ஞாயிறு
மோடியை கைது செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவர் நரேந்தி மோடிதான் என்றாலும் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடியின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
குஜராத் மாநில அரசு இந்தக் கலவர வழக்கை சரியாக விசாரணை நடத்தாது என்று கருதிய உச்சநீதி மன்றம் கலவர வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு SIU என்னும் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக்குழு தக்க முறையில் விசாரணை நடத்தி 600 பக்க அறிக்கையை சீல் வைத்து உச்சநீதி மன்றத்தில் மே 2010ல் ஒப்படைத்தது.
இந்த அறிக்கை நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட மறுநாள் மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பாஜகவினர் பொய்ப்பிரச்சாரம் செய்தனர்.அத்வானியே மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் உள்ளதாக தனது சுயசரிதையில் எழுதினார்.
இதுதான் உண்மை என்று இந்திய மக்கள் அனைவரையும் பாஜகவினர் நம்ப வைத்து ஏமாற்றி வந்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட 600 பக்க அறிக்கையை தெஹல்கா இணையதளமும் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் அதன் நகலை வெளியுட்டுள்ளனர். பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் நரேந்திர மோடிக்கு கலவரத்தில் பங்கு உண்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 13 ஆதாரங்களையும் SIU வெளியிட்டுள்ளது
நரேந்திர மோடியை சிறப்புப் புலனாய்வுக்குழு குற்றம் சாட்டவில்லை என்ற பிரச்சாரம் பொய் என்பது தெளிவாகிவிட்டதால் கடமை தவறி கலரத்தினை முன்னின்று நடத்திய நரேந்திர மோடி அரசை டிஸ்மிஸ் செய்து அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது
2 G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறை கேடு என்ற பிரச்சனை சில வருடங்களுக்கு முந்தியது என்றாலும் நீரா ராடியாவின் உரையாடல் அம்பலமானவுடன் ராசாவின் ராஜினாவைக் கோரியவர்கள்,பணத்தை விட அதிக மதிப்புள்ள மனித உயிகளைக் கொன்று குவித்த குற்றவாளியான நரேந்திர மோடி விஷயத்தில் மவுனம் காப்பது வியப்பாக உள்ளது.
ராசா குற்றவாளி என்று தீர்ப்பு அளிப்பதற்கு முன்னரும் , ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் மராட்டிய முன்னாள் முதல்வர் மீது குற்றவாளி என்று தீர்ப்பு வருவதற்கு முன்னரும் குற்றச்சாட்டு வந்துவிட்ட காரணத்தினாலேயே பதவி விலகக் கோரிய பாஜக,அதிமுக,மதிமுக மற்றும் சில கட்சிகள் அதை விட பயங்கரமான குற்றச் செயலில் ஈடுபட்டதாக SIU யால் குற்றம் சாட்டப்பட்ட பின் அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தவில்லை.
எனவே மத்திய அரசாங்கம் நரேந்திர மோடி அரசை டிஸ்மில் செய்து கைது செய்ய வலியுறுத்தி இன்று (5.2.11) மாலை 4 மணிக்கு சென்னை – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்தார்கள்.பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
குறுகிய காலத்தில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பல்லாயிரகணக்கானோர் இதில் கலந்து கொண்டு மோடிக்கு எதிரான தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்
சனி
தொழுகையில் விரலை நீட்டலாமா?
தொழுகை இருப்பில் விரலசைக்க வேண்டுமென்ற செய்தி பலமானதாகும். அதை உறுதிப்படுத்தும் வேறு அறிவிப்புகளும் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் இடது தொடை மீது இடது முன்னங்கை வைப்பார்கள். வலது தொடை மீது வலது முன்கையை வைப்பார்கள். கடைசி இரண்டு விரல்களை மடக்கிக் கொண்டு கட்டை விரலையும் நடு விரலையும் வளையம்போலாக்கி தமது ஆள்காட்டி விரலை உயர்த்தி அழைப்பதுபோல் அசைத்;ததை நான் பார்த்தேன் ‘
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்கள்: நஸயி (879), அப்னு ஹிப்பான், தாரமி, அஹ்மத் أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظَرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا قَالَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ لَمَّا رَفَعَ رَأْسَهُ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا ( النسائ : 879)
2.
