தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

ஜும்மா தொழுகைக்கு தடை போட்ட காவல் துறை, புரட்சியுடன் நடந்த புதிய ஜும்மா

S 
கோவை மாவட்டம் ஜீ.எம் நகர் (கௌஸ் முஹைதீன் நகர்) கிளை தொடங்கி பல ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த மாதம் மாநில புள்ளி பட்டியலில் கோவை ஆறாவது இடத்தில் (கிளைகளின் தரவரிசையில் ஜீ.எம் நகர் பதினோராவது இடம்) வந்தமைக்கு காரணம் இந்த கிளைதான், பல கிளைகளுக்கு முன்னுதாரணமாக தாவா பணிகள் செய்த காரணத்தினால் வல்ல ரஹ்மான் கருணையினால்  குறைந்த விலையில் இடமும் முன்பணம் கொடுத்தவுடன் இடத்தின் உரிமையாளர் இடத்தை பயன்படுத்திகொள்ளவும் அனுமதி தந்துவிட்டார்.

ஜமாத்தின் அலுவலகம் அமைக்கும் பணியை கிளை நிர்வாகிகள் செய்துவந்தனர், இந்த வாரம் ஜும்மா துவங்கலாம் என்ற முடிவோடு பணிகள் துரிதமாக நடைபெற்றன. வியாழன் அன்று தாசில்தார் அவர்கள் நம்முடைய இடத்திற்கே வந்து முறையாக கடிதம் கொடுங்கள், நாங்கள் அனுமதி தருகிறோம் என்றார், கிளை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்ள மாநில நிர்வாக ஆலோசனையுடன் கீழ்க்கண்ட கடிதம் கொடுக்கப்பட்டது

இக்கடிதம் பூரண உடல்நலதுடனும் ஏக இறைசிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக, சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக,
கோவை மாவட்டம் ஜீ.எம் நகர்(கௌஸ் முகைதீன் நகர்) பகுதியில் எங்களுடைய ஜமாத்தின் கிளைக்கான  அலுவலகம்  அமைத்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்,
மாநில மாவட்ட நிர்வாகம் செயல்படுத்திவரும் பணிகளான முதியோர் இல்லம், ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் இல்லம், கல்விப்பணிகள், ஏழைகளுக்கான கல்வி உதவிகள், இலவச ட்யூஷன் வகுப்புகள், மாணவர்களுக்கான கோடைகால வகுப்புகள், இலவச கணினி வகுப்புகள், மக்களுக்கான நலத்திட்டங்கள், இஸ்லாம் கூறும் ஏழைகளுக்கான ரமளான்-பக்ரீத் உதவிகள், இலவச மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள்  போன்ற இன்னும் சிறப்பான பணிகளை செய்ய உள்ளோம், தாங்களும் தங்கள் நிர்வாகமும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கடிதம் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கிளை அலுவலகத்திற்கு நேரில் வந்து தொழுகை உட்பட எந்த பணிகளும் தற்போது செய்யக்கூடாது, ஆர்.டீ.ஓ விசாரணைக்கு பின்புதான் அனுமதிப்போம் என்று காவல்துறை துணையுடன் தடை செய்தனர், மீறினால் கைது செய்வோம் என்றும் எச்சரிக்கை செய்தனர், கிளை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தனர் கிளைக்கு சென்ற மாவட்ட இந்நாள் மற்றும் முன்னால் நிர்வாகிகள் அதிகாரிகளின் மிரட்டலுக்கு அஞ்சவேண்டாம் என முடிவு செய்து தடை மீறி தொழுவோம் காவல்துறை கைதுசெய்துகொள்ளட்டும் என்று கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அதன் அடிப்படையில் புரட்சியுடன்  புதிய ஜும்மா தொடங்கியது.

மாவட்ட செயலாளர் சகோ.நவ்சாத் அவர்கள் ஜும்மா உரையாற்றினார், அப்பகுதி மக்களும்-கொள்கை சகோதரர்களும் பெண்களும் பெரும்திரளாக கலந்துகொண்டனர், ஜும்மா உரையில் காவல்துறை கைது செய்தாலும் தயாராக இருப்போம் என்று குறிப்பிட்டதால்  தொழுகை முடிந்தவுடன் கைதுக்கு  தயாராகவே மக்கள் வெளியே வர அரசு இயந்திரம்  சலசலப்பு இல்லாமல் சென்றுவிட்டது…

பொது இடங்களில், தங்களின் வழிபாட்டிற்க்காக, அரசு நிலங்களை ஆக்கிரமிக்கும் சக்திகளை எதிர்க்க ஆண்மையற்ற இந்த அரசு இயந்திரம், முஸ்லிம்கள் மக்களிடமிருந்து வசூலித்த பணத்தில் சொந்தமாக இடம் வாங்கி அதில் தொழுகை நடத்த முயன்றால் அதை தடுக்க ஓடோடி வருகிறது சூடு சொரணையற்ற இந்த கருங்காலி கூட்டம்… 

உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும்   அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.  திருமறை:47:31
ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக்கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்த பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனைவிட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும். திர்மிதி-2322