடக்கத்துடன் படைத்த வனையும் நினைவு கூர்ந்து படைத்தவனின் கட்டளையான கஞ்சனாக, பொய்ய னாக, கோழையாக இருக்ககூடாது என்பதைதான் முற்றிலும் பின்பற்று வேன் என்று கூறியுள்ளார்கள். இதில் தன்னைப் பற்றி புகழ் இருந்தாலும் அவசி யம் ஏற்படும்போது படைத்தவனையும் நினைவு கூர்ந்து சொல்லப்படு வதால் இது போன்ற புகழ் வார்த்தைகள் மார்க்கத்தில் தடை இல்லை என்பதை விளங்கலாம்.

சபையில் இல்லாதவரை புகழுதல்
மக்களுக்கு அறிவுரை கூறும்போது நம்முடன் இல்லாத மனிதரின் சிறப்புகளை கூறி புகழ்வது கூடும்.

ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி(ஸல்)அவர்கள் (தம்தோழர்களிடம்), இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். தோழர்கள், இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்''என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந் தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்ம்கல் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின் றீர்கள்?''என்று கேட்டார்கள். தோழர்கள், இவர் பெண் கேட்டால் இவருக்கு மண முடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவி தாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்'' எனக் கூறினார்கள். 
நூல் : புகாரி 5091

ஏழையாக இருப்பதால் நம்மை யாரும் மதிப்பதில்லை என்று பரவலாக நாம் கருதுகிறோம். ஒருவர் ஏழையாக இருப்பதால் அவர் அல்லாஹ்விடத்தில் மதிப்பற் றவர் என்றும் வசதி படைத்தவர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் இறைவனி டத்தில் மதிப்புள்ளவர் என்றும் எண்ணிக் கொள்ள தேவையில்லை. நல்லவராக இருக்கும் ஏராளமானோர் ஏழையாக இருப்பவர் என்றும் நபிகளார் விளக்கி அந்த ஏழையை புகழ்ந்துள்ளார்கள்.

 நல்லவர்களின் மதிப்பை உணராதபோது புகழுதல்
 மார்க்கத்திற்காக தியாகம் செய்தவர்களை மக்கள் மதிக்க தவறும்போது அவரின் சிறப்பை அவர் முன்னிலையில் புகழலாம். தியாகம் செய்தவர் செய்த சிறிய தவறை மன்னிப்பதற்காக அவர் முன்னர் செய்த தியாகத்தை புகழ்ந்து சொல்லுதல்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்கள் தன் மூட்டுகால் தெரியமளவுக்கு தன் கீழாடையின் ஓரப் பகுதியை தூக்கி கொண்டு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்களு டைய தோழர் ஏதோ பிரச்சினையை கொண்டுவருகிறார் என்று சொன்னார்கள். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்கள் ஸலாம் சொல்லிவிட்டு எனக்கும் கத்தா புடைய மகன் உமர் (ரலி) அவர்களுக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. இதில் நான் அவரிடத்தில் அவசரபட்டுவிட்டேன். பிறகு வருத்தப்ட்டு உமரி டத்தில் மன்னிப்புக் கேட்டேன். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவருடைய வீட்டு வாசலை என் முகத்திற்கு நேராக மூடிவிட்டார். அதனால் நான் உங்களிடத்தில் வந்திருக்கிறேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அபூ பக்ரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்று மூன்று தடவை கூறினார்கள். இதற்கிடையில் உமர் வருத்தப்பட்டு அபூபக்ர் (ரலி) அவர்களுடைய வீட்டிற்கு சென்று அபூ பக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா? என்று கேட்க அவர்களுடைய வீட்டிலுள்ளவர்கள் இல்லை யென்று சொன்னவுடன் நபி (ஸல்) அவர்களிடத்தில் வருகிறார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம் கோபத்தால் சிவக்கிறது. அபூபக்ர் (ரலி) அவர்கள் மிகுந்த கவலைப்பட்டு நபி (ஸல்) அவர்களுக்கு நேராக முட்டியிட்டு அமர்ந்து நான் மிகுந்த அநீதி இழைத்து விட்டேன் என்று இரண்டு தடவை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னை உங்களிடத்தில் அனுப்பினான் (என்று நான் சொன்னபோது) என்னை நீங்கள் பொய்யன் என்றீர்கள். ஆனால் அபூ பக்ரோ நான் உண்மையாளன் என்று சொல்லி அவருடைய உயிராலும் பொருளாளும் எனக்கு உதவி செய்தார். என்று கூறிவிட்டு என் தோழரை எனக்காக விட்டு கொடுக்க மாட்டீர்களா? என்று இரண்டு தடவை கூறினார்கள். அதற்கு பிறகு அபூபக்ர்(ரலி)அவர்களை யாரும் வருத்தமளிக்கும்படி செய்யவில்லை.அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி)நூல் : புகாரி 4460, 3661