و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى وَعَقَدَ ثَلَاثَةً وَخَمْسِينَ وَأَشَارَ بِالسَّبَّابَةِ (مسلم : 912)
‘நபி (ஸல்) அவர்கள் தமது தஷஹ்ஹுதில் உட்கார்ந்து விரலை உயர்த்தி இஷார செய்வார்கள்’
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் தமது அத்தஹியாத்தில் தமது ஆள்காட்டி விரலால் இஷாரா செய்வார்கள்’
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: தாரமி
இதே கருத்தை வலியுறுத்தி இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. இதில் இரண்டாவது மூன்றாவது ஹதீஸ்களிலும் இதை வலியுறுத்தும் ஹதீஸ்களிலும் ‘இஷாரா’ என்ற பதம் வந்துள்ளன. ஒரு செயலை வாயால் மொழியாமல் செயலால் செய்வதே ‘இஷாரா’ வாகும். உதாரணமாக வாய் பேச முடியாதவர்களின் எல்லா செயல்களும் ‘இஷாரா’ தான்.
நபி (ஸல்) ‘இஷாரா’ செய்துள்ளார்கள் என்பது தெளிவான விஷயம். அந்த இஷாரா எப்படி இருந்தது? அதை விளக்குகிறது நாம் முதலாவதாக எடுத்துக்காட்டிய செய்தி.
‘ நபி (ஸல்) இஷாரா செய்வார்கள் அந்த இஷாரா எப்படி இருந்ததென்றால் விரலை உயர்த்தி (யாரையோ) அழைப்பதுபோல்’ இருந்தது என வயில் பின் ஹுஜ்ர் (ரலி) தெளிவாக விளக்குகிறார். இஷாரா என்பதும், விரலசைப்பு என்பதும் முரண்பட்ட விஷயமல்ல. ஒன்றை விள்கும்படியாக மற்றொண்டு அமைந்துள்ளது.
‘பேனாவால் எழுதுவதைப் பார்த்தேன். அது !மை! போனாவாக இருந்தது’ என்று எவரும் கூறினால் இதை முரண்பாடாக கருத மாட்டோம். முதல் வாசகம் பேனா என்கிறது. இரண்டாம் வாசகம் பேனாவின் தன்மையைக் கூறுகிறது. இதே போன்றுதான் இஷாராவிற்கு விளக்கமாக விரல் அசைப்பார்கள் என்ற பதம் வந்துள்ளது. எனவே, இஷாரா என்று வரும் ஹதீஸை எவராவது செயல்படுத்துவதாக இருந்தால் இன்னொரு ஹதீஸ் இதற்கு விளக்கமாக அமைந்துள்ளதால் விரல் அசைப்பின் மூலமாகத்தான் செயல்படுத்த முடியும்.

சப்தமிட்டு ஆமின் சொல்லலாமா?
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிந்ததும் ”ஆமீன்” கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும் (தொழ வைப்பவரும்) மஃமூமும் (பின் நின்று தொழுபவரும்) சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும்.
