தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

பாரதிராஜாவைக் கொச்சைப்படுத்தலாமா ?

பாரதிராஜாவின் குடும்பப் பெண்களை இழுத்து பீஜே பேசியது சரியா? என்று பரவலாகப் பேசப்படுகிறது. அவ்வாறு பீஜே பேசியது சரியா? அஸ்மா சரஃபுத்தீன், பிரான்ஸ்.

அந்த உரையில் நான் என்ன பேசினேன் எதற்காகப் பேசினேன்? இதைச் சரியாகக் கவனித்தால் என் பேச்சில் குற்றம் கூற மாட்டார்கள்.

நான் பேசியது பாரதிராஜா பேசியதற்கு பதிலடியாகத் தான். எனவே பாரதிராஜா பேசியது என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டால் தான் நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பதையும் விளங்க முடியும்.

விஸ்வரூபம்
படத்தை தடை செய்ய வேண்டாம் என்று அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கு மட்டும் நாம் பதிலளிக்கலாம்.

அல்லது முஸ்லிம் தலைவர்களே இதில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் என்று கூறினால் அதற்கு உரிய விளக்கத்தை நாம் கொடுக்க முடியும். ஆனால் அனைத்து முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் நடவடிக்கை பற்றி கருத்து சொல்லும் போது எவ்வளவு பொறுப்புடன் அவர் கருத்து சொல்ல வேண்டும்?

விஸ்வரூபம் படம் தீவிரவாதத்தை எதிர்க்கிறதாம். அந்தப் படத்தை எதிர்ப்பதன் மூலம் உங்களை தீவிரவாதிகளாக அடையாளம் காட்டி விடாதீர்கள் என்று அவர் கூறுகிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியையும் இங்கே சொல்கிறார். இதுவரை நீங்கள் தீவிரவாதிகள் என்பது உலகத்துக்குத் தெரியாமல் இருந்தது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி அப்பனைக் காட்டிக் கொடுத்த மகன் போல் இப்படத்தை எதிர்த்து நீங்கள் தீவிரவாதிகள் என்பதைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்பது தான் இதன் கருத்து.

இப்படத்தை எதிர்க்கும் எல்லா முஸ்லிம் தலவர்களும் தீவிரவாதிகள் என்று சொன்னாரே இந்தக் கொடூரமான சொல் என்ன விளைவை ஏற்படுத்தும்? இந்து மக்கள் மத்தியிலும் மற்ற மக்கள் மத்தியிலும் இது எவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தும்? எல்லா முஸ்லிம்களும் தீவிரவதிகள் தானா? இவ்வளவு நாட்களாக நடித்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்களா? என்று மற்றவர்கள் எண்ணினால் அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்?  இது குறித்து எழுத்தாளர் யாரும் வாய் திறந்து பாரதிராஜவை இதுவரைக் கண்டிக்கவில்லை.

நான் பதிலடி கொடுத்ததற்காக எனக்கு எதிராக பேனா பிடிக்கும் நண்பர்கள் இது எவ்வளவு கொடூரமான விஷக் கருத்து என்று ஏன் பாரதிராஜவைக் கண்டிக்கவில்லை?

பொதுவாக இஸ்லாத்திலும் இன்ன பிற சட்டங்களிலும் கிராமப்பஞ்சாயத்துகளிலும் ஆரம்பித்து வைத்தவனுக்கு எதிராக மற்றவன் பேசுவதைக் குற்றமாக தீர்ப்பளிக்க மாட்டார்கள். இதுதான் உலக நியதி. ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்து ஒழுகும் மரபு.
பாரதிராஜா சுமத்திய குற்றச்சாட்டில் நானும் அடக்கம்.

என் சமுதாயத்தில் உள்ளவர்கள் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபடக் கூடாது என்று பல வருடங்களாக நான் பிரச்சாரம் செய்து தீவிர எண்ணம் கொண்ட சிலரின் அச்சுறுத்தல் காரணமாக எனக்கு அரசுப் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு பாடுபட்டு வருகிறேன். இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனவும் ஆதாரங்களுடன் விளக்கி வருகிறேன். ஒரு திரைப்படத்தை நான் எதிர்ப்பது என்னையும் தீவிரவாதி பட்டியலில் சேர்த்து விடும் என்றால் அதனால் நானும் பாதிக்கப்படுகிறேன்.

நமது மார்க்கத்துக்காகவும் உரிமைக்காகவும் பேசினால் நமக்கும் தீவிரவாதி பட்டம் கிடைக்குமோ என்ற அச்சுறுத்தலாகவே இதை நான் பார்க்கிறேன். பாரதிராஜா வைத்த லாஜிக் தப்பானது. பொருளற்றது என்பதை அவருக்கும் அவரது கருத்தில் உடன்படுவோருக்கும் நான் விளக்குவதற்காக அதே லாஜிக்கில் பதில் சொன்னேன்.

