தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

SSU ஸைஃபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் அமைப்பு விதிகளை மீறி செயல்பட்ட காரணத்தினாலும்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் பெயரை பயன்படுத்தி பணம் வசூல் செய்து, மஸ்ஜித் முபாரக் அருகே இருக்கும் இடத்தை வாங்கி அதை தனிநபர் பெயரில் பதிவு செய்த்தற்காகவும்,கடந்த 19/06/2011 அன்று கடையநல்லூரில் TNTJ கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டு ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் ஸைஃபுல்லாஹ் ஹாஜா நீக்கப்பட்டார்.
அவரது நீக்கம் தொடர்பாக 15 காரணங்கள் உணர்வு வார இதழில் பட்டியலிடப்பட்டன.ஆனால் அதெல்லாம் பொய்யென்றும் தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டார்கள் என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை சுமத்தியும் ஸைஃபுல்லாஹ் அவர்கள் தன்னுடைய சொந்தபந்தங்கள்,ஆதரவாளர்கள் மற்றும் மதரஸா மாணவர்களை கூட்டி வைத்து தர்பியா என்ற பெயரில் சமீபத்தில் ஒரு நீண்ட வீடியோவை வெளியிட்டு இருந்தார்.அதில் அவர் கேட்கும் கேள்விகள் நியாயமாக இருப்பது போல் தோன்றினாலும், அவரது சொற்களில் இருக்கும் பொய்களையும்,அபத்தங்களையும் அவரே பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.இருந்தாலும் அவர் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள எடுத்து வைக்கும் அத்தனை வாதங்களும் எவ்வளவு தவறானது என்பதை உலக தமிழ்மக்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக அப்துந்நாஸிர் அவர்களும்,அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சைஃபுல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீது சுமத்தி இருக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளும் எவ்வளவு போலியானவை என்பதை தெளிவுபடுத்துகின்றனர். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் எண் வாரியாக பதில் அளித்து இருக்கிறார்கள்.இன்று முதல் ஒரு நாளைக்கு ஒரு கேள்வி வீதம் அவர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் www.onlinepj.com இணையதளத்தில் இடம்பெற இருக்கிறது.அதனை நம்முடைய தளத்திலும் வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

1)ஸைஃபுல்லாஹ் ஹாஜா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போதே முபாரக் ஜமாஅத்,முபாரக் நலச்சங்கம்,தக்வா ஜமாத்,இஸ்லாமிய தாவா குழு,அக்ஸா மாணவர் அமைப்பு என்ற பெயர்களில் செயல்பட்டது உண்மையா இல்லையா?
*மேலப்பாளையத்தில் செயல்படும் MJAQH மற்றும் INTJ அமைப்புகளின் நிலை என்ன?
கீழ் இருக்கும் சுட்டியை கிளிக் செய்யுங்கள்


தொடரும் இன்ஷா அல்லாஹ்...

வெள்ளி

கோவை சாரமேடு கிளையின் சார்பாக மார்க்க சொற்பொழிவு.16.07.11

கோவை சாரமேடு கிளையின் சார்பாக மார்க்க சொற்பொழிவு.16.07.11 அன்று மாலை 7.00 மணிக்கு கரும்புக்கடை சாரமேடு ராயல் நகரில் நச்ச குழி , கொழுகட்டை பாத்திகா பராத் இரவு நபி வழி இல்லை 

           பராத் இரவு ஓர் பித்அத்  என்ற தலைப்பில் 
மாநில துணைதலைவர். -கோவை.அப்துர் ரஹீம் அவர்கள் 
இன்ஷா  அல்லாஹ் உரையாற்ற உள்ளார்கள்.
                                             அனைவரையும் அழைக்கின்றது.
                                                    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
                                                      சாரமேடு கிளை.

நித்தியானந்தாவுக்கு பட்டுக்கம்பளமா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

போலிச்சாமியார் நித்தியானந்தாவுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கும் தமிழக காவல்துறையைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் வெளியிடும் கண்டன அறிக்கை:
இந்து மக்களால் இளைய விவேகானந்தராகக் கருதப்பட்ட நித்தியானந்தா எனும் போலிச் சாமியார் தனது காமக்களியாட்டத்தினால் இந்துக்களின் கடும் கோபத்துக்கு உள்ளானார். இத்தகைய கேவலமான போலிச்சாமியாருக்கு தமிழகக் காவல்துறை பட்டுக் கம்பளம் விரித்ததன் மூலம் தன்மீது தானே காரித்துப்பிக் கொண்டது.
மக்களால் மதிக்கப்படும் ஒருவர் கேவலமான செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்தால் அதை வெளியிடுவதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது ஊடகங்களின் கடமையாகும். போலிச்சாமியாரின் லீலைகளை அம்பலப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளிக்கும் புகாரை தமிழகக் காவல்துறை பெற்றுக் கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஊடகங்களின் உரிமையைப் பறிப்பதுமாகும்.
இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று நித்தியானந்தா கூறுவதை காவல் துறையினர் நம்பினால் அவர்கள் மாடுமேய்க்கத் தான் தகுதியானவர்களே தவிர காவல்பணிக்கு தகுதியானவர்கள் அல்ல. இது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்று நித்தியானந்தா கூறுவதை காவல்துறை நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது.
ஏனெனில் இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அல்ல என்று இந்துத்துவா கொள்கை கொண்ட கர்நாடக பாஜக அரசு சொல்லி விட்டது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ததும் பாஜக அரசு தான். ஓடி ஒளிந்து திரிந்த நித்தியானந்தாவை விரட்டிப்பிடித்து கைது செய்ததும் பாஜக அரசுதான். அவரை சிறையில் அடைத்தும் பாஜக் அரசு தான். பாஜக அரசு இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டது என்று தமிழக் காவல் துறை கருதுகிறதா?
அவரது கேவலமான செயல் இந்து மதத்துக்கு கரும்புள்ளீயாக அமைந்ததாலேயே கர்நாடக அரசு அவரைக் கைது செய்து வழக்குப் போட்டுள்ளது என்பது மூளையுள்ள யாருக்கும் தெரியும்.
ஜெயலலைதாவின் முந்தைய ஆட்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டாரே அது இந்து மதத்தின் மீதான தாக்குதலா? அவரை சிறையில் தள்ளியது இந்து மதத்துக்கு எதிரான நடவடிக்கையா? அவர் நீதி மன்றம் அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் மீது அழுகிய முட்டைகள் வீசப்பட்டதே அது இந்து மதத்துக்கு எதிரான செயலா? அவரது படத்துக்கு செருப்பு மாலை போடப்பட்டதும் செருப்பால் அடித்ததும் இந்து மதத்துக்கு எதிரான செயலா? நிச்சயமாக இல்லை. பகதர்களின் கொந்தளிப்பினால் தான் இவை நடந்தன. மேலும் ப்ல பெண்கள் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிராகச் சொன்ன பாலியல் புகார்களை ஜெயா டிவி ஒளிபரபியதே அது இந்து மதத்தை இழிவு படுத்தும் செயலா?
காஞ்சி சங்கராச்சாரியார் நித்தியானந்தா வழியில் ஜெயா டிவி மீதும் ஜெயலலிதா மீதும் புகார் கொடுத்தால் அதை காவல் துறையினர் பதிவு செய்வார்களா?
நிச்சயம் பதிவு செய்யமாட்டார்கள். எனவே காவல் துறையினரின் இந்தப் போக்கு அருவருப்பானது. அசிங்கமானது. கேவலமானது. நித்தியானந்தாவின் செயலை விட மோசமானது என்று தமிழ்நாடு தவ்ஹீத் கடுமையாகக் கண்டிக்கிறது.
இப்படிக்கு,
பி.ஜைனுல் ஆபிதீன்
மாநிலத் தலைவர்.

வியாழன்

இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பேன் – தென் சூடான் ஜனாதிபதியின் மகன் பேட்டி

கடந்த ஜூலை 09ம் தேதி அன்று சூடானிலிருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனம் செய்யப்பட்ட தென் சூடானின் ஜனாதிபதி ஸல்வா கீரின் மகன்களுள் ஒருவர் கடந்த வெள்ளியன்று புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

பெருந்திரளான மக்கள் ஜும்ஆவுக்காக குழுமியிருந்த தலைநகர் கார்ட்டூமின் பள்ளிவாயல் ஒன்றிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றதாக அந்நாட்டின் செய்திப் பத்திரிகையான அல் இன்திபாஹா செய்தி வெளியிட்டுள்ளது.
“நான் சுவர்க்கத்தில் ஆசை வைக்கிறேன். அதனாலேயே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் மீண்டும் தென் சூடானுக்குச் சென்று அங்குள்ள மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பேன்” எனக் கூறினார் தென் சூடான் ஜனாதிபதியின் மகன் ஜோன் ஸல்வா.
புனித இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதன் பின்னர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டுள்ள ஜோன் ஸல்வா, தனது தந்தையான ஸல்வா கீரையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.
2011 ஜூவை 9ம் தேதி சூடானிலிருந்து பிரிந்த தென்சூடான் ஐ.நா.வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 193ஆவது சுதந்திர நாடாக மாறியுள்ள அதேவேளை, ஆப்பிரிக்காவின் 54ஆவது நாடாகவும் மாறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்

இந்த வார உணர்வில் (ஜுலை 15)


இறைவனுக்கு நன்றி செலுத்துதல்

ஒரு தாய் எவ்வாறு தன பிள்ளைகள் ஆசைப்படுவதை எல்லாம் வாங்கித் தந்து மகிழ்ச்சியுறச் செய்வாளோ அதை விட பன்மடங்கு இறைவன் தன்னுடைய அடியார்கள் வாய்விட்டு கேட்பதையும் மனதிற்குள் இரகசியமாக ஆசைப்படுவதையும் சளைக்காமல் கருணையுடன் செய்து தருகிறான். நமக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்றாலோ அல்லது ஒரு துன்பம் நீங்கவேண்டும் என்றாலோ ஓயாமல் பிரார்த்தனை செய்யும் நாம் அக்காரியம் நிறைவேறிய உடன்,அல்லது அத்துன்பம் நீங்கிய உடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததையே மறந்து நமது திறமையால்தான் கிடைத்ததுபோல் நடந்து கொள்கிறோம். இதைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை பார்ப்போம்,

மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் 'எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது' எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.(அல்குர்ஆன் 39.49)


கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக் கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.(அல்குர்ஆன் 17:67)

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147)


'எனவே என்னை நினையுங்கள். நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள். எனக்கு நன்றி மறவாதீர்கள்'.     (அல்குர்ஆன் 2: 152)

அல்லாஹ் தன் திருமறையில் முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். அல்குர்ஆன் - (16:114) என்று கூறியிருக்கிறான்.