782 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَالَ الْإِمَامُ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ فَقُولُوا آمِينَ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ تَابَعَهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنُعَيْمٌ الْمُجْمِرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ رواه البخاري
”இமாம் ”கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: புகாரி
2286 وأخبرنا أبو يعلي حمزة بن عبد العزيز الصيدلاني أنبأ أبو بكر محمد بن الحسين القطان ثنا أحمد بن منصور المروزي ثنا علي بن الحسن بن شقيق أنبأ أبو حمزة عن مطرف عن خالد بن أبي أيوب عن عطاء قال ثم أدركت مئتين من أصحاب النبي صلى الله عليه وسلم في هذا المسجد إذا قال المغضوب عليهم ولا الضالين سمعت لهم رجة بآمين ورواه إسحاق الحنظلي عن علي بن الحسن وقال رفعوا أصواتهم بآمين (سنن البيهقي الكبرى ج: 2 ص: 59)
”இந்தப் பள்ளிவாசல் (சுமார்) 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். (அவர்கள்) இமாம் ”கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக் கூறும் போது ”ஆமீன்” என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அதா, நூல்: பைஹகீ
நுஅய்ம் அல் முஜ்மிர் என்பவர் கூறுகையில். நான் அபூஹ‚ரைரா அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதேன். அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதினார்கள். பிகு சூரா பாத்திஹா ஓதினார்கள். அவர்கள் கைரில் மப்லூபி அலைஹிம் வலல்லாழ்ழீன் என்று ஓதியவுடன் ஆமின் என்று கூறினார்கள். மக்களும் ஆமின் என்று கூறினார்கள். இன்னும் அவர்கள் ஸஜ்தா செய்யும் போதெல்லாம் அல்லாஹ‚ அக்பர் என்று கூறுவார்கள். இரண்டாவது ரக்அத்திருந்து எழுந்தால் அல்லாஹ‚ அக்பர் என்று கூறுவார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்து முடித்து விட்டால் என்னுடைய உயிர் எஹ்னுடைய கையில் இருக்கிறதோ அவன் மீது ஆனையாக நிச்சயமாக நான் ரசூல் ஸல் அவர்கள் எவ்வாறு தொழுது காட்டினார்களோ அவ்வாரே நான் உங்களுக்கு தொழது காட்டியுள்ளேன் என்று கூறினார்கள்.
நூல்: நஸயீ (895)
இந்த இடத்திலும் கவ்ல் என்ற வார்த்தைதான் உள்ளது. மக்கள் ஆமின் சொல்வார்கள் என்று வருகிறது. மக்கள் சப்தமிட்டு சொல்வதின் மூலமே அறிவிப்பவர் ஆமின் சொன்னார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நன்றி:http://kadayanalluraqsha.com/

வியாழன்
புதிய மர்க்கஸ் ஆரம்பம்
இன்ஷா அல்லாஹ் இன்று 04.02.11முதல் கோவை மாவட்டம் கரும்புக்கடை அருகில் அமைந்துள்ள குறிச்சி பிரிவில் புதிய மர்க்கஸில் ஜும்மா தொழுகை ஆரம்பம் உரை மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள்.
மோடியை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பு உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட ”எஸ் ஐ டி” சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் மோடி அரசை உடனே டிஸ்மிஸ் செய்து மோடியை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம் – பார்க் டவுன்.நாள் – 5-2-2011 இன்ஷா அல்லாஹ்
வளைகுடா நாடுகளில் பரவும் போராட்டங்கள்..! அதிர்ச்சி ரிப்போர்ட்.
அஸ்ஸலாமு அலைக்கும்...
எகிப்து மக்களின் போராட்ட...எதிரொளி ! கடந்த சில நாட்களாக எகிப்து மக்கள் அங்குள்ள அதிபரை பதவி விளகவேண்டும் என அன்னாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் எதிரெளியாக அன்னாட்டை சுற்றியுள்ள சில இஸ்லாமிய நாடுகளிலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த அரசை எதிர்த்து மக்கள் போர்கொடியை தூக்கியுள்ளனர்.
எகிப்தின் எதிரொளியாக துர்சீனியா, ஜோர்ட்டான் போன்ற நாடுகளையும் இன்ன நோய் தொற்றியது. இஸ்லாமிய அரசு என்று மக்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யாத அரசுகளுக்கு எதிரான மக்களின் இந்த போர்கொடி உலகமே உற்றுநோக்கியுள்ளது.
படிப்பினை பெறவேண்டிய இஸ்லாமிய நாடுகள்....!
