தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

சிறுமிகளுடன் பாதிரியார் செக்ஸ் உறவு: போலீசில் மனைவி புகார்

தேவாலயத்தின் கல்வி மையத்தில் தங்கி இருக்கும் சிறுமிகளுடன் செக்ஸ் உறவு வைத்திருப்பதாக பாதிரியார் மீது அவரது மனைவியே பெங்களூர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார்.

பெங்களூர் கங்கமனகுடி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக இருப்பவர் சாந்தராஜு (வயது 45). இவருடைய மனைவி பிரியலதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், பாதிரியார் சாந்தராஜு மீது அவரது மனைவி பிரியலதா, போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார். அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது கணவர் பெங்களூர் சித்தார்த்தா நகர் பெத்தேல் தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்த தேவாலயம் சார்பில் ஏழைக் குழந்தைகளுக்காக கல்வி மையம் ஒன்றும் நடத்தப்படுகிறது. இதற்கு வெளிநாட்டில் இருந்து நன்கொடையும் வருகிறது. தேவாலயத்திற்கு வரும் நன்கொடையை என் கணவர் முறைகேடாக பயன்படுத்துகிறார். மேலும் கல்வி மையத்தில் உள்ள சிறுமிகளுடன் செக்ஸ் உறவு வைத்து இருக்கிறார். இதுபற்றி முதலில் எனக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். கணவர் திருந்திவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், அவர் திருந்தவே இல்லை. அவரது தவறான நடவடிக்கை பற்றி கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்தார். மேலும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த விவகாரம் வெளியே வராமல் தடுக்க முயற்சி மேற்கொண்டார். எனவே எனது கணவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.

தனது கணவர் மீதான புகார் தொடர்பாக தன்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் பிரியலதா கூறி உள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆனால், தன் மீது மனைவி கொடுத்த புகாரை பாதிரியார் சாந்தராஜு மறுத்து உள்ளார். பாதிரியார் சாந்தராஜு, மனைவி பிரியலதாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார். தன் மீது மனைவி கூறி உள்ள புகார்கள் அனைத்தையும் பாதிரியார் சாந்தராஜு மறுத்து உள்ளார். `ஆலய சொத்துக்களை கைப்பற்றுவதற்காக என் மனைவி இவ்வாறு பொய் புகார் அளித்து உள்ளார். ஆனால், என் மீதான அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை ஆதாரமற்றவை' என்று பாதிரியார் சாந்தராஜு மறுத்து இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது பிரியலதா கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வரும் போலீசாரிடம் இதுகுறித்து கேட்டபோது, `இதற்கு முன்பே கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது பிரியலதா கொடுத்து உள்ள புகாரை மிகவும் கவனமாக விசாரித்து வருகிறோம். இந்த வழக்கில் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் இல்லை' என்றனர்.
koodal

செவ்வாய்

மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி

கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது.
ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர்.
நாங்கள் ஆளும்கூட்டணியில் இருக்கின்றோம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் எம்.எல்.ஏ அலுவலகம் என்று சட்ட விரோதமாக அறிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ததுடன் நடவடிக்கை மந்தமாக இருந்ததால் சட்டமன்ற முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை அறிவித்தது.
இதன் பின்னர் விழித்துக் கொண்ட காவல்துறை உயர்அதிகாரிகள் மமக வின் ஹைதர் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து அரைமணி நேரத்தில் உணர்வு அலுவலக சாவியை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்; இல்லாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தனர்.
ஆளும் கூட்டணி என்பது வெத்துவேட்டு என்பதை காவல்துறையினர் தெளிவாகவே புரியவைத்து அதிரடியாக சாவியைக் கைப்பற்றி எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.
இதன் மூலம் தமுமுகவின் ஆக்கிரமிப்பு அராஜகத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனாலும் சாவியை தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒப்படைப்பதாக இருந்தால் ஆர்.டி.ஓ மூலமாகத்தான் ஒப்படைக்க முடியும் என்று தெரிவித்த காவல்துறை அவ்வாறே ஆர்.டி.ஓ விடம் சாவியை ஒப்படைத்து விட்டது.
ஆர்.டி.ஓ விசாரித்து தவ்ஹீத் ஜமாஅத்திடம் சாவியை ஒப்படைக்க இருந்த நேரத்தில் பதறிப்போன மமகவினர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத்தடையை வாங்கிவிட்டனர்.
அதிகாரிகளை கைக்குள் போட்டு ஆளும்கூட்டணி என்று எதையும் சாதிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக இடைக்காலத்தடை பெற்றுள்ளனர். இந்த இடைக்காலத்தடையை சட்டப்படி விரைவில் முறியடிக்க தக்க முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
ஆர்ப்பாட்டம்
தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் – அருகில் மாபெரும் கண்டனப்போர் வரக்கூடிய ஜூன் 28ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11மணிக்கு நடைபெற உள்ளது.
அராஜகத்திற்கும், ரவுடித்தனத்துக்கும் மரண அடி கொடுக்க நியாயவான்கள் அணிதிரண்டு வருமாறு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கின்றது.
குறிப்பு :உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு ஆதாரமாக காவல்துறை வழங்கிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது .

ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை


அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு காலக்கட்டத்தில் ஈராக்கிலிருந்து 1800 கோடி டாலர் தொகை காணாமல் போயுள்ளது என அந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் உஸாமா அல் நுஜைஃபி தெரிவித்துள்ளார்.600 கோடி டாலரை காணவில்லை என கடந்த வாரம் செய்தி வெளியாகியிருந்தது.