அல்லாஹ் தன் அருட்கொடைகளை மனிதர்களாகிய நமக்கு வழங்கும்போது நாம் நம்முடைய திறமையால்தான் அனைத்தும் கிடைத்தது என்று பெருமை கொள்கிறோம் ஆனால் அது அல்லாஹுடைய சோதனை என்று அறியாமல் ஆணவம் கொண்டு இதை என்னால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் கர்வம் கொள்கிறோம். அல்லாஹ் தன் அருட்கொடைகளை செல்வமாகவோ அல்லது வேறுவிதமாகவோ வழங்கினால் அதை நாம் அல்லாஹ்வின் வழியில் செலவிடுகிறோம என்பதர்க்காகவேயன்றி பூட்டிவைத்து பாதுகாக்க அல்ல. மேலும் நம்முடைய தேவைக்கதிகமாக செல்வம் வழங்கப்பட்டால் அதன்மூலம் சோதனை செய்யப்படவும் நன்மைகளைப் பெருவதுமேயாகும், மேலும் அல்லாஹ் நமக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கியிருக்கும்போது நன்றி மறந்தவனாக எனக்கு நோய் வராது என்றும் பெருமை பாராட்டுகிரோமே தவிர இந்த அருட்கொடைகளுக்கெல்லாம் ஒருபோதும் நன்றி செலுத்துபவர்களாக இல்லை. இது தவிர நோய்வாய்ப்பட்டால் அல்லாஹ்விடம் அந்த துன்பத்தை நீக்கச்சொல்லி மன்றாடுகிறோம் நீக்கியபின் அல்லாஹ்வை மறந்துவிடுகிறோம்.

மனிதனுக்குத் தீங்கு ஏற்படு மானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவ னாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.(அல்குர்ஆன்10:12)


மனிதனுக்கு, அருளை அனு பவிக்கச் செய்து, பின்னர் அவனிடமிருந்து அதை நாம் எடுத்து விட்டால் அவன் நம்பிக்கை இழந்தவனாகவும், நன்றி மறந்தவனாகவும் ஆகிவிடுகிறான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் இன்பத்தை நாம் அனுபவிக்கச் செய்தால் 'என்னை விட்டும் தீங்குகள் அகன்று விட்டன' என்று கூறுகிறான். அவன் பெரு மிதமும், கர்வமும் கொள்கிறான். (துன்பங் களை) சகித்துக் கொண்டு நல்லறங்கள் புரிவோரைத் தவிர. அவர்களுக்கே மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.(அல்குர்ஆன் 11:9,10,11)

ஒரு காரியத்தை செய்துவிட்டு அது வெற்றியடைந்துவிட்டால் அது நம்மால்தான் நடந்தது என்று கூறிக்கொண்டிருக்கிறோமே ஒவ்வொரு காரியத்தையும் நாம் இப்படி நினைத்தால் அல்லாஹ் அது உன் திறமையாலேயே செய்துகொள் என நம்மை விட்டுவிட்டால் நமது நிலை என்னவாவது இதை சற்றும் சிந்தித்துப் பார்த்து உணர்ந்தோமேயானால் ஒவ்வொரு விசயத்திற்கும் நாம் நன்றி செலுத்துபவர்களாக மாறிவிடுவோம். அல்லாஹ்வை நம்புகிறோம் ஆனால் அவனுடைய அருட்கொடைகளை மட்டும் நம்ப மறுக்கிறோம். மேலும் சிலர் அதிர்ஷ்டத்தை நம்புவார்கள் ,அல்லது விரலில் அணிந்திருக்கும் நவரத்தினகல் மோதிரத்தை நம்புவார்கள் இறைவனின் அருட்கொடைகளை நம்பாமல் தன மோதிரத்தால் கிடைத்தது என்பார்கள் ,இவர்கள்தான் மிக நன்றிகெட்டவர்கள்

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் இறைவன் என்ன சொன்னான் என்று நீங்கள் அறிவீர்களா?" என மக்களிடம் கேட்டார்கள். பிறகு, "என் அடியார்களுக்கு நான் எனது அருட்செல்வங்களில் ஒன்றை வழங்கும்போது அவர்களில் ஒரு சாரார் (இதற்கெல்லாம் காரணம்) கிரகங்கள்தாம்; கிரகங்களால்தான் (இது எங்களுக்குக் கிடைத்தது) என்று கூறி, அந்த அருட்செல்வத்தின் விஷயத்தில் நன்றி கெட்டவர்களாகி விடுகின்றனர் என்று அல்லாஹ் சொன்னான்” என்றார்கள்.(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் அத்தியாயம்: 1, பாடம்: 1.32, எண் 105)

"அல்லாஹ் வானத்திலிருந்து ஏதேனும் ஒரு வளத்தை இறக்கும் போதெல்லாம் மக்களில் ஒரு சாரார் அதன் விஷயத்தில் நன்றி கொன்றவர்களாய் மாறிவிடுகின்றனர். (வானிலிருந்து) அல்லாஹ் மழை பொழிவிக்கிறான். அவர்களோ, இன்ன இன்ன கிரக மாற்றம் (மழை பொழிவித்தது) என்று கூறுகின்றனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் அத்தியாயம்: 1, பாடம்: 1.32, எண் 106)

குறிப்பு :
இதே ஹதீஸ் முஹம்மத் பின் ஸலமா அல் முராதீ (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், “இன்ன இன்ன கிரகங்கள் (நகர்வின்) மூலம்தான்" என்று இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் (ஒரு நாள்) மழை பெய்தபோது நபி (ஸல்)அவர்கள், ”மக்களில் நன்றியுள்ளவர்களும் உள்ளனர்; நன்றி கெட்டவர்களும் உள்ளனர். (மழை பொழியும் போது) இது அல்லாஹ்வின் கருணை என்று (சிலர்) கூறுகின்றனர். வேறு சிலரோ, வானிலை மாற்றம் மெய்யாகி விட்டது என்று கூறுகின்றனர்” என்றார்கள்.அப்போது தான் “நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்” என்று தொடங்கி, “ (இறைவன் வழங்கிய) உங்கள் வாழ்வாதாரத்திற்கு (நன்றியாக, என்னை நம்புவதில்) உங்களது மறுதலிப்பைக் காட்டுகிறீர்களோ?” என்று முடியும் இறைவசனங்கள் (56:75–82) அருளப் பெற்றன.
அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி),முஸ்லிம் அத்தியாயம்: 1, பாடம்: 1.32, எண் 107)

அல்லாஹ்வின் திருப்பெயரால் என ஆரம்பம் செய்கிறோமே அவன் உதவியின்றி நம்மால் செயல்படவே முடியாது என்பதை என்றாவது உணர்ந்தோமா? அவன் கைவிட்டால் நம்மை காப்பவர் யாருமில்லை ஒவ்வொரு காரியத்தை செய்யப்போகும்போது இன்ஷா அல்லாஹ் சொல்கிறோம் முடித்துவிட்டு எத்தனைபேர் நன்றி செலுத்துகிறோம்? மேலும் நம் உடல் ஆர்ரோக்கியதிற்கு காரணம் நம்முடைய உணவு கட்டுப்பாடு மற்று உடற்பயிற்சிதான் காரணம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அவ்வாறல்ல அது இறைவனின் அருட்கொடையும் சில சமயங்களில் சோதனையும் ஆகும் .நம்முடைய உணவுக்காகத்தான் உழைக்கிறோம் என்றபோதும் அந்த உணவில் அல்லாஹ் பரக்கத் செய்கிறான், நம்முடைய குறைவான சம்பாத்தியத்தில் அணைத்து தேவைகளையும் அல்லாஹ் நிறைவேற்றுகிறான் இது நம்முடைய சமுதாயத்திற்கு அல்லாஹ் அளித்த மாபெரும் அருட்கொடை ஆனாலும் நாம் குறைவாகவே நன்றி செலுத்துபவர்களாக இருக்கிறோம் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான் ,மேலும் வயிறு நிறைந்தாலும் மனது நிறைந்தாலும்" அல்ஹம்துலில்லாஹ்" என்ற அல்லாஹ்விற்கு நன்றி கூறவும் அவனது திருப்தியை நாடவும் மறந்துவிடக் கூடாது .

அடியான் ஒரு கவள உணவை சாப்பிட்டதும் "அல்ஹம்துலில்லாஹ் " என கூறும்போது அல்லது பானம் அருந்திவிட்டு "அல்ஹம்துலில்லாஹ் " எனக் கூறும்போது இறைவன் திருப்தி கொள்கிறான்.
அறிவிப்பாளர் :அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 5282.

ஆசிரியர் : முஹமது இன்சாப்(FRTJ செயலாளர்)

ஆங்கில இனையதளங்களில் கோவை மாவட்ட வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்ட செய்தி

http://twocircles.net/2011jul12/muslims_tamil_nadu_pledge_not_give_or_take_dowry.html  

தமிழில் பார்க்க கிளக்.....


http://www.indianmuslimobserver.com/2011/07/anti-dowry-campaign-by-tntj.html

 தமிழில் பார்க்க கிளக்.....

பராஅத்தும் மத்ஹபுகளும்!


நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்...
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது..
நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)
நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் ” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,
மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.
மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
source: www.tntj.net

திங்கள்

இலாஹிக்கு சம்சுல்லுஹா நேரடி அறைகூவல்..

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…திருவாளர் கா.அ.மு. பழுலுல் இலாஹி மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு என் மீது பல்வேறு அவதூறுகளையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் தமுமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தமுமுக தலைவர்கள் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். தமுமுகவிலிருந்து பி.ஜே. வெளியேறிய பின் தமுமுகவினருடன் சேர்ந்து கொண்டு பி.ஜே. மீதும் தவ்ஹீத் ஜமாஅத் மீதும் வரம்பு மீறி பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கொட்டித் தள்ளினார்.