இஸ்லாத்தை அதன் அடிப்படையாக கொண்டு செயல்படுகிறோம் என்று கூறும் நாடுகள் இஸ்லாமிய சட்டத்தை சரியாக பின்பற்றாததன் விளைவை சந்திக்கின்றன.
தற்போது நடக்கும் இந்த போராட்டத்தின் மூலம் பிற இஸ்லாமிய நாடுகள் உன்மையான இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாக ஆக்கிவிட்டது எகிப்து போராட்டம்..!
எகிப்து மக்களின் போராட்ட...எதிரொளி ! கடந்த சில நாட்களாக எகிப்து மக்கள் அங்குள்ள அதிபரை பதவி விளகவேண்டும் என அன்னாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் எதிரெளியாக அன்னாட்டை சுற்றியுள்ள சில இஸ்லாமிய நாடுகளிலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த அரசை எதிர்த்து மக்கள் போர்கொடியை தூக்கியுள்ளனர். எகிப்தின் எதிரொளியாக துர்சீனியா, ஜோர்ட்டான் போன்ற நாடுகளையும் இன்ன நோய் தொற்றியது. இஸ்லாமிய அரசு என்று மக்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யாத அரசுகளுக்கு எதிரான மக்களின் இந்த போர்கொடி உலகமே உற்றுநோக்கியுள்ளது.
படிப்பினை பெறவேண்டிய இஸ்லாமிய நாடுகள்....!
இஸ்லாத்தை அதன் அடிப்படையாக கொண்டு செயல்படுகிறோம் என்று கூறும் நாடுகள் இஸ்லாமிய சட்டத்தை சரியாக பின்பற்றாததன் விளைவை சந்திக்கின்றன.
தற்போது நடக்கும் இந்த போராட்டத்தின் மூலம் பிற இஸ்லாமிய நாடுகள் உன்மையான இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாக ஆக்கிவிட்டது எகிப்து போராட்டம்..!
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்!!!
ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!
தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.
(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)
ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காக மாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்கு நிகழ்ந்தவை? எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.
நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டி நிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.
வீதியில் உலாவரும் வீடியோ கேமரா
கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முதல் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல் அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற புராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா நுழைந்து டீ காப்பி சப்ளை, டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும்.
மணமகன் இல்லத்திருந்து துவங்கி, வீதி வீதியாகச் சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லது மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும் போது, அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான். பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு!
வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும். ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முதல் கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்க விருந்தாகின்றனர்.
அதன் பின்னர் துவக்கத்தில் நாம் கூறியது போல் அறைகளில் பலரும் உட்கார்ந்து கிரிக்கெட் கமென்டரியைப் போன்ற வர்ணனையுடன் ரசித்துப் பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர். இவ்வாறு பார்வைகளில் படரவும் தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகை செய்கின்றன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகன் கூட பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான். அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்து விடுகின்றான். பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ண ஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமர வைக்கப்பட்டிருக்கும் இந்த மணப்பெண்ணை நோக்கித் தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.
இப்படி மணப்பெண் முதற்கொண்டு, நமது மனைவி, மக்கள், சகோதரிகள், கொழுந்தியாக்கள் என்று அனைவர் மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்த கேமராமேனின் பார்வையும் வளைத்து நிற்கின்றது. இதில் மிகமிக வேதனைக்குரிய விஷயமும் வெட்கக்கேடான விஷயமும் என்னவென்றால் இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப் பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பது தான்.
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ”(நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!) தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்” என்ற (24:31) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி) யைக் கிழித்து அதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 4758
இதே கருத்தைக் கொண்ட செய்தி அபூதாவூதில் 3577வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அதில் ஆயிஷா (ரலி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப் பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.
தன்னை மறைத்துக் கொள்வதில் முன்னணியில் நின்ற அந்த நபித்தோழியர் எங்கே? இன்று வீடியோவுக்குப் போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே?