அமெரிக்கா மற்றும் ஈராக் தணிக்கையாளர்களிடமிருந்து 1800 கோடி டாலர் தொகையை ஈராக்கில் காணவில்லை என அறிக்கை கிடைத்துள்ளது என நுஜைஃபி அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்பு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் துவக்க கட்டத்தில் பெருமளவிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இத்தொகை ஈராக்கின் வளர்ச்சி திட்டங்களுக்கான பணமாகும்.இவை எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதற்கான ஆவணங்களும் இல்லை.இவை எங்கே சென்றது என்பது தெரியவில்லை.இதனைக்குறித்து பின்னர் விரிவாக பேசலாம்.ஈராக்கின் பணம் எங்கே சென்றது என்பது கண்டறியவேண்டியுள்ளது என நுஜைஃபி தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு புஷ்ஷின் அரசு 2000 கோடி டாலரை ஈராக்கிலிருந்து கொண்டு சென்றது.ஐ.நாவின் உணவுக்கு எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் கிடைத்த நிதித்தொகைதான் இது.ஈராக் அதிகாரிகள் நாட்டின் புனர்நிர்மாணத்திற்கு அமெரிக்கா ஒப்பந்தக்காரர்களுக்கும், ஈராக் அமைச்சர்களுக்கும் பணம் அளித்ததாகவும் கருதப்படுகிறது.

2004-ஆம் ஆண்டு போடப்பட்ட சட்ட ஒப்பந்தத்தின்படி காணாமல் போன பணத்திற்கு அமெரிக்காதான் பொறுப்பு என ஈராக் வாதிடுவதாக் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. போதிய அவகாசம் தந்தால் பணத்தின் கணக்கை காட்டலாம் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால், 3 தடவை தணிக்கை செய்தபிறகும் பணம் எங்கே சென்றது என்பதுக்குறித்து கண்டுபிடிக்க அமெரிக்காவால் இயலவில்லை.

மதம் மாறிய காரணத்தால் அன்னைக்கு குழந்தையை பாதுகாக்கும் உரிமையை பறித்துவிடமுடியாது-டெல்லி உயர்நீதிமன்றம்

மதம் மாறிவிட்டார் என்பதால் குழந்தையை பாதுகாக்கும் உரிமையை தாயிடமிருந்து பறிக்க இயலாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


டெல்லியை சார்ந்த ராம் குமார் மவ்ரியா என்பவரின் மகனின் மனைவி சாவித்ரி தேவி என்பவர் அவருடைய மரணத்திற்கு பிறகு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு மொய்ன் ஹக் என்பவரை திருமணம் புரிந்தார்.

முதல் திருமணத்தின் போது பிறந்த பதினான்கு வயது மகன் இஸ்லாத்தை தழுவிய சாவித்ரியுடன் வசித்து வருகிறார். இவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி அவருடைய பாட்டனார் மவ்ரியா நீதிமன்றத்தை அணுகினார்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கவுதம் மனான் தனது தீர்ப்பில் கூறியதாவது:தாயின் மதம் அல்ல முக்கியம். அவர் தனது குழந்தைக்கு கல்வியும், பாதுகாப்பும் அளிக்கின்றாரா என்பதைத் தான் பரிசோதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

திங்கள்

கடையநல்லூர் கிளைகளின் ஒன்றினைந்த பொதுக் குழு கூட்டம் – சைபுல்லாஹ் காஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த 19.06. 2011 ஞாயிறு அன்று சரியாக காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இந்தப் பொதுக் குழுவில் கடையநல்லூர் டவுண், ரஹ்மானியா புரம், மக்கா நகர், பேட்டையைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அனைத்துக் கிளைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.


முதலாவதாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கைக்காக நபிமார்களும், ஸஹாபாக்களும் பட்டதியாகங்களை எடுத்துரைத்து அது போன்று தவ்ஹீத் வாதிகளும் ஏகத்துவத்திற்காக தியாகம் செய்ய ஒரு போதும் தயங்கக்கூடாது என்பதை சுருக்கமாக தனது உரையில் எடுத்துரைத்தார்கள்.
அதன் பிறகு மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி ஷம்சுல்லுஹா அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர் தனது உரையில் ஸஹாபாக்கள் சத்திய மார்க்கத்திற்கு எதிராக தம்முடைய இரத்த உறவுகளே நின்ற போதும் அவர்கள் குருதி உறவிற்கு சிறிதும் முக்கியத்துவம் வழங்கவில்லை. கொள்கை உறவிற்குத் தான் அவர்கள் முக்கியத்துவம் வழங்கினார்கள். ஆனால் இன்றோ சிலர் சொந்த பந்தங்கள் என்று வரும் போது தம்முடைய கொள்கையில் ஆட்டம் கண்டு விடுகின்றனர் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்து பெண்வீட்டு விருந்து எவ்வளவு பெரிய அனாச்சாரம் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணங்களில் எவ்வாறு கலந்து கொள்வது கூடாதோ அது போன்று பெண்வீட்டு விருந்து வைக்கப்படும் திருமணங்களிலும கலந்து கொள்வது கூடாது. அதுவும் ஒர் பித்அத்துதான். அனாச்சாரம் தான் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்கள்.
பிறகு மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி ஏன் புதிதாக வாங்கும் சொத்துக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்காக பதிவு செய்ய வேண்டும்? என்பதையும் டிரஸ்டாக பதிவு செய்தால் அதனால் ஏற்படும் கேடுபாடுகளையும் கொள்கையற்றவர்களை உறுப்பினராகச் சேர்த்தால் அதனால் ஏற்படும் கேடுபாடுகளையும் விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார்கள்.
பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத் தலைவரும், கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினருமான முஹம்மது நாசிர் அவர்கள் முபாரக் பள்ளிவாசல் அருகில் வாங்கப்பட்ட இடத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில்தான் ஸைஃபுல்லாஹ் ஹாஜா வசூல் செய்தார் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்து வைத்து நான் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வசூல் செய்யவில்லை என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது கடைந்தெடுத்த பொய் என்பதையும் நிருபித்தார்.
மேலும ஸைஃபுல்லாஹ் ஹாஜா இடம் வாங்குவதற்காக வசூல் செய்த விபரங்களை வெளிப்படையாக வெளியிட்டால் இந்த உண்மைகள் அவருடைய வாயினாலே வெளிப்படும் என்றும் அவர் அவ்வாறு வெளியிடுவாரா? என்றும் பொதுக் குழு உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார்.
ஸைஃபுல்லாஹ் ஹாஜா மீது நடவடிக்கை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஸைஃபுல்லா ஹாஜா அவர்களும், மாவட்டப் பொறுப்பிலும் கிளைப் பொறுப்பிலும் இருந்த அவருடைய வகைறாக்களும் கீழ்கண்ட காரணங்களினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகின்றனர்.
1- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், பிரசுரங்கள் வெளியிடுதல் போன்ற அனைத்துக் காரியங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் மூலமாகவே நடத்தப்படவேண்டும். ஆனால் ஸைஃபுல்லா ஹாஜா அவர்களோ தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போதே முபாரக் ஜமாஅத், முபாரக் நலச் சங்கம், தக்வா ஜமாஅத், கடையநல்லூர் இஸ்லாமிய தாவாக் குழு, அக்ஸா மாணவர் அணி அமைப்பு போன்றவற்றை உருவாக்கி அவற்றின் பெயரில் தேர்தல் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், பிரசுரங்கள் வெளியிடுதல், அரசியல் வாதிகள் சந்திப்பு என்று செயல்பட்டு வருகிறார். இது தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு விதிகளுக்கு எதிரானதாகும்.
2- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளான இரத்த தானம் செய்தல், கத்னா முகாம் நடத்துதல், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற பல்வேறு பணிகளைக் குறிப்பிட்டு அரபியிலும் ஆங்கிலத்திலும் புரஃபைல் தயாரித்து அதனைக் காட்டி பல இலட்சங்களை (சுமார் 40 இலட்சம் அல்லது அதைவிட அதிகம்) வசூல் செய்து முபாரக் பள்ளிவாசல் அருகில் உள்ள நிலத்தை வாங்கி அது தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டது நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்.
3- இவ்வாறு பதிவு செய்யலாமா? என்று ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பிஜேயிடம் கேட்ட பொழுது அவ்வாறு செய்வது கூடாது, ஜமாஅத்தின் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும், அல்தாஃபி அவர்கள் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு புதிய நிர்வாகம் இது பற்றி கேள்விப்பட்டு அல்தாஃபி, பிஜே, சம்சுல்லுஹா இன்னும் பல நிர்வாகிகள் முன்னிலையில் ஸைஃபுல்லாஹ் அவர்களை எச்சரிக்கை செய்த பிறகும் ஜமாஅத்திற்குத் தெரியாமல் தனக்கு வேண்டப்பட்ட தனி நபர் பெயரில் பதிவு செய்தது மிகப் பெரும் மோசடியாகும்.
4- நாங்கள் கடையநல்லூர் மக்களிடம் மட்டும் தான் வசூல் செய்தோம் என்று ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் கூறுகிறார். ஆனால் இது பொய்யாகும். கடையநல்லூர் மக்களிடம் மட்டும் வசூல் செய்வதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைக் காட்டி அரபியிலும் ஆங்கிலத்திலும் ஏன் புரஃபைல் தயாரிக்க வேண்டும்.? ஆங்கிலத்தில் அல்லது அரபியில் படித்தால் தான் கடையநல்லூர் மக்கள் உதவி செய்வார்களா? மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டலத்தின் சார்பில் விசா எடுக்கப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகியாக பேச்சாளராக ரமலான் பிரச்சாரத்திற்காக துபாய் சென்ற பொழுது ஸைஃபுல்லாஹ் ஹாஜா வசூலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அமீரகம், குவைத், சவூதி அரேபியாவில் உள்ள கடையநல்லூர் அல்லாத தமிழ்நாடு தவ்ஹீத் சகோதரர்களிடமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடையநல்லூரைச் சார்ந்த பலரும் தவ்ஹீத் ஜமாஅத் என்பதற்காகவே உதவி செய்துள்ளனர். தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பில் இருந்து கொண்டே, தவ்ஹீத் ஜமாஅத் பணிகளைக்காட்டி புரபைல் தயாரித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களிடம் வசூல் செய்து தனிப்பட்ட கமிட்டிக்கு பாத்தியப்பட்டது என்று கூறுவது ஜமாஅத்தின் நிர்வாகிகள் மீதும் ஜமாஅத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மைக்கு எதிரானதாகும்.
5- புதிதாக எந்த ஒரு சொத்து வாங்கினாலும் அது அந்தந்த கிளையின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரிலேயே வாங்கப்பட வேண்டும், அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையிலுள்ள அனைவரையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்பது நமது சட்ட விதியாகும். இதில் ஸைஃபுல்லா ஹாஜா அவர்களும் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால் இது நடைமுறைக்கு வந்து பல்வேறு ஊர்களிலும் இவ்வாறு தான் நம்முடைய மர்கஸ்களுக்கு இடம் வாங்கப்படுகிறது. ஆனால் இது நடைமுறைக்கு வந்த பிறகு இந்த விதிக்கு எதிராக கடையநல்லூரில் புதிதாக வாங்கிய இடத்தை தனி நபர் பெயரில் பதிவு செய்ததுடன் அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை உறுப்பினர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, இது முபாரக் கமிட்டிக்கு பாத்தியப்பட்டதாகும், மாநிலத் தலைமை எங்கள் நிர்வாகத்தில் தலையிட அதிகாரமில்லை என்றெல்லாம் கூறுவது அமைப்பிற்கு எதிரான மிகப்பெரும் துரோகமாகும்.
6- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் உதவிகள் அனைத்தையும் பெற்றுத் தான் பல்லாண்டுகளாக முபாரக் பள்ளிவாசல் இயங்கி வருகிறது. மேலும் மாநிலத் தலைமையின் மூலம் அளிக்கப்படும் ஃபித்ரா போன்றவைகளையும் இந்தக் கமிட்டி மூலம் விநியோகித்தனர். ஜாக்கினர் பள்ளியினை ஆக்கிரமிக்க வந்தபோது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் தான் அதனை எதிர்த்து நின்றனர். வசைமொழிகளைத் தாங்கிக் கொண்டனர். இஸ்லாமியக் கல்லூரி பணத்தைத் தான் (கடனாக) முபாரக் பள்ளிவாசல் வழக்கு வகைக்காக ஸைஃபுல்லாஹ் பயன்படுத்தினார். மேலும் முபாரக் வழக்கு வகைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் பல்வேறு செலவினங்களைச் செய்துள்ளனர். அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இல்லையென்றால் முபாரக் பள்ளிவாசலை ஜாக்கினர் ஆக்கிரமித்திருப்பர். இது உலகிற்கே தெரிந்த உண்மை. அனைத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு முபாரக் கமிட்டி என்பது தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உட்பட்டதல்ல. என்று ஸைஃபுல்லாஹ் கூறுவது மாபெரும் மோசடியாகும்.
7- ஆடம்பரத் திருமணங்களிலும், பித்அத்கள்,பெண்வீட்டு விருந்து நடைபெறும் திருமணங்களிலும் கலந்து கொள்வது, அத்திருமணங்களை நடத்தி வைப்பது, சீர் சீராட்டு என்ற பெயரில் தவ்ஹீத் வாதிகள் இலட்சக்கணக்கில் பாத்திர பண்டங்களை வாங்கிக் கொள்வது போன்ற குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
8- கிளை நிர்வாகத்தை கிளை நிர்வாகிகள் தான் நிர்வகிக்க வேண்டும் என்பதற்கு மாற்றமாக கடையநல்லூர் கிளை நிர்வாகத்தை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக கிளையின் பெயரில் இயங்கக்கூடிய ஆம்புலன்ஸ் வரவு செலவு கணக்குகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் நிர்வாகக் குழுவிலோ பொதுக் குழுவிலோ மக்களுக்கு மத்தியில் அதன் கணக்கு வழக்குகளை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
9- கிளை நிர்வாகிகள் தீர்த்து வைக்க வேண்டிய குடும்பப் பிரச்சினைகளையும் ஏனைய பிரச்சினைகளையும் தான் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வைப்பது.
10- மாவட்ட நிர்வாகத்திற்கோ, மாநில நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல், கிளை உறுப்பினர்களிடம் எதையும் கலந்தாலோசிக்காமல் கடையநல்லூரைச் சார்ந்த மாவட்ட நிர்வாகியையும், கிளை நிர்வாகிகளையும் கைப்பாவைகளாக்கி, ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் ஆதாயம் தேடி புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பள்ளிவாசல் என்ற பெயரில் கட்டிடம் கட்டியது இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பணத்தினை இலட்சக்கணக்கில் செலவு செய்தது பொதுமக்களுக்கு மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்ணியததிற்கு பாதிப்பை ஏற்பறடுத்தியுள்ளது. இதற்கு அடிப்படையாக திகழ்ந்தவர் ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் தான்.
11- மாநில நிர்வாகத்திற்கோ, மாவட்ட நிர்வாகத்திற்கோ எதையும் தெரிவிக்காமல் மேலாண்மைக் குழு உறுப்பினராக இருந்த சகோதரர் அப்துந் நாசிர் அவர்களின் மீது பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தி முபாரக் பள்ளிவாசலில் ஜும்ஆ உரையாற்றுவதற்கு பல மாதங்கள் தடைவித்தது ஜமாஅத்திற்கு எதிரான செயலாகும். மாநில நிர்வாகிககள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாநிலத் தலைமைக்குரியதே என்பதை ஸைஃபுல்லாஹ் நன்றாக தெரிந்திருந்தும் மாநிலத் தலைமைக்கு எதையும் தெரிவிக்காமல் இவ்வாறு செயல்பட்டிருப்பது ஜமாஅத்திற்கு எதிரானது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
12- மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஜும்ஆ உரைக்காக தாயிக்களை அனுப்பும் போது மாநில நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக எதேச்சதிகாரமாக அந்த தாயிக்களை மாற்றியதும் அவர்களுக்கு நாங்கள் தான் சம்பளம் கொடுக்கிறோம் எனவே எங்கள் விருப்பப்படி தான் பயன்படுத்துவோம் என்று கூறி ஜமாஅத்திற்கு எதிரான போக்கை வெளிப்படையாகக் காட்டினார்.
13- கடையநல்லூரைச் சார்ந்த ஒரு தனவந்தர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதுள்ள நம்பக்தன்மையாலும் நற்பணிகளாலும் கவரப்பட்டு தன்னுடைய நிலத்தினை பள்ளிவாசல் கட்டுவதற்காகவும், மையவாடி அமைப்பதற்காகவும் தானமாக வழங்கினார். அவருக்கு ஸைஃபுல்லாவாகிய என்னைத் தான் தெரியும். தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் கேட்டு ஜமாஅத்தின் அந்தஸ்தை பின்னுக்குத் தள்ளி தன்னை முன்னிறுத்தி ஸைஃபுல்லாஹ் பேசி வருகின்றார். இது அகம்பாவம் மற்றும் ஆணவத்தின் உச்சகட்டம் ஆகும். ஸைஃபுல்லாஹ் ஜமாஅத்தினுடைய நிர்வாகியாக இல்லாமல் இருந்திருந்தால் இவரை யாருக்காவது தெரிந்திருக்குமா? நபியவர்கள் ஸகாத்தை வசூலிக்க அனுப்பிய நபித்தோழர் இவ்வாறு கூறிய போது இவர் தன்னுடைய தந்தை வீட்டிலோ தாய் வீட்டிலோ இருந்திருந்திருந்தால் இவருக்கு கிடைத்திருக்குமா? என்று நபியவர்கள் பதில் கூறினார்கள். அந்த நபித் தோழரின் கூற்றைப் போன்று தான் ஸைஃபுல்லாஹ்வின் பேச்சுகளும் அமைந்துள்ளன.
14- சுய இலாபத்திற்காக அரசியில் வாதிகளுடன் கைகோர்த்து செயல்பட்டதும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் அரசியல்வாதிகளை புகழ்ந்து பேசியும் ஸைஃபுல்லாஹ் அவர்கள் செயல்பட்டுள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
15- தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் இயங்கி வ்ந்த ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கூட முபாரக் பள்ளிவாசல் அருகில் அந்த ஆம்புலன்ஸிற்காக உள்ள இடம் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட இடத்தில் நிறுத்தக் கூடாது. என்று கூறியதுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டில் எடுத்து நிறுத்தி ஜமாஅத்திற்கு எதிரான தன்னுடைய குரோதத்தை ஸைஃபுல்லாஹ் வெளிப்படுத்தினார்.
மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் இன்னும் ஜமாஅத்திற்கு எதிரான பல செயல்பாடுகளாலும் ஸைஃபுல்லாஹ் அவர்களும் அவரைச் சார்ந்த அவருடைய வகையறாக்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று பொதுக் குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் மாநிலத்தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்புப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.
எனவே சைபுல்லாஹ் ஹாஜா அவர்களுடன் ஜமாஅத் தொடர்பான எந்த உறவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
முபாரக் பள்ளிவாசல் தொடர்பாகவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் வசூல் செய்து தனி நபரின் பெயரில் பதிவு செய்தது தொடர்பாகவும் மாநிலத் தலைமையின் வழிகாட்டுதலின் படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுது.
மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற இந்த கூட்டம் சரியாக 1 : 30 மணிக்கு பிரார்த்தனையுடன் நிறைவு பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான் 18.06.2011