இதில் தனிப்பட்ட முறையில் என் மீது அதிகமான தாக்குதலைத் தொடுத்தார். இதற்குக் காரணம் தமுமுக மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அவர் கிளம்பிய போது நான் அவருக்கு ஆதரவாகச் செல்லாதது தான். அவருடன் நான் கொண்டிருந்த நட்பின் காரணமாக, இவருக்குப் பின்னால் நான் செல்வேன் என்று எதிர்பார்த்தார். அந்த எதிர்பார்ப்பு பொய்யானதும் என்னை எப்படியேனும் ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கில் என் மீது பல பொய்க் குற்றச்சாட்டுக்களை சாட்டிக் கொண்டே இருந்தார். அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
முதன் முதலில் என் மீது பொருளாதாரக் குற்றச்சாட்டைச் சுமத்தி மேலப்பாளையம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரசுரங்களை அச்சிட்டு அவற்றை வீடு வீடாக, கடை கடையாக, வீதி வீதியாக அவரது தம்பியை வைத்து வினியோகிக்கச் செய்தார். அவ்வாறு வினியோகித்த மறு வாரம் அவரது தம்பியை அழைத்து மஸ்ஜிதுர்ரஹ்மானில் ஜும்ஆ முடிந்த பிறகு ஜமாஅத்தார்கள் முன்னிலையில் நானும் சகோதரர் எம்.எஸ். சுலைமானும் அந்தக் குற்றச்சாட்டுக்களைப் பொய்யென நிரூபித்தோம். அதன் பின்னால் அல்லாஹ்வின் கிருபையால் அவர் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அது மக்களிடம் எடுபடவே இல்லை.
இப்படிப்பட்டவர் தான் இப்போது ஓர் அபாண்டமான, அபத்தமான, பகிரங்கப் பொய்யான ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
மேலப்பாளையத்தில் ஒருவர் ஏதோ வியாபாரம் என்று சொல்லி பணம் திரட்டி ஏமாற்றி விட்டாராம். நான் அந்த வியாபாரத்தை ஹலால் என்று ஃபத்வா கொடுத்தேனாம். இதை நம்பி பலர் பணம் போட்டார்களாம். இவருக்கு  மறுமை நம்பிக்கை இருக்கின்றதா? என்ற சந்தேகம் தான் ஏற்படுகின்றது.
இன்னார், இன்ன வியாபாரம் செய்கிறார். அதில் பணம் போடலாமா? என்று என்னிடம் கேட்டவர் யார்?
அந்த வியாபாரம் ஹலாலானது தான் என்று நான் யாரிடம் ஃபத்வா கொடுத்தேன்?
அந்த ஃபத்வாவை நம்பி பணம் போட்டது யார்?
இப்படி யாராவது ஒருவரைக் காட்ட முடியுமா? அப்படி யாராவது கூறினால் அவர் என் முன்னால் வந்து நிரூபிக்கட்டும். வருபவன் உரிய சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் முபாஹலாவுக்குத் தயாராக வர வேண்டும்.
இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கூறும் பழுலுல் இலாஹி பொய்யன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்பதால் அவனுக்குப் பதில் எழுதுவதற்காக இந்தக் கடிதத்தை எழுதவில்லை. பொதுவாகவே இவர் அனுப்பும் மெயில்களைப் படிப்பதும் இல்லை. வேறு நண்பர்கள் அனுப்பியதால் தான் இதைப் பார்க்க நேர்ந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இவனது கடிதத்தைப் பரப்புவதற்குச் சிலர் இருக்கிறார்கள் என்பதால் இந்தக் கடிதத்தைப் பொதுவாக எழுதியுள்ளேன்.
உண்மையில், இப்படி ஒரு வியாபாரம் நடப்பதே எனக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை தெரியாது. அதில் யார் யார் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது.
பணம் கொடுத்தவர்களுக்குப் பணம் வராமல் பாதிப்புக்குள்ளான பிறகு தான் ஒவ்வொரு பூதமாக வெளிவருவதைப் பார்த்து எல்லோரையும் போன்று நானும் தெரிந்து கொண்டேனே தவிர இதுபற்றிய விபரம் எனக்கு அறவே தெரியாது.
நமது ஜமாஅத்தைச் சேர்ந்த சிலர் கூட்டாக ஒரு கம்பெனி நடத்தி வருகின்றனர். மருத்துவத் தொழிலுக்கான உபகரணங்கள் விற்பனை செய்யும் அந்தக் கம்பெனியில் தற்போது மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அந்த நபரும் ஒரு பங்குதாரர். அந்த அடிப்படையில் அவரை எனக்குத் தெரியும். மேற்படி ஜமாஅத் சகோதரர்களின் தொடர்பில் அவரிடம் சில தடவை கார் வாங்கிப் பயன்படுத்தியிருக்கின்றேன். அதுவும் இந்தக் குற்றச்சாட்டு எழுந்த பிறகு அதையும் நிறுத்தி விட்டேன். அவருடன் உள்ள தொடர்பே மேற்கண்ட ஜமாஅத் சகோதரர்களை வைத்துத் தான்.
மற்றபடி அவர் என்ன தொழில் செய்கிறார், அவரிடம் யாரெல்லாம் பணம் கொடுத்துள்ளார்கள் என்ற விபரங்கள் எனக்குத் தெரியாது. கார்கோ தொழிலில் பணம் போட்டதாகத் தற்போது ஏமாந்த சகோதரர்கள் தெரிவிப்பது தான் எனக்கும் தெரியும். அவர் கார்கோ தொழில் செய்தாரா? அதற்கு லைசன்ஸ் வைத்திருக்கிறாரா? என்பன பற்றி எனக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை.
அல்லாஹ்வின் கிருபையால் நான் இந்த ஜமாஅத்தில் இருப்பதால் என்னைச் சுற்றி புலன் விசாரணையுடன், பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு ஆயிரமாயிரம் பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் இந்த ஜமாஅத்தில் இருப்பதன் மூலம் அல்லாஹ் எனக்கு ஒரு பாதுகாப்புக் கவசத்தையும், பாதுகாவல் அரணையும் அளித்திருக்கின்றான். இதை நான் பெருமையாகவும் பெரும் பாக்கியமாகவும் கருதுகின்றேன்.
அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு சில நண்பர்கள் என்னிடம், “ஒரு லட்சம் ரூபாய் தாருங்கள். உங்களை எங்களது ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் சேர்த்துக் கொள்கிறோம். நீங்கள் எந்த முயற்சியும் இருக்க வேண்டாம். கிடைக்கும் லாபத்தில் உங்களுக்குப் பங்கு தருகிறோம்” என்று சொன்னார்கள்.
ஒரு லட்ச ரூபாய் என்னிடம் இல்லாவிட்டாலும் யாரிடமாவது கடன் வாங்கி அந்த நண்பர்களிடம் கொடுத்திருக்க முடியும்.
நான் பார்த்தது ஒன்றே ஒன்று தான். ரியல் எஸ்டேட் என்பது ஹலாலான வியாபாரம் தான். ஆனால் அதில் ஏதாவது ஒரு வில்லங்க நிலம் மாட்டி, அதில் ஒருவன் ஏமாந்து விட்டால் அது தவ்ஹீது வளர்ச்சிக்குத் தடைக்கல்லாகி விடும் என்று பயந்தே அதில் சேர மறுத்து விட்டேன்.
அல்லாஹ்வின் அருளால் இதுவரை இதில் மிகக் கவனமாக இருந்து தான் என்னுடைய ஏகத்துவப் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்கின்றேன்.
அல்லாஹ் எனக்கு தவ்ஹீதுக்கு வழிகாட்டிய பிறகு எனது திருமணம் நபிவழி அடிப்படையில் அமைய வேண்டும் என்று சபதமேற்றுக் கொண்டேன். எனக்காக ஒரு பெண்ணும் பேசப்பட்டது. அந்தப் பெண் எனக்கு நெருங்கிய உறவுக்காரப் பெண். இதைப் பற்றி என்னுடைய ஆசிரியர், மத்ரஸத்துர்ரஹ்மானின் முதல்வர் அப்துஸ்ஸலாம் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். பெண்ணைப் பற்றியும் அவளது வீட்டின் பின்னணியைப் பற்றியும் சொல்லும் பது, அந்தப் பெண் வீட்டினருக்கு ஒரு லட்சம் ரூபாய் லாட்டரியில் பரிசு விழுந்திருக்கின்றது என்று குறிப்பிட்டேன்.
உடனே அவர், “என்னிடம் நீ (தவ்ஹீது) பிரச்சாரம் செய்யும் போது, இவன் லாட்டரி விழுந்த வீட்டில் பெண் கட்டியவன்’ என்று எதிர் பிரச்சாரம் செய்வேன்” என்று சொன்னார்.
அவ்வளவு தான். அது என்னுடைய உள்ளத்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தவ்ஹீதுக்கு முட்டுக்கட்டை என்று எண்ணியும், நபிவழி அடிப்படையில் திருமணத்தை நடத்துவதற்கு இருந்த தடங்கல்களைக் கருத்தில் கொண்டும் இஸ்திகாரா செய்து விட்டு அந்தப் பெண்ணை வேண்டாம் என்று கூறி வேறு பெண்ணை மணந்தேன்.
இதன் பிறகு ஒவ்வொரு செயல்பாட்டிலும் முடிந்தவரை தவ்ஹீது பிரச்சாரத்திற்கு இடையூறு வந்து விடக் கூடாது என்ற அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
பம்பாயில் ஒரு அரபிக்கு விபச்சாரம் செய்ய பெண் ஏற்பாடு செய்து கொடுத்தார்; பள்ளிவாசல் பணத்தை பத்து லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டார் என்றெல்லாம் என் மீது மிகப் பயங்கர அவதூறுகளைக் கூறிய போதும் சரி, இப்போதும் சரி! எனக்கு இருப்பது ஒரே ஒரு வழிமுறை தான்.
இந்தக் குற்றச்சாட்டை என் முன்னால் நேரடியாக வந்து நிரூபிக்க வேண்டும்; அல்லது முபாஹலாவுக்கு முன்வர வேண்டும். இப்ராஹீம் நபியின் பாட்டையில் செல்லும் ஒரு தூய்மையான இயக்கத்தில் இருக்கும் ஏகத்துவவாதிகளுக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ள இது தான் வழி என்ற அடிப்படையில் இந்த அறைகூவலை விடுத்து முடிக்கின்றேன்.
இப்படிக்கு
எம். ஷம்சுல்லுஹா

ஞாயிறு

கோவையில் நடைபெற்ற மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொது கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக நேற்று 10.07.2011,   மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம்,  லாரி பேட்டை பகுதியில் நடைபெற்றது. இதில் மவ்லவி தமீம் அவர்கள் “இன்றைய இளைஞர்களின் நிலை?” என்ற தலைப்பில், செல்போன் என்ற ஒரு சாதனத்தால் இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் எவ்வாறு கெட்டு போகிறார்கள் என்பதையும், இளைஞர் சமுதாயம்  எந்த அளவிற்கு சீரழிந்து கொண்டு இருக்கிறது என்பதையும் விவரித்து பேசினார்.
அடுத்ததாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் மவ்லவி பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள், வரதட்சணையும் அதன் விசாரணையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். பெண்ணின் திருமணம்  முதல் குழந்தை பிறந்து அதை வளர்க்கும் வரை அவள் படுகின்ற இன்னல்களையும், துன்பங்களையும் உணர்ச்சி ததும்ப பேசினார்.
கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களியிடையே , நானோ, என்னுடைய மகளுக்கோ, என்னுடையே மகனுக்கே, எனக்கோ, திருமணத்தின் போது  பணமாகவோ, பொருளாகவோ, எந்த விதத்திலும் வரதட்சணையாக வாங்க மாட்டோம், வரதட்சணை கொடுக்க மாட்டோம், என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் தங்களது கைகளை உயர்த்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அல்லாஹ் அக்பர்……
இறுதியாக  பொதுகூட்ட மேடையிலேயே, நபிவழியில் நம் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இஸ்லாத்தில் திருமணத்தின் போது எந்தவிதமான சடங்குகளும் இல்லை என்பதையும், அதை நபி ஸல் அவர்கள் நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் இத்திருமணத்தின் மூலம் பிற சமுதாய மக்களும் அறிந்து கொண்டனர்….