தீவிரவாதிகளை எதிர்ப்பதாகச் சொல்லப்படும் படத்தை எதிர்த்தால் அவன் தீவிரவாதி தான் என்ற லாஜிக் பிரகாரம்

விபச்சாரம் செய்யும் நடிகைகள் பற்றி எழுதியதற்காக தினமலர் அலுவலகத்தை தாக்கினீர்களே? அந்தப் பத்திரிகையைக் கொளுத்தினீர்களே? அதன் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்ய வைத்தீர்களே? விபச்சாரம் செய்த நடிகையைப் பற்றி எழுதும் போது அதை நீங்கள் எதிர்த்தால் நீங்களும் உங்கள் குடும்பப் பெண்களும் அந்தத் தொழில் செய்கிறார்கள் என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா?

இந்தக் கேள்வி பாரதிராஜாவின் லாஜிக் தவறு என்று உணர்த்துவதற்குத்தான். அவரது குடும்ப்ப் பெண்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு அல்ல. அப்படி எடுத்துக் கொள்ளலாமா என்ற வாசகம் அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அர்த்த்தில் தான் கையாளப்படும்.

இந்த லாஜிக்கை பாரதிராஜா பல சமயங்களில் மீறி இருந்தால் அவற்றில் ஒன்றை நான் உதாரணமாக நான் சொல்லி இருப்பேன். அவர் விபச்சாரம் செய்த நடிகைகள் பற்றிய செய்தியின் போது லாஜிக்கை மீறியுள்ளது தான் என் நினைவுக்கு வருகிறது. எனவே தான் அதைக்  குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் பொதுவாக இது போல் ஆரம்பித்து வைப்பது தான் குற்றமாகும். தூண்டப்பட்டு கூடுதல் குறைவாகச் சொல்வது மனிதனின் இயல்பாக உள்ளது.

அநீதி இழைக்கப்பட்டவன் தவிர மற்றவன் தீய சொல்லைப் பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்திருக்குர்ஆன் 4:148

அவர்கள் வரம்பு மீறினால் அது போல் நீங்களும் வரம்பு மீறலாம். திருக்குர்ஆன் 2:194

இஸ்லாம்
மட்டும் இதைக் கூறவில்லை. மானமுள்ள எந்த மனிதனின் இயல்பும் இதுதான்.

ஒரு படத்தை எதிர்ப்பதால் - குர்ஆனைக் கேவலப்படுத்துகிறது என்பதற்காக எதிர்ப்பதால் - முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றால் இந்த விமர்சனம் ஏற்படுத்தும் விளைவுகள் கடுமயானவை.

இவனுக எல்லோருமே தீவிரவாதிகள் தான். நம்மை நடித்து ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் உருவனால் அது எங்கள் உயிருக்கும் உடமைக்கும் மானத்துக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாங்கள் எந்த அளவு பாதிக்கப்படுவோம்?

தொடர்ந்து இதே வேலையாக அலைகிறார்கள். சரியான முறையில் பதில் சொல்லாமல் அமைதி காப்பதை அனுமதியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்ற நிலையில் தான் அந்த உதாரணம் காட்டப்பட்டது.

அதுவும் எழுதி வைத்து நான் வாசிக்கவில்லை. மேடைப்பேச்சில் வந்து விழுந்த சொற்கள். ஆனால் பாரதிராஜா எழுதிவைத்துக் கொண்டு அந்த வாசகங்களை வாசிக்கிறாரே? நின்று நிதானமாக அவர் இதைச் சொன்னார்? வாய் தவறி அவர் இப்படி சொல்லவில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் பாரதிராஜாவின் குடும்பத்தின் மீது குற்றம் சாட்டவில்லை. உங்கள் வாதப்பட்டி இப்படி அர்த்தம் வந்து விடும் என்றுதான் சொன்னேன்.

நானோ என் சமுதாயமோ பாதிக்கப்படாத நிலையில் அந்த உதாரணம் காட்டி இருந்தால் அது மிகப் பெரும் தவறு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பாதிக்கப்பட்ட போது பதிலடி கொடுப்பதை இதற்குச் சமமாக ஆக்க முடியாது.

பாரதிராஜா முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகள் என்ற கருத்தில் நான் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொன்னால் நான் எடுத்துக் காட்டிய உதாரணத்துக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயார்.

அன்புடன்
பீஜைனுல் ஆபிதீன்
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தருவேன் இன்ஷா அல்லாஹ்

பாலியல் குற்றங்களை தடுக்க பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதினம்!



மதுரை, டிச 30 : இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்.  இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். 

இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.

தமிழகப் பெண்கள் ஆபாச உடை அணிவதாகவும் அனைவரும் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தாம் பேசியது சரியே என்றும் பெண்கள் அமைப்பிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். அருணகிரிநாதரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. 

அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் அருணகிரிநாதரோ தாம் பேசியது சரியே மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். "நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. 

அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றார் அவர்.

திங்கள்

காவல்துறை மிருகங்களை கண்டித்து அவசர தந்தி அனுப்ப வேண்டி வாசகங்கள்!

பின் வரும் வாசகம் அடங்கிய அவசர தந்தியை அனைவரும் இதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு உடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்
Please take action against Chennai Triplicane Assistant commissioner of police Senthil Kumaran and Chintadripet D.C Mr.Giri who unlawfully enter Muslim’s houses in midnight and abuse the Muslim women and arrested innocent Muslims, also lathicharge against the Muslims who condemn this criminal offense of the police
முதலமைச்சர் முகவரி :
Chief Minister’s Special Cell
Secretariat, Chennai 600 009
கவர்னர்
Dr. K. Rosaiah
Governor of Tamil Nadu
Raj Bhavan, Chennai – 600 022
தலைமை செயலாளர் : Chief Secretary
Thiru Debendranath Sarangi IAS
Chief Secretary to Govt
Secretariat, Chennai – 600 009
உள்துறைச் செயலர் : Home Secretary
Thiru R Rajagopal IAS
Principal Secretary to Government,
Secretariat, Chennai – 600 009
டிஜிபி
Mr. K. Ramanujam, IPS
Director General of Police
Chief Office, Dr. Radha Krishnan Salai, Chennai – 600 004.

காவல் துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்
வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்
நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்
முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.
பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.
அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்

 

சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்




சென்னையில் முஸ்லீம்களுக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம்!

மாயன் நாட்காட்டியின் அடிப்படையில் கடந்த 21-12-2012 அன்று உலகம் அழியும் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது. ஊடகங்களிலும் இது குறித்து தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில்இந்த மூடநம்பிக்கையை அகற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தமிழகமெங்கும் விழிப்புணர்வு பரப்புரைகளை துண்டு பிரசுரங்கள் விநியோகம் சுவரொட்டிகள் மூலம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், சென்னை ஜாம்பஜார் கிளை நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் இந்து மதத்தை இழிவாக குறிப்பிட்டுள்ளதாக கூறி,    துண்டு பிரசுரம்  விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத்விநாயகர் சதுர்த்தி விழாக்குழு உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்கள், சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிர்வாகிகளை கைது செய்யவேண்டும் என பிரசுரம்  வெளியிட்டனர்.

மேலும்  விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், ஜாம்பஜார் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில்காவல்துறையினர் யாகூப் என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது, பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் நடு இரவில் நுழைந்து அராஜகமாக சோதனை செய்த காவல்துறையினரை  கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நேற்று மதியம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கானோர் திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, காவல்துறை கூடுதல் ஆணையாளர்  ரவிகுமார், உதவி ஆணையாளர்கள் பவானீஸ்வரி, கிரி, ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான  காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

திருவல்லிக்கேணி  காவல் நிலையம் முன்பு போராட்டம் செய்த அனைவரையும் காவல்துறையினர்  கைது செய்து  வாகனத்தில் ஏறும்படி கூறினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் அடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர்  தடியடி நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து  சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் ஆண்களும் பெண்களும், ஏராளமானோர் அங்கு வந்து குவியத் தொடங்கினர். அவர்களில் 500-க்கும்  மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். மீதமுள்ளவர்கள் காவல்துறைக்கு  எதிராக முழக்கம் எழுப்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் யூசுப், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"டிசம்பர் 21-ந் தேதி உலகம் அழிந்துவிடும் என்று ஏற்பட்ட வதந்தியால் பொதுமக்கள் பலர் அச்சமடைந்தனர். இதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜாம்பஜார் கிளை நிர்வாகிகள் துண்டு பிரசுரம் வெளியிட்டனர். இதுகுறித்து இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், யாகூப் என்பவரை கைது செய்துள்ளனர்.

ஆனால் இந்த துண்டு பிரசுரத்துக்கு தொடர்பே இல்லாத மைலாப்பூர் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் வீட்டுக்குள் நடு இரவில் புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், காவல்துறை உதவி ஆணையாளர் செந்தில்குமரன் அத்துமீறி உள்ளே நுழைந்து சோதனை செய்துள்ளார்.

பிற மதத்தை புண்படுத்தும் விதமாக செயல்பட்டு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பெண்கள் மட்டும் இருந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தியுள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.