ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குடிகொண்ட நவீன கலாச்சாரம் இன்றைக்கு அவளின் உயிரையும் அவளது கணவனின் உயிரையும் மாய்ப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடைசியாய் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் மூலம் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் அரங்கேறிய புயல்களும் பூகம்பங்களும் வெளியுலகிற்கு தெரிய வந்தன அவருடைய கடிதத்தில் அவர் எழுதிய மிக முக்கியமான வார்த்தை படித்த பெண்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கிறார்கள் அவர்கள் தங்களை முழுமையாக வெளிநாட்டு கலாச்சாரத்திற்கு மாற்றிக்கொள்கிறார்கள் என்பதாகும்.
வெளிநாட்டு கலாச்சாரம் என்பது அவர்களின் வாழ்க்கை நடைமுறையை மட்டும் மாற்றது வாழ்கையே மாற்றிவிடும் எனபதற்கு அந்த பெண்ணே உதாரணம் அந்நிய ஆணுடன் விடிய விடிய செல்போனில் பேசுவது இணையதளங்களில் ஆண்களுடன் தங்களின் அந்தரங்கங்களை பரிமாறிக் கொள்வது என இந்தப் பெண்கள் தங்கள் கற்ப்பை ஏழாம் விடத் துவங்கி விடுகிறார்கள்.
அந்நிய ஆணுடன் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்தி ஒருநாள் அவனுடனே ஐக்கியமாகி விடுகிறார்கள் இந்த பட்டியலில் கன்னிப்பெண்கள் மட்டுமல்லாது திருமணமான பெண்களும் அடங்குவர் காலை முதல் இரவு வரை பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணம் செய்யும் வயது பெண்கள் ஹெட்போன்களை தங்களின் காதுகளில் மாட்டிக்கொண்டு சிரிக்கச் சிரிக்க பேசிக்கொண்டு வருவதை நம்மால் காண முடியும்.
ஆக கல்லூரி என்பது பெண்கள் அதிகம் கெட்டுப்போவதற்கு களம் அமைத்து தரும் ஒரு இடமாக மாறி வருகிறது என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை.
நம் உணர்வு பத்திரிக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கற்பா கல்லூரியா என்ற ஒரு கட்டுரை வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது நினைவிருக்கலாம் இது தொடர்பாக நம் சமுதாயத்தில் குறிப்பாக பெண்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது உங்கள் ஜமாஅத் பெண்கள் கல்வி அறிவை தடுக்கிறதா என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன
ஆனால் நம் நோக்கம் பெண்களின் கல்வியை தடுப்பது அல்ல சொல்லப்போனால் படிப்பதற்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை இந்த காலாகட்டத்தில் பெண்களுக்கு கல்வி மிக அவசியம் காரணம் இன்றைக்கு இருக்கும் ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தை படிப்பதற்கு குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும் அப்போது தான் அந்தப்ப் பெண்ணால் தன பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தர முடியும்.
ஆக பெண் கல்வி என்பது அவர்களின் பிள்ளைகளுக்கு ஒரு விளக்காக ஒளி காட்ட வேண்டுமே தவிர காதல் என்ற தீப்பந்தத்தில் அது ஈமானை எரித்து நரகின் அடித்தளத்திற்கு செல்லும் பாதையாக மாறி விடக்கூடாது என்பதில் தான் நமது கவலை இருக்கிறது.
அல்லாஹ் உங்களை மன்னிக்க விரும்புகிறான். மனோ இச்சைகளைப் பின்பற்றுபவர்களோ முழுமையாக நீங்கள் பாதை மாற வேண்டும் என்று விரும்புகின்றனர் 4.27
நன்றி : உணர்வு வாரஇதழ்