சனி

500 இளநிலை விரிவுரையாளர்அரசு கல்லூரிகளில் நியமனம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 500 இளநிலை விரிவுரையாளர்களை மாதம் 6,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 500 இளநிலை விரிவுரையாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. மாதம் 6,000 ரூபாய் சம்பளத்தில், 5 ஆண்டுகளுக்கு அவர்கள் பணிபுரிய வேண்டும். யு.ஜி.சி., விதிமுறைப்படி இவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்படுவர்.வாரம் 12 மணி நேரம் இவர்கள் பணிபுரிய வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும், ஒதுக்கீட்டு முறை இதற்கும் பொருந்தும். ஐந்து ஆண்டுகள் பணி புரிந்ததும், கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுரைப்படி, காலமுறை ஊதியப்படி பணியமர்த்தப்படுவர்.

முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டுப்படி 17 நபர்களுக்கு இந்த பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது தகுதியானவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

கோவையில் மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ், வரும் ஞாயிற்றுகிழமை 10.07.2011 அன்று,

கோவையில் மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம்

உரை: பக்கீர் முஹம்மத் அல்தாபி
தலைப்பு: வரதட்சணையும் அதன் விசாரணையும்

உரை: தமீம்
தலைப்பு: இன்றைய இளைஞர்களின் நிலை

                      இடம்: லாரிபேட்டை பின்புறம்,,
              நேரம்: மாலை 7:00மணி முதல் 10.00 மணி வரை

வெள்ளி

பொருளாதார சுமையால் தமிழன் டிவி நிகழ்ச்சிகள் நிறுத்தம் – இமயம் டிவியில் நிகழ்ச்சிகள் தொடரும்!

ஒவ்வொரு மாதமும் தமிழன் டிவி க்கு இரண்டரை லட்சம் ரூபாயும் ( வாரம் ஐந்து நாட்கள்) இமயம் டிவி யில் தினமும் ஒளிபரப்ப இரண்டரை லட்சம் ரூபாயும் செலவாகிறது.
இரண்டுக்கும் சேர்த்து மாதம் ஐந்து லட்சம் செலவிடுவதால் கடன் சுமை ஏறிக் கொண்டே போகிறது.
பல செலவுகளைக் குறைத்த போதும் இதை சமாளிக்க இயலவில்லை. வளைகுடாவில் வாழும் நம் சகோதரர்களும் பொருளாதார மந்த நிலை காரணமாக சிரமப்பட்டு வருகிறார்கள்.
எனவே தான் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் மட்டும் நிகழ்ச்சி நடத்தினால் போதும் என்று முடிவு செய்து இமயம் டிவியில் அரைமணி நேரம் மட்டும் ஒளிபரப்புவது என்றும் தமிழன் டிவி யில் நிறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ் நிதி நிலையை மேம்படுத்தும் போது அதற்கேற்ப நிகழ்ச்சிகளை அதிகரித்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
-தலைமையகம்

ஊழலின் மூலத்தை எதிர்க்க மறுக்கும் ஊழல் எதிர்ப்பாளர்கள்



இதோ இந்தியாவின் அனைத்து மக்களின் பிரதிநிதிகள்' என்று இரண்டு தனி மனிதர்கள் கதாநாயகர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தனி மனிதர்கள் யார் என்பதே தமிழ் நாட்டுக்குத் தெரியாது. ஒருவர் கதர்குல்லாய் அணிந்திருக்கிறார் – பெயர் அன்னா அசாரே என்கிறார்கள். "பிரதமரே ஊழல் செய்தாலும் விடக் கூடாது; "லோக்பால்' என்ற அதிகாரம் கொண்ட அமைப்பை அமைத்தாலே ஊழல் ஒழிந்துவிடும்' என்கிறார்; ஊழல் குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்கிறார். தூக்குத் தண்டனையை காந்தியே எதிர்த்தவர்தான் என்பது, இந்த நவீன காந்திக்கு தெரியாமல் போய்விட்டது.


"உண்ணாவிரதம்' என்ற போராட்டத்தை அறிவித்தார், அவ்வளவுதான். பார்ப்பன தேசிய ஊடகங்கள் அவற்றை தேசியப் பிரச்சனையாகவே மாற்றின. சமரசம் பேச ஆட்சியாளர்கள் ஓடிவந்தார்கள். மணிப்பூர் மாநிலத்தில் கொடூரமான ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி, இரோம் ஷர்மிளா என்ற வீராங்கனை கடந்த 10 ஆண்டுகளாக பட்டினிப் போராட்டம் நடத்துகிறார். மருத்துவமனையில் அவரை அடைத்துவைத்து ராணுவம் வலுக்கட்டாயமாக அவருக்கு மூக்கின் வழியாக உணவைத் திணிக்கிறது. ஷர்மிளாவின் பட்டினிப் போராட்டத்தை – ஒரு செய்தியாகக்கூட இந்த ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சென்றதில்லை.

அன்னா அசாரேயின் உண்ணாவிரத மேடையில் காந்தி படத்தை காணவில்லை. காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே வணங்கிய "பாரத மாதா' படம்தான் அலங் கரித்துக் கொண்டிருந்தது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரங்கள் – அசாரேயின் படைத்தளபதிகள். அசாரே வுக்கு மிகவும் பிடித்தது, குஜராத்தின் மோடி ஆட்சிதான்; அங்கேதான் நல்லாட்சி நடக்கிறது என்கிறார்.

முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த "குஜராத் ராஜபக்சே'யின் ஆட்சியில் – 17 ஆயிரம் கோடி ரூபாய் குளம் வெட்டும் ஊழல், 260 கோடி ரூபாய் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழல், 600 கோடி ரூபாய் மீன் வளர்ப்பு திட்ட ஊழல் என ஊழல்கள் அணிவகுத்து நிற்கின்றன. கிராமங்களில் வறுமையின் கோராத்தாண்டவம்; மக்கள் கிராமங்களை காலி செய்துவிட்டு நகரங்களை நோக்கி ஓடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு – அவர்கள் விரும்புகிற இடங்கள் தாராளமாக ஒதுக்கப்படுகின்றன; அங்கே 5 ஆண்டுகளுக்கு எந்த வரியும் கிடையாது. அன்று மன்னர்கள் ஆட்சியில், இப்படித்தான் ஊர்கள் "தானமாக' (சதுர்வேதி மங்கலங்கள்) வழங்கப்பட்டன. அங்கே மன்னனின் எந்த வரி விதிப்பும் நடைமுறைக்கு வராது. அன்று சதுர்வேதி மங்கலங்கள்; இன்று அதற்குப் பெயர் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

டாட்டாவின் "நா÷னா' கார் தயாரிப்புக்கு – உற்பத்தி செலவைவிட மோடி கூடுதல் மானியம் தருகிறார். நிலத்தைப் பறிகொடுத்த மக்கள், அரசிடமிருந்து இன்னும் இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்று கதறுகிறார்கள். முஸ்லிம்கள் இனப்படுகொலை வழக்கில், மோடிக்கு "நீரோ மன்னர்' என்று பட்டம் சூட்டியது உச்ச நீதிமன்றம் (ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, பிடில் வாசித்தவன் நீரோ). இதே நரேந்திர மோடி குஜராத்தில் "லோக் அயுக்தா' என்ற ஊழல் மீட்புக் குழுவை அமைக்க மறுத்து விட்டார் என்பது அசாரேவுக்கு தெரியாதுபோலும். ஊழலுக்காக உயிர் விடவும் தயாரான அசாரே, மராட்டியத்தில் தனது சொந்த கிராமத்தில் செயல்படுத்தி வரும் நல்வாழ்வுத் திட்டங்களில், சாதிப் பாகுபாடுகளை கைவிடத் தயாராக இல்லை என்று சுட்டிக் காட்டுகிறார், மதச்சார்பற்ற எழுத்தாளர் ராம்புனியானி.

கதாநாயகனாகக் களமிறக்கப்பட்டுள்ள மற்றொரு ஊழல் எதிர்ப்பு நாயகன் பாபாராம்தேவ். காவியுடையில் காட்சி தரும் "யோகா மாஸ்டர்'. பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று வடமாநிலங்களில் இதுவரை இயக்கம் நடத்தியவர். இப்போது, வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோரையும் தூக்கில் போட வேண்டும் என்கிறார். காவி உடை தரிக்கும் இவரின் சொத்து மதிப்பு 5,000 கோடி ரூபாய் என்றும், ஆண்டு வருமானம் 1,000 கோடி ரூபாய் என்றும் செய்திகள் கூறுகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் பதஞ்சலியில் மிகப் பெரிய யோக பீடம்; 300 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை; 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள்; மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு; ஸ்காட்லாந்து நாட்டில் சொந்தமான தனித் தீவு என்று கொடிகட்டிப் பறக்கிறது இவரது சாம்ராஜ்யம்.

"பசுவதை'க்கு மரண தண்டனை கோரும், இவரது மருந்து நிறுவனத் தயாரிப்பில், விலங்குகளின் எலும்புகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்து, மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. பா.ஜ.க., பார்ப்பன இந்துத்துவ சக்திகள் புடை சூழ "ராம்லீலா' மைதானத்தில் இவர் "உண்ணாவிரத'த்தைத் தொடங்கினார். ஊழல் அரக்கனாக – 10 தலை ராவணன் உருவத்தை அமைத்து, "ராம ராஜ்ய' பெருமையைப் பறை சாற்றினார்கள்.

ஊழல் ஒழிப்பு பேரார்வம், திடீரென்று இவர்களிடம் பெருக்கெடுத்து ஓடியது ஏன்? காரணம் இருக்கிறது. அண்மைக்காலமாக காமன் வெல்த் விளையாட்டு ஊழல்; ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்; 2ஜி அலைக்கற்றை ஊழல் என்று ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி – மக்களிடையே ஊழல் எதிர்ப்பு உணர்வு உருவானது. பாரதிய ஜனதா, இந்த உணர்வுகளை அறுவடை செய்ய திட்டமிட்டது. அவர்களின் திட்டமெல்லாம் 1975 ஆம் ஆண்டை மீண்டும் கொண்டு வரலாம் என்பதுதான். ஜெயப்பிரகாஷ் நாராயண், அப்போது – இந்திரா ஆட்சிக்கு எதிராக "முழுப் புரட்சி' இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம், இந்துத்துவா சக்திகள் – ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதே நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே அத்வானிகளின் துடிப்பு.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள், மீண்டும் மக்கள் மன்றத்தில் கால் பதிப்பதற்கு – அவர்களிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. மீண்டும் "அயோத்தி ராமனிடம்' அடைக்கலம் புகுந்தால், மக்கள் ஆதரவு இருக்கப் போவது இல்லை என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள்.

