தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

இஸ்லாமிய பெண்களுக்கான குடும்பவியல் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக

டிசம்பர் 15 ல் 2014

இஸ்லாமிய பெண்களுக்கான

குடும்பவியல் பொதுக்கூட்டம் மாநாடு

சிறப்புரை ,..சம்சுல்லுஹா

............இஸ்லாமியர் இடஒதுக்கீடு - பரிணாமங்கள் ............

இடஒதுக்கீடு சாத்தியமல்ல ! என்று விரக்தியில் இருந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு சாத்தியமே! என்ற நம்பிக்கை உணர்வை மட்டுமல்ல நம்பிக்கை ஒளியையும் ஊட்டி, அதற்கான வழியைக் காட்டியவர்கள் தவ்ஹீது கொள்கையினர்தான். !

அந்த இடஒதுக்கீட்டு கோரிக்கை பயணத்தில் அவர்கள் கண்ட முதல் மைல்கல்தான் முஸ்­லிம்களின் வாழ்வுரிமை மாநாடு. !

1999 ல் அவர்கள் சென்னை கடற்கரையில் கூட்டிய இம்மாநாடு ஆட்சியாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரிடம் இஸ்லாமிய சமுதாயத்தின் இடஒதுக்கீடு அவசியத்தை உணர்த்தியது.

அரசியல் கட்சிகளின் 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு இடம்பிடிக்க இம்மாநாடே வழிகோ­லியது.

தவ்ஹீது வாதிகள் நடத்திய 2004 தஞ்சைப் பேரணி அரசியல் கட்சிகள் ஆட்சியாளர்கள் கவனத்தை மேலும் ஈர்த்தது.

குடந்தையை குலுக்கிய டிஎன்டிஜே வின் இடஒதுக்கீடு கோரிக்கைப் பேரணி அப்போதைய அதிமுக அரசையே ஆணையம் அமைக்க வைத்தது.

டிஎன்டிஜே வின் தொடர் முழக்க தர்ணா பேரணி திமுக அரசின் மவுனத்தையும் மரண உறக்கத்தையும் கலைத்தது.

டிஎன்டிஜே நடத்திய நாடுதழுவிய சிறைநிரப்பும் போராட்டம் மாநில அரசை மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கச் செய்தது.

இறையருளால் மாநிலத்தில் இவ்வாறு இடஒதுக்கீடு பெற்றுத் தருவதில் பலசோதனைகளைக் கடந்து சாதனை படைத்த டிஎன்டிஜே போராட்ட களத்தில் போர்க்குணத்துடன் நின்று இடஒதுக்கீட்டை வென்று தந்தது.

இன்றைய தேர்தலை குறியாக கொள்ளாமல் நாளைய தலைமுறையை குறியாகவும் வெறியாகவும் கொண்ட டிஎன்டிஜே, மத்தியில் ரங்கனாத் மிஸ்ரா பரிந்துரைப் படி பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு பெற்றுத் தர மீண்டும் ஜூலை-4 சென்னை தீவு திடலில் 15 லட்சம் முஸ்லிம்களை ஒன்று திரட்டியது.

மத்தியில் 10 சதவிகிதமும் மாநிலத்தில் 7 சதவிகிதவும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி-14, 2012 அன்று இடஒதுக்கீடு என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டியது...

ஜனவரி-28, 2014 ஒட்டு மொத்த இந்திய மீடியாக்களும், ஆட்சியாளர்களும் தமிழகத்தை திரும்பி பார்க்க வைக்கும் நாள்....; இன்ஷா அல்லாஹ்

28 சிறை செல்லும் போராட்டம் குறித்த கோவை மாவட்ட ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் சார்பாக  கடந்த 01-12-2013  அன்று மாவட்ட மர்கஸில்  28 சிறை செல்லும் போராட்டம் குறித்த  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்,மற்றும் மாநில துணை பொது செயலாளர் யூசூப் ,மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டனர்…

ஜனவரி 28 போராட்ட விளம்பர பேனர்கள் விநியோகம் – கோவை




கோவை மாவட்டம் சார்பாக கடந்த 01-12-2013 அன்று  கிளைகளுக்கு ஜனவரி 28 போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் விளம்பரம்  செய்வதற்கு  விசிறி, சன் பேக் பேனர், இரண்டு வகையான கம்பம் போஸ்டர், ஆட்டோ பிளெக்ஸ், டூவீலர் ஸ்டிக்கர், டோர் ஸ்டிக்கர், ஜனவரி 28 நோட்டீஸ்.,போஸ்டர்கள்மற்றும்  பேனர்கள் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது………

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 10 வாழ்வாதார உதவி – கோவை

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 03-12-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 10,000  வழங்கப்பட்டது……

மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி , பத்திரிக்கை செய்தி : கோவை





வியாழன்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் கிளையில் கடந்த 02-12-2013 அன்று  வெள்ளம்மாள்  என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை  ஆய்ஷா  என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்……

ஆசாத்நகர் கிளை தஃவா

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 30 -11-13 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன் ? – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

TNTJ கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக 29 -11-13 அன்று ஆசாத்நகர் பகுதியில் தெருமுனை பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் காஜா என்ற சகோதரர் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மரண சிந்தனை – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

TNTJ கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக 29 -11-13 அன்று ஆசாத்நகர் பகுதியில் தெருமுனை பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் யஹ்யா என்ற சகோதரர் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர

தொழுகை – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 26-11-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஜி அவர்கள் ”தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் உதவி – சாரமேடு கிளை


கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 26-11-2013 அன்று  ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது………………

