தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

விரலசைக்காமல் தொழுதால் தொழுகை கூடுமா?


விரலசைக்காமல் தொழுதால் தொழுகை கூடுமா?
ஸீனத்
பதில்
தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைக்காமல் தொழுபவர்கள் இரண்டு வகையினராக இருக்கின்றனர்.
ஒரு வகையினர் விரலசைப்பது தொடர்பாக வரும் நபிமொழியை அறியாது இருத்தல் அல்லது அந்தச் செய்தி பலவீனமானது என்று கூறும் சிலருடைய தவறான கூற்றைச் சரி என்று நம்புதல் இது போன்ற காரணங்களால் விரலசைக்காமல் தொழுவார்கள்.

இவர்கள் குறிப்பிட்ட இந்த நபிவழியை விட்டது தவறு என்றாலும் இவர்களின் இத்தவறை இறைவன் மன்னிப்பதற்குத் தகுந்த காரணங்கள் உள்ளன. எனவே இறைவன் இவர்களை மன்னித்து விடலாம்.
இன்னொஆனால் இன்னொரு வகையினர் இருக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் விரலசைத்தார்கள் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பர். மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு அநியாயமாக இந்த நபிமொழியைப் புறக்கணிப்பர்.
மேலும் சிலர் தனது தொழுகையை நபியவர்கள் எவ்வாறு காட்டித் தந்தார்கள் என்று பார்க்காமல் மத்ஹபுகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்வார்கள். இவர்களிடம் நபிமொழியைக் காட்டினால் அதைப் படித்துப் பார்ப்பதற்குக் கூட முன்வர மாட்டார்கள். இவர்களும் நபியவர்களைப் புறக்கணிப்பவர்கள். இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டிய முறைப்படி மதிக்கவில்லை. இதனால் இவர்களின் தொழுகையை இறைவன் மறுத்து விடலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்தால் அவர்களின் அமல்கள் அழிந்து போய்விடும் என அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ (2)49
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.
அல்குர்ஆன் (49 : 2)