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தவறு செய்ததால் அவர்கள் தம் தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டபோது கோபத்தில் வீட்டுக் கதவை தாள்ளிட்டு மன்னிக்க மறுத்துவிட்டார்கள். இந்த வழக்கு நபிகளாரிடம் வந்த போது நபிகளார் ஓரிறைக் கொள்கைக்கு முதன்முதலில் ஆதரவு தெரிவித்து உடலாலும் பொருளாலும் தியாகம் செய்தவர் என்று அபூபக்ர் (ரலி) அவர்களை புகழ்ந்து உமர் (ரலி) அவர்கள் உட்பட அனைத்து தோழர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களின் மதிப்பை உணர்த்தியுள்ளார்கள். இதுபோன்ற சந்தர்ப் பத்தில் ஒருவரை புகழ்ந்து சொல்வது குற்றமாகாது.

விசாரிக்கும் போது ஒருவரை புகழ்தல்
 ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று விசாரிக்கும்போது உண்மையை உரைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவரைப் புகழ்ந்து சொல்லுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களையும் ஸஃப்வான் இப்னு முஅத்தல் என்ற ஸஹாபியையும் இனைத்து அவதூறு சொல்லப்பட்டது .அது அவதூறு என்று அல்லாஹ் குர்ஆனில் பின்னர் தெளிவுபடுத்தினான். திருக்குர்ஆன் இறக்கப்படுவதற்கு முன்னர் தன்னுடைய மனைவியை பற்றி மற்றவர்களிடம் விசாரித்துவிட்டு இவ்வாறு சொன்னார்கள்.

என் மனைவியிடத்தில் நல்லதை தவிர வேறு எதனையும் நான் அறிய வில்லை. ஒருவரை (இணைத்து) கூறுகிறார்கள். அவரிடத்தில் நல்லதைத்தான் அறிந்திருக்கிறேன். என்னுடைய வீட்டிற்குள் அவர் நுழையும்போது அவர் என்னோடு மட்டும் தான் நுழைவார். என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),நூல் : புகாரி 2661

இதைப்போன்று உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக விசாரித்தபோது அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்'' என்று கூறியுள்ளார்கள். நூல் : புகாரி 2661
 இறந்தவர்களைப் பற்றி புகழ்தல்
மார்க்கத்திற்காக தியாகம் செய்து இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றவர் களை பற்றி வரம்புக்கு உட்பட்டு புகழ்வது குற்றமாகது.

எனக்கு திருமணம் முடிந்த மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். நீ இருப்பதைப் போன்று என் விரிப்பில் அமர்ந்தார்கள். அப்போது சிறுமிகள் பத்ர் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களின் நற்செயல்களை பற்றி தஃப் அடித்து பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுமி எங்களி டத்தில் உள்ள நபி நாளை நடப்பதை அறிவார்கள். என்று பாடினாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ இவ்வாறு பாடதே முன்னர் பாடியதை பாடு என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி) நூல் : புகாரி 4001

                         எஃப். அர்ஷத் அலிபனைக்குளம்
                                
தீன்குலப்பெண்மனி

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவி தொகை பெற தகுதியான சிறுபான்மை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கு கல்வி உதவிதொகை (புதியவை மற்றும் புதுப்பித்தல்) நடப்பாண்டிற்கு வழங்க தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த மாணவ, மாணவிகள் முதலாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை பயில்பவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மார்க் பெற்று சிறுபான்மை இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வேண்டி பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள்ளும் அந்தந்த கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.


பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவியரின் பாங்க் சேமிப்பு கணக்கு எண், பாங்க்கின் பெயர், கிளை மற்றும் முகவரியை தொகுத்து தகுதியான மாணவ, மாணவிகளின் பட்டியலை நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்தும் மற்றும் சி.டியில் பதிவு செய்தும் புதுப்பித்தலுக்கான கேட்பு பட்டியலை வரும் 20 தேதிக்குள்ளும், புதியதற்கான கேட்பு பட்டியலை வரும் ஜூலை மாதம் 10ம் தேதிக்குள்ளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்ப படிவங்கள் மற்றும் கேட்பு பட்டியல் படிவங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                  
                                                  நன்றி:தினமலர்

வெள்ளி

ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 22.05.11

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு  22.05.11 நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் நாசர் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மாணவரணியின் ஒழுக்க பயிற்சி ஆலோசனை கூட்டம்.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் மாணவரணியின் ஒழுக்க பயிற்சி ஆலோசனை கூட்டம் 22.05.11 அன்று நடைபெற்றது.

ஆசாத் நகர் கிளையில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.21.05.11

 கோவை மாவட்டம்  சார்ப்பாக ஆசாத் நகர் கிளையில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.21.05.11 அன்று மாலை நடைபெற்றது. இதில் மாநில பேச்சாலர் தாஹா அவர்கள் பெண்கள் இஸ்லாம் சம்பந்தமான அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

சூரியனைச் சுற்றாத 10 மிதக்கும் கோள்கள் கண்டுபிடிப்பு!