ஒரு காலத்தில் ஒரு பெண் சினிமாவில் காட்சியளிக்கின்றாள் என்றால் சமூகம் அவளைக் காறித் துப்பியது. ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம் சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல் ஒரு போலித் தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போலித் தோற்றம் இருந்தாலும் மற்ற சமுதாய மக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர் முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோ காட்சியளிப்பது வெறுப்பிற்குரிய காரியமாகவே கருதப்படுகின்றது. இவர்களிடத்திலேயே வெட்கம் தன் வேலையைக் காட்டும் போது ஒரு முஸ்லிமிடத்தில் இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்?
ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 9
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஓர் இறைநம்பிக்கை கொண்ட பெண் அடுத்தவர் முன் காட்சியளிக்க முன்வர முடியுமா? இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3971
பெண்கள் ஆண்களின் முன்னால் காட்சிப் பொருளாகத் தோன்றுவதன் மூலம் சுவனத்தில் நுழையும் பாக்கியத்தை இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில் பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவை மட்டும் பாவம் செய்யவில்லை. அந்த வீடியோ கேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால் பார்க்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பாவம் பதியப்படும் நிலையை அடைகின்றார்கள்.
ரோஷம் இழந்த ஆண்கள்
இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வை ஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.
”என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, ”ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 6846, 7416
ஒரு மனிதனுக்கு ரோஷம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகின்றது. ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும் தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான். இதுபோன்று தனது வீட்டுப் பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி, அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப் படைக்கின்றான்.
இது இவனது ரோஷ உணர்வு முற்றிலும் உலர்ந்து போய் செத்து விட்டது என்பதையே காட்டுகின்றது. இதில் ஏகத்துவவாதி என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும் திருமண உரை என்ற பெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்தி விடுகின்றார்கள்.
திருமணங்களில் வீடியோ கலாச்சாரம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தைத் தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்று நோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும் நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும்.
போட்டோக்கள்
கல்யாண வீட்டில் வீடியோ எடுப்பது சமீபத்தில் வந்த புதிய கலாச்சாரம் என்றால் போட்டோ எடுத்தல் என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் உள்ளது.
இங்கும் மணமகளை கேமராக்காரன் முதன்முதல் பார்த்து தனது கேமராவைப் போலவே கண் சிமிட்டிக் கொள்கின்றான். வீடியோ கேஸட்டாவது பிளேயரில் போட்டால் தான் படம் தெரியும். ஆனால் இந்த போட்டோக்களோ ஆல்பங்களில் சேகரிக்கப்பட்டு அவரவர் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள மேஜைகளில் பார்வைக்கு வைக்கப்படுகின்றது.
போட்டோக்கள் விஷயத்தில் பாஸ்போர்ட், அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் போன்ற அவசியத் தேவைகளுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இவையன்றி அநாவசியமாக போட்டோ எடுத்து அதைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் நாம் பாவமான காரியம் செய்தவர்களாகின்றோம். இத்தகைய உருவப்படங்கள் வீட்டில் இருக்கையில் மலக்குகள் வருவது கிடையாது.
நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி), நூல்: புகாரி 3322
ஆயிஷா (ரலி) வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் வருகின்ற போது உருவப்படங்களைக் கண்டு உள்ளே பிரவேசிக்க மறுக்கின்றார்கள் என்பதை புகாரி 3226 ஹதீஸில் காண முடிகின்றது.
எனவே நமது வீட்டில் அருளைச் சுமந்து வரும் மலக்குகள் உள்ளே வருவதற்குத் தடையாக அமைகின்ற இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும்.
இது மட்டுமின்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி திருமண வீடியோவினால் ஏற்படும் அனைத்து தீமைகளும் திருமண போட்டோக்களாலும் ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இது போன்ற தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக!
