தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

TNTJ கோவை மாவட்ட செயலாளர் பொய் வழக்கில் கைது. கோவை காவல்துறை அத்துமீறல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட செயலாளர் நவ்சாத் மீது 7 பிரிவுகளில் 26.04.2012  கோவை காவல்துறை பொய் வழக்கு புனைந்து கைது  செய்தது.
கோவை மாவட்டத்தில் மே-6 அன்று நடைபெற  உள்ள குடும்பவியல் மாநாட்டிற்கு முழு வீச்சுடன் கோவை மாநகரம் முழுவதும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த குடும்பவியல் மாநாட்டை சீர்குலைக்க வேண்டும் ஒருவித சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறை இறங்கியுள்ளதாக மக்கள் கருதுகின்றனர். இது போன்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான கோவை காவல்(?)துறையின் தொடர் முஸ்லிம் விரோத போக்கை TNTJ கோவை மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
 மேலும் பிப்ரவரி-5, TNTJ கோவை மாவட்ட மாணவர் அணியின் வரதட்சணை ஒழிப்பு பேரணிக்கு தடை விதித்தது காவல்துறை. ஆனால் தடைகளை தகர்தெறிந்தது   TNTJ.
பிப்ரவரி-14 அன்று கோவையில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்கும் தடை விதித்தது கோவை காவல்துறை. ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் தடையை மீறி கலந்து கொண்டு தடையை உடைத்து எறிந்தனர். தொடர்ந்து கோவை காவல் துறை தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. மாவட்ட செயலாளரை பொய் வழக்கில் கைது செய்ததின் மூலம் நம் மக்களிடம் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்த காவல் துறை எத்தனிக்கிறது. 
இந்த மாநாடு என்பது நாம் ஏற்று கொண்ட கொள்கையை மிகவும் வலிமையாகவும் உறுதியுடனும்  முஸ்லிம்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரமாண்ட விளம்பரங்களும் பிரச்சாரங்களும் செய்யப்பட்டு வருகிறது..
இது போன்ற காவல்துறையின் காட்டு தர்பார்  எங்களை இன்னும் வீரியமாக செயல்பட வைக்குமே தவிர பின் வாங்க செய்யாது.. இனியும் இது போன்ற செயல்கள், தொடர் முஸ்லிம்  விரோத போக்கு, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான அடக்குமுறைகள் தொடருமேயானால், கோவை காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்பதை கோவை காவல்துறைக்கு தெரிவித்து கொள்கிறோம்

புதன்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பஸ்ஸி்ல் பிறசமய தஃவா 17.04.12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  கடந்த 17.04.12 அன்று கோயழுத்தூரிலிருந்து பெள்ளாச்சி செல்லும் பஸ்ஸி்ல்  இஸ்லாம் பற்றி  தஃவா செய்யப்பட்டது..

ஆசாத் நகர் கிளையின் சார்பாக பெண்கள் வீடுவீடாக சென்று தாவா 15.04.12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக பெண்கள்கடந்த 15.04.12 வீடுவீடாக சென்று இஸ்லாமிய அழைப்பு  பணி   நடைபெற்றது.

ஆசாத் நகர் கிளையின் சார்பாக பெண்கள் வீடுவீடாக சென்று தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக பெண்கள் வீடுவீடாக சென்று தாவா செய்யும் பணி கடந்த 14.04.12  நடைபெற்றது.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக ரூபாய் 2000 மருத்துவ உதவி

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  சிறுநீரக நோயால்  பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு  மருத்துவ  உதவியாக  ரூபாய் 2000 கடந்த 13.04.12 அன்று வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 13.04.12 மாற்று மத தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பா13.04.12 அன்று மாற்று மதத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கு  தஃவா செய்யப்பட்டது. இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. மற்றும் அவருக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களும் வழங்கப்படடன.

செவ்வாய்

ஆசாத்நகர் கிளையின் சார்பாக மருத்துவ உதவி 09.04.12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக சிறுநீரக  நோயால்  பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ  உதவியாக 09.04.12  ரூபாய் 1100  வழங்கப்பட்டது.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக மருத்துவ உதவி 08.04.12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  நோயால்  பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு  மருத்துவ  உதவியாக  ரூபாய் 1000 கடந்த 08.04.12 அன்று வழங்கப்பட்டது.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக தெரு முனை பிரச்சாரம் 09.04..12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  தெரு முனை பிரச்சாரம் கடந்த  09.04..12 அன்று நடைபெற்றது. இதில்  பேச்சாளர்   ரியாஸ் அகமது அவர்கள்  நபி வழி நம் வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக தெரு முனை பிரச்சாரம் 08.04..12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  தெரு முனை பிரச்சாரம் கடந்த 08.04..12 அன்று நடைபெற்றது. இதில்  பேச்சாளர்   அப்துல் அஜீஸ் அவர்கள்  குடும்பவியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக தெரு முனை பிரச்சாரம் 07.04.12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  தெரு முனை பிரச்சாரம் கடந்த 07.04..12 அன்று நடைபெற்றது. இதில்  பேச்சாளர்   ரியாஸ் அகமது அவர்கள்  உரையாற்றினார்கள். அதிகமான  பலர்ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான்.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக  கடந்த 07.04-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பேச்சாளர் காஜா அவர்கள்  ”நபி வழி பேணுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

திங்கள்

S.P.பட்டிணம் பள்ளிவாசல் தீர்ப்பு

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாட்சியர் உத்தரவின் படி பூட்டி சீல் வைக்கப்பட்ட்து.
இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும் அறவழிப் போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து நட்த்தி வந்த்து.
இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடாணை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டனர். இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் பின்னர் வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்துச் செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலைத் திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தார். இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு பள்ளிவாசல் திறக்கப்பட உள்ளது. இன்ஷா அல்லாஹ். காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்துள்ளனர்.
மேலும் சுன்னத் ஜமாஅத்தினர் யாரும் பள்ளிவாசலை தவ்ஹீத் ஜமாஅத் திறக்கும் போது எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று பள்ளிவாசலில் பொது அறிவிப்பு செய்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கடைப்பிடித்துக் காட்டிய முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஆர்ப்பாட்டமோ அமர்க்களமோ இல்லாமல் திறப்பு விழா என்ற பெயரில் அதிக மக்களைக் கூட்டி மற்றவர்களைப் புண்படுத்தக் கூடாது என்பதால் அமைதியான முறையில் இன்ஷா அல்லாஹ் திறக்கப்பட உள்ளது.
அனைவரும் துஆ செய்யுங்கள். இதற்காக ஆர்வத்துடன் வெளியூர் மக்கள் குழும வேண்டாம் எனபதற்காக கடைசி நேரத்தில் இச்செய்தி வெளியிடப்படுகிறது.
நல்ல படியாக பிரச்சனை ஏதுமில்லாமல் பள்ளிவாசல் திறக்கப்பட்டு இறைப்பணி நடக்க வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வட்டாட்சியர் ஆணை

ஞாயிறு

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக ஆலோசனை கூட்டம் 01.04.12 அன்று  மஃக்ரிப் தொழுகைக்கு  பிறகு நடைபெற்றது. மே 6 கோவை மாவட்ட இஸ்லாமிய குடும்பவியல் மாநாடு பணி சம்பந்தமாக ஆலோசனைகள் நடைபெற்றது.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் தெரு முனை பிரச்சாரம்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  தெரு முனை பிரச்சாரம் கடந்த 30.03.12 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா அவர்கள் “மரணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 31.03.2012 பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக  கடந்த 31-3-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் காதிரா அவர்கள் ”குழந்தைகள் வளர்ப்பில் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....