தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

சிங்கள மொழியிலும் சூடுபிடிக்கும் தாவாப்பணி


இலங்கையில் புத்த மதத்தைப் பின்பற்றுவோர் சிங்கள் மொழி பேசுவோராகவும், இந்து, முஸ்லிம் கிறித்தவர்கள் தமிழ் மொழி பேசுவோராகவும் உள்ளனர். புத்த மதம் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான மதமாக இருப்பதாலும் சிங்கள மொழி பிரதான மொழியாகவும் உள்ளதால் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாத தமிழர்களும் சிங்கள மொழியையும் படிக்கிறார்கள். ஆனால் சிங்கள மொழி பேசுவோர் பெரும்பாலும் தமிழ் மொழியைப் படிப்பதில்லை. எனவே சிங்கள் மக்கள் மத்தியில் சத்தியப் பிரச்சாரம் சென்றடைய வேண்டுமானால் சிங்கள் மொழியில் நூல்கள் வெளியிடப்பட்டால் தான் சாத்தியமாகும்.

இதில் தமிழ் கூறும் முஸ்லிம் அமைப்புகள் போதுமான அளவுக்கு அக்கறை செலுத்தாமல் இருந்த குறையை இலங்கையில் SLTJ (ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கைப் பிரிவு) ஓரளவுக்கு நிவர்த்தி செய்து வருகின்றது.
இது வரை 17 நூல்களை சிங்கள் மொழியில் SLTJ வெளியிட்டுள்ளது. SLTJ யின் இலங்கை பொதுச் செயலாளர் அப்துர்ராஸிக் அவர்கள் இந்த நூல்களை சிங்கள் மொழியில் மொழிபெயர்த்து இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளியிடப்பட்ட்து.
பீஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கமும் சிங்கள மொழியில் மாற்றம் செய்யும் பணிகளும் முடியும் தறுவாயில் உள்ளது.
இதன் மூலம் சிங்கள மக்கள் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு இஸ்லாத்தில் ஈர்க்கப்பட்டும் வருகின்றன. அல்ஹம்து லில்லாஹ்
சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட நூல்களில் சில




புத்தகம் கிடைக்குமிடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தக நிலையம் இல 241யு, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை மாளிகாவத்தை கொழும்பு -10.
தொடர்புகளுக்கு 0112677974 0774781472