ரேஷன் கார்டு புதுப்பிக்கலயா...கவலைப்படாதீங்க... ஆன்லைனில் அசத்துங்கஉங்கள் ரேஷன் கார்டை புதுப்பிக்க தவறிவிட்டீர்களா... கவலைப்படாதீங்க... மீண்டும் ஒருவாய்ப்பை அரசு வழங்கியுள்ளது. இந்த முறை உங்கள் நேரத்தை செலவிட்டு ரேஷன் கடைக்கு வரவேண்டாம். ஆன்லைனில் உங்கள் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இது உண்மைதாங்க.தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த ரேஷன் கார்டுகள் கடந்த ஆண்டுடன் காலாவதி ஆகிவிட்டது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் வகையில், 2012ம் ஆண்டு முதல் குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாளம் ஆகிவற்றுடன் ‘பயோமெட்ரிக்’ முறையில் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடித்து வழங்கப்பட்ட இருந்தது. ஆனால், அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால், இந்த ஒருவருடத்திற்கு மட்டும் தற்போதுள்ள ரேஷன் கார்டுகளையே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜனவரி 2 முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.
அதோடு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர்கள் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமையும் கார்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.ஆனாலும், பலரால் வெளியூர் சென்றதாலும், பணி காரணமாகவும் ரேஷன் கார்டை புதுப்பிக்க முடியாததால், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட அரசு, இம்மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்த காலத்திற்குள் தங்களது ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது.இந்த முறை கார்டை புதுப்பிக்க ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டாம். மாறாக, ஆன்&லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
அதாவது, http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். இதில், ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012ம் ஆண்டிற்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும் மற்றொரு நகலை உரிய ரேஷன் கடையில் கொடுத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்பவர்கள் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே பயன்படுத்துவோர் ஒருநகலை அவர்கள் ரேஷன் கார்டில் ஒட்டிக் கொண்டாலே போதுமானது.இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க...