தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

SSU ஸைஃபுல்லாஹ் ஹாஜாவின் துபை வசூல் மோசடி

சைபுல்லா ஹாஜா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளை காட்டி மக்களிடம் வசூல் செய்து விட்டு, இன்றைக்கு அதை தனிநபர் பெயரில் பதிவு செய்து விட்டு, நான் மஸ்ஜித் முபாரக் பணிகளைக் காட்டித் தான் வசூலித்தேன் என்று சொல்கிறார்.

அல்தாபி தலைவராக இருக்கும் போது என்னை எச்சரித்தீர்கள் என்றால், பின்னர் எதற்காக என்னை ஜூலை 4 மாநாட்டுக்கு தலைவராக நியமித்தீர்கள் என்று கேட்கிறார். அத்தோடு அடுத்த மாநிலத் தலைவராக இருக்குமாறு என்னை ஏன் கேட்டுக்கொண்டீர்கள் என்று கேட்கிறார். அதாவது 2008ல்
என்னை எச்சரித்தீர்களானால், பின்னர் எதற்காக 2010ஜூலை 4மாநாட்டிற்கும், ஜனவரி 27,2011ல் மதுரையிலும் சென்னையிலும் நடந்த உயர்நீதிமன்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் என்னை ஏன் தலைவராக நியமித்தீர்கள்? அதுமட்டுமல்லாமல் 2011ல் நடந்த மாநில நிர்வாகக்குழுத் தேர்தலில்
அடுத்த தலைவராக பதவியேற்றுக் கொள்ளுமாறு ஏன் கேட்டீர்கள்? நான் முன்பே மோசடிக்காரன் எனத் தெரிந்தும் என்னை இதுபோல ஏன் கேட்டுக்கொண்டீர்கள் என நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.


இதிலே இவர் இரண்டு விசயங்களை உண்மையாக்கப் பார்க்கிறார். ஒன்று, நாம் இவரை 2008ல் எச்சரிக்கை செய்தோம் என்ற சம்பவமே நடக்கவில்லை என்ற மாயையை உண்டாக்கப்பார்க்கிறார். அப்படிஎச்சரித்திருந்திருந்தால் பிறகு ஏன்
மேற்கண்ட பதவிகளுக்கு தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கேட்கிறார். இரண்டாவது நாம் எச்சரிக்கை செய்வதற்கு முன்பே நான் பதிவு செய்து விட்டேன். அதாவது அவரை எச்சரிக்கை செய்தது 2011ல் தான். ஆனால் அதற்கு முன்பே 2009லேயே இந்தப் பதிவு விசயம் முடிந்து விட்டது என ஒரு முழுப் பொய்யை மக்களிடம் வைத்து அவர் செய்த பெரிய மோசடியை மறைக்கப்
பார்க்கிறார்.

ஆனால் இவரை 2008ல் எச்சரித்ததும் உண்மை. அப்போது அவர் அந்த நிலத்தை தனி நபர் பெயரில் பதிவு செய்திடவில்லை. மாறாக பதிவு செய்வதற்கு ஆலோசனை தான் நடத்திக் கொண்டு இருந்தார்.மூன் பப்ளிகேசனில் நடந்த கூட்டத்தில் பீஜே அவர்கள் எடுத்து வைத்த கருத்துக்களின் நியாயத்தை
உணர்ந்து, அவ்வாறு அவர்கள் தனிநபர் பெயரில் பதிவு செய்தால், அவர்களைத் தூக்கி எறிந்து விட்டு நான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பக்கம் நிற்கத் தயார் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால்அவர் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை.

2009ல் தனிநபரில் பெயரில் அந்த இடத்தைப் பதிவு செய்கிறார்.

ஆனால் இந்த விசயம் யாருக்குமே தெரியாமல் மறைத்து வைக்கப்படுகின்றது. பதிவு விவகாரம் இன்னும் முடியவில்லை என பொய் சொல்லிச் சொல்லியே எல்லோரையும் நம்பவைக்கிறார். அதற்குப் பிறகு நடந்த ஜூலை 4மாநாட்டுக் குழுவிற்கு இவர் தலைவராக நியமிக்கப்படுகிறார். ஜனவரி27ஆர்ப்பாட்டத்திற்கு 3மாதங்களுக்கு முன்பாகவே மதுரைக்கு இவரே தலைவராக நியமிக்கப்படுகிறார். அதற்குப் பிறகு தான் இவர் ரகசியமாக தனிநபர் பெயரில் பதிவு செய்த விவகாரம் வெளியாகிறது. அந்த நேரம் பழைஅய் நிர்வாகத்தின் பத்விக்காலம் முடியும் நேரமாக
இருந்ததால், இதை புதிய நிர்வாகம் விசாரிக்கும் என ஒத்திவைக்கப்படுகிறது.

