தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

கற்பிணிப் பெண்கள் நோன்பு பிடிப்பது பற்றிய விளக்கம்


கேள்வி : கற்பிணிப் பெண்கள் நோன்பு பிடிப்பது பற்றி சரியான விளக்கம் தருக.
- Haatim deen (srilanka)
பதில் கற்பிணிப் பெண்கள் ரமழான் காலத்தில் நோன்பு பிடிக்காமல் இருப்பதற்கு அல்லாஹ் சழுகை அளித்துள்ளான்.

கற்பிணியாக இருக்கும் பெண்கள் நோன்பு நோற்கும் போது அவர்களுக்கு உடலியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாலும், குழந்தைக்குறிய ஊட்டச் சத்துக்கள் குறைபாடடைவதற்கும் காரணமாக அமையும் என்பதினால் கற்பிணிப் பெண்கள் ரமழான் காலத்தில் நோன்பை விடுவதற்கு அல்லாஹ் அனுமதி கொடுத்துள்ளான்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)நூல்: நஸயீ 2276
ஒருவருக்கு ஒரு செயலில் இருந்து, விதிவிலக்குக் கொடுக்கப்பட்டு சழுகையாக அது ஆக்கப்பட்டால் அந்த சழுகையைத் தான் அவர் பயண்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிலும் கற்பிணிகளில் சிலர் நோன்பு காலத்தில் நோன்பு நோற்பதற்கு ஆசைப்பட்டு அல்லது மற்ற காலங்களில் அதனை மீட்டிக் கொள்ள விரும்பாமல் ரமழானிலேயே நோன்பு பிடிக்கிறார்கள் இது அவர்களை அவர்களே கஷ்டப்படுத்துவதற்கு சமனானதாகும்.

இப்படி செய்வதை பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தையைப் பெற்றெடுத்த பின் அவர்கள் அந்த நோன்பை கழாச் செய்து கொள்ள முடியும்.

கற்பிணிகள் நோன்பை கழாச் செய்ய தேவையில்லையா?

(இலங்கையில்) சிலர் கற்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் நோன்பை கழாச் செய்யத் தேவையில்லை என்று வாதிட்டு வருகிறார்கள்.

இவர்களின் இந்த வாதம் தவறானதாகும்.

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.
'பயணிகள் பாதியாகத் தொழுவதற்கு அல்லாஹ் சலுகையளித்துள்ளான். பயணிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் சலுகையளித்துள்ளான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல்கள்: அபூதாவூத் 2056, இப்னுமாஜா 1657
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் வழங்கப்பட்டுள்ள சலுகையானது பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் போன்றது தான் என்று இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

பயணிகளுக்கு நோன்பே கடமையில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனெனில் பயணிகளும், நோயாளிகளும் நோன்பை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

கர்ப்பிணிகளையும், பாலூட்டும் தாய்மார்களையும் பயணிகளுடன் இணைத்து இந்த ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் அவர்களும் நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு நாட்களுக்குள் கழாச் செய்ய வேண்டும்.

இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.
ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.நூல்: புகாரி 1950
ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.

அல்லாஹ்வே அறிந்தவன்.
பதில் : ரஸ்மின் MISc

ஆசாத் நகர் கிளையில் மாணவர்களுக்கான தர்பியா.17.07.11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 17.07.2011 அன்று மாணவர்களுக்கான தொழுகை என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி முபீன் பள்ளியில்  மாவட்ட பேச்சாளர் காஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

