தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக இன்ஷா அல்லாஹ் மே-6 ஆம் தேதி, ”இஸ்லாமிய குடும்பவியல் மாவட்ட மாநாடு” நடைபெற உள்ளது. இதில் P. ஜைனுல் ஆபிதீன், சம்சுல்லுஹா, பக்கீர் முஹம்மத் அல்தாபி, ரஹ்மத்துல்லாஹ், M.I.சுலைமான், M.S.சுலைமான், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி, உள்ளிட்ட மார்க்க அறிஞர்களின் உரைகளுடன், 18-கும் மேற்பட்ட பயனுள்ள அரங்கங்கள் அனைத்தும் உங்களுக்காகவே………….
உங்கள் பிள்ளைகளின் கோடை விடுமுறையை குடும்பத்துடன் பயனுள்ளதாக மாற்ற கோவை நோக்கி படையெடுங்கள்!
மாநாட்டில் இடம்பெறவுள்ள அரங்கங்களில் சில உங்கள் பார்வைக்கு….
பேய், பிசாசு, ஜின் மூட நம்பிக்கை என்ன என்பதை விளக்கும் வகையில் அரங்கம்.
தர்கா வழிபாடு இணைவைப்பு கொள்கை ஒழிப்பு அரங்கம்
தமிழகம் மற்றும் இந்தியாவில் இட ஒதுக்கீடு ஓர் பார்வை என்பதை விளக்கும் விதமாக அரங்கம்.
முஸ்லீம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியின் ஓர் பகுதியாக எளிய மார்க்கம் அரங்கம்.
அரசு நலத்திட்ட உதவிகள் பற்றிய அரங்கம் (முதியோர், விதவைகள், ஆதவற்றோர், மாற்று திறனாளிகள், உதவித்தொகை பெறுவது தொடர்பாகவும் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவது எப்படி !!!)
போதை-புகை தீமைகளை விளக்கும் அரங்கம்
இலவச மருத்துவம் மற்றும் இரத்தவகை கண்டறிதல் அரங்கம்.
கல்வி விழிப்புணர்வு அரங்கம்.
ஜனாஸா கடமைகள் செய்முறை விளக்கங்களுடன் அரங்கம்.
ஹஜ் செய்முறை விளக்கங்களுடன் அரங்கம்அறிவியலும் இஸ்லாமும் அரங்கம்.
குடும்ப பிரச்சினைகளை இஸ்லாம் கூறும் முறையில்தீர்க்கும் விதமாக ஆலோசனை அரங்கம்
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்கள் அரங்கம்
தமிழகத்தில் ஏகத்துவ வளர்ச்சி அரங்கம்.
கணிணி மூலம் மார்க்கத்தை அறிந்து கொள்வது எப்படி?அரங்கம்
கோவை மாவட்ட பணிகள் ஓர் அரங்கம்.
ஜமாத்தின் பணிகள் ஓர் அரங்கம் (அனாதை அர்ரஹ்மான், முதியோர்-அர் ரஹீம், தாவா சென்டர், ஏகத்துவம் – தீன்குலப்பெண்மணி – உணர்வு ஓர் அரங்கம்).
மேற்கண்ட அரங்கங்களில் இடம் பெறுபவைகளை பற்றிய தனி தனி தொகுப்பு, இன்ஷா அல்லாஹ் நாளை….
மாநாட்டில் உரையாற்றுபவர்களின் தலைப்பு இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் எதிர் பாருங்கள்……