தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக “சாதித்துக் காட்டுவோம்” பொது தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி 14.01.2012 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி செயலாளர்
அஜ்மல் தலைமை உரையாற்ற, அத்தார் ஜமாஅத் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்
முஹம்மத் நாசர் அவர்கள் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அடுத்து மாநிலத்திலிருந்து மாணவர்களுக்கு வழிகாட்ட வந்திருந்த “
முஹம்மத் ஹாஜ் அலி” அவர்கள் மாணவர்களுக்கு,
தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? தேர்வுக்கு மனதளவில் எவ்வாறு தயாராவது? உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை மாணவர்கள் மத்தியில் விளக்கினார்.
நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு சாதித்துக் காட்டுவோம் தேர்வு வழிகாட்டி புத்தகமும், 10 வகுப்புக்கு தமிழக அரசு வெளியிட்ட பொதுத்தேர்வு மாதிரி வினத்தாளும் இலவசமாக வழங்கப்பட்டன.
இறுதியாக கிளை மாணவரணி செயலாளர்
தன்வீர் அஹ்மத் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 150 பேர் கலந்துகொண்டனர். மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.