தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

ஜெர்மன் ஜனநாயகம் என்றால் என்ன

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தான் நமது இலக்கு என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதாக ஒரு நண்பர் கூறினார். ஆனால் அவரால் அதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. அதை விளக்க முடியுமா?
அபூ அஜ்மல், சென்னை
பதில்
நமது இந்தியாவில் உள்ள தேர்தல் அமைப்பு பிரிட்டன் நாட்டில் உள்ள தேர்தல் முறையாகும். பிரிட்டன் ஜனநாயக முறை என்ற இந்தth தேர்தல் முறை ஒரு சூதாட்டம் போன்றதாகும்.பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்சி அமைவதற்காகத் தான் ஜனநாயகம் தேவைப்படுகிறது. ஆனால் பிரிட்டன் ஜனநாயகத்தில் சிறுபான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப பல நேரங்களில் ஆட்சி அமைந்து விடுவதுண்டு.

வெள்ளி

குடி கெடுக்கும் நவீன கலாச்சாரம்...!

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குடிகொண்ட நவீன கலாச்சாரம் இன்றைக்கு அவளின் உயிரையும் அவளது கணவனின் உயிரையும் மாய்ப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன் மீடியாக்களில் பரபரப்பாக அலசப்பட்ட ஒரு விசயம் மூணாறில் கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணை பற்றியதாகும் மூனாறு பகுதிக்கு தன மனைவியை அழைத்து சென்று அவளை கொலை செய்துவிட்டு தன சொந்த ஊருக்கு திரும்பி வந்த அந்த பெண்ணின் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

இன்று 28.10.11-துல் ஹஜ் முதல் நாள் – தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிறை பார்க்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை,திருவள்ளுர்,ராமநாதபுரம்,நீலகிரி,தஞ்சை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று (28-10-2011) மக்ரிப்லிருந்து தமிழகத்தில் துல் ஹஜ் பிறை 1 ஆரம்பமாகின்றது. இதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஹஜ் பெருநாள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-தலைமையகம்

செவ்வாய்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக   கடந்த18.10.2011 அன்று கோவை செல்வபுரத்தை  சேர்ந்த  மாற்றுமத  சகோதரிருக்கு  மருத்துவ உதவியாக  ரூபாய் -1000/  வழங்கப்பட்டது.

.

ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் -1000/ மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக   கடந்த18.10.2011 அன்று கோவை சுகுணபுரம் பகுதியை சேர்ந்த  ஏழை சகோதரருக்கு  மருத்துவ உதவியாக  ரூபாய் -1000/  வழங்கப்பட்டது.

ஆசாத் நகர் கிளை சார்பாக சார்பாக மருத்துவ உதவி

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக  சார்பாக கடந்த18.10.2011 அன்று ஏழை சகோதரருக்கு  மருத்துவ உதவியாக  ரூபாய் -1000/  வழங்கப்பட்டது. 

திங்கள்

முக்கிய அறிவிப்பு : எந்த திருமணங்களுக்கு பேச்சாளர்கள் அனுப்புவது?

மார்க்கத்துக்கு முரணான காரியங்களுடன் நடத்தப்படும் திருமணங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் பிரச்சாரகர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அந்தத் திருமணங்களை நமது பதிவேட்டில் பதிவு செய்யக்கூடாது என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுதியான நிலைபாட்டை ஆரம்பம் முதல் கடைப்பிடித்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.
ஆயினும் மார்க்கத்துக்கு முரணில்லாத வகையிலும் வீண்விரயம்

ஞாயிறு

கடாபி சர்வாதிகார ஆட்சி செய்தாரா?