சனி

பாலக்கோடு பூர்வீகம் வீழ்ந்தது…………



தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் முப்பது ஆண்டுகளாக அக்கிரமம் செய்த மஹதிகள் கூட்டத்திற்கு  ஓரிறை கொள்கையாளர்களால் முடிவு கட்டப்பட்டது. ஏகத்துவ கொள்கைவாதிகளுக்கு  மஹதிகள் உண்டாக்கிய அக்கிரமம், தர்மபுரி மாவட்டம் துணை வட்டாச்சியர் அலுவலகத்தில் முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.
கடந்தவாரம் பராத் இரவு சம்பந்தமாக TNTJவினரால் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ்  கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத கொள்கையற்ற மஹதிகள் கூட்டம் TNTJவினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது.
காவல்துறையே பாதுகாப்பு அளிக்கமுடியாது என கைவிட்டு விட்டதால் தாக்குதலுக்கு உள்ளான சகோதரர்கள் மாநில தலைமையில் தஞ்சம் புகுந்தனர். தலைமையின் துரித நடவடிக்கையின் காரணமாக இன்று(29.07.2011) வெள்ளிகிழமை காலை தர்மபுரி மாவட்டம் துணை வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் இரண்டு தரப்பும் எதிரெதிரில் வைத்து விசாரிக்கப்பட்டு அவரவர் கொள்கையை அவரவர் பின்பற்றுவதும் , ஒருவருக்கொருவர் இடையூறு செய்து கொள்ளகூடாது என்றும் வணக்க வழிபாடுகளை தனித்தனியாக அமைத்து கொள்ளவேண்டும் என்றும் அதிகாரிகள் முன்னிலையில் எழுத்துபூர்வமாக எழுதி வாங்கப்பட்டது.
ஏகத்துவவாதிகளுக்கு தலைமை ஏற்ற மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள்  RTO அவர்களிடம், பேச்சு வார்தையில் 90 சதவிகிதம் திருப்தி ஏற்பட்டாலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தால் 100 சதவிகித திருப்தி அடைவோம் என்ற கருத்தை அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டு வெளியேறினார்.. முப்பது ஆண்டுகளாக ஊரை அடக்கி ஆண்ட மஹதிகள்(வெறியர்கள் ) வேதனையோடு(முகம் வெளிரி ) வெளியேறினர்.அல்லாஹ் அக்பர் ..
அலுவலக மைதானத்திலேயே ஜும்மாவிற்கான பாங்கு சொல்லப்பட்டு  தொழுகையும் நிறைவேற்றப்பட்டது. ஜும்மா உரையில் இறைவனுக்கே புகழனைத்தும் என்று அல்தாபி அவர்கள் சொன்ன உடன் தக்பீர் முழங்கியது. பாதிக்கபட்டோருக்கு உதவுவது நபிவழி என்பதை ஆணித்தரமாக உணர்த்திய அல்தாபி அவர்களின் உரை முத்தாய்பாக அமைந்தது. அதையடுத்து அசர் தொழுகையை ஜம்வு கஸர் செய்து நிறைவேற்றினார்கள்.
 
இதை வேடிக்கை பார்த்து  கொண்டு இருந்த மஹதிகளிடம்  கோவை குனிக்யமுதூர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள்  ஏகத்துவத்தை எடுத்து சொல்லியும், உங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோர சொல்லியும், ஓரிறை கொள்கைக்கு வருமாறு அழைப்பு கொடுத்ததும் கலைந்தனர்…
மாலை 4 மணிக்கு ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்ட அதே இடத்தில RTO அலுவலகத்தின் உள்ளே நடந்ததை கொள்கைவாதிகளுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சியும் பக்கீர் முஹம்மத் அல்தாபி தலைமையில் நடைபெற்றது.அல்தாபி அவர்கள் காவல்துறையின் அலட்சிய போக்கினை கண்டித்து உரையாற்றினார். இதில் ஆயிரக்கணக்கான ஓரிறை கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
தகவல்: TNTJ, கோவை மாவட்டம்.

வெள்ளி

ஜெயலலிதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன போஸ்டர் – போஸ்டர் வாசகம்

கலவர தடுப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  தமிழக முதல் ஜெயலலிதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒட்டப்பட வேண்டிய கண்டனப் போஸ்டர் வாசகம்:
கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் ஜெயலலிதாவை வண்மையாக கண்டிக்கின்றோம்
இவன்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ———-

புதன்

இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்?