விண்வெளியில் உள்ள கோள்கள் பொதுவாக ஏதாவது ஒரு சூரியனை சுற்றி வரும். ஆனால் அப்படி சூரியனை சுற்றாமல் தனியே மிதக்கும் 10 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சியாளர் அயன்பாண்ட் தலைமையில் சர்வதேச விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அயன்பாண்ட் கூறியதாவது:
நட்சத்திர குடும்பத்தில் 10 புதிய மிதக்கும் கோள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை வியாழன் கிரகத்தின் அளவுக்கு உள்ளன. பால் வெளி மண்டலத்தில் இத்தகைய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. மாசே பல்கலைக்கழக கம்ப்யூட்டர் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் புதிய சாப்ட்வேர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வு மூலம் இவை கண்டறியப்பட்டுள்ளன.

இவை பூமியில் இருந்து சுமார் 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. வெறும் கண்ணால் புதிய கோள்களை பார்க்க முடியாது. இவை ஏதேனும் ஒரு சூரிய குடும்பத்தில் இருந்து தப்பித்து வந்த கோள்களாக இருக்கலாம்

குஜராத்தில் ஊழல் மலிந்து கிடக்கின்றது , அடுத்த கட்ட போராட்டம் குஜராத்தில் ஆரம்பம் – அண்ணா ஹசாரே

மே 26: நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சமூக நல ஆர்வலர் அண்ணா ஹஸாரே வேண்டுகோள் விடுத்துள்ளார். பல்வேறு சமூகக் குழுக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் அண்ணா ஹஸாரே கூறியதாவது: குஜராத்தில் ஊழல் மலிந்துள்ளது என்பது உரையாடல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
முதல்வர் நரேந்திர மோடிக்கு இரண்டு வேண்டுகோள்கள் விடுக்கிறேன். ஒன்று, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்.
இரண்டு, கிராமங்களில் உள்ள நிலங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அடுத்து, தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதை குஜராத்திலிருந்துதான் துவக்க வேண்டியிருக்கும் என கருதுகிறேன் என்றார் ஹஸாரே.
இந்தக் கலந்துரையாடல்களில் சமூக நல ஆர்வலர்கள் சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால், மல்லிகா சாராபாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
                                                                                  -தினமணி 27-5-2011

வியாழன்

கொட்டி கிடக்கிறதா வெளிநாட்டில் ? வெளிநாட்டு வாழ்வு

ரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை.


எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.

அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.

90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர 
ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான் நிறைய 
விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சில விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க முடியாது.

சரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா
30, 35 வருஷமாக சவூதியில் இருந்து சம்பாதித்து சந்தோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப் பாருங்கள்? இரண்டு குமரிகளைக் கட்டி கொடுத்தேன், பசங்களை 10 வது படிக்க வச்சு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன், வீடு கட்டினேன் என்று கேள்வியைத் திசைத்திருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால வாழ்க்கை, மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை  கட்டிக் கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி உயர்வு.
70 80
களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.
80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில் 1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால் எதோ மிச்சம் பிடித்து வீடு கட்டமுடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும் செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும் சரியாக இருக்கிறது.

இதை விட பாவப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.
2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500 ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காகபடிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன?
 
ஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை சம்பளம்கூட உயர்கிறது. உதாரணத்திற்கு 2002 ல் நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது 2500 ரூபாய் சம்பளம். என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம் பிடிப்பார். இப்போது அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலேயே கிடைக்கிறது. அந்த 8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.
ஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக வளைகுடா நாடுகளில்சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால் சம்பளம்தான் 500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?

சவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.
இவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம். வேலை இந்த மாடியின் எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின் தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.
இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஃபாஸ்ட்ஃபுட் சான்ட்வீச் கடையில் வேலை. சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள் வேலை. சம்பளம் 800 (இ.9200)ரியால்.
இவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற 
அரபு நாட்டு வெயிலில் ரோடு போடும் வேலை.
சம்பளம் 1000(இ.11500) ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் 
போடும்போது அருகில் நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று 
காரணமாக வியர்வை வராமல் வியாதி வர வாய்ப்பு இருப்பவர்கள் 
மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு கிடைக்கும்.
இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில் வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200(இ.13800) ரியால்.
இறுதியாக
இப்போதும் 10th, 12th படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இதுபோன்ற 
கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள். உங்களையும் 
நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள். 
அப்படி வருவதாக இருந்தால் சரியான முறையில் படித்து அதற்கேற்ற 
வேலைக்கு வாருங்கள். இப்படி வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து 
வரலாம். கடைநிலை வேலை செய்யும் லேபர்களுக்கு குடும்பத்தை 
அழைத்துவர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்தி 
கொள்ளுங்கள்.
நன்றி : வாசுதேவநல்லூர் டிஎன்டிஜே