பா.ஜ.க. பரிவாரங்களின் இந்த சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் கட்சி, இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டது. அன்னா அசாரே உண்ணாவிரதத்தைத் தொடங்கியவுடன் – அவரிடம் சமரசம் பேச காங்கிரஸ் ஓடியது. அவரது பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்தது. பாபாராம்தேவை சரிகட்டுவதற்கு, நான்கு மத்திய அமைச்சர்கள் ஓடினார்கள்! ஆனால், காங்கிரசுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்தியாவின் பிரதமரை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது, ராம்தேவின் கோரிக்கைகளில் ஒன்று. கடந்த காலங்களில் பாரதிய ஜனதா முன்மொழிந்த கோரிக்கைதான் இது. நாட்டின் 125 கோடி மக்கள் தொடர்பான ஒரு பிரச்சனையில், ஒரு "யோகா மாஸ்டர்' முடிவெடுக்கும் அதிகாரத்தை தன்னிடம் எடுத்துக் கொண்டு விட்டார். அம்பேத்கர் போராடிப் பெற்ற – இரட்டை வாக்குரிமைக்கு எதிராக காந்தி தொடங்கிய உண்ணாவிரத சண்டித்தனத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

ஊழல் – பதுக்கல் பணத்தை எதிர்க்கக் கிளம்பியிருக்கும் இவர்கள், ஊழலின் வேகம் பாய்ச்சலாக மாறியதற்கான காரணத்தை கூறõமல் ஏன் மறைக்கிறார்கள்? ஒரு காலத்தில் – அரசு நிர்வாக மட்டத்தில் கையூட்டு பெறும் பழக்கம் இருந்தது. பெரும் தொழிலதிபர்கள் – தொழில் உரிமம் – தொழில் அனுமதி பெறுவதற்கு கையூட்டு தந்து வந்தார்கள். அப்போதெல்லாம் தொழில் கொள்கைகளை அரசுகள்தான் உருவாக்கின. ஆனால், 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு "சுனாமி வரத் தொடங்கியது. அது, "தாராளமயமாக்கல்' என்ற கொள்கை வடிவில் வந்தது. அதன் பிறகு அரசின் தொழில் கொள்கைகளை வடிவமைப்பதையே பெரும் முதலாளிகளும் – பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டன. வி.பி. சிங் மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தியதும் அதே காலகட்டம்தான்.

அரசுத்துறை நிறுவனங்களில் பார்ப்பன ஆதிக்கத்தில் "அசைவு' தொடங்கியது. வடமாநிலங்களில் பார்ப்பன ஆதிக்க சாதி யினரே முதல்வர்களாக வந்து கொண்டிருந்த நிலையும் மாறத் தொடங்கியது. அப்போது பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியின்போது நிதியமைச்சர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த தாராளமயமாக்கல் கொள்கைதான் – அரசுத் துறைகளை, பொதுத் துறை நிறுவனங்களை, தனியார் பிடியில் கொண்டு போய் சேர்த்தது. முதலமைச்சர்களாக – பார்ப்பனரல்லாத – இதர சமூகப் பிரிவினர் வந்தாலும் – அவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் விலை பேசி வாங்கி விட்டன. முதலமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர், அரசியல் கட்சிகளை பார்ப்பன – பன்னாட்டு நிறுவனங்களே இயக்கத் தொடங்கின.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை – தனியார் துறைக்கு விற்று விட்டால் சர்வதேசக் கடன்களை அடைத்துவிடலாம் என்ற ஆலோசனையை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரங்கராஜன் என்ற பார்ப்பனர் முன் வைத்தார். அவர் தலைமையிலேயே நரசிம்மராவ் ஒரு குழுவை நியமித்து, பொதுத் துறை பங்குகள் வேகம் வேகமாக விற்பனை செய்யப்பட்டன. முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் குழு (டிஸ்இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி) என்று அதற்குப் பெயர். தொடர்ந்து வந்த பாரதிய ஜனதாவின் ஆட்சியில் குழுவுக்கு பதிலாக, ஓர் அமைச்சரகத்தையே உருவாக்கினார்கள். ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் அருண்ஷோரி தான் இந்தத் துறையின் அமைச்சர்.

இப்போது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் என்று சர்வதேச அளவில் ஆய்வுகளை மேற்கொண்ட தேவ்கர் குழு கூறுகிறது. தேவ்கர், சர்வதேச நிதி நிறுவனத்தில் பொருளாதார ஆய்வாளராகப் பணியாற்றியவர். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அதாவது, "தாராளமயமாதல்' கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகுதான், மேற்குறிப்பிட்ட தொகையில் 68 சதவிகிதம் (6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்) வெளிநாட்டு வங்கிகளுக்கு திருட்டுத்தனமாகப் போயிருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் மூளை பார்ப்பன அதிகார வர்க்கம். இவர்களின் கொள்ளைக்காக, வனச் சட்டங்கள், மின்சாரம், சுரங்கங்கள் மற்றும் தண்ணீர் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. அன்னியச் செலாவணி மோசடிகளை கிரிமினல் குற்றமாக்கிய "பெரா' சட்டங்கள் நீக்கப்பட்டன. மக்கள் நிலத்தை அபகரித்து, அவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வரத் தொடங்கின. இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் "கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் தொகை – 240 கோடி ரூபாய் என்றும்; இந்தத் தொகை அப்படியே வெளிநாட்டு வங்கிகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறது என்றும் வாஷிங்டனில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் (Global Financial Integrity) கூறுகிறது.

2005 – 2006 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சி "கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி 3 லட்சத்து 74 ஆயிரத்து 937 கோடி ரூபாய் என்று ஒடுக் கப்பட்ட மக்களின் குரலை எதிரொலித்து வரும் கட்டுரையாளர் சாய்நாத் குறிப்பிடுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை பெறாத அரசியல் கட்சிகளே இல்லை; பொதுவுடைமைக் கட்சிகளும் இதில் அடக்கம். அண்மையில் "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு, இதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. இப்படி பெரும் தொழில் நிறுவனங்களுக்கு "தானமாக'க் கொட்டி அழப்படும் பெரும் தொகை, ஊழல் தொகைதானே! ஊழல் எதிர்ப்பாளர்கள் ஊழலின் மூலத்தை ஏன் எதிர்க்கவில்லை? இவர்களின் உண்ணாவிரத நாடகச் செலவும் – கார்ப்பரேட் நிறுவனங்களின் "கணக்குப் புத்தகங்களில்' பதியப்படுவதாலா?

2009 ஆம் ஆண்டு, இந்திய ஆட்சிகளின் "செல்லப்பிள்ளை' தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு முன் தேதியிட்டு 91 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகையை நிதி நிலை அறிக்கையில் ப. சிதம்பரம் அறிவித்தார். இந்த வரிச் சலுகையை "தேசிய நலன்' கருதி வரவேற்பதாக பாரதிய ஜனதாவின் வெங்கையா நாயுடு நாடாளுமன்றத்தில் பேசினார். அம்பானிகளைக் கொழுக்க வைப்பதில்தான் இவர்களின் தேசிய நலன்களே அடங்கியிருக்கின்றன.

இந்திய கிராமங்களில் நிலவும் தீண்டாமை குறித்து தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நூலாக வெளிவந்துள்ளது. அதில், “சமூகத்தில் ஏற்கனவே நிலவிவரும் சாதியப் பாகுபாடுகளை பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது தொழில் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. அவர்களின் உழைப்பைச் சுரண்டி, குறைந்த கூலிக்கு ஒப்புக் கொள்ளச் செய்வதற்கு, சாதிய ஏற்றத்தாழ்வுகள் நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன'' என்று கூறுகிறது.

“பன்னாட்டு நிறுவனங்களிடம் பொருளாதார அதிகாரங்கள் மய்யம் கொண்டிருப்பது ஆபத்தானது. இதனால் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மாநிலங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து – சமத்துவமற்ற நிலை மேலும் மேலும் வளர்கிறது'' என ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியரும், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினருமான திருமதி சோயா அசன் எச்சரித்துள்ளார்.

ஊழலுக்கு நீர் ஊற்றி வளர்த்து, நாட்டின் அரசியல் பொருளாதார அதிகாரங்களை தன் வசமாக்கிக் கொண்டு, வேகம் வேகமாக வளர்ந்து வரும் இந்த அதிகாரத் திமிங்கிலங்களை எதிர்க்காமல் – அவர்களின் மூகமூடிகள் ஊழலை எதிர்க்க வந்திருக்கிறார்கள். இப்போது, ஓர் அடிப்படையான கேள்வியை எழுப்ப வேண்டி யிருக்கிறது. ஊழல் ஒழிப்பு மட்டும்தான் இந்த நாட்டில் முதன்மையாக நிற்கும் பிரச்சனையா? ஊழலை மட்டும் ஒழிப்பது, இந்த சமுதாயத்தில் சாத்தியமா?

இந்த சாதிய சமூக அமைப்பே ஊழலைவிட கொடூரமானது என்ற எதார்த் தத்தை, திட்டமிட்டு ஏன் மறைக்க வேண்டும்? இன்னும் இரட்டை டம்ளர்கள், இரட்டை சுடுகாடுகள், சேரிகள், சாதிய வன்கொடுமைகள், "கவுரவ'க் கொலைகள் – அதை அங்கீகரிக்கும் கட்டப் பஞ்சாயத்துகள், சமூகத்திலும் பொருளாதாரத்திலும் விலக்கப்பட்டு நிற்கும் தலித் மக்களின் பறிக்கப்படும் வாழ்வுரிமைகள் – இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா? இவர்களின் இதயங்களைத் தொடவில்லையா?

ஒரு மனிதனின் சமூக நிலையும் கவுரவமும் அவர் பிறவியிலேயே நிர்ணயிக்கப்படும் ஒரு நாற்றமெடுத்த சமூகம், உலகில் எந்தப் பகுதியிலாவது உண்டா? அரசியலும் பொருளாதாரமும் – சமூகம் பெற்றெடுக்கும் குழந்தைகள்தான். சமூகமே ஊழலாகிக் கிடக்கும்போது, இந்த ஊழல் நாற்றத்தைப் பாதுகாத்துக் கொண்டு, பொருளாதார ஊழல்களை மட்டும் ஒழித்துவிட இயலுமா?

அன்னா அசாரேயும், பாபாராம் தேவும் குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. உண்மையில், இந்த நாட்டின் மக்கள் அனைவரும் "சிவில் சமூகமாக' "குடிமக்கள்' என்ற உரிமைக்குரியவர்களாக வாழ்கிறார்களா? சட்டத்தின் அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் பொதுவாக சாதியச் சமூக அமைப்பு ஏற்றுக் கொண்டு விட்டதா?

ஒரு ஜனநாயக அமைப்பின் "சிவில் சமூகத்துக்கான இலக்கணம் என்ன? அம்பேத்கர் கூறுகிறார் : “சகோதரத்துவம் என்பது, ஜனநாயகத்தின் மற்றொரு பெயர்தான். ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல; முக்கியமாக அது, ஒரு கூட்டு வாழ்க்கை முறை. வழிவழியாக பெறப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. சாரத்தில் அது சமூக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கே ஆகும்.''

