தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

பொதுகூட்டத்தில் கொலை வெறி தாக்குதல்.

ஆயக்குடி பொதுகூட்டத்தில் கொலை வெறி தாக்குதல்.ஆயுதங்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி கிளையின் சார்பாக இன்று(18.09.2011) பொதுக்கூட்டம் காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்று கொண்டு இருந்தது. சமூக கொடுமையான வரதட்சணைக்கு எதிராக பொதுகூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது இப்ராஹிம், கலீல் என்ற சமூக விரோதிகள் மேடையேறி மேடையில் இருந்தவர்களை அரிவாளால் தாக்க முயன்றனர். இதை தடுத்து நிறுத்திய நம் கொள்கை சகோதரர்கள்,
(ஜமல் போரின் போது) இந்த மனிதருக்கு (அலீ ரலி அவர்களுக்கு) உதவி செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து எங்கே செல்கிறீர்?’ எனக் கேட்டார். நான் இந்த மனிதருக்கு உதவி செய்திடச் செல்கிறேன் என்றேன். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத் திற்குத் தான் செல்வார்கள் என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் தம் சகாவைக் கொல்ல வேண்மென்று பேராசை கொண்டிருந்தார்’ என்று சொன்னார்கள் என்றார்கள். புஹாரி 31
மேற்கண்ட நபிகளாரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், சமூக விரோதிகள் நம் மக்களை கொலை செய்ய விடாமலும், சமூக விரோதிகளை  ஒன்றும் செய்யாமலும் பாதுகாத்தனர். மேலும் அந்த இருவரையும் ஆயக்குடி காவல்துறையிடம் பத்திரமாக ஒப்படைத்து, அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இருந்தும் காவல்துறை அவர்களை உடனடியாக கைது செய்யாமல்  கூட்டம் முடிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் காவல்துறையின் மூலம் CSR பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் DSP தலைமையில் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வரதட்சனையும் அதன் கொடுமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இப்பொதுகூட்டம் இறையருளால் இரவு பத்து மணிக்கு நிறைவுற்றது.
தற்போதைய நிலவரப்படி இரு தரப்பின் மீதும் வழக்கு பதிய காவல்துறை முயன்றுவருகிறது..