முஃமின்களே! நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் 24:31)

ஷைத்தான் பெயரால் பித்தலாட்டங்கள்
- எம். அப்பாஸ் அலீ, எம்.ஐ.எஸ்.சி.
மனிதனுக்கு ஷைத்தானால் சில இடைஞ்சல்கள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
'ஆதமின் மக்களால் பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவருடைய மகனையும் தவிர''' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி) நூல்: புகாரி 3431
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, 'இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்'' என்று அவர் அதற்கு முன்நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார். அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி) நூல்: புகாரி 608
கொட்டாவி ஷைத்தானிடம் இருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் 'ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹ‚ரைரா (ரலி) நூல்: புகாரி 3289
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 1144
ஷைத்தானை விரட்டுவதாகக் கூறி சம்பாதிக்க நினைப்பவர்களும் மக்களை ஏமாற்றுபவர்களும் ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை விவரிக்கும் இது போன்ற ஹதீஸ்களை மக்களிடம் சொல்கிறார்கள். ஷைத்தானால் மனிதனுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுவதால் மனிதனை விட்டும் ஷைத்தானை நாங்கள் விரட்டுகிறோம். இதில் என்னத் தவறு இருக்கிறது? என்று கேள்வி கேட்டு பாமர மக்களை வழிகெடுக்கிறார்கள்.
இவர்கள் தங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு மேற்கண்ட இடையூறுகள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தர முடியுமா?
தொழுகையில் கவனம் திரும்புவது கொட்டாவி விடுவது சுப்ஹ‚ தொழாமல் உறங்குவது இவையெல்லாம் ஷைத்தானால் ஏற்படுகிறது என்று மேலுள்ள ஹதீஸ்கள் கூறுகிறது. அப்படியென்றால் இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு தொழுகையில் கவனம் திரும்பாதா? அவர்களுக்கு இனி கொட்டாவியே வராதா? அவர்கள் சுப்ஹ‚ தொழுகையை விடாமல் கடைபிடிப்பார்களா? ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்களுக்குத் தவறான எண்ணங்களே ஏற்படாதா?
இந்த அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலே ஷைத்தானை விரட்டுவதாக இவர்கள் கூறுவது வடிகட்டிய பொய் என்பதை அறியலாம்.
முதலில் ஷைத்தானால் மனிதனுக்கு என்ன செய்ய முடியும்? அவனுடைய தீமைகளிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஷைத்தானால் எந்தத் தீங்கை செய்ய இயலும்?
தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்குக் கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.
மனிதன் தான் ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக்கட்டாயமாக, அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அதுபோன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்ய விடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான். இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.
தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
'அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். (அல்குர்ஆன் 4:119)
அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான். (அல்குர்ஆன் 2:169)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். (அல்குர்ஆன் 114:5)
ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவருக்கும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தித் தான் ஷைத்தான் வழிகெடுத்தான்.
அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். 'இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தைஉங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.(அல்குர்ஆன் 7:20)
நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ஷைத்தான் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அப்படியென்றால் ஷைத்தானை விரட்டுவதாகக் கூறும் போலி ஆன்மீகவாதிகள் அனைத்து மக்களுக்கும் ஓதிப் பார்த்து அவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவார்களா?
நபிமார்களுக்கு ஷைத்தான் இடைஞ்சல் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைக்கு இவர்களுக்கு ஷைத்தானை விரட்டத் தெரிந்த யுக்தி நபிமார்களுக்கு ஏன் தெரியவில்லை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 6:112)
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.(அல்குர்ஆன் 22:52)
வேறெதுவும் செய்ய முடியாது
ஒருவரைப் பைத்தியமாக மாற்றுவது, உடல் உறுப்புக்களை செயலிழக்கச் செய்து முடக்கிப் போடுவது போன்ற பாரதூரமான வேலைகளை ஷைத்தானால் செய்ய இயலாது. ஆனால் இவற்றையெல்லாம் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறித் தான் ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை, தவறான வழியை காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
'அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்!உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு அல்குர்ஆன் 14:22
'எனது அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் ஷைத்தானிடம் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன். அல்குர்ஆன் 17:65
அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 34:21
எவ்வாறு தப்பிப்பது?
