பொறுப்பும் அமானிதமே
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் சமுதாயத்தில் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் ஏற்படுத்தினான். இந்த ஜமாஅத்தின் கொள்கையை எதிர்ப்பவர்களும் இந்த ஜமாஅத்தைப் போல் நம்பகமான இயக்கம் வேறு இல்லை என்று நம்பும் அளவுக்கு அல்லாஹ் இந்த ஜமாஅத்துக்குப் பேரருள் புரிந்துள்ளான்.
இந்த ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டது முதல் என்னால் இயன்றவரை அப்பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன். ஆனால் சமீபகாலமாக உடல் நலனில் ஏற்பட்ட பல பிரச்சனைகள் காரணமாக பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற இயலாமல் போவதை நான் உணர்கிறேன். என்மீது சுமத்தப்பட்ட மாபெரும் அமானிதத்தில் குறை வைக்கக்கூடாது என்பதற்காக நான் ஓய்வில் இருக்கும் காலம் வரை யாராவது இப்பொறுப்பைச் சுமந்து கொள்ள வேண்டும் என்று பலமுறை நான் நிர்வாகக் குழுவில் வலியுறுத்தியும் அல்லாஹ்வின் அருளால் இப்போது தான் இதற்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.
எம்.ஐ.சுலைமான் அவர்கள் இப்பொறுப்பைச் சுமந்திட ஒப்புக் கொண்டுள்ளார். தலைவராகப் பொறுப்பேற்குமாறுதான் நான் அவரை வற்புறுத்தினேன். ஆனால் உயர்நிலைக் குழுவும் இதை ஏற்கவில்லை. சுலைமானும் ஏற்கவில்லை. செயல்தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கி எம்.ஐ.சுலைமான் செயல்தலைவராக இருக்கட்டும் என்ற அளவுக்குத் தான் உயர்நிலைக் குழு இதை ஏற்றுக் கொண்டது.
சேலம் மதரஸாவின் கல்வி ஆண்டு முடிந்தவுடன் அனேகமாக ஜூன் மாதம் முதல் எம்.ஐ.சுலைமான் எனது பணிகளைக் கவனிப்பார். தேவைப்படும் போது எனது ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வார். அதுவரை என்னால் இயன்ற அளவுக்குப் பொறுப்பை நிறைவேற்றுவேன். ஏற்கனவே நான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை இன்ஷா அல்லாஹ் நடத்திக் கொடுப்பேன். கிறித்தவர்களுடனான விவாதங்கள் உள்ளிட்ட அனைத்து விவாதங்களிலும் எனது பணி எப்போதும் போல் இருக்கும் இன்ஷா அல்லாஹ். அவசர நேரங்களில் எனது உடல் நலனைப் பொருட்படுத்தாமல் பாடுபடுவேன். துஆச் செய்யுங்கள்!
உயர்நிலைக் குழுவின் ஒப்புதலோடு இதை வெளியிடுகிறேன்.
உயர்நிலைக் குழுவின் ஒப்புதலோடு இதை வெளியிடுகிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்