சமூக மனிதர்களுக்கு மதிப்பும், மரியாதையும் மறுக்கப்படுவதே இந்த நாட்டின் "பெருமை'. அதுவே இங்கு "÷தசம்; தேசப்பற்று'. அதற்கே "புனிதம்' "தெய்வீகம்' "தார்மீகம் என்று பெருமைகள் எற்றப்படுகின்றன. "சாதி தர்மத்தை மீறாதே' என்பதே இங்கு சமூக ஒழுங்காக கட்டமைக்கப்படுகிறது. செய்த "பாவ'ங்களுக்கு லஞ்சம் கொடுத்து "புண்ணியம்' பெரும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ள சமூகம் இது. "வேண்டுதல்' "தட்சணை' "பாவவிமோசனம்' "பரிகாரம்' என்ற பெயர்களில் லஞ்சம் இங்கே புனித மகுடங்களை சூட்டிக் கொண்டு நிற்கிறது.

குறுக்கு வழியில் சட்ட மீறலில் நேர்மையற்ற முறையில் பயனடைவதுதான் "லஞ்சம் – ஊழல்' என்றால், அதே இலக்கணம் சாதியச் சுரண்டலுக்கும் அப்படியே பொருந்தும். சமூகத்தின் இந்த ஊழலை அப்படியே காப்பாற்றிக் கொண்டு, அந்த நச்சு மரத்தின் வேர்களுக்கு நீர் ஊற்றி வளர்த்துக் கொண்டு, துளிர்விடும் இலைகளான "பொருளாதார ஊழலை' மட்டும் வெட்டுவதற்கு "அரிவாள்' தூக்கிக் கிளம்புவோர் மக்களை திசை திருப்பும் மனிதர்களே!

அம்பேத்கர் கூறுகிறார் :

“நீங்கள் எந்தத் திசையில் சென்றாலும் சாதிக் கொடூரன் வந்து வழிமறிப்பான். இந்த சாதிக் கொடூரனை ஒழிக் காமல் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ அடையவே முடியாது.''
keetru

வியாழன்

-சிரிக்கும் இறைவன்-- மகிழும் மக்கள்--

إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا

يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

‘தீர்ப்பு வழங்கும் நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18)

மக்களெல்லாம் வெட்ட வெளியில் ஒன்று கூட்டப்பட்டதும் அவர்களை விசாரிக்க இறைவன் அங்கே வருவான். வானவர்கள் அணியணியாக வருவார்கள். இறைவனது அர்ஷை எட்டு வானர்கள் சுமந்து வருவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا

وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا

‘இப்பூமி தூள் தூளாக்கப்பட்டதும் உமது இறைவன் வருவான். வானவர்களும் அணியணியாக வருவார்கள்’ (அல்குர்ஆன் 89:21,22)

فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ

وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً

فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ

وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ

وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ

சூரில் ஒரே ஒரு முறை ஊதப்பட்டதும், இப்பூமியும் மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாகத் தகர்க்கப்படும் போது அந்நாளில் தான் அந்த (மாபெரும்) நிகழ்ச்சி நடைபெறும். வானம் பிளந்து விடும். அந்நாளில் அது பலவீனப்பட்டதாக இருக்கும். வானவர்கள் வானத்தின் கோடியில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை தங்களுக்கு மேல் எட்டு வானவர்கள் சுமந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 69:13-17)

இறைவனின் வருகை எவ்வாறு என்பதை நம்மால் கற்பனை செய்ய இயலாவிட்டாலும் அல்லாஹ் அவ்வாறு கூறுவதால் அப்படியே நம்ப வேண்டும். அவனுக்கே உரிய முறையில் அவன் வருவான் என்றே நம்ப வேண்டும். சுயமாகக் கூறப்படும் எவரது விளக்கத்தையும் நாம் ஏற்கக் கூடாது. எட்டு வானவர்கள் அவனது அர்ஷைச் சுமக்க, ஏனைய வானவர்கள் புடைசூழ வல்ல இறைவன் விசாரணை நடத்துவதற்காக மஹ்ஷர் மைதானத்துக்கு வருவான் என்று நம்புவதே சரியானதாகும்.

அர்ஷில் வீற்றிருக்கும் நிலையில் வல்ல இறைவன் வருவது உவமையாகக் கூறப்பட்டதன்று, நேரடியான பொருளிலேயே கூறப்பட்டது என்பதற்கு மேலும் சில சான்றுகள் உள்ளன.

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ

‘அந்நாளில் சில முகங்கள் செழிப்புடனும் தம் இறைவனைப் பார்த்துக் கொண்டுமிருக்கும்’ (அல்குர்ஆன் 75:22,23)

நபி (ஸல்) அவர்கள் பவுர்ணமி இரவில் நிலவைப் பார்த்தார்கள். அந்த முழு நிலவை நீங்கள் காண்பது போல் உங்கள் இறைவனையும் நிச்சயமாகக் காண்பீர்கள் என்று அப்போது கூறினார்கள். (அறிவப்பவர்: ஜரீர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

‘நிச்சயமாக அல்லாஹ் மூமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிப்பான். (இது மஹ்ஷர் வெளியில் நடக்கும்)’ என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

மூமின்கள் இறைவனைக் காண்பார்கள் என்பது எவ்வளவு நிச்சயமோ அதே அளவு இறைவனின் வருகையும் நிச்சயமானதாகும்.

சந்திரனைப் பார்ப்பது போல நீங்கள் பார்ப்பீர்கள் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் (மற்றொரு அறிவிப்பில்) உயரத்தில் இருக்கும் சந்திரனைக் காண்பதை விட்டும் ஒருவர் மற்றவரைத் தடுக்க முடியாதது போல இறைவனைக் காண்பதையும் ஒருவர் மற்றவருக்குத் தடுக்க முடியாது என்று விளக்கினார்கள்.

மக்கள் நெரிசல் காரணமாக யாரும் யாருக்கும் இறைவனின் திருக்காட்சியைத் தடுக்க முடியாது. அவ்வளவு உயரத்தில் இறைவன் காட்சி தருவான் என்பது நபியவர்களின் இந்த உவமையிலிருந்து தெரியவரும். மற்றொரு ஹதீஸ் இதைத் தெளிவாகவும் விளக்குகின்றது.

இறைவனின் அர்ஷைச் சுமந்துள்ள வானவர்களில் ஒரு வானவர் பற்றிக் கூற எனக்கு அனுமதியளிக் கப்பட்டது. அவ்வானவரின் காதுக்கும் தோள் புஜத்துக்கும் இடையே எழுநூறு ஆண்டுகள் நடக்கும் தொலைவு இருக்கும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது)

காதுக்கும் தோள்புஜத்துக்கும் இடையே இவ்வளவு தொலைவு என்றால் அவ்வானவர்களின் பிரம்மாண்டத் தோற்றத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். இத்தகைய பிரமாண்டமான தோற்றம் கொண்ட வானவர்கள் வல்ல இறைவனின் அர்ஷைச் சுமந்து வரும் போது அனைவரும் காணக்கூடிய அளவுக்கு இறைவன் இருப்பான் என்பதை அறியலாம்.

இறைவனைத் தரிசித்தல், வானவர்களின் பிரமாண்டமான தோற்றம் ஆகியவற்றைச் சிந்தித்தால் இறைவனின் வருகை என்பது அதன் நேரடிப் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறியலாம்.

இறைவன் வருவதற்கு முன் மக்கள் அனைவரையும் ஒருவானவர் விசாரணை நடைபெறும் இடத்திற்கு அழைப்பார். அவரை மக்கள் அனைவரும் தொடர்வார்கள். அங்கே குறுக்கு வழி ஏதும் இராது. நடந்து செல்லும் காலடி ஓசை தவிர வேறு எந்த ஓசையுமின்றி வாய்பொத்தி அவ்வானவரை மக்கள் தொடர்ந்து செல்வார்கள்.

يَوْمَئِذٍ يَتَّبِعُونَ الدَّاعِيَ لَا عِوَجَ لَهُ ۖ وَخَشَعَتِ الْأَصْوَاتُ لِلرَّحْمَٰنِ فَلَا تَسْمَعُ إِلَّا هَمْسًا

அந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் பற்றிச் செல்வார்கள். அதில் எத்தகைய கோணலும் இருக்காது. மேலும் ரஹ்மானுக்கு முன் அனைத்து சப்தங்களும் அடங்கி விடும். காலடி ஓசை தவிர வேறு ஓசை எதனையும் நீர் கேட்க மாட்டீர்! (அல்குர்ஆன் 20:108)

فَتَوَلَّ عَنْهُمْ ۘ يَوْمَ يَدْعُ الدَّاعِ إِلَىٰ شَيْءٍ نُّكُرٍ

خُشَّعًا أَبْصَارُهُمْ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌ مُّنتَشِرٌ

مُّهْطِعِينَ إِلَى الدَّاعِ ۖ يَقُولُ الْكَافِرُونَ هَٰذَا يَوْمٌ عَسِرٌ

நபியே அவர்களை அலட்சியப்படுத்தி விடுவீராக. அவர்கள் வெறுக்கக் கூடிய விசாரணைக்காக அழைப்பாளர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் புதைகுழிகளிலிருந்து அவர்கள் வெளிப்படுவார்கள். அழைப்பாளரிடம் விரைந்து வருவார்கள். இது மிகவும் கஷ்டமான நாள் என்று அக்காபிர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 54:6-8)

--அ.அப்துல் வஹாப், சேலம்.

பாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக்க

இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை  பயன்படுத்த முடியும். இப்படி நாம் உருவாக்கும் பாஸ்வேர்டை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ, அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது பாஸ்வேர்ட் உருவாக்கும் பொழுது பாஸ்வேர்டை கடினமாக உருவாக்க வேண்டும்.

எண்கள்,பெரிய எழுத்துக்கள்(capital Letters), சிறிய எழுத்துக்கள்(Small Letters), மற்றும் குறியீடுகள்(Special Characters) ஆகியவை கலந்து ஒரு பாஸ்வேர்டை உருவாக்கினால் உங்கள் பாஸ்வேர்ட் யாராலும் கண்டறிய முடியாது. மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இது போல பாஸ்வேர்டை எப்படி உருவாக்குவது என பார்க்கலாம். இது போல பாஸ்வேர்டை உருவாக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

இன்ஸ்டால் செய்யும் முறை:
  • டவுன்லோட் செய்த மென்பொருளை(.exe) இன்ஸ்டால் செய்ய டபுள் க்ளிக் செய்து வரும் விண்டோவில் Run கொடுக்கவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் Next கொடுக்கவும். அந்த விண்டோவில் டூல்பார் இன்ஸ்டால் ஆப்சன் இருக்கும் அதில் உள்ள டிக் மார்க்கை நீக்கி விடவும்.
  • அடுத்து வரும் கீழே இருப்பதை போல இரண்டு விண்டோ வரும் அதில் உள்ள SKIP பட்டணை அழுத்தவும்.