தீய எண்ணங்களை ஏற்படுத்துவதைத் தான் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறும் திருக்குர்ஆன் அவனுடைய அந்தத் தீங்கிலிருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என்ற வழியையும் கற்றுத் தருகிறது. ஷைத்தானுடைய வழியில் சென்று விடாமல் தனக்குப் பாதுகாப்பைத் தருமாறு அல்லாஹ்விடம் துஆ செய்வது தான் அந்த வழியாகும். இந்த துஆ ஷைத்தானின் சூழ்ச்சியை முறியடிக்கும் மாபெரும் கருவியாகும்.
'என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றும் கூறுவீராக! அல்குர்ஆன் (23 : 97)
(முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம், மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர். அல்குர்ஆன் 114வது அத்தியாயம்
ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். அல்குர்ஆன் 7:200
குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்! அல்குர்ஆன் 16:98
அவர் (இம்ரானின் மனைவி) ஈன்றெடுத்த போது, 'என் இறைவா! பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேனே'' எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கறிவான். 'ஆண், பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்'' எனவும் அவர் கூறினார். அல்குர்ஆன் 3:36
ஷைத்தானின் தூண்டுதல் ஏற்பட்டால் என்னிடம் வாருங்கள் நான் ஷைத்தானை விரட்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குக் கூறவில்லை. மாறாக தீய எண்ணங்கள் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு தான் கற்றுக் கொடுத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதை கற்றுக் கொடுத்தார்களோ அதில் தான் நமக்கு வெற்றி இருக்கிறது. எனவே ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்களின் மாயவலையில் யாரும் விழுந்து விட வேண்டாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, 'இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?'' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், 'உன் இறைவனைப் படைத்தவர் யார்?'' என்று கேட்கின்றான். இந்தக் (கேள்விகேட்கும்) கட்டத்தை அவன் அடையும் போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும். அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி) நூல்: புகாரி 3276
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (விருப்பமானவர்கüடம்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடம் இருந்தே வந்தது. அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 6985
இறைநம்பிக்கை, இறையச்சம், நற்குணங்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால் ஷைத்தான் நம்மை வழிகெடுக்க முடியாது.
எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 15:42
நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு (ஷைத்தானுக்கு) அதிகாரம் இல்லை. அல்குர்ஆன் 16:99
(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.அல்குர்ஆன் 7:201
ஷைத்தான் வலையில் விழுந்தவர் ஷைத்தானை விரட்டுகிறார்களா?
ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். அல்குர்ஆன் 26:221
ஷைத்தானை விரட்டுவதாகக் கூறுபவர்கள், மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களிடத்தில் தான் ஷைத்தான் இருக்கிறான்.
ஷைத்தானின் வலையில் சிக்கியவர்கள் மற்றவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவதாக நினைப்பது எவ்வளவு அறிவீனம் என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். ஏமாற்றுபவர்களின் சதியில் சிக்கி தங்கள் பொருளை இழந்து விட வேண்டாம். நம் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக!

TNTJ -- கோவை மாவட்ட நிர்வாகிகள்- Dist-Admins
2.செயலாளர்; A.W. நாசர் 91501 25002,
3.பொருளாளர்; ஹாஜா நஜ்முதீன் 91501 25003,
4.துணைத்தலைவர்; 91501 25004,
5.துணைச்செயலாளர்; 91501 25005,
6.துணைச்செயலாளர்; 91501 25006,
7.துணைச்செயலாளர்; 91501 25007,
8.வர்த்தகர்;அணி 91501 25008,
9.மருத்துவசேவைஅணி 91501 25009,
10.மாணவர்;அணி 91501 25010,
11.தொண்டர்;அணி 91501 25020.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)