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 18.06.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  மும்தாஜ் அவர்கள்  உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்.17.06.11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக கடந்த 17.06..2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  “மறுமை சிந்தனை ” என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் சல்மான் பாரீஸ் உரை நிகழ்த்தினார். இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்

உலக வரலாற்றில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உருவாக்கியவர் நமது நாட்டின் அரசர் திப்பு சுல்தான். அதனால்தான் இன்றும் அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் அவரது ஓவியம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திப்பு சுல்தான் 1780-ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய 5000 மூங்கில் ராக்கெட்டை கொண்டு குண்டூர் யுத்தத்தில் முதன்முதலாக ஆங்கில படைகள் மீது பயன்படுத்தினார். பின்னர் 1804-இல் ஆங்கில ராணுவ அதிகாரியின் மகன் வில்லியம் காங்கிரீவ் திப்புவின் ராக்கெட் பகுதிகளை இங்கிலாந்து கொண்டு சென்று நவீனப்படுத்தினார். அதுவே பின்னர் காங்கிரீவ் ராக்கெட்டு கள் என்று பெயரிடப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் ஆராய்ச்சிக் குழந்தையென்றால், அதனை பத்திரமாக தன் முதுகில் ஏற்றிச்சென்று, மிகச் சரியான சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும் ஏவுகலம் (Launch Vehicle) (ராக்கெட்) அதன் தாய் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். கடின முயற்சி, தன்னம்பிக்கை, திறன் ஆகியவை அதிகம் தேவைப்படுகின்ற விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் ஏவு வாகனம் ஒரு முக்கிய பகுதி.

இந்தியாவில் ராக்கெட் (அல்லது) ஏவுகலம் பிறப்பு 1960 காலகட்டங்களில் நிகழ்ந்தது. பிரெஞ்சு நாட்டினுடைய சவுண்டிங் ராக்கெட் தொழில்நுட்பமான கேரியர் ராக்கெட் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில், சுமார் 200 கி.மீ. உயரத்தில் நிகழும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டு வந்தது. அந்நாடு, அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு அளிக்க முன்வந்தது. இந்தியா அத்தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு, சவுண்டிங் ராக்கெட்டுகளை தும்பாவில் தயாரிக்கத் துவங்கியது. இதுதான் ஆரம்பம்.

1970 காலகட்டத்தில் PSLV ராக்கெட்டுகளுக்கு தேவையான விகிங் எஞ்சின் தொழில்நுட்பத்தை பிரான்ஸ் இந்தியாவிற்கு அளித்தது. அந்நாடு இத்தொழில்நுட்பத்தை பணம் வாங்காமல், அறிவியல் துறையில் இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்பு ஏற்படவேண்டி இதனை செய்தது. நம் நாட்டு விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தை கற்றறிந்து, மேம்படுத்தினர். பின்னர் நம்முடைய நாட்டிலேயே இயந்திர பாகங்களையும், நவீனப்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தினையும் உருவாக்கலானார்கள்.

நம்முடைய அனைத்து ராக்கெட்டுகளின் தாய் சவுண்டிங் ராக்கெட்டுகள். இவை 100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை 300 முதல் 400 கி.மீ. உயரத்தில் விண்ணில் செலுத்தும் திறன் கொண்டவை. இந்தியாவில் முதலாவது செயற்கைக்கோள் ராக்கெட்டான நகயலி3ன் வடிவமைப்பும், தொழில்நுட்ப அடித்தளமும் உருவானதற்கு இந்த சவுண்டிங் ராக்கெட் தொழில்நுட்பம் வழிவகுத்தது. உள்நாட்டு வடிவமைப்பு, திறன், தொழில்நுட்ப மேம்பாடு போன்றவை SLV-3ன் உருவாக்கத்தில் துளிர்விடத் துவங்கியது.

ஒரு ராக்கெட் (அல்லது) ஏவுகலம் என்பது நியூட்டனின் மூன்றாம் விதியினை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய இயந்திர வாகன அமைப்பு. ராக்கெட்டின் முன் பகுதியிலிருந்து (தலை) காற்று உள்ளிழுக்கப்பட்டு, திட அல்லது திரவ எரிபொருட்களுடன் எரிகலன் அமைப்பில் எரிக்கப்படுவதனால் அதிக அழுத்தம் கொண்ட வெப்ப வாயு உருவாகிறது. இந்த வெப்ப வாயு பீச்சாங்குழல்(Nozzle) போன்ற அமைப்பின் வழியே (குறிப்பிட்ட விட்டம் வரை குறுகி, பின் அகன்று விரியும் குழல் போன்ற அமைப்பு) செல்லும்போது, குறுகிய பகுதியில் வெப்ப வாயுவின் அழுத்த ஆற்றலானது, அகன்ற பகுதியில் செல்லும் போது இயக்க ஆற்றலாக மாறுகிறது. ராக்கெட்டின் வால் பகுதியில் வெப்ப வாயு அதிக விசையுடன் வெளியேறுகிறது. இதனால் இவ்விசைக்கு சமமான விசை ராக்கெட்டின் மீது செயல்பட்டு, ராக்கெட்டை முன்னோக்கி அதிக வேகத்தில் உந்துகிறது. நாம் தீபாவளிக்கு வெடிக்கும் ராக்கெட் பட்டாசுகூட இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.

விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோளின் பயன்பாடுகளைப் பொறுத்துதான் அதற்குண்டான சுற்றுப் பாதை தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவ்வாறு நிர்ணயிக்கும் சுற்றுப் பாதையானது ராக்கெட்டுகளின் தேவையான பண்புகளை தீர்மானிக்கிறது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டவுடன் நிச்சயிக்கப்பட்ட பாதையில் பறந்து சென்று குறிப்பிட்ட உயரம் மற்றும் திசை வேகத்தில், சுற்றுப் பாதையில் செயற்கைக்கோளை செலுத்துகிறது. இதற்காக பிழைநிகழ இடமளிக்காத தரம் வாய்ந்த ராக்கெட் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், ஏவுதலுக்கு முன்னர் அதனுடைய நிர்ணயிக்கப்பட்ட செயல்திறனை சோதனை செய்து உறுதி செய்ய தள வசதிகள், ஏவு வாகன திட்ட நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு வசதிகள் ஆகியவற்றின் அவசியம் மிக முக்கியமானது.

செயற்கைக்கோள் ஏவு வாகனம் (ராக்கெட்) வடிவமைப்பதில் 1. உந்துசக்தி 3. காற்றியக்கம் மற்றும் உருவாகும் வெப்பம் 3. கட்டுமானம் மற்றும் பயன்படுத்தப்படும் உலோகப் பொருட்கள் 4. செயற்கைக்கோள் ராக்கெட்டினின்றும் பிரியும் தொழில்நுட்பம் 5. ராக்கெட்டுகள் கட்டம் கட்டமாக பிரியும் வழிமுறை 6. ஒருங்கிணைப்பு, ஏவுதலுக்கு முன் பாகங்களின் இயக்கங்களை சரிபார்த்தல் மற்றும் ஏவுதல். 7. நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை முக்கியமான பகுதிகள்.

தள்ளுசுமை எடை (Payload) மற்றும் சுற்றுப்பாதையின் அளவீடுகள் நிர்ணயிப்பதிலிருந்துதான் ராக்கெட் வடிவமைப்பு தொடங்குகிறது. சுற்றுப்பாதையின் அபோஜீ (Apogee) (சுற்றுப் பாதையில் சுற்றிவரும்போது பூமிக்கும் செயற்கைக்கோளுக்கும் உள்ள குறைந்த தூரம்) மற்றும் பெரிஜீ (Perigee) (அதிக தூரம்) உயரங்கள், பூமத்திய ரேகையைப் பொருத்து சுற்றுப்பாதை தளத்தின் சாய்வுக்கோணம் ஆகியவற்றை நிர்ணயிப்பது ஆகியவை ராக்கெட் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சவுண்டிங் ராக்கெட்

1963- ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி நைக் - அபாசே சவுண்டிங் ராக்கெட் திருவனந்தபுரம் தும்பா ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் ராக்கெட் முதல் தொழில்நுட்ப வளர்ச்சி அப்போது துவங்குகிறது. அன்று தொடங்கிய இப்பயணத்தில் சோதனை ராக்கெட்டுகள், வானிலை ஆய்வு ராக்கெட்டுகள் அறிவியல் ஆராய்ச்சிக்கான ஏவுதல்கள் என பல ராக்கெட்டுகளை இந்தியா வடிவமைத்து விண்ணில் ஏவியுள்ளது. இந்த ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டுகள் 10 முதல் 100 கி.மீ. வரையிலான தள்ளுசுமை (Payload) எடுத்துச் செல்லும் திறன் படைத்தவை.

அயனோஸ்பியரின் ‘D’ மற்றும் ‘F’ பகுதியைப் பற்றிய ஆய்வு, வாயு மண்டலத்திற்கும் மேல் வாயுக்களின் வேதியியல் பண்புகள் மற்றும் அதன் நிறை பற்றிய ஆய்வு 350 கி.மீ.க்கும் மேல் சூரியனிலிருந்து வரும் ல-கதிர்களின் ஆய்வு போன்றவற்றை மேற்கொள்ள இவ்வகை ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

எஸ்.எல்.வி.-3
(Satellite Launch Vehicle3-SLV3)

இது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஏவுகலம். ராக்கெட் தொடர்பான தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் SLV-3 திட்டத்தின் மூலம் பிறந்தது. ராக்கெட் மற்றும் திட்ட வடிவமைப்பு, புதிய பொருட்கள் மற்றும் வன்பொருள் தயாரிப்பு தொழில்நுட்பம், அதிக விசை தரும் திட எரிபொருள்கள், நான்கு வகையான மோட்டார்களுக்கு, கலவை நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வெப்பத்தடுப்பு கவசம், கண்ட்ரோல் பவர் பிளாண்ட்கள், இனர்ஸியல் சென்சார்கள், மின்னணு சிஸ்டம் ஒருங் கிணைப்பு, பன்முக வடிவமைப்பு, மாதிரி உருவாக்கம், செயற்கைக்கோள் ஏவுவாகன திட்ட நிர்வாகம் என அத்தனை களங்களும் SLV-3 திட்டத்தின் மூலம் முன் னேற்றம் கண்டது. PSLV மற்றும் GSLV போன்ற ஏவுவாகனங்களுக்கான ஒருங்கிணைந்த வடிவமைப்பு அணுகுமுறை உருவாக்குவதற்கு SLV-3 திட்ட வெற்றிதான், உந்துசக்தி.