  • அடுத்து கடைசியாக Finish என்ற பட்டணை அழுத்தினால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகி மென்பொருள் ஓபன் ஆகும். 
உபயோகிக்கும் முறை:
  • முதலில் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுக்கான பாஸ்வேர்டை தேர்வு செய்யுங்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க இந்த பாஸ்வேர்டை கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் Password Length என்ற இடத்தில் உங்கள் பாஸ்வேர்ட் அளவை தேர்வு செய்து (குறைந்தது 10 தேர்வு செய்யவும்) அடுத்து கடைசியாக உள்ள Quantity என்ற இடத்தில் உங்கள் எதனை பாஸ்வேர்ட் வேண்டுமோ அதி தேர்வு செய்து கீழே உள்ள Create Password(s) என்ற பட்டணை அழுத்தவும். 
  • அடுத்து உங்களுக்கான பாஸ்வேர்ட்கள் லிஸ்ட் வரும். 
  • இதில் பச்சை நிறத்திலும், வெளிர் நீல நிறத்திலும் உள்ள paaswerdkal சிறந்த பாஸ்வேர்ட்கள். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஏதேனும் பாஸ்வேர்ட் வந்தால் அவைகளை உபயோகிக்க வேண்டாம்.
  • இந்த மென்பொருளில் ஒரு முறை வந்த பாஸ்வேர்ட் திரும்பவும் வாராது ஆகையால் நம்முடைய பாஸ்வேர்ட் மற்றவர்க்கும் தெரியலாம் என்ற அபாயம் இல்லை.
  • இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக நம்முடைய பாஸ்வேர்டை சேமித்து வைக்க Password Manager என்ற வசதியும் உள்ளது. இதானால் நாம் பாஸ்வேர்டை மறந்துவிடுவோம் என்ற பயமும் இல்லை.
  • இது போன்று நமது பாஸ்வேர்டை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்கவும்.

செவ்வாய்

இந்த வார உணர்வில் (ஜுலை 8)

முஸ்லிம் இனப்படுகொலை ஆவணங்கள்:பல்டியடிக்கும் மோடி அரசு-பொய் கூறுவதாக காங்கிரஸ்

2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்து மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தினர். இக்காலக்கட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டதாக மாநில அரசின் வழக்கறிஞர் நானாவதி கமிஷன் முன்பு தெரிவித்திருந்தார்.

இது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்காலிகமானதும், முக்கியத்துவம் இல்லாததுமான ஆவணங்கள் தாம் சட்டப்படி அழிக்கப்பட்டன என குஜராத் மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாநில உளவுத்துறையின் லாக் புக், இனப்படுகொலை நடந்த வேளையில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட நிரந்தரமான ஆவணங்கள் அழிக்கப்படவில்லை. அது தற்போதும் கிடைக்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.

2002 ஆம் ஆண்டைய குஜராத் மாநில உளவுத்துறையின் ஆவணங்களை கோரி மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் நானாவதி கமிஷனை அணுகியிருந்தார்.அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார் என செய்திகள் வெளியாகின.

ஆனால், தற்போது அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.பி. வக்கீல் கூறியதை பத்திரிகைகள் திரித்து வெளியிட்டதாக குஜராத் மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வழக்கு தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் அளித்துள்ளோம்.

கலவரம் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் கோரிய அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் பாதுகாப்பாக உள்ளன என குஜராத் மாநில அதிகாரி கூறுகிறார்.

இதற்கிடையே, மாநில அரசு மற்றும் மூத்த அரசு வழக்கறிஞரின் முரண்பட்ட அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இச்சம்பவத்தில் குஜராத் அரசு மக்களிடம் பொய் கூறுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். இனப்படுகொலை தொடர்பாக அரசு ஏராளமானவற்றை மறைத்துள்ளது என்பதற்கு இது ஆதாரமாகும்.

ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக ஒருபுறம் அரசு வழக்கறிஞர் கூறுகிறார். மறுபுறம் உள்துறை அமைச்சகம் இல்லை என கூறுகிறது. அவ்வாறெனில் அரசு முதலில் கூறியது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது இரண்டாவதாக கூறியது பொய்யாக இருக்க வேண்டும்.

ஆவணங்கள் அழிக்கப்படவில்லையெனில் அவை எங்குள்ளன? ஆவணங்கள் வழக்கின் சட்ட நடவடிக்கைகளின் பகுதியாக அமைந்துள்ளனவா? இதனை நாடு அறிய விரும்புகிறது என சிங்வி தெரிவித்துள்ளார்.

ஞாயிறு

3ஜி-க்கு மாறணுமா? எந்த ஸ்கீம் லாபம்?

இதோ, அதோ என்று இத்தனை நாளும் போக்குக் காட்டி வந்த 3ஜி போன் சேவை இப்போது வந்தேவிட்டது. பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல், வோடபோன் என நான்கு நிறுவனங்களும் 3ஜி தொலைபேசி வசதியைக் கொடுக்க ஆரம்பிக்க, லட்சக்கணக்கானவர்கள் அதை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இருப்பினும் பலபேர்களுக்கு அந்த சேவையால் கிடைக்கும் நன்மைகள், என்னென்ன ஸ்கீம்கள் இருக்கின்றன என்பது போன்ற விஷயங்களில் இன்னும் குழப்பம்தான் இருக்கிறது.

அது என்ன 3ஜி?

இதுநாள் வரை இருக்கின்ற வசதிகளை வைத்து தொலைபேசி மூலம் பேச முடியும், சுமாரான வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும். அவ்வளவுதான்! இந்தத் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான் 3ஜி டெக்னாலஜி. இந்தத் தொழில்நுட்பம் உங்கள் செல்போனில் இருக்கும்பட்சத்தில் வீடியோ கால், நேரடித் தொலைக்காட்சி, இன்டர்நெட், ஃபேக்ஸ், என சகல வசதிகளையும் அனுபவிக்க முடியும். அதுமட்டுமல்ல, பவர்பாயின்ட் மாதிரியான ஃபைல்களைக்கூட அதிவேகமாக டவுன்லோடு செய்யமுடியும். ஆடியோ மற்றும் வீடியோவுடன் கூடிய மல்டி மீடியா போன்ற சேவைகளும் கிடைக்கும். சொடுக்குப் போடும் நேரத்தில் அத்தனையும் நடந்துவிட வேண்டும் என்று மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அதற்கு உறுதுணை யாக வந்திருப்பதுதான் 3ஜி. இதன் மூலம் உடனடித் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், சமூகத் தொடர்புகள் போன்ற வழக்கமான வசதிகளுடன் ஆன்லைனில் சினிமா, விமானம், ரயில் போன்றவற்றுக்கான டிக்கெட்களைப் பெறுவதில் ஆரம்பித்து, கிராமப் பகுதிகளில் விவசாயம் தொடர்பான தகவல்களைப் பெறுவது, உடல் நலம், கல்வி தொடர்பான செய்தி களைப் பெறுவது வரை சேவைகள் விரிந்துகொண்டே போகிறது.

வீடியோகாலிங்!

செல்போனில் பேசும்போது உங்களுக்கு எதிர்முனையில் பேசுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் ஸ்கிரீன் மூலம் தெரிவதே வீடியோகாலிங். நேரில் பேசுவதைப் போன்ற உணர்வை இது ஏற்படுத்தும். இந்த வசதியைப் பெற இரண்டு தரப்பிலும் 3ஜி கனெக்ஷன் மற்றும் 3ஜி செல்போன் தேவை.

மொபைல் கேமிங்!

மல்டிபிளேயர் மற்றும் ஹெச்.டி. கேமிங் போன்றவற்றை உங்கள் மொபைலிலேயே பெறலாம். 3ஜி-யில் கேம்ஸ் விளையாடுவது வேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும். ஹெச்.டி. கேமிங் மூலம் உலகத்தில் எங்கிருந்தாலும் மற்றவருடன் விளையாடலாம்.
2ஜி-க்கும் 3ஜி-க்கும் உள்ள வித்தியாசம்!

மேம்பட்ட குரல் தரம் மற்றும் தெளிவு, அதிவேக பிராட்பேண்ட் கனெக்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் 2ஜி-யைவிட 3ஜி-யில் சிறப்பாக இருக்கும்.

2ஜி-யில் மல்டிமீடியா அப்ளிகேஷன்ஸ் மற்றும் சேவைகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே சப்போர்ட் செய்யும். 3ஜி-யில் இந்த வசதி அதிகளவில் சப்போர்ட் செய்யும்.

2ஜி-யில் ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா அனுப்ப முடியாது. ஆனால் 3ஜி-யில் அது சாத்தியம்.

2ஜி-யில் 9-13 கிலோ பைட்ஸ் மட்டுமே இருப்பதால் நேரடித் தொலைக்காட்சி பார்க்கும்போது படம் தெளிவாகத் தெரியாது. நெட் வசதியும் குறைவான வேகத்தில் இருக்கும். ஆனால் 3ஜி-யில் 384 கிலோ பைட்ஸ் வரை இருப்பதால் இந்த சிக்கல்கள் எதுவும் இருக்காது.

3ஜி-யின் நன்மைகள்!

அதிகப்படியான பாண்ட்வித் மற்றும் பாதுகாப்பு.
பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் போன்ற 3ஜி சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது.
அதிகமான மல்டி மீடியா சேவைகள்
ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என இரண்டு திட்டங்களிலும் கிடைக்கும் சேவை.

3ஜி-யின் பாதகங்கள்!

அனைத்து வகையான மொபைல் போன்களிலும் இந்த வசதியைப் பெற முடியாது. 3ஜி வசதி பெறக்கூடிய பிரத்யேக மொபைல் போன்களைத்தான் பயன்படுத்த முடியும். இதன் விலை கொஞ்சம் அதிகமாக யிருக்கும்.

3ஜி உரிமம் பெற நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவழித்திருப்பதால் இதன் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்க முடியாது.

அதிகப்படியாக கிலோ பைட்ஸ் பயன்படுத்தப்படுவதால் மொபைல் போனுக்கான பேட்டரி அதிகளவில் செலவாகும்.

மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படக்கூடும்.