கடாபி சர்வாதிகார ஆட்சி செய்தாரா
(இக்கேள்வி கடாபி கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது)
கேள்வி: அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகச் செயல்பட்டவர் கடாஃபி. பேச்சிலேயே அமெரிக்காவை மிரட்டியவரும் கூட. தற்போது கடாபியின் எதிர்ப்புப் படைகளிடம் ஒட்டு மொத்த லிபியாவும் கட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அந்த நாட்டு மக்களின் நிலை எப்படி இருக்கும். மேலும் கடாஃபி சர்வாதிகார முறையில்தான் ஆட்சி செய்தாரா
? விரிவான விளக்கம் தரவும்.
- உ. முஹம்மது அபுதாஹீர், கம்பம்.
? பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுத் தள்ளுவது போல் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். என்கவுண்டருக்கு சட்டத்தில் இடமில்லை. அதற்கான தகுதியும் காவல் துறைக்கு இல்லை என்ற போதும் சில நேரங்களில் மக்களின் ஆதரவு கிடைப்பது போல் கடாபிக்கு எதிராக நடந்த கூட்டுப்படை என்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு லிபியாவின் மக்களே துணை நின்றனர்.

கடாபி ஒழிந்தால் போதும். ஒழிப்பவன் எவனாக இருந்தாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு மக்கள் மனநிலை இருந்தது. இதில் இருந்து கடாபியின் நல்லாட்சியை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன பலரை கடாபி தூக்கில் போட்டார். அவருக்கு எதிராக அரசியல் கருத்து சொன்ன இக்வான் இயக்கத்தவருக்கும் மரண தண்டனை விதித்தார். கிரீன் புக் எனப்படும் கருப்பு புத்தகத்தை எழுதி அது தான் வேதம் என்ற நிலையை ஏற்படுத்தினார். இஸ்லாத்தைப் பொறுத்தவரை அவர் நவீன பிர்அவ்னாக இருந்தார். கம்யூனிசச் சாயல் கொண்ட கோட்பாட்டை இஸ்லாத்தின் பெயரால் திணித்தார். இதன் காரணமாக ஒட்டு மொத்த அரபுலகும் அவருக்கு எதிராக நின்றது. கடாபி ஒழிக்கப்பட வேண்டியர் என்றாலும் இப்போது கூட்டுப்படை என்ற எண்ணெய் கொள்ளைக் கூட்டம் அவரை விட ஆபத்தானவர்கள் என்பதை லிபிய மக்கள் உணரும் காலம் விரைவில் வரும். போர்க்குணம் மிக்க அடுத்த புரட்சியை கொள்ளைக் கூட்டம் விரைவில் சந்திக்கும்.
உணர்வு 16:7

கணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள்!

கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு பரீட்சையை எதிர்கொள்ள முடியும்.

அனால் கணிதபாடம் அவ்வாறு இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால் கசக்கும்.

இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழி செய்கின்றன. கணித பாடத்தினை இணையத்தில் கற்றுகொள்ள சில பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன்.

1 . HOME SCHOOL MATHS.NET 

தரம் 1 தொடக்கம் 8 வரையான மாணவரகள் கணித படத்தினை கற்று கொள்ள உதவுகிறது இந்த தளம். இந்த தளத்தில் கணித செயல்முறைகள்,வீடியோ என பலவற்றை உள்ளடக்கியுள்ளது;

2. MATHWAY.COM

கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு முழுமையான செயல்முறை விளக்கத்துடன் தருகிறது இந்த தளம். இந்த தளம் பற்றி என் வலைத்தளத்தில் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். 

3. WEB MATH.COM

கணித பாடம் தொடர்பான வினாக்கள் , பிரச்சனைகளுக்கு செயல் முறை விளக்கங்களுடன் பதில் பெற உதவுகிறது. 

4. WOLFRAMALPHA.COM

கணித பாடம் மட்டுமல்லாது அறிவியல் பொது அறிவு வினாக்களுக்கும் விடை பெறலாம் இந்த தளத்தில். 

5 . PEDAGONET.COM

கணித தந்திரோபாயங்களை கற்றுகொள்ள உதவுகிறது இந்த தளம்.

6.FUN MATH 

மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம்.

7. COOL MATH 

மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் புதிர்கள் மூலம் கணித பாடத்தினை கற்க உதவுகிறது இந்த தளம்.

8. FREE MATH HELP

கணித பாட விளக்கங்கள் மற்றும் செயல் முறை பயிற்சிகளை உள்ளடக்கியது.

9 . MATH .COM 

கணித பாட அலகுகள் ரீதியாக விளக்கங்கள் , செயல்முறைகள், பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளது.