அல்லாஹ்வின் அருட்கொடை – ஆசாத்நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 23-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ராபியத்துல் பசிரியா  அவர்கள்  ”அல்லாஹ்வின் அருட்கொடை”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………

செவ்வாய்

”இளைஞனே விழித்தெழு” அல் அமீன் காலனி கிளை பொதுக் கூட்டம்

TNTJ கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளை சார்பாக 1-12-13 அன்று லாரிப்பேட்டை பகுதியில் வைத்து ஜனவரி 28 போராட்டம் சம்மந்தமாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இளைஞனே விழித்தெழு என்ற தலைப்பிலும்,மாநில துணை பொது செயலாளர் யூசூப் அவர்கள் எது சமுதாய பனி என்ற தலைபிலும், சம்சுதீன் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கான சாதித்து காட்டுவோம் நிகழ்ச்சி கோவை மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ கோவை மாவட்ட மாணவரணி சார்பாக 10 வது மற்றும் 12 வது படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, எதிர்வரும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற சாதித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி 1-12-13 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் கோவை, கரும்புக்கடை J.B மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கும், தேர்வு காலங்களில் மாணவ, மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பதற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர்கள் S.ஷமீம் அப்துல் காதர், மற்றும் M.Y.உமர் ஃபாரூக் அவர்களும் தகுந்த விளக்கமளித்தனர். மேலும் சாதித்துக்காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த முக்கிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

கல்வி மற்றும் சமுதாய பணிகளில் சில போட்டோக்கள் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மாணவரணியின் சார்பாக நடத்தப்பட்ட கல்வி மற்றும் சமுதாய பணிகளில் சில போட்டோக்கள் பிளக்ஸ் மூலம் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்.

அல்லாஹ்வின் அருட்கொடை – ஆசாத்நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 23-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ராபியத்துல் பசிரியா  அவர்கள்  ”அல்லாஹ்வின் அருட்கொடை”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………

இறை நம்பிக்கை – குரிசிப்பிரிவு கிளை வாராந்திர பயான்

கோவை மாவட்டம் குரிசிப்பிரிவு கிளை சார்பாக கடந்த 24-11-2013 அன்று வாராந்திர பயான்  நடைபெற்றது. இதில் சகோ.சித்தீக் அவர்கள் ”இறை நம்பிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

நூல்கள் விநியோகம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 25-11-2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……

வரதட்சணை ஒரு வன்கொடுமை – பொள்ளாச்சி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 24-11-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சல்மான் மற்றும் சகோ.ஜாகிர் ஆகியோர் வரதட்சணை ஒரு வன்கொடுமை மற்றும் ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் ஏன்?  என்று உரையாற்றினார்கள்…………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி – கோட்டை கிளை

கோவை மாவட்டம் கோட்டை கிளை சார்பாக கடந்த 24-11-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது………

தொழுகை – ஆசாத்நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 23-11-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முந்தாஜ்  அவர்கள் ”தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………

ராமநாதபுரம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 22-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது………

தாஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 25-11-2013 அன்று  தாஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி அவர்களது குடும்பத்தார்களுக்கும் தஃவா செய்யப்பட்டது……………………..

பெண்களுக்கான மருத்துவ முகாம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக  கடந்த 24-11-2013 அன்று பெண்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது .இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…

அண்டை வீட்டாரும் அல்லாஹ்வின் உபதேசமும் – ஆசாத்நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்


கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 23-11-2013 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.உம்மர் அவர்கள் ”அண்டை வீட்டாரும் அல்லாஹ்வின் உபதேசமும்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………………

ராமநாதபுரம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 22-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது……

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – ஆனைமலை கிளை

கோவை மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 18-11-2013 அன்று மற்றும்  21-11-2013 அன்று ஜனவரி 28  சிறை நிரப்பும் போராட்டம் குறித்து  சுவர் விளம்பரம் செய்யப்பட்டது………

ஞாயிறு

ஜனவரி 28 இட ஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம் கோவை

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது, முஸ்லிம்களின் நிலை இந்தியாவில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அந்த தகவலில் உள்ளது.

புள்ளி விபரங்கள்: 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை பள்ளிக்கூடத்துக்கு செல்லக்கூடிய முஸ்லிம்கள் 65%பேர்,

5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை செல்லக்கூடிய முஸ்லிம்கள் 100பேர்களில் 15% முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்
85%பேர் 5ஆம் வகுப்புக்குமேல் பள்ளிக்கு செல்வதில்லை,

10ஆம் வகுப்புவரை செல்பவர்கள் 10 முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்,

12ஆம் வகுப்புவரை செல்பவர்கள் 4 முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள்,

பட்டபடிப்பு படித்தவர்கள் 100க்கு 3 முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்,

இதில் கையெழுத்து போடத்தெரிந்தவர்கள் 100 முஸ்லிம்களில் 59பேர்தான் உள்ளனர்,

இந்த நிலையில்தான் முஸ்லிம்களின் கல்வி உள்ளது.

இதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சி இடஒதுக்கீட்டை போராடி பெற வேண்டும். 


இன்ஷாஅல்லாஹ் 


வருகின்ற ஜனவரி 28, 2014 அன்று கோவை, சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய 4 பெருநகரங்களில் சிறைசெல்லும் போராட்டம் நடைபெற உள்ளது,

அதில் அனைத்து முஸ்லிம்களும் குடும்பத்துடன் பங்கு பெற்றால்தான் இடஒதுக்கீட்டை வெல்ல முடியும்.

அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

கோவை மாவட்டம்.