தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

உண்மையாகும் நபிகளாரின் முன்னறிவிப்பு !!!

உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற் கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 3456
தினமலர் செய்தி்..29.01.11
முஸ்லிம் ஜமாத்தார் பங்கேற்ற கோயில் கும்பாபிஷேகம்
கம்பம்:கம்பத்தில் சாந்தகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில், முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. கம்பம் ராஜகுல அகமுடையார் சமுதாயத்திற்கு சொந்தமான சாந்தகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை முதல் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சிகள் துவங்கி 10.45 மணிக்கு கும்பிஷேகம் நடந்தது. கும்பத்தில் புனித நீர் ஊற்றிய போது, வானில் கருடன் பறந்து வட்டமிட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. கும்பாபிஷேகத்தில் கம்பம் முஸ்லிம் ஜமாத் தலைவர் கே.எம். அப்பாஸ் தலைமையில் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜமாத் நிர்வாகிகளை, விழாக்குழுவினர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். கோயில் வளாகத்தில் அமர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஜமாத் நிர்வாகிகள் பார்த்தனர். ஜமாத் நிர்வாகிகள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றது, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கியது. ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் மாணிக்கம் செய்திருந்தார்.