கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக புது ஒரு முயற்சியாக பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்களை கொண்டு பெண்களுக்கு பிரச்சாரம் செய்யும் நோக்கத்தோடு கரும்புக்கடை முத்துக்காலனி பகுதியை தேர்வு செய்து அந்த பகுதியிலுள்ள பெண்களுக்கு தாங்கள் பகுதியில் பெண்கள் பயான் 08.01.12 நடைபெற உள்ளது என்று ஒவ்வொரு வீடாக சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது. அப்பகுதியில் ஓர் இடத்தை தேர்வு செய்து ( ஆசாத்நகர் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரத்திற்கு பயன் படுத்தப்படும் மைக் செட்டுகள் பயன்படுத்தப்பட்டன.) அந்த இடத்தில் பெண்கள் அமர்வதற்கு தேவையான இருக்கைகள் போடப்பட்டன. அப்பகுதி மக்கள் பெண்களே பயான் நடத்துவதா !!! என ஆச்சரியத்துடன் கேட்டத்துடன் பயானை கேட்ப்பதற்காக அதிகமான பெண்கள் திரண்டு வந்தனர். மாலை 4.20 மணிக்கு பெண் பேச்சாளர் காதிரா அவர்கள் தலைமையில் ஆரம்பம் செய்யப்பட்டது. ஆரம்ப உரையாக பெண் பேச்சாளர் சகோதரி s.சஃபியா அவர்கள் ”மறுமைக்கு அஞ்சுவோம்” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். உரை நிffகழ்த்திக் கொண்டிருக்கும் போது அமர்வதற்காக இடப்பட்ட 150 க்கும் மேற்பட்ட இருக்கைகள் நிறைந்து விட்டன. இரண்டாவது உரையாக பெண் பேச்சாளர் சகோதரி மும்தாஜ் அவர்கள் ”நன்மையின் பக்கம் விரைவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்ததினார்கள். உரை நடந்து கொண்டு இருக்கும் போது பெண்கள் எழுந்து செல்லவோ, பேச்சுகள் இல்லாமல் பயானை கேட்டனர். இருக்கைகள் இல்லாமல் பல சகோதரிகள் நின்று கொண்டேஉரையை கேட்னர். இறுதியில் சகோதரி சௌமியா நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
அப்பகுதி மக்கள் இந்த பயான் நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது என்று கூறியதுடன் இது மாதிரியான பயான் நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துங்கள் என்று கூறியது மிகவும் நெகிழ வைப்பதாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.