3ஜி சேவைக்கு தமிழக மக்களிடம் இருக்கும் வரவேற்பு பற்றி பி.எஸ்.என்.எல். அமைப்பின் முதன்மை பொது மேலாளர் சுப்ரமணியனிடம் பேசினோம்.
”இந்தியா முழுவதும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் 3ஜி இணைப்பை வழங்க உரிமம் பெற்றுள்ளன. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு என இரண்டு திட்டங்கள் மூலமும் 3ஜி வசதியைப் பெறலாம். இதில் பயன்படுத்தப்படும் டேட்டா கார்டை இந்தியா முழுவதும் ஒரே கட்டணத்தில் வாங்கிப் பயன்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் பலப்பல. 3ஜி போனை வைத்துக் கொண்டு எந்த ஊருக்கு வேண்டுமானாலும் காரோட்டிக் கொண்டு போகலாம். போகும்போது வழி தெரியவில்லை என்றால் உங்கள் மொபைல் போனில் தெரியும் மேப்பை வைத்துக் கொண்டே ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம். மக்கள் 3ஜி போனை வாங்கியவுடன் ஆர்வத்துடன் வீடியோகால் பேசுகிறார்கள். பலருக்கும் இது புதுவிதமான அனுபவமாக இருக்கிறது. இதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு என்பது இன்னொரு சிறப்பு. மேலும் அலுவலகம், கடைகள் போன்ற இடங்களில் ஒரு வெப் கேமிராவை வைத்துவிட்டு உங்கள் 3ஜி மொபைலுடன் இணைத்துவிட்டால் நீங்கள் எங்கிருந்தாலும் அங்கு நடக்கும் விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

அடுத்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கேரளா மற்றும் தமிழ்நாடு சி.இ.ஓ. ராஜீவ் ராஜகோபால் கூறுகையில், ”இப்போதைக்கு சென்னை மற்றும் கோவையில் மட்டும் கடந்த மாதம் 27 முதல் 3ஜி சேவையைத் தொடங்கி இருக்கிறோம். தற்போதுள்ள சிம்கார்டுகளைப் பயன்படுத்தியே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சேவையைப் பெறலாம். லேப்டாப் பயன்படுத்துகிறவர்களுக்கு 3ஜி சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். நிலையான கட்டணம், பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணம் என பல வகையான திட்டங்களையும் கூடிய விரைவில் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தப் போகிறோம்” என்றார்.
என்ன, நீங்கள் தயாரா?
naanayamvikadan

அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் தடை


போராட்டத்திற்கு பயந்து ஜெருசலத்தில் புராதன நகரத்தில் அமைந்துள்ள புனித மிக்க அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேல் ராணுவம் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

45 வயதிற்கு கீழே உள்ள நபர்கள் மஸ்ஜிதில் நுழைய தடை விதிக்குமாறு இஸ்ரேல் ராணுவ அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக மஆன் செய்தி ஏஜன்சி தெரிவிக்கிறது. முன்பு பல முறை இஸ்ரேல் ராணுவம் அல் அக்ஸா பகுதியில் பலஸ்தீன் போராளிகள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருந்தது. போராளிகளுக்கு அஞ்சி 45 வயதிற்கு கீழே உள்ள பலஸ்தீன் முஸ்லிம்கள் அல் அக்ஸா மஸ்ஜிதில் நுழைய இஸ்ரேலிய ராணுவம் இதற்கு முன்பும் பல முறை தடுத்துள்ளது.
thoothu

பராஅத் இரவு – சில சிந்தனைகள்

ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என நம் அனைவராலும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும் பள்ளி வாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன.

முன்னோர்கள் சிலரால் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதைத் தவிர குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட ஆராயவில்லை.

‘பராஅத் இரவு’ ‘ஷபே பராஅத்’ என பல பெயர்களில் கொண்டாடப்பட்டு வரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்புமிக்க இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டுவருகின்றது. ‘லைலத்துல் கத்ரு’ ‘லைலத்துல் ஜும்ஆ’ போன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் ‘லைலத்துல் பராஅத்’ என்னும் சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை.

பராஅத் இரவு

பராஅத் இரவு குர்ஆன் அருளப்பட்ட இரவு என்றும் ‘நிச்சயமாக நாம் பாக்கியம் மிக்க இரவில் இந்த குர்ஆனை அருளினோம்’ (44:03) என்று வரும் குர்ஆன் வசனம் இந்த பராஅத் இரவையே குறிக்கின்றது என்றும் மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இது தவறாகும். ‘திருக்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது’ என்று திருக்குர்ஆன் 2:185ம் வசனத்தில் திடடவட்டமாகக் கூறுகின்றது.

ஆக, பாக்கியம் மிக்க இரவு ரமழான் மாதத்தில் தான் இருக்கின்றது. அது ரமழானின் எந்த இரவு என்பதை நாம் தேடிப்பார்க்கும் போது ‘லைலத்துல் கத்ர் இரவில்’ நாம் திருக்குர்ஆனை அருளினோம் (97:01)என்று அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகிறான். எனவே, ‘பாக்கியம் மிக்க இரவு’ என்பதும் ‘லைலத்துல் கத்ர் இரவு’என்பதும் ரமழான் மாதத்தில் வருகின்ற ஒரே இரவு தான் என்பது தெளிவாகின்றது.

குர்ஆன் இரண்டு இரவுகளில் அருளப்பட்டது. முதல் இரவில் பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு அருளப்பட்டது. அங்கிருந்து சிறிது சிறிதாக நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது மற்றொரு இரவு எனக் கூறுகின்றனர். இதுவும் ஏற்கத்தக்கதல்ல.

பராஅத் நோன்பு

ரமழானை வரவேற்கும் விதத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத் தொடக்கத்தில் இருந்தே நோன்பு நோற்றுள்ளார்கள். மற்ற மாதங்களை விட அதிகமாக ஷஃபானில்தான் நோன்பு வைத்துள்ளார்கள். 15 நாட்களும் நோன்பு வைத்துள்ளார்கள். மற்றபடி, ஷஃபானின் பதினைந்தாவது இரவு வந்தால் நோன்பு வையுங்கள் என அண்ணலார் கூறியதாக உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீன மானவை. ஷஃபான் 15க்குப் பிறகு நோன்பே வைக்கக்கூடாது என்றே ஹதீஸ்கள் தடை செய்கின்றன.

ஷஃபான் மாதத்தின் பாதியை அடைந்து விட்டால் நோன்பு வைக்காதீர்கள்! (அறி விப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: அஹ்மத், அபூ தாவூது, நஸயீ, திர்மிதி, இப்னு மாஜா). வழமையாக நோன்பு வைப்போர் மட்டும் வைத்துக்கொள்ளலாம்.

சிறப்பு வணக்கங்கள் – மூன்று யாஸீன்கள்

இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப்பின் ‘மூன்று சூயாசீன்’ ஓதி துன்பம் துயரங்கள் நீங்கி பாவங்கள் மன்னிக்கப்படவும் (1) நீண்ட ஆயுளைப் பெறவும் (2) நிலையான செல்வத்தைப் பெறவும் (3) துஆச்செய்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்த இரவில்தான் ‘தக்தீர்’ என்னும் விதி நிர்ணயிக்கப்படுகின்றது என்னும் நம்பிக்கைதான் மூன்று யாசீன் ஓதி துஆசெய்யும் வழக்கத்திற்கு காரணமாகும்.

கப்று ஸியாரத்

இவ்வளவு நாட்களும் நினைவு படுத்த முடியாது போனதற்காக இறந்த போன பெற் றோர்கள்,உறவினர்கள், அவ்லியாக்கள் சமாதிகளுக்குச் சென்று விசேச ஸியா ரத்,பரார்த்தனைகள் நடை பெறும்.

சிறப்புத் தொழுகைகள்

இஷா தொழுகைக்கு முன் இரண்டிரண்டு ரக்அதகளாக நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 25 முறைகள் ஓதவேண்டும்.

இஷா தொழுகைக்குப்பின் இரண்டிரண்டு ரக்அத்களாக 12 ரக்அத்கள் தொழ வேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 5 முறைகள் ஓதவேண்டும்.

‘அலியே! ஷஃபானின் 15-வது இரவில் நூறு ரக்அத்துகள் தொழுவதை மறந்து விடாதே! அவற்றில் குல்ஹுவல்லாஹ் நூறு தடவைகள் ஓதுவதை மறந்து விடாதே!’ போன்ற பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளன என இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் தமது நக்லுல் மன்கூள் நூலில் குறிப்படுகிறார்கள்.

தஸ்பீஹ் தொழுகை. முன்னூறு தஸ்பீஹ்கள் ஓதித் தொழும் இந்தத் தொழுகைக்கும் ஆதாரபூர்வமான எந்த ஹதீஸும் கிடையாது.

இவற்றையெல்லாம் தெடர்ந்து நடத்திவிட்டு இறுதியாக நோன்பையும் நோற்பார்கள்.

நன்மைகள் தானே

தொழுவது யாசீன் ஓதுவது துஆ செய்வது போன்றவை நன்மைகள்தானே, அவற்றைச் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று சொல்வது எப்படி? என நம்மில் பெரும் பான்மையினர் பலரும் நினைக்கலாம்.

‘எவர் நம்மால் கட்டளையிடப்படாத அமல்களை செய்கிறாரோ, அவை அல்லாஹ் விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவில் இன்றைக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது உண்மையிலேயே மார்க்கமாக இருந்திருப்பின் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்திருப்பார்கள். அவ்வாறு அவர்களால் காட்டித்தரப்படாத ஒரு வழிமுறையை முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விஷேச இரவு என்று கருதிக் கொண்டு செய்துவரக் கூடாது. இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். குற்றமாகவும் ஆகிவிடும்.

ஹதீஸ்களின் நிலை

(1) ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில் ‘அல்லாஹ் பராஅத் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடு களுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று நபி அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கின்ற திர்மிதீ இமாம் அவர்களே, இமாம் புகாரி (ரஹ்) அவர் கள் இது பலவீனமானது எனக்கூறியதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

(2) இப்னு மாஜாவில் ‘ஷஃபானில் பதினைந்தாம் இரவில் பகல் பொழுதில் நோன்பு வையுங்கள். இரவில் நின்று வணங்குங்கள்’ என நபி அவர்கள் கூறியதாக அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு மாஜாவில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸும் சரி யானது அல்ல.

(3) ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு என்று நபி அவர்கள் கூறினார்கள். இதனையும் முஹத்தி ஸீன்கள் ஏற்கவில்லை. இதேபோல் மற்ற ஹதீஸ்களையும் நிராகரிக்கிறார்கள்.

நன்மையான நோன்புகள்

வாரந்தோறும் திங்கள், வியாழன் நாட்கள், மாதந்தோறும் பிறை 13,14,15 நாட்கள், ஆஷூரா நாள், ஷவ்வால் ஆறு நோன்புகள் என பல நாட்கள் நோன்பு வைக்க சிறந்த நாட்கள் என்றும் அவற்றுக்கு எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கும் என்றும் அண்ண லார் சொல்லியுள்ளார்கள். ஆனால், இந்நாட்களில் நோன்பு வைப்பதைப் பற்றி நினைத் துக்கூடப் பார்ப்பதில்லை. அதேசமயம், அண்ணலார் காட்டித்தராத ஷஃபான் 15 நோன் புக்கு பயங்கர முக்கியத்துவம் கொடுக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண் டும்.

பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி பதினைந்தாவது இரவில் தொழும் நூறு ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும் — இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது. இதே போன்ற கண்டனம் ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.

பராஅத் இரவன்று பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இறைவனும் இறைத்தூதரும் சொல்லிக்காண்பித்தபடி இஸ்லாமிய நன்னெறியைப் பின்பற்றி வாழ்கின்ற நற்பேற்றை உங்களுக்கும் எங்களுக்கும் வல்ல அல்லாஹ் அளிக்க வேண்டும் என்னும் பிரார்த்தனையோடு …
by umari