தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

ரமலானுக்கு பிறகும் தொடரட்டும் இறையச்சம்


 

இறைவனின் பேரருளால் அருள்மழை பொழியும் ரமலான் மாதத்தை நிறைவு செய்துள்ளோம். இம்மாதத்தில் நம்மால் முடிந்த அளவு இறைவணக்கத்தையும் நல்லறங்களையும் செய்துள்ளோம். வேறு எந்த மாதங்களிலும் செய்யாத அளவு
வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டதோடு ஷைத்தானின் தீய செயல்களிலிலிருந்து விடுப்பட்டும் இருந்துள்ளோம்.
நோன்பு நோற்ற நாள்களில் படைத்தவனுக்கு பயந்து மார்க்கத்திற்கு முரணான காரியங்களிலிலிருந்து விடுபட்டு புத்தம் புதிய மனிதர்களாக பலர் மாறியுள்ளார்கள். இம்மாதத்தில் பெற்ற இறையச்சம் அடுத்த வருடம் வரையிலாவது தொடர முயற்சிக்க வேண்டும்.
இறையச்சதை ஊட்டிய நோன்பின் மாண்பை வாழ்நாள் முழுவதும் தொடர உறுதிமொழி எடுப்போம். நோன்பு காலங்களில் தடைசெய்திருந்த சினிமா, நாடகங்கள் வரும் காலங்களிலும் அந்த தடை தொடரட்டும்.
ஐவேளை தொழுகைகளை சரிவர தொழுது வந்தவர்கள் வரும் காலங்களிலும் ஐவேளைத் தொழுகையை பேணுபவராக மாறட்டும்.
நோன்புகாலங்களில் நிறைந்திருந்த பள்ளிவாசல்கள் வரும் காலங்களிலும் நிறைந்திருக்கட்டும். குறிப்பாக பஜ்ர் தொழுகையில் மக்கள் கூட்டம் நிறைவாக இருக்கட்டும்.
புறம்பேசுதல், கோள் மூட்டுதல், பகைமை ஏற்படுத்துதல் போன்ற காரியங்களில் நீங்கியிருந்த நாம் வரும் காலங்களிலும் சமாதானத்தையும் நல்லிலிணக்கத்தையும் ஏற்படுத்தி வருவோம்.
தானதர்மங்களில் அதிகம் கவனம் செலுத்திய நாம் வரும் காலங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் பண்புகளை இன்னும் அதிகமாக்கிக் கொள்வோம்.
இஸ்லாத்தின் மூல ஆதாரமாக திகழும் திருக்குர்ஆனை ஓதி வந்த நாம் இனிவரும் காலங்களிலும் தினமும் திருக்குர்ஆன் ஓதும் பழக்கத்தை தொடந்து அதில் கூறப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி மற்றவர்களையும் பின்தொடர வழிவகை செய்வோம்.
மொத்தத்தில் வரும் காலம் முழுவதும் இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப நமது செயல்களை அமைத்துக் கொள்ள முழு முயற்சி எடுப்போம்.
எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 8:53)
“எனினும் அநீதி இழைத்து தீமைக்குப் பின் நன்மையாக மாற்றிக் கொண்டவரை நான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்”
(அல்குர்ஆன் 27:11)
நம் விஷயத்தில் முயற்சி செய்வோருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 29:69)
நன்றி:
தீன்குலப் பெண்மணி, செப்டம்பர்-2011