தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

கோவையில் நடைபெற்ற மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொது கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக நேற்று 10.07.2011,   மாபெரும் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம்,  லாரி பேட்டை பகுதியில் நடைபெற்றது. இதில் மவ்லவி தமீம் அவர்கள் “இன்றைய இளைஞர்களின் நிலை?” என்ற தலைப்பில், செல்போன் என்ற ஒரு சாதனத்தால் இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் எவ்வாறு கெட்டு போகிறார்கள் என்பதையும், இளைஞர் சமுதாயம்  எந்த அளவிற்கு சீரழிந்து கொண்டு இருக்கிறது என்பதையும் விவரித்து பேசினார்.
அடுத்ததாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் மவ்லவி பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள், வரதட்சணையும் அதன் விசாரணையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். பெண்ணின் திருமணம்  முதல் குழந்தை பிறந்து அதை வளர்க்கும் வரை அவள் படுகின்ற இன்னல்களையும், துன்பங்களையும் உணர்ச்சி ததும்ப பேசினார்.
கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களியிடையே , நானோ, என்னுடைய மகளுக்கோ, என்னுடையே மகனுக்கே, எனக்கோ, திருமணத்தின் போது  பணமாகவோ, பொருளாகவோ, எந்த விதத்திலும் வரதட்சணையாக வாங்க மாட்டோம், வரதட்சணை கொடுக்க மாட்டோம், என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் தங்களது கைகளை உயர்த்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அல்லாஹ் அக்பர்……
இறுதியாக  பொதுகூட்ட மேடையிலேயே, நபிவழியில் நம் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இஸ்லாத்தில் திருமணத்தின் போது எந்தவிதமான சடங்குகளும் இல்லை என்பதையும், அதை நபி ஸல் அவர்கள் நமக்கு காட்டித்தரவில்லை என்பதையும் இத்திருமணத்தின் மூலம் பிற சமுதாய மக்களும் அறிந்து கொண்டனர்….