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரீ 990
இரவுத் தொழுகையின் நேரம்
இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1340
ரக்அத்களின் எண்ணிக்கை
8+3 ரக்அத்கள்
“ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா! என்
கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா, நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1344
12+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1138,183 முஸ்லிம் 1400,1402,
10+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1339
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1341
4+5 ரக்அத்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ”சின்னப் பையன் தூங்கிவிட்டானோ?” அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின் முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது (சுபுஹத்) தொழுகைக்கு புறப்பட்டார்கள் நூல் : புகாரி (117)
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1341)
9 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139
ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139 5,3,
1 ரக்அத்கள்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி), நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898)
முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899)
முஸ்லிம் (1957)
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.
இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!
“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.
மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.
இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.
“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.
இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)
இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.
கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்
மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)
கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்
ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)
உம்ரா செய்தால் ஹஜ் நன்மை
ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.
“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)
சுவர்க்கத்தில் தனி வாசல்
நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.
“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)
அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்
“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)
இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது
இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

திங்கள்

நார்வே இரட்டைக் கு​ண்டுவெடிப்​பு: வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாதி கைது


நார்வேயில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 91ஆக உயர்ந்துள்ளது.

உட்டோயா தீவில் போலீஸ் வேடத்தில் வந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 84 பேரும் தலைநகரான ஓஸ்லோவில் பிரதமரின் அலுவலகத்திலும், அரசு அலுவலகங்களின் அருகிலும் நடந்த குண்டுவெடிப்பில் எட்டுபேரும் மரணித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரவிக் என்ற 32 வயது பயங்கரவாதி உட்டோயாவில் கைதுச் செய்யப்பட்டுள்ளான். குண்டுவெடிப்பின் பின்னணியில் இவன்தான் செயல்பட்டுள்ளான் என போலீஸ் கருதுகிறது. தீவிரவாதியை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

உட்டோயா தீவில் ஆளுங்கட்சியின் இளைஞர் பிரிவினர் நடத்திய முகாமில் அத்துமீறி நுழைந்த இந்த தீவிரவாதி துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தான். 84 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் மரணித்துள்ளனர் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மரண எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. தீவிரவாதியை கைதுச் செய்தபிறகு நடந்த தேடுதலில் 80 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆன்லைனில் முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை பிரசுரிப்பவன் தான் கைதுச் செய்யப்பட்ட தீவிரவாதி என போலீஸ் கமிஷனர் ஸ்பீனங் ஸ்பான்ஹிம் அறிவித்துள்ளார். வலதுசாரி தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள இவன் சொந்த பெயரில் இரண்டு ஆயுதங்களை வாங்கியுள்ளான் என ஒரு தொலைக்காட்சி சேனல் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் கிறிஸ்தவ பழமைவாதி என தன்னை சுயமாக அறிமுகப்படுத்தியுள்ளான். இவன் வேட்டையாடுதல் மற்றும் கம்ப்யூட்டர் கேமிலும் விருப்பமுள்ளவன் என நார்வே நாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

எங்கோ ஒரு இடத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடந்துவிட்டாலே முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய தீவிரவாதம் என கூச்சலிடும் மேற்கத்திய ஊடகங்கள் நார்வேயில் நடந்த சம்பவத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றன. பி.பி.சியில் வலதுசாரி கிறிஸ்தவர் என்ற வார்த்தைதான் இடம் பெற்றிருக்கிறதே தவிர தீவிரவாதி என்ற வார்த்தையை செய்தியில் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பி.பி.சி செய்தி லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

ஞாயிறு

முஸ்லிம் பெண்களுக்கு ஒரு படிப்பினை!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர்.

மணிப்பால் சரலெபெட்டு சிவபாடி ஸ்ரீ உமாமகேஸ்வரி கோவில் அருகே குடும்பத்துடன் வசித்துவரும் புஷ்ராவை, பஜ்ரங் தள் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த குண்டர்கள் மனோகர் என்பவனது தலைமையில் புஷ்ராவின் கணவன் ஜாபர் முன்னிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக அருகிலுள்ள கோவிலுக்கு இழ்த்துச்சென்று இந்து மதத்திற்கு மாறும்படி மிரட்டியுள்ளனர்.

