தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் முப்பது ஆண்டுகளாக அக்கிரமம் செய்த மஹதிகள் கூட்டத்திற்கு ஓரிறை கொள்கையாளர்களால் முடிவு கட்டப்பட்டது. ஏகத்துவ கொள்கைவாதிகளுக்கு மஹதிகள் உண்டாக்கிய அக்கிரமம், தர்மபுரி மாவட்டம் துணை வட்டாச்சியர் அலுவலகத்தில் முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.
கடந்தவாரம் பராத் இரவு சம்பந்தமாக TNTJவினரால் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத கொள்கையற்ற மஹதிகள் கூட்டம் TNTJவினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது.
காவல்துறையே பாதுகாப்பு அளிக்கமுடியாது என கைவிட்டு விட்டதால் தாக்குதலுக்கு உள்ளான சகோதரர்கள் மாநில தலைமையில் தஞ்சம் புகுந்தனர். தலைமையின் துரித நடவடிக்கையின் காரணமாக இன்று(29.07.2011) வெள்ளிகிழமை காலை தர்மபுரி மாவட்டம் துணை வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் இரண்டு தரப்பும் எதிரெதிரில் வைத்து விசாரிக்கப்பட்டு அவரவர் கொள்கையை அவரவர் பின்பற்றுவதும் , ஒருவருக்கொருவர் இடையூறு செய்து கொள்ளகூடாது என்றும் வணக்க வழிபாடுகளை தனித்தனியாக அமைத்து கொள்ளவேண்டும் என்றும் அதிகாரிகள் முன்னிலையில் எழுத்துபூர்வமாக எழுதி வாங்கப்பட்டது.
ஏகத்துவவாதிகளுக்கு தலைமை ஏற்ற மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் RTO அவர்களிடம், பேச்சு வார்தையில் 90 சதவிகிதம் திருப்தி ஏற்பட்டாலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தால் 100 சதவிகித திருப்தி அடைவோம் என்ற கருத்தை அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டு வெளியேறினார்.. முப்பது ஆண்டுகளாக ஊரை அடக்கி ஆண்ட மஹதிகள்(வெறியர்கள் ) வேதனையோடு(முகம் வெளிரி ) வெளியேறினர்.அல்லாஹ் அக்பர் ..
அலுவலக மைதானத்திலேயே ஜும்மாவிற்கான பாங்கு சொல்லப்பட்டு தொழுகையும் நிறைவேற்றப்பட்டது. ஜும்மா உரையில் இறைவனுக்கே புகழனைத்தும் என்று அல்தாபி அவர்கள் சொன்ன உடன் தக்பீர் முழங்கியது. பாதிக்கபட்டோருக்கு உதவுவது நபிவழி என்பதை ஆணித்தரமாக உணர்த்திய அல்தாபி அவர்களின் உரை முத்தாய்பாக அமைந்தது. அதையடுத்து அசர் தொழுகையை ஜம்வு கஸர் செய்து நிறைவேற்றினார்கள்.
இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த மஹதிகளிடம் கோவை குனிக்யமுதூர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் ஏகத்துவத்தை எடுத்து சொல்லியும், உங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோர சொல்லியும், ஓரிறை கொள்கைக்கு வருமாறு அழைப்பு கொடுத்ததும் கலைந்தனர்…
மாலை 4 மணிக்கு ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்ட அதே இடத்தில RTO அலுவலகத்தின் உள்ளே நடந்ததை கொள்கைவாதிகளுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சியும் பக்கீர் முஹம்மத் அல்தாபி தலைமையில் நடைபெற்றது.அல்தாபி அவர்கள் காவல்துறையின் அலட்சிய போக்கினை கண்டித்து உரையாற்றினார். இதில் ஆயிரக்கணக்கான ஓரிறை கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
தகவல்: TNTJ, கோவை மாவட்டம்.