SLV-3 E1-இல் இடம்பெற்ற ஒரு வன்பொருள் முறையாக செயல்படாமையினாலும், இரு கட்டங்களை கொண்ட ராக்கெட்டின் இரண்டாவது கட்டுப்பாட்டு அமைப்பின் சோலனாய்டு வால்வில் தூசு படிந்து சரிவர இயங்காமையி னாலும் திட்டம் தோல்வியை சந்தித்தது. அடுத்த முயற்சியான SLV-3E2-வில் குறிப்பிட்ட குறைபாடுகளை களையப்பெற்று 1980-ஆம் ஆண்டு ஜூலை முதல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

எ. எஸ்.எல்.வி. (ASLV- Augmented Satellite Launch Vehicle)

அறிவியல் ஆராய்ச்சிக்கும், வானியல் பயன்பாட்டுக்கும் அதிக எடையுடைய பேலோடுகளை விண்ணில் செலுத்த வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, வடி வமைக்கப்பட்டவை இந்த பெரிதாக்கப்பட்ட செயற்கைக் கோள் ஏவு வாகனத் ஆநகய திட்டம்.

இது SLV-3 ராக்கெட்டுடன் இரு ராக்கெட் மோட்டார் களையும் பூஸ்டர் மோட்டார்களையும் கூடுதலாகப் பெற்றவை. SLV-3 திறந்தச் சுற்று கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டும் அமைப்பினைப் பெற்றதெனில் ASLV மூடிய சுற்று அமைப்பினைக் கொண்டது. தொகுப்பு பீச்சாங்குழல் (Nozzle), ராக்கெட்டின் பயணப் போக்கை கட்டுப்படுத்தும் அமைப்பு, ஏவுதள ஒருங்கிணைப்பு வசதிகள் ஆகியவை ASLV திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன.

வாயு மண்டலத்தில் ராக்கெட் பயணிக்கும் போது நிகழும் உயர்ந்த காற்றியக்க அழுத்தம், தானாக பறக்கும் அமைப்பு, ராக்கெட்டில் உள்ள கணினியுடன் இணைக்கப்பட்ட தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பின் கண்காணிப்பு போன்றவை ASLV - யில் மேம்படுத்தப்பட்டன.

பி. எஸ்.எல்.வி. (PSLV -Polar Satellite Launch Vehicle)

SLV-3 யின் மாடலை அடிப்படையாகக் கொண்டு அதனுடன் தேவைக்கேற்ப பல்வேறு வேலைகளை செய்யக் கூடிய இயந்திரப் பாகங்களை இணைத்துதான், ஏவு வாகனங்கள் நவீனப்படுத்தப்பட்டன. டநகய ராக்கெட்டுகள் 1000.கி.கி. எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை சூரியனை மைய மாகக்கொண்ட வட- தென்துருவ சுற்றுப் பாதையில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை. PSLV ராக்கெட் நான்கு நிலைகளைக் கொண்டது. முதல் நிலை யில் 139 டன் எடையுள்ள உந்து எரிபொருள் கலம், இரண்டாவது நிலையில் 37 டன் எடையுடைய திரவ எரிபொருள் கலம், மூன்றாம் நிலையில் உயர்செயல்பாட்டு மோட்டார், நான்காம் நிலையில் இரட்டை என்ஜினுடன் இணைந்த 2.5 டன் எரிபொருள் கலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. PSLV -யில் டிஜிட்டல் முறையிலமைந்த தானாக பறக்கும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரெசின்ஸ் (RESINS) எனும் முப்பரிமாண வழிகாட்டும் அமைப்பு மூலம் செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. PSLV ராக்கெட்டுடன் அதிக சக்திகொண்ட பூஸ்டர்களையும், பெரிய மோட்டார்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட PSLV-XL உதவியுடன் சந்திரயான் -1 நிலவுக்கு பயணமானது.

PSLVயின் உதவியிடன் கொரியாவின் KITSAT-3 மற்றும் ஜெர்மனியின் TUBSAT செயற்கைகோள்கள் வாணிபரீதியாக விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் விண்வெளி திட்டங்களில் இந்தியாவின் வெற்றி சதவீதம் கூடியது.

குறைந்த எடைகொண்ட வெப்பத் தடுப்பு கவசம், காற்றினூடே பறக்கும்போது காற்று மூலக்கூறுகளுக்கும் விண்கலத்தின் மேற்பரப்பிற்கும் இடையே நிகழும் உராய்வினால் ஏற்படும் வெப்பத்தை தாங்கக்கூடிய வடிவமைப்பு, ஹைப்பர் சோனிக் காற்றியக்க வடிவமைப்பு (ராக்கெட் விண்ணில் பறக்கும்போது அதன் வேகம் படிப்படியாக அதிகரித்து சப்சோனிக், டிரான்சோனிக், சூப்பர்சோனிக் மற்றும் ஹைப்பர் சோனிக் போன்ற வேகக் கட்டங்களை அடையும்போது ராக்கெட்டின் உடலமைப்பில் சுற்றியக்கம் ஏற்படுத்தும் தடையினை குறைப்பதற்கான அமைப்பு), வேகக்கட்டுப்பாட்டு அமைப்பு, ராக்கெட்டை திரும்பப் பெறுதல் மற்றும் மிதவை அமைப்பு ஆகிய தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டன.

ஜி. எஸ்.எல்.வி. (GSLV- Geosynchronous Satellite Launch Vehicle)

PSLVயினை படிப்படியாக நவீனப்படுத்தும் அதே வேளையில், உடன் எடையுள்ள தொலைத்தொடர்பு செயற்கைகோளை விண்ணில் செலுத்த GSLV-யினை ISRO வடிவமைத்தது. இதில் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் நிலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சவால்களை சமாளித்து, அதிக எடையை சுமந்து செல்லும் வகையில் GSLV-யின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் ரஷ்யாவின் கிரையோஜெனிக் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு வந்தது. தற்போது உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் பகுதி தயாரிக்கப்படுகிறது. ராக்கெட் எதிர்பார்க்கப்பட்ட தன்மையுடன் செயற்கைக்கோளை குறைந்தபட்ச விலகலுடன் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு மூடப்பட்ட சுற்று வழிகாட்டும் அமைப்பு பயன்படுத்தப் படுகிறது. இந்த அமைப்பில் ரேட் இன்டகிரேடட் ஜைரோ போன்ற ஜைரோ சென்சர்கள், வேகத்தை அதிகப்படுத்தும் சர்வோ ஆக்கிலரோ மீட்டர்கள் (வேக முடுக்கி), உயிர்நாடி போன்ற இணைப்பு நுட்பமான வழிகாட்டும் மென்பொருள் அடங்கியுள்ளன. மேலும் புவியிலிருந்து எவ்வளவு உயரத்தில் தனது சுற்றுப்பாதையில் செயற்கைகோள் வலம் வரவேண்டும் என்று தீர்மானிக்கிறோமோ அதில் 10 கி.மீ. அதிகமான (அல்லது) குறைவான உயரத்திலும் தீர்மானிக்கப்பட்ட சுற்றுப்பாதையின் கோணத்தில் 0.2 டிகிரி அதிகமான (அல்லது) குறைவான வித்தியாசத்தில் ஜைரோ, துல்லியமாக செயற்கைகோளை வலம்வர வைக்கும்.