10 . KHAN ACADEMY.ORG 

கணிதம் மற்றும் அறிவியல் விளங்கங்களை வீடியோ மூலம் இந்த தளத்தில் கற்றுகொள்ள முடியும்.

சனி

தேர்தல் அறிக்கைக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கும் வேறுபாடு என்ன

கேள்வி: தேர்தல் அறிக்கைக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்படுவதற்கும் வித்தியாசம் உண்டா? சலீம் கான், விழுப்புரம்

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவது குறித்து தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறினால் அவரை ஆதரிப்பதாக நாம் கூறினோம். ஆனால் அவர் தேர்தல் அறிக்கையில் அதைக் கூற மறுத்து விட்டார். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

செவ்வாய்

இறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி

இரு கடல்கள் சங்கமிக்கும் போது இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஓன்றையொன்று கடக்காது.  (அல்குர்ஆன் 55: 19,20)

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும்தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும்,கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். (அல்குர்ஆன் 25: 53)
 
திங்கள்

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது!

பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.

தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி,
* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை இனிதாக!

உலக சனத்தொகையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர் அதேபோல் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளும், கொடுமைகளும் அதிகரித்தே காணப்படுகின்றது. இவ்வாறு பெண்களுக்கு இழைக்கப்படுகின்றஅநீதிகளின், கொடுமைகளின் பின்னணியில்பெரும்பாலும் இன்னொரு பெண் இருப்பதே ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். அல்லது தாங்களே தங்களுக்கு இழைக்கப்படும்அநீதிகள், கொடுமைகளுக்கு காரணமாகவும்அமைகின்றனர்.

இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கியுள்ளது. இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனில் பெண்கள் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் கூட இருக்கின்றதென்றால் இஸ்லாம் பெண்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளது என்பதை உணரலாம். இன்று பெண் உரிமைக்காக வாய் கிழியப் பேசும் பெண்களின் புரட்சி பேச்சளவிலேயே உள்ளது. ஆனால்இஸ்லாம் செயல் வடிவில் காட்டவேண்டிய அத்தனை திட்டங்களையும் சீராக வகுத்துத்தந்துள்ளது.

பெண்களுக்கு கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)

சனி

பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா ?

பெண்கள் மொட்டை அடித்தல், முடியைக் குறைத்தல் கூடுமா ?
பெண்கள் தலைமுடியை வெட்டலாமா? - ஷேக் முஹம்மத்

நீங்கள் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வது பற்றி கேட்டாலும் குறைத்துக் கொள்வதைப் பற்றியும் மொட்டை அடித்துக் கொள்வது பற்றியும் சேர்த்தே விளக்குவது நல்லதெனக் கருதுகிறோம்.

பொதுவாகப் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கோ, முழுமையாக மழித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

ஹஜ், உம்ராவை முடித்த பின் இஹ்ராமில் இருந்து விடுபடுவதன் அடையாளமாக தலையை மழித்துக் கொள்ள வேண்டும்; முடியாவிட்டால் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர்(தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. திருக்குர்ஆன் 2:196
 
அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான். திருக்குர்ஆன் 48:27

தலைமுடியை மழிக்கவோ குறைக்கவோ செய்யலாம் என்று இவ்வசனத்தில் இருந்து விளங்க முடிந்தாலும் இரண்டில் தலையை மழிப்பது தான் சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்

1726,1727 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனக் கூறியதும் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்.... என்றனர். நபி (ஸல்) அவர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!) என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பின்படி தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!  என்று ஒரு தடவையோ இரண்டு தடவையோ கூறியதாக உள்ளது.

இன்னுமொரு அறிவிப்பில் நான்காவது தடவையில், முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்.... எனக் கூறியதாக உள்ளது. புஹாரி 1727

ஹஜ்ஜை அல்லது உமராவை முடிக்கும் போது தலையை மழிப்பது சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினாலும் இதில் பெண்களுக்கு விதி விலக்கு அளித்துள்ளனர்.

'தலையை மழித்துக் கொள்வது பெண்கள் மீது இல்லை. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்கள் மீது உள்ளது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 1694

அவர்கள் மீது மழித்தல் இல்லை என்ற சொல் அவர்கள் மீது அவசியம் இல்லை என்ற கருத்தைத் தான் தரும். அவர்களுக்கு அனுமதி இல்லை என்ற கருத்தைத் தராது.