 இதுதான் நடந்தது. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட அவகாசங்களைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னை நல்லவர் என மக்களிடம் காட்டிக்கொள்ள முயன்று இன்றைக்கு தோற்று நிற்கிறார்.

அடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் சார்பில் ரமலான் மாத பிரச்சாரத்திற்குச் சென்ற சைபுல்லாஹ் ஹாஜா அங்கே சென்று பயான் செய்தது போக மற்ற நேரங்களில் அங்கிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் மஸ்ஜித் முபாரக் பக்கத்தில் இருக்கும் நிலம் தேவை
எனவும் அதற்காக வசூல் செய்ய தனக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறார். அதுபோலவே அங்கிருக்கும் நிர்வாகிகளும் பொதுவான ஒரு இடத்தில் அனைத்து ஊர் மக்களையும் ஒன்று திரட்டுகின்றனர். அவர்கள் மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கடந்து வந்த பாதைகளையும், ஏகத்துவத்தின் எழுச்சியையும் பேசி சைபுல்லா அவர்கள் வசூல் மேற்கொள்கிறார்.

ஆனால் இன்றைக்கு நான் மஸ்ஜித் முபாரக் பணிகளைச் சொல்லித்தான் கேட்டேன்., அதற்குத் தான் மக்கள் உதவி செய்தார்கள் என்று கபட நாடகம் ஆடுகிறார்.

நான் என்ன முஸ்லிம் மக்களிடம் மட்டுமா வாங்கினேன்? முஸ்லிம் அல்லாத பலரும் தான் உதவி செய்துள்ளார்கள். கடையநல்லூரில் இருக்கும் அருணாச்சலம் செட்டியார் என்பவர் 50ஆயிரம் நன்கொடையாகத் தந்தார். அதற்காக அவர் வந்து, நான் அருணாச்சலம் செட்டியாராக 50ஆயிரம்
கொடுத்திருக்கிறேன். அதனால் அந்தப் பள்ளியை திருமலைக்கோவில் அரங்காவலர் குழுவிற்கு எழுதி வையுங்கள் என்று கேட்டால் அது முட்டாள் தனமில்லையா என்று கேட்கிறார்.

அவ்வாறு கேட்பது முட்டாள்தனம் தான். அதேநேரத்தில் திருமலைக் கோவிலுக்கு நன்கொடை தாருங்கள் என்று அருணாச்சலம் செட்டியாரிடம் காசு வாங்கி விட்டு அதில் நிலம் வாங்கி மஸ்ஜித் முபாரக் பெயரில் பதிவு செய்து மோசடி செய்தால், அதே அருணாச்சலம் செட்டியார் அந்த
இடத்தை திருமலைக் கோவில் அரங்காவல் குழுவிற்கு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டால் அது தவறு இல்லை.

அதேபோலத் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பணிகளைக் காட்டி அருணாச்சல் செட்டியாரிடம் வசூல் செய்து விட்டு இன்றைக்கு எனக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லும் சைபுல்லாவிடம் அந்த அருணாச்சலம் செட்டியார் அவர் கொடுத்த பணத்தை திருமலை அரங்காவல் குழுவிற்கு திரும்பத் தரும்படி கேட்டாலும் அதில் தவறேதும் இல்லை. காரணம் சைபுல்லா சொன்னது ஒன்று, செய்தது ஒன்று.

கேடுவரும் பின்னே மதி கெட்டு விடும் முன்னே என்று சைபுல்லா சொல்கிறார். அது அவருக்கே இங்கே தெளிவாகப் பொருந்துகிறது. சைபுல்லா ஹாஜாவின் துபையில் வசூல் செய்வதற்காக செய்த புரொஃபைல் மோசடிகள் குறித்தும், இவரை ஏன் மாநாட்டுக்கு தலைவராக நியமித்தார்கள் என்பது
குறித்தும் விரிவாக அறிய கீழே உள்ள சுட்டியில் உள்ள வீடியோவைப் பாருங்கள்.
http://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/Ssvin-tiruhu-