ஜி. எஸ்.எல்.வி மார்க் . GSLV MK III- Geosyronous Satellite Launch Vehicle Mark III)

நான்கு டன் எடைகொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு GSLV MK III உருவாக்கப்பட்டு வருகிறது. 200 டன் எடை திட எரிபொருள் மோட்டார்களும் 110 டன் எடை திரவ எரிபொருள் மோட்டார்களும், இறுதிக் கட்டத்தில், 25 டன் எடை கிரையோஜெனிக் எரிபொருள் நிலையையும் கொண்டதாக இருக்கும். தீ கண்டுபிடிக்கும் கருவி, தொலைதூரக் கண்காணிப்பு, தொலைக்கட்டளை ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பயன் படுத்தப்படவுள்ளது.
செலுத்தப்பட்ட வாகனம் மீண்டும் பூமிக்கு வருவித்தல், அதற்கான உபகரணங்கள் தயாரித்தலில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் விண்கலம் ஏவுதலுக்கான செலவு குறையும். PSLV ராக்கெட்டுகள் மூலம் 600 கி.மீ. எடையுள்ள செயற்கைகோளை 300 கி.மீ. உயரத்தில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் செலுத்துவது, அவ்வாறு செலுத்தப்பட்ட செயற்கைகோள் திட்டமிட்ட பணி முடிவடைந்தபிறகு பூமிக்கே திரும்ப வந்துவிடுவது தொடர்பான ஆய்வுகள் நடந்துவருகின்றன.

இஸ்ரோவின் ராக்கெட் தொழில்நுட்பத்தில் கடந்த 40 வருடங்களில் பல்வேறு வகையான மாற்றங்கள் நடந்தேறியுள்ளன. 1967-இல் 75 மி.மீ. விட்டமுடைய மோட்டார், ராக்கெட்டுகளில் உபயோகிக்கப்பட்டது. இது 4 கி.கி. எரிபொருளை எரிக்கவல்லது. சவுண்டிங் ராக்கெட்டுகளில் 125 மி.மீ. முதல் 560 மி.மீ. விட்டமுடைய திட எரிபொருள் மோட்டார் உபயோகிக்கப்பட்டது. இது 14 கி.கி. முதல் 700 கி.கி வரையிலான எரிபொருளை எரிக்கவல்லது. SLV-3ன் பூஸ்டர் மோட்டாரானது 1 மீ விட்டமுடையதும், 9 டன் எரிபொருளைக் கொண்டதுமாகும். PSLV மற்றும் GSLV ராக்கெட்டுகளில் உலகத்தரம் வாய்ந்த, 2.8மீ. விட்டமுடைய, 139 டன் எரிபொருள் கொள்ளளவு கொண்ட, 4700 கி. நியூட்டன் உந்துசக்தி கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் GSLV MK III ராக்கெட்டுகளில் 3.2 மீ. விட்டமுடையதும், 200 டன் எரிபொருள் கொண்டதுமான மோட்டார்கள் உபயோகப் படுத்துவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

ராக்கெட் மோட்டார்களின் கட்டுமானத்திற்கு தரமான மாராஜிங் எஃகு மற்றும் நவீன வெல்டிங் தொழில்நுட்பங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. திரவ உந்து எஞ்சின்களில் ஆன் ஆஃப் இயக்கத்திற்கு பயன்படும் செயல் கட்டுப்பாட்டு அமைப்பில் நைட்ரஜன் ஆக்ஸைடையும் மோனோ மீதைல் ஹைட்ரஜனையும் கலந்து மிக வேகமாக ஆன்- ஆஃப் கட்டுப்பாடு நிகழ்த்தப்படுகிறது.

கிரையோஜெனிக் தொழில்நுட்பம் GSLV -யின் இறுதி நிலையில் பயன்படுத்தப்படுகிறது. இதில் - 1820 சென்டிகிரேடிலேயே கொதிக்கக் கூடிய திரவ ஆக்சிஜனும், - 2530 சென்டி கிரேடிலேயே கொதிக்கக்கூடிய திரவ ஹைட்ரஜனும் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை பாதுகாப்பாக ஒன்றுடன் ஒன்று கலக்காமல் தடுப்பதற்கு குறைந்த வெப்பநிலையை தாங்கவல்ல உலோக பாகங்கள் மற்றும் இவற்றை எஞ்சினில் செலுத்தக்கூடிய பம்பிற்கு பிரத்தியோக சீல் (தடுப்பான்கள்) உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. GSLV MKIII-யில் 200KN முடுக்குவிசை கொடுக்கவல்ல கிரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கத்தில் இஸ்ரோ முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

ஏவுதள வசதிகள், ராக்கெட்டை ஏவுதலுக்கு முன்னர் சோதனை செய்ய தேவையான வசதிகள் ஆகிய அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழ்ந்துவரும் பன்முக தொழில்நுட்ப வளர்ச்சி, சரியான திட்டமிடல், உள் நாட்டிலேயே இயந்திரப்பாகங்களை உற்பத்தி செய்ய தேவையான தொழிற்சாலை வசதிகள், சரியான மதிப்பீடு மற்றும் சோதனை முறைகள் ஆகியவை உலக அரங்கில் இந்தியாவின் தோற்றத்தை உயர்த்தியதோடு மட்டுமன்றி, வணிக நோக்கில் வெளிநாட்டுத் தேவைகளுக்கேற