தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

TNTJ கோவை மாவட்ட செயலாளர் பொய் வழக்கில் கைது. கோவை காவல்துறை அத்துமீறல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட செயலாளர் நவ்சாத் மீது 7 பிரிவுகளில் 26.04.2012  கோவை காவல்துறை பொய் வழக்கு புனைந்து கைது  செய்தது.
கோவை மாவட்டத்தில் மே-6 அன்று நடைபெற  உள்ள குடும்பவியல் மாநாட்டிற்கு முழு வீச்சுடன் கோவை மாநகரம் முழுவதும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த குடும்பவியல் மாநாட்டை சீர்குலைக்க வேண்டும் ஒருவித சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறை இறங்கியுள்ளதாக மக்கள் கருதுகின்றனர். இது போன்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான கோவை காவல்(?)துறையின் தொடர் முஸ்லிம் விரோத போக்கை TNTJ கோவை மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
 மேலும் பிப்ரவரி-5, TNTJ கோவை மாவட்ட மாணவர் அணியின் வரதட்சணை ஒழிப்பு பேரணிக்கு தடை விதித்தது காவல்துறை. ஆனால் தடைகளை தகர்தெறிந்தது   TNTJ.
பிப்ரவரி-14 அன்று கோவையில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்கும் தடை விதித்தது கோவை காவல்துறை. ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் தடையை மீறி கலந்து கொண்டு தடையை உடைத்து எறிந்தனர். தொடர்ந்து கோவை காவல் துறை தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. மாவட்ட செயலாளரை பொய் வழக்கில் கைது செய்ததின் மூலம் நம் மக்களிடம் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்த காவல் துறை எத்தனிக்கிறது. 
இந்த மாநாடு என்பது நாம் ஏற்று கொண்ட கொள்கையை மிகவும் வலிமையாகவும் உறுதியுடனும்  முஸ்லிம்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரமாண்ட விளம்பரங்களும் பிரச்சாரங்களும் செய்யப்பட்டு வருகிறது..
இது போன்ற காவல்துறையின் காட்டு தர்பார்  எங்களை இன்னும் வீரியமாக செயல்பட வைக்குமே தவிர பின் வாங்க செய்யாது.. இனியும் இது போன்ற செயல்கள், தொடர் முஸ்லிம்  விரோத போக்கு, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான அடக்குமுறைகள் தொடருமேயானால், கோவை காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்பதை கோவை காவல்துறைக்கு தெரிவித்து கொள்கிறோம்