புஷ்ரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தான் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று உறுதியாகச் சொன்னபோது குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். கோவில் பூசாரியிடம் புஷ்ரா இந்துவாக விரும்பவில்லை என்றும் இஸ்லாம் மதத்திலேயே தொடரவிரும்புவதாகச் சொல்லி மன்றாடிய பிறகும் பூசாரி வலுக்கட்டாயமாக மதமாற்றும் (பிரவர்த்தன்) நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

மங்களூர் காவல்துறை ஆணையர் அலோக் மோகனிடம் நேற்று அளித்த புகாரில் தன்மீதான கட்டாய மதமாற்ற முயற்சிகளையும், தனது உயிருக்கு ஆபத்திருப்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் தனது கணவன் ஜாபர் முன்பாகவே பஜ்ரங்தள் தலைவன் மனோகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கண்ணீருடன் தெரிவித்தார்.

கோவிலில் நடந்த கட்டாய மதமாற்ற நிகழ்ச்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்தபோது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்பதால் அமைதியாக இருந்துள்ளார்.இதைக்காரணமாக வைத்து புஷ்ரா இந்துவாக மதம் மாறிவிட்டதாக வதந்தி பரவியதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவரது கணவன் ஜாபர், திருமணத்திற்கு முன்பு பிரசாந்த் செட்டி என்ற பெயருடன் இந்துவாக இருந்துள்ளார். புஷ்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டபிறகு அடுத்தடுத்து குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, தற்போது பஜ்ரங்தள் குண்டர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். அவரது வீட்டிற்கு பஜ்ரங்தள் குண்டர்களையும் அழைத்து வந்ததோடு, அவன் முன்னிலையிலேயே புஷ்ராவை அவர்கள் பாலியல் நீதியில் துன்புறுத்தியதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளான்.

தற்போது அவனிடமிருந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விகாகரத்து கோரியுள்ளார். இனிமேல் அந்த கொடிய மிருகத்துடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.மேலும்,இதை போலீசில் தெரிவித்தால் குடும்பத்துடன் கொன்றுவிடப்போவதாக பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்.
புஷ்ராவின் புகாரை ஏற்றுக்கொண்ட மங்களூர் காவல்துறை ஆணையர்,இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

நன்றி : இந்நேரம்.காம்

சனி

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 23.07.11





கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 23.07.11  அன்று மஜ்ஸிதுல் முபீன் பள்ளியில் வைத்து நடைபெற்றது .இதில்  மாவட்ட பேச்சாளர் காஜா அவர்களும், பெண்பேச்சாளர் காதிரா அவர்களும்  இஸ்லாம் சம்மந்தமான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்.05.07.11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக 05.07.11 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் ஷெரீப்  அவர்கள்  உரையாற்றினார். இதில் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான் 16.07.11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 16.07.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மும்தாஜ் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான் 09.07.2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 09.07.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  காதிரா அவர்கள் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆசாத் நகர் கிளையில் சார்பாக மாற்று மத தாவா

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் சார்பாக 13.07.11 மாற்று மதத்தை  சேர்ந்த சகோரர்களுக்கு அவர்களின் இஸ்லாம் சம்மந்தமான எடுத்து சொல்லி தாவா தசெய்யப்பட்டது.

வெள்ளி

சத்தியத்தை மெய்ப்படுத்திய அடையாளங்கள்!

இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கியமான அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று மறுமை நாளை நம்புவதாகும்.  இந்த நம்பிக்கைதான் மனிதனை உலகத்தில் நிம்மதியுடன், இறை வனுக்கு அஞ்சி வாழ வழிவகுக்கும். இந்த நம்பிக்கையை இஸ்லாம் மிக ஆழமாகவும், ஆணித் தரமாகவும் போதிக்கிறது.

கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...

அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எந்தச் சந்தேகமும் இல்லாத கியாமத் நாளில் உங்களை அவன் ஒன்று திரட்டுவான். அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யாரிருக்கமுடியும்?!'        (அல்குர்ஆன் 4:87)

என்று மறுமைநாள் வந்தே தீரக்கூடிய ஒன்று என்பதை வல்லநாயன் அல்லாஹ் தெளிவாகக் கூறுகிறான்..

