
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவர் அணியின் சார்பாக இஸ்லாமிய கல்வி
விழிப்புணர்வு பொது கூட்டம் 30.06.2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு
இருந்தது. பொது கூட்டம், 7:15 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டு இருந்தது.. ஆனால், இரவு 7 மணியிலிருந்தே மழை பெய்த வண்ணம்
இருந்தது.மழை பெய்து கொண்டு இருந்தாலும், சரியாக 7:30 மணியளவில் பொதுக்
கூட்டம் ஆரம்பமானது. பொது கூட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது என்று
அறிவிக்கப்பட்டவுடன், சிறு பிள்ளைகள் ஓடி வந்து மழையையும் பொருட்படுத்தாமல்
இருக்கைகளில் வந்து அமர்ந்தது ஒரு கணம் ஆடித்தான் போனோம். குழந்தைகளின்
ஆவலை தொடர்ந்து பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் கொட்டும் மழையில்
இருக்கைகளில் வந்து அமர்ந்து கொண்டனர். மாநில மாணவர் அணி செயலாளர்
அல் அமீன் அவர்கள்,
கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார், மாநில துணை தலைவர்
MI சுலைமான் அவர்கள்,
அனுமதியா? கட்டளையா? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இறுதியாக மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் பொது கூட்ட
தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் நவ்சாத் அவர்களின் நன்றி உரையுடன்
வல்ல ரஹ்மானின் அருளால் இப்பொதுக் கூட்டம் நிறைவுற்றது. இதில் மாவட்ட
தலைவர் ஜலால், பொருளாளர் சஹாப்தீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.