ஹஜ் முடித்த பின் அவர்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மார்க்கக் கட்டளையாகப் பிறப்பித்தால் அது பெண்களில் அதிகமானவர்களுக்கு விரும்பத்தக்கதாக இருக்காது. எனவே தான் அவர்கள் மீது மழித்தல் அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது.

அவர்கள் விரும்பி தலையை மழித்துக் கொள்வது குற்றமாக ஆகாது. இதனால் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்கள் ஹஜ் முடித்து தமது தலையை மழித்துள்ளனர். நூல் இப்னு ஹிப்பான்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் மைமூனா (ரலி) ஹஜ் செய்து விட்டு அவர்கள் மொட்டை அடித்திருந்த நிலையில் மரணித்தார்கள் என்று மேற்கண்ட் ஹதீஸில் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இது நடந்துள்ளதால் இதை ஆதாரமாக நாம் கூறவில்லை. கூடுதல் தகவலுக்காகக் குறிப்பிடுகிறோம்.

மேலும் ஹஜ்ஜுடன் தொடர்பு இல்லாமல் பெண்கள் பொதுவாக தலையை மழிப்பது பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை.

பெண்கள் தலையை மழிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன.

எனவே பெண்கள் பொதுவாகத் தலையை மழிக்க விரும்பினால் அவர்கள் மழித்துக் கொள்ளலாம். ஹஜ்ஜை முடித்த பின் அவர்கள் தலையை மழிப்பது வலியுறுத்தப்படவில்லை. சிறிது முடியைக் குறைத்துக் கொள்வதே போதுமானது. ஆனால் ஒரு பெண் ஹஜ்ஜை முடித்து தலையை மழித்தால் அதைத் தடுக்கும் வகையில் இந்த ஹதீஸின் வாசகம் அமையவில்லை.

தலை முடியைக் குறைப்பதற்கும் ஹதீஸ்களில் எந்தத் தடையும் இல்லை. மேற்கண்ட ஹதீஸில் ஹஜ்ஜை முடித்து பெண்கள் தலை முடியைக் குறைப்பதே போதுமானது என்று கூறப்படுவதால் தலை முடியை பெண்கள் குறைக்கலாம் என்பது தெரிகிறது.

533 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய பால்குடிச் சகோதரர் ஒருவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுடைய சகோதரர், நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளித்த முறை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு 'ஸாஉ' அளவுள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி குளித்துக் காட்டினார்கள். அப்போது எங்களுக்கும் அவர்களுக்குமிடையே திரை ஒன்றிருந்தது. தமது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றினார்கள். நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிருந்து கத்தரித்து எடுத்துவிடுவார்கள். நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் தங்களின் முடியை காது சோனைக்கு மேல் வெட்டிவிடும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே இப்படி நடந்தார்களா? அவர்களின் மரணத்திற்குப் பிறகு இப்படி நடந்தார்களா என்று கூறப்படவில்லை.

அனைத்து மனைவியரும் இப்படி இருந்துள்ளதால் வழக்கமுடையவர்களாக என்று கூறப்படுவதால் நபிகள நாயகம் (ஸல்) காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருந்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே இப்படி நடந்திருந்தால் பெண்கள் தலைமுடியைக் குறைத்துக் கொள்வதற்கு இது மற்றொரு ஆதாரமாக அமையும்.

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களின் மனைவையர் ஏற்படுத்திக் கொண்ட வழக்கம் என்று கருதுவோர் இதை கூடுதல் தகவலாக எடுத்துக் கொள்ளலாம்.

பெண்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ப முடியைக் குறைத்துக் கொள்ளவோ மொட்டை அடித்துக் கொள்ளவோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

புதன்

இமாமை முந்தினால் என்ன தண்டனை?

கூட்டாகத் தொழும் போது இமாமுக்கு முன் மஃமூம் முந்தினால் அவரது தலை கழுதையின் தலையாக மாறிவிடும் என்று ஹதீஸ் இருப்பதாகக் கூறுகிறார்களே அது உண்மையா?
சாம் ஃபாரூக்
பதில்
தொழுகையில் இமாமைப் பின்தொடர்ந்து தொழுபவர் இமாமுக்கு முன்பாக ருகூவு சுஜூது போன்ற காரியங்களை முந்திக்கொண்டு செய்தால் அல்லாஹ் மறுமையில் அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாக ஆக்கி விடுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
691حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَمَا يَخْشَى أَحَدُكُمْ أَوْ لَا يَخْشَى أَحَدُكُمْ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தம் தலையை உயர்த்துவதால் அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (691(
                                                   நன்றி.ஆன்லைன் பீஜே

தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.

இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
‘இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்”. (அல்குர்ஆன்: 24:37)
”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன்33:32)
1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.
5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.
6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம்.
7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.
ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.
9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.
10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.
11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.
13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான‌ ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.
15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.

திங்கள்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 09.10.11 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (முஸ்லிம்களுக்கான) கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்கம் சமப்பந்தமான கேள்விகளுக்கு இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் மௌலவி அப்துர் நாசர் அவர்கள் பதில் அளித்தார்கள். இதில் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

வெள்ளி

ஒற்றுமை கோஷம்!

வாழ்வையும் வாழும் வழிகளையும் அருள் செய்து வரும் இரட்சகன் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

அவர்களிடம் அறிவு வந்தபின்னும் தங்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே தவிர அவர்கள் பிளவுபடவில்லை. (அல்குர்ஆன் 42:34)

இம்மை மறுமை உயர்வுக்கான இலகுவும் நேர்த்தியும் நிறைந்த வழிகாட்டுதல்களை வாழ்ந்து காட்டிய ஏக இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் ஈமானின் இறுதிநிலையாகும். (அபூ ஸயீது அல் குத்ரி (ரலி) முஸ்லிம் 78)

ஒற்றுமை கோஷம் என்பது இஸ்லாமிய சமுதாயத்தில் எப்போதாவது தோன்றிமறையும் வானவில் போன்ற சம்பவமாக இருந்து வருகிறது.வர்ணஜாலத்துடன் காட்சியளிக்கும் வானவில் கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான ஆனந்தத்தைத் தந்துவிட்டு கொஞ்ச நேரத்திலேயே மறைந்து போய் விடும்.

அதுமாதிரி இஸ்லாமிய இயக்கங்கள் எனப்படுபவைகள் திடீரென்று ஒன்றுகூடி ஒரே தட்டில் சாப்பிட்டு விட்டு பொன்னாடையையும், புகழாரத்தையும் ஒருவருக்கொருவர் போர்த்திவிட்டு மக்களின் கண்ணுக்கும் மனதுக்கும் சற்றே இதமளித்து விட்டு காணாமல் போய் விடுகின்றன...

எந்தவொரு நிலைபாட்டையும் இஸ்லாமிய சமுதாயம் தேர்வு செய்ய வேண்டுமெனில் அது கொள்கை வழிப்பட்ட சிந்தனையிலும், எண்ணத்திலும் செயலாக்கமாக உருவாகினால் தான் இன்ஷாஅல்லாஹ் நிலைத்திருக்குமே தவிர ஊரையும் உலகத்தையும் மட்டும் மனதில் கொண்டு சமுதாய பொறுப்புகளில் அசைபோடுமேயானால் தடுமாற்றங்களிலேயே அது பல்லிளிக்கும்.

எந்த இரட்சகன் நம்மைப் படைத்தானோ அந்த அல்லாஹ்வின் திருப்பொருத்தங்களின் விலாசத்தை சரியாகப் புரிந்துக் கொண்டு பயணித்தால்தான் தேடல்களும் தீர்வுகளும் நிறைவைத் தரும். கொள்கையையும் கோட்பாடுகளையும் பின்னுக்குத் தள்ளி விட்டு சுயநலத்தையும் முகஸ்துதியையும் முன்னுக்கு வைத்தால் இலட்சியம் எங்கே வரும்? இலக்கை எப்படி அடைவோம்?

குர்ஆனும் ஹதிஸூம் நமக்கு வழிகாட்டும் வெளிச்சங்கள் என்ற எண்ணம் வலுவான அஸ்திவாரமாக இல்லாததனால் வழுக்குப் பாறையில் பிடிமானமின்றி ஏறுபவனைப் போன்று சமுதாய இயக்கங்கள் சறுகிப் போகின்றன.கூட்டம் முடிந்த கொஞ்ச நேரத்தில் எதிரெதிராய் நின்று உள்ளங்களால் இறுகிப் போகின்றன.இதனால் ஒற்றுமைப் போலியாகி உணர்வுகள் கேலியாகி நோக்கங்கள் கேள்விக்குறியாகி விடுகின்றன.

அல்லாஹ் தன்திருமறையில் கூறுகின்றான்:

நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

ஒரு மனிதன் ஷிர்க், பித்அத் போன்ற கேடுகெட்ட அனாச்சாரிய செயல்களை செய்தால் கூட அவனிடத்தில் உண்மை மார்க்கத்தை போட்டு உடைக்காமல் சொன்னால் ஒற்றுமை(?) போய் விடும் என்று அந்த தவறுகளில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர்.

வட்டி போன்ற கொடிய தவறுகளை செய்பவர்களாக இருப்பவர்களிடத்தில் தவறை சுட்டிக்காட்டி உணர்த்தினால் ஒற்றுமை போகிவிடும் என்று, சொல்லாமல் வாயிருந்தும் மௌனமாக இருக்கின்றனர்.

வரதட்சனை வாங்கும் திருமணங்களில் கலந்து கொண்டு அதனையே பள்ளிவாசல்களில் நடத்தி வைத்து அல்லாஹ்வும் ரஸூலும் கேலி செய்யப்பட்டாலும் பரவாயில்லை நாங்கள் ஒற்றுமை விரும்பிகள் என அவர்களுடன் இணைந்து சாப்பிட்டு ஒன்றாக கலந்து விடுகின்றனர்.

தேர்தலின்போது, எவ்வளவு கேடுகெட்டவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களைத்தான் நாங்கள் ஆதரிப்போம். அவர் மக்களுக்கு நன்மை செய்தாலும் பரவாயில்லை. மார்க்கத்தை விட்டு வெளியே செல்லும் அளவுக்கு தீமைகளை செய்தாலும் பரவாயில்லை. அந்த தவறை சுட்டிக்காட்டினால் ஒற்றுமை போய்விடும் என அவர்களை ஆதரிப்பதைப் பார்க்கின்றோம்.

இதுபோன்ற ஒற்றுமைகளைத்தான் சமுதாய ஒற்றுமை என வைத்திருக்கின்றார்கள்.இதனை ஆதரிக்கக்கூடிய போலிகள் இதில் அவர்களுக்கென சுயமான காரியங்கள் வரும்போது உதாரணமாக தேர்தலாக இருந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இன்னொரு முஸ்லிமை நிறுத்தி விடுவார்கள். அப்போது எங்கு போனது சமுதாய ஒற்றுமை. சுய காரியங்களில் பிரிவை ஆதரிக்கின்றவர்களாக மார்க்கத்திற்காக பிரிய மனமில்லாதவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களாக இருப்பவர்கள் தான் முற்றிலுமாக போலி ஒற்றுமைகளையே பேசுபவர்களைத் தவிர வேறில்லை.

நன்மையை ஏவுதல் என்பது குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும் சொல்லி மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பது.

தீமையை தடுத்தல் என்பது நபி(ஸல்) அவர்கள் கூறியதைப்போல் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இது தான் ஈமானின் இறுதி நிலை ஆகும் என நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள் (முஸ்லிம்-78).

இவர்கள் சொல்லும் நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல் என்பது இஸ்லாமியன் ஒருவன் வட்டி வாங்கினால் அவனிடத்தில் போய் நீ அல்லாஹ்வை நம்ப வேண்டும். ஐந்து வேளை தொழுகைக்கு வர வேண்டும் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட கருத்துக்களை சொல்வதைப் பார்க்கின்றோம். பித்அத் செய்பவனிடத்தில் எந்த தவறை செய்கின்றானோ அந்த தவறை சொல்வதுதான் நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல். ஆனால் இவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டவற்றையே சொல்வதைப் பார்க்கின்றோம்.

உமக்கு கட்டளையிடப்பட்டதை தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன் 15:94)

தயவு தாட்சண்யமின்றி எடுத்து வைப்பதாலேயே அந்த இடத்தில் சமுதாய ஒற்றுமை குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விடும். அல்லாஹ்வையும் தூதரையும் பின்பற்றுகிறோம் என்று சொல்கின்றார்கள்.

மார்க்கம் சுட்டிக்காட்டிய தவறுகளை சமுதாய ஒற்றுமைக்காக செய்தால் அது தவறு கிடையாது என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்கேயாவது கூறியிருக்கின்றார்களா? கிடையவே கிடையாது. இதிலிருந்தே தெரிகிறது நாங்களும் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுபவர்கள் என்று வாயளவில் மட்டும் தான் சொல்கின்றார்களே தவிர செயலில் கிடையாது. இது போன்றவர்களின் முகத்திரைகள் இந்த போலி ஒற்றுமையினை பேசுவதன் காரணமாக கிழிந்து தொங்குகின்றதை நாம் பார்க்கின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப்பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக!.சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு சோதித்தோம். அல்லாஹ் அழிக்கப்போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்? என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் உங்கள் இறைவனிடமிருந்து தப்பிப்பதற்காகவும் அவர்கள் அஞ்சுவோராக ஆவதற்காகவும் என்று கூறினர்.

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது தீமையைத் தடுத்தவர்களை காப்பாற்றினோம். அநீதி இழைத்தர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.

தடுக்கப்பட்டதை அவர்கள் மீறியபோது, இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள் என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன்: 7: 162,163, 164,165)

அதில் மூன்று கூட்டமாக பிரிகின்றனர்.

முதல்கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை மீறி சனிக் ;கிழமை கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்றனர். இரண்டாவது கூட்டம் மீன் பிடிக்கச் சென்றவர்களை அல்லாஹ்வின் கட்டளையைச் சொல்லி தடுக்கின்றனர். மூன்றாவது கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை சொல்லி தடுக்கச் சென்ற இரண்டாவதுக் கூட்டத்தை இவர்கள் உனக்கு ஏன்? தேவையில்லாத வேலை? அல்லாஹ் பார்த்துக் கொள்வான் எனத் தடுக்கின்றனர்.

இந்த மூன்று கூட்டத்தினரில் அல்லாஹ் தண்டிக்கும்போது கட்டளையை மீறிய முதலாவது கூட்டத்தையும், தடுக்க சென்றவர்களை தடுத்த மூன்றாவது கூட்டத்தையும் சேர்த்து இழிந்த குரங்குகளாக மாற்றினான்.தீமைகளை தடுத்த இரண்டாவது கூட்டத்தை மட்டும் அல்லாஹ் காப்பாற்றினான்.

இதுபோன்றவர்களுக்கு சாட்டையடிக் கொடுக்கும் விதமாக அல்லாஹ்வின்
தூதர்(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது அவன் தடைவிதித்துள்ள ஒன்றை இறைநம்பிக்கையாளர் செய்வதுதான் ஆகும். (அபூஹூரைரா(ரலி) புகாரி 5223)

தான் மதிக்கப்படவில்லை என தனது சுய விருப்பு வெறுப்புக்களுக்காக ரோஷத்தை முன்னிறுத்தி சபையை புறக்கணித்து ஒற்றுமையைக் குலைக்க முன்வருகிறார்கள். ஆனால் அதே சபையில் அல்லாஹ்வும் அவனின் தூதரும் மதிக்கப்படாமல் கேலி செய்யப்படுகிறார்களே என்று அந்த சபையை அவர்கள் அல்லாஹ்விற்காக புறக்கணிக்கிறார்களா? என்றால் இல்லை. இதனைச் செய்ய தயங்குகிறார்கள் இந்த சமுதாய போலி ஒற்றுமை பேசக்கூடியவர்கள்.

அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையாக சேர்ந்துப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள்(அல்குர்ஆன் 3:103)

அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் ஹதிஸூம் தான் என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் அனைவரும் சேர்ந்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள் என்பது தான் மார்க்க ஒற்றுமை என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில்:

தமது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளானோரின் எந்த காரியத்திலும் (முஹம்மதே) உமக்குச் சம்பந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்துக் கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (6:159)

நூஹூக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹிம், மூஸா மற்றும் ஈசாவுக்கு நாம் வலியுறுத்தியதும் மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே.(அல்குர்ஆன்42:13)

அவர்களிடையே அறிவு வந்த பின்னும் தங்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே தவிர அவர்கள் பிளவுபடவில்லை. (அல்குர்ஆன் 42;:14)

இதுபோன்ற வசனங்களின் விளக்கங்களை பல வருடங்கள் படித்த இமாம்களின் உதவியோடுதான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அல்லாஹ் அவனுடைய வார்த்தையில் பாமரர்களும் புரியமாறு தெளிவாக கூறியுள்ளான்.

எனவே அல்லாஹ்வுக்கு மாற்றமான காரியங்களை யார் செய்வதைக் கண்டாலும் அதில் நாம் ஒற்றுமையை விரும்பக் கூடாது. அதில் பிரிவைதான் விரும்ப வேண்டும் என்று மேலே பார்த்த குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் இருந்து சந்தேகமில்லாமல் தெளிவாக உணரலாம்.

இந்தக் கொள்கையை சொன்னதன் காரணமாகவே நபிமார்களும் ஸஹாபாக்களும் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளானார்கள். கொலை செய்யப்பட்டனர். அடி உதைகளுக்கு ஆளானார்கள். ஊர்விலக்கம் செய்யப்பட்டார்கள். வசைமொழிக்கு ஆளானார்கள். கேலி செய்யப்பட்டார்கள். கேவலப்படுத்தப்பட்டார்கள். இந்த கொள்கையில் உள்ளவர்களை எதிர்க்க மட்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். எவ்வளவுதான் கொடுமைகளை சந்தித்தாலும் அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியானவர்களாக இருந்தார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் குர்ஆன் ஹதீஸ்களைப் பின்பற்றுவதால், இதுபோன்ற நிலைகளுக்கு ஆளாகக் கூடியவர்கள் யார்? எனக் கேட்டால் எதிர்க்கக் கூடியவர்களே ஒன்று சேர்ந்து சொல்வார்கள் தவ்ஹீத் ஜமாஅத் தான் என்று. இதனை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

நாம் படக்கூடிய கஷ்டங்கள் நபிமார்கள், ஸஹாபாக்கள் பட்ட கஷ்டத்திற்கு ஒருபோதும் ஈடாகாது என்றாலும் இந்தக் கொள்கையை சொல்வதால் இது மாதிரியான கஷ்டங்கள் தான் வரும் என்பதை முந்தையக் கால நிகழ்வுகளால் நாம் அறிந்துக் கொள்ள முடிகிறது. இருக்கக்கூடிய இயக்கத்திலேயே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் குறைவான தவறுகளுடன் அதிகமதிகமான நன்மைகiயும் செய்யக்கூடிய இயக்கமாக இருக்கிறது. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், யார் இருந்தாலும் போனாலும் இறுதி வரையிலும் குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும் பின்பற்றக்கூடிய, உள்ளதை உள்ளபடி யாருக்கும் வளைந்துக் கொடுக்காமல் சொல்லக்கூடிய நிலையில் இந்த இயக்கத்தில் உள்ளவர்களின் உள்ளத்தை அல்லாஹ் ஆக்குவானாக!

நாம் இம்மையில் யார் யாருக்காகவோ ஒற்றுமையாக இருக்கலாம். ஆனால் அல்லாஹ் சொல்லி தந்ததின் அடிப்படையில் இல்லாத ஒற்றுமையை ஒருபோதும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். பின்னர் மறுமையில் நாம் கைசேதப்பட்டவர்களாகவே நிற்க வேண்டிய நிலை வரும். எனவே வல்ல அல்லாஹ் நம்மை இதுபோன்ற போலிகளிடமிருந்து காப்பாற்றி, அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடிக்கக் கூடியவர்களுடன் ஒன்றிணைப்பானாக!
அன்புடன் வெளியிடுவோர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
துபை மண்டலம்