இந்து மக்களால் இளைய விவேகானந்தராகக் கருதப்பட்ட நித்தியானந்தா எனும் போலிச் சாமியார் தனது காமக்களியாட்டத்தினால் இந்துக்களின் கடும் கோபத்துக்கு உள்ளானார். இத்தகைய கேவலமான போலிச்சாமியாருக்கு தமிழகக் காவல்துறை பட்டுக் கம்பளம் விரித்ததன் மூலம் தன்மீது தானே காரித்துப்பிக் கொண்டது.
மக்களால் மதிக்கப்படும் ஒருவர் கேவலமான செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்தால் அதை வெளியிடுவதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது ஊடகங்களின் கடமையாகும். போலிச்சாமியாரின் லீலைகளை அம்பலப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளிக்கும் புகாரை தமிழகக் காவல்துறை பெற்றுக் கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஊடகங்களின் உரிமையைப் பறிப்பதுமாகும்.
இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று நித்தியானந்தா கூறுவதை காவல் துறையினர் நம்பினால் அவர்கள் மாடுமேய்க்கத் தான் தகுதியானவர்களே தவிர காவல்பணிக்கு தகுதியானவர்கள் அல்ல. இது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்று நித்தியானந்தா கூறுவதை காவல்துறை நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது.ஏனெனில் இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அல்ல என்று இந்துத்துவா கொள்கை கொண்ட கர்நாடக பாஜக அரசு சொல்லி விட்டது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ததும் பாஜக அரசு தான். ஓடி ஒளிந்து திரிந்த நித்தியானந்தாவை விரட்டிப்பிடித்து கைது செய்ததும் பாஜக அரசுதான். அவரை சிறையில் அடைத்தும் பாஜக் அரசு தான். பாஜக அரசு இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டது என்று தமிழக் காவல் துறை கருதுகிறதா?
அவரது கேவலமான செயல் இந்து மதத்துக்கு கரும்புள்ளீயாக அமைந்ததாலேயே கர்நாடக அரசு அவரைக் கைது செய்து வழக்குப் போட்டுள்ளது என்பது மூளையுள்ள யாருக்கும் தெரியும்.
ஜெயலலைதாவின் முந்தைய ஆட்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டாரே அது இந்து மதத்தின் மீதான தாக்குதலா? அவரை சிறையில் தள்ளியது இந்து மதத்துக்கு எதிரான நடவடிக்கையா? அவர் நீதி மன்றம் அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் மீது அழுகிய முட்டைகள் வீசப்பட்டதே அது இந்து மதத்துக்கு எதிரான செயலா? அவரது படத்துக்கு செருப்பு மாலை போடப்பட்டதும் செருப்பால் அடித்ததும் இந்து மதத்துக்கு எதிரான செயலா? நிச்சயமாக இல்லை. பகதர்களின் கொந்தளிப்பினால் தான் இவை நடந்தன. மேலும் ப்ல பெண்கள் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிராகச் சொன்ன பாலியல் புகார்களை ஜெயா டிவி ஒளிபரபியதே அது இந்து மதத்தை இழிவு படுத்தும் செயலா?
காஞ்சி சங்கராச்சாரியார் நித்தியானந்தா வழியில் ஜெயா டிவி மீதும் ஜெயலலிதா மீதும் புகார் கொடுத்தால் அதை காவல் துறையினர் பதிவு செய்வார்களா?
நிச்சயம் பதிவு செய்யமாட்டார்கள். எனவே காவல் துறையினரின் இந்தப் போக்கு அருவருப்பானது. அசிங்கமானது. கேவலமானது. நித்தியானந்தாவின் செயலை விட மோசமானது என்று தமிழ்நாடு தவ்ஹீத் கடுமையாகக் கண்டிக்கிறது.
இப்படிக்கு,
பி.ஜைனுல் ஆபிதீன்
மாநிலத் தலைவர்.