நபி(ஸல்) அவர்கள் தமது ஏகத்துவப் பிரச்சாரத்தையும், மரணத்திற்குப்பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்பதையும் போதனை செய்தபோது, அவர்களை ஏற்காத மக்கள் ஏகத்துவத்தை எதிர்ப்பதை விட, மறுமை வாழ்வையே கடுமையாக எதிர்த்தார்கள். மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறதா? என்பதே பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக அவர்களுக்கு இருந்தது. அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாததே ஏகத்துவத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக இருந்தது என்றும் கூறலாம். அவர்கள் மறுமை நம்பிக்கையை மறுத்ததை வல்ல ரஹ்மான் பின்வருமாறு திருக்குர்ஆனில் பதிவு செய்கிறான்.

'மேலும் மனிதன், தான் படைக்கப்பட்டதை மறந்துவிட்டு நமக்கு உதாரணம் கூறுகிறான். எலும்புகள் மக்கிவிட்ட நிலையில் அதை அவனால் உயிர்ப்பிக்க முடியுமா? என்று அவன் கூறுகிறான்'  (அல்குர்ஆன் 36:78)

'எலும்புகளாகவும் மக்கிப்போனவையாகவும் நாங்கள் ஆகிவிட்ட பின் புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுவோமா என்ன? என்றும் அவர்கள் கேட்கின்றனர்'      (அல்குர்ஆன் 17:49)

இவ்வளவு வன்மையாக மறுமை வாழ்வை ஒரு கூட்டம் மறுத்து வந்தது. அந்த மறுப்பு எந்தவித நியாமும், அர்த்தமும் அற்றது என்று வல்ல நாயன் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

'கியாமத்நாள் மீது சத்தியம் செய்கிறேன். குறை கூறிக் கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன். மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா? அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்' (அல்குர்ஆன் 75:1-4)

வல்ல அல்லாஹ்வின் இந்த பேராற்றலை உணர்ந்த இன்னொரு கூட்டமோ மறுமை வாழ்வில் உறுதியாக மறுமை வாழ்வில் முழு நம்பிக்கை வைத்திருந்தது. அதன் வெளிப்பாடாக தரக்குறைவான வார்த்தைகளால் தாங்கள் ஏசப்பட்டபோது சகித்துக் கொண்டார்கள். சித்ரவதை செய்யப்பட்டார்கள். அதையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.  நாடு கடத்தப்பட்டார்கள். அனைத்தையும் துறந்துவிட்டுச் செல்வது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆசை வார்த்தைகள் அவர்களை மயக்கவில்லை. அச்சுறுத்தல்கள் அவர்களை சிறிதளவும் அசைக்க முடியவில்லை.

குறைந்த எண்ணிக்கையினராகவும், பலவீனர்களாகவும் இருந்தும் பெரும் கூட்டத்தை எதிர்த்து நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அவர்கள் கணக்கு பார்த்துக் கொண்டிருக் காமல் களத்தில் குதித்தார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. இதன் பிறகு அழியாத பெருவாழ்வு உண்டு என்பதில் அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கைதான் காரணம்! மறுஉலக வாழ்வில் நம்பிக்கை வைப்பது ஒரு சமுதா யத்தின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் அளவுக்கு மகத்தானது. அவர்களது வாழ்வின் போக்கையே அந்த நம்பிக்கை மாற்றி அமைக்கும் அளவுக்கு அது மகத்தானது!
கல்லுக்கும்-மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், ஏக இறைவனைத் தவிர எவருக்கும், எதற்கும் அஞ்சாதவர்களாக ஆனது (பார்க்க அல்குர்ஆன் 33:39) இந்த நம்பிக்கையினால்தான்!

தன்னலமே பெரிது என்று வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை இருந்த போதும், தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது (பார்க்க அல்குர்ஆன் 59:9) இந்த நம்பிக்கையினால்தான்.

ஒற்றுமையின்றித் தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம், ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது(பார்க்க அல்குர்ஆன் 3:103) இந்த நம்பிக்கையினால்தான்.

மதுவில் வீழ்ந்து கிடந்த சமுதாயம் (பார்க்க அல்குர்ஆன் 5:90)அதிலிருந்து முழுமையாக விடுபட்டது இந்த நம்பிக்கையினால்தான். 

தங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாக பெண்களும்கூட உறுதிமொழி எடுத்துக் கொண்டது (பார்க்க அல்குர்ஆன் 60:12) இந்த நம்பிக்கையினால்தான். 

எந்த மனிதரிடமும், எந்த உரிமையையும் நாடாமல் சுயமரியாதையைப் பாதுகாக்கக்கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் (பார்க்க அல்குர்ஆன் 2:273) இந்த நம்பிக்கையினால்தான்.

தங்களுக்கு நல்லது இது, கெட்டது இது என்று தெரியாத ஒரு கூட்டம் அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும் (பார்க்க அல்குர்ஆன் 3:104) இந்த நம்பிக்கையினால்தான்.

மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் மறுமை நம்பிக்கை ஒருபுறம் மகத்தான மாறுதலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்த நம்பிக்கை அற்றவர்களோ கட்டுப் பாடற்ற வாழ்வில் லயித்துக்கெண்டு மறுமை நாளைப்பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் தங்களுக்கிடையே சர்ச்சை செய்து கொண்டிருக்கும் நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும், அந்த நாள் நெருங்க நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி(ஸல்) அவர்களைக் கொண்டு முன்கூட்டியே அறிவித்துச் கொடுத்துள்ளான். அவற்றில் பெரிய அடையாளங்களும், சிறிய அடையாளங்களும் அடங்கியுள்ளன. பெரிய அடையாளங்கள் இதுவரை நிகழவில்லை. சிறிய அடையாளங்களில் ஓரளவு நாம் வாழும் காலத்திலேயே நடந்துவருகின்றன. அவற்றை அறிவதன் மூலம் அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புகள் நமக்கு உதவும் என்பதால் அவற்றில் நிகழ்ந்துவிட்ட, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சிறு முன்னறிவிப்புகளை மட்டும் இங்கு தெரிந்து கொள்வோம்.

காலம் சுருங்கும்!

'காலம் சுருங்கும் வரை அந்தநாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பது நபியவர்கள் காட்டிய அடையாளம்'                  (நூல்: திர்மிதீ)

காலம் வெகுவேகமாக ஓடுவதும் இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. மனிதனின் விஞ்ஞான அறிவு வளர்ந்து, அவன் கண்டுபிடிக்கும் நவீன சாதனங்களால் காலம் மிகவும் சுருங்கிவிட்டதைக் காண்கிறோம். ஒரு வாரம் பயணம் செய்யும் தூரம் ஒரு நாளில் சர்வ சாதாரணமாகக் கடக்கப் படுகின்றது. 

ஒரு வாரத்தில் செய்யப்படத்தக்க வேலைகள் ஒரு நாளில் செய்து முடிக்கப்பட சாதனங்கள் இன்று உள்ளன. எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகள் அதே நேரத்தில் முழு உலகையும் எட்டி விடுகின்றன. இத்தகைய முன்னேற்றங்களும்கூட அந்தநாள் சமீபித்து வருகின்றது என்பதற்கான அடையாளமே.

'யுக முடிவு நாள் நெருங்கும்போது விபச்சாரமும், மதுவும் பெருகும்' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்;.(ஆதார நூல்: புஹாரி 80-81, முஸ்லிம்)   

'பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.       நூல்: புஹாரி 1036

'ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனிமேல் தோன்றுவார்கள்' என்பதும் நபிமொழியாகும்.            நூல்: முஸ்லிம் 3971

'தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.    நூல்: ஹாகிம் 4-493

'மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்' என்பது நபிமொழி. நூல்: நஸயி, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

'பள்ளிவாசல் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.    நூல்: ஹாகிம் 4-493

'கடைகள் பெருகி, அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.               நூல்: அஹ்மத்

'பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரி;ப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும்' என்று நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி.         நூல்: புஹாரி

'தங்கள் நாவுகளை (மூலதனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவுநாள் ஏற்படாது' என்பது நபிமொழி. நூல்: அஹ்மத் 
(பேச்சை தொழிலாக்கி பொருள் திரட்டக்கூடிய பலரை இன்று நாம் காண்கின்றோம்)

கவனிப்பாரற்ற நிலையில் பெற்றோர்கள்!

'ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்'          அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புஹாரி 4777

ஒரு தாய் எத்தனை ஆண் மக்களைப் பெற்றாலும் அவர்கள் தாயைக் கவனிக்காத நிலை ஏற்படும். மகளை அண்டி வாழும் நிலைமையை அவள் சந்திப்பாள். அங்கே அடிமையாக நடத்தப்படுவாள் என்பது நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடையாளங்களில் ஒன்றாகும். இன்றைக்குப் பரவலாக இந்த நிலையைப் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர். 

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைவார்கள்!

'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும்  வெறுங்காலுடனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வர்கள் மிகவும் உயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்வார்கள்' (ஆதார நூல்: முஸ்லிம்)           

'செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலை ஏற்படும் வரையிலும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் வரையிலும் அந்த நாள் ஏற்படாது' (ஆதார நூல்: முஸ்லிம்)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்புகள் இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு உலகில் பல நாடுகளுக்கு கிடைத்திருக்கும் வாழ்வும், புரட்சிகரமான மாறுதல்களும் இதை விளங்கிடப் போதுமானவையாகும்.

பொறுப்பற்றவர்களிடம் பொறுப்பு!

'நாணயம் பாழாக்கப்படும்போது அந்த நாளை எதிர்நோக்கு! என்று நபியவர்கள் கூறியபோது, எவ்வாறு பாழ்படுத்தப்படும்? என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர்நோக்கு' என்று விடையளித்தார்கள். (ஆதார நூல்: புகாரி)

இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்ச மின்றி உலகத்து ரிக்கார்டுகளை சரிசெய்து ஏமாற்றி அபகரித்துக் கொண்டவர்களை இன்றளவும் நாம் காண்பது அந்த நாளுக்கு எவ்வளவு நெருக்கமாகிவிட்டோம் என்பதைத் தெளிவாக்குகின்றது.
சாட்டையின் ஓரமும், செருப்பின் வாரும் மனிதனிடம் பேசும்!

'சாட்டையின் ஓரமும், செருப்பின் வாரும் மனிதனிடம் பேசும் வரை அந்த நாள் வராது' என்பதும் நபியவர்களின் முன்னறிவிப்பு. (ஆதார நூல்: திர்மிதீ)

மனிதன் மட்டுமே பேச இயலும் என்ற நிலைமாறி ஒலி நாடாக்களும் கூட பேசுகின்ற அளவுக்கு மனிதன் அறிவில் முன்னேறிவிட்டான். நேரடியாகப் பேசும் என்று அர்த்தம் கொண்டால் அந்த நிலை இன்னும் ஏற்படவில்லை. செருப்பு வாராகப் பயன்படும் பொருட்கள்கூட ஒலி நாடாக்களாக மனிதனிடம் பேசும் என்று பொருள் கொண்டால், அந்த நிலையை மனிதன் அடைந்துவிட்டான்.

அன்றும் இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை! என்றும் நிகழக்கூடியவை!
'யுக முடிவு நாள் வரும்வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக்கொண்டே இருக்கும்'(முஸ்லிம்)      

மேலே கூறப்பட்டுள்ள சிறு அடையாளங்கள் மட்டுமின்றி, மேலும் 10 பெரும் அடையாளங்களை மறுமை நாள் நெருங்குவதற்கான அத்தாட்சிகளாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எடுத்து காட்டியுள்ளார்கள்.  அவற்றில் சில அடையாளங்கள் ஏற்படும் போது, பாவ மன்னிப்பையும் வல்ல அல்லாஹ் ஏற்க மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இந்த நிரந்தரமற்ற உலகத்தில் மரணம் எப்போது வரும் என்பதை முன்கூட்டியே நாம் அறியாத காரணத்தினால், அந்த மகத்தான நாள் வருவதற்கு முன் நம் வாழ்க்கையை வல்ல அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் காட்டிய முறைப்படி அமைத்துக் கொண்டு, ஈருலக வெற்றியை பெற முயலுவோம்.  அதற்கு வல்ல ரஹ்மான் துணை புரிவானாக!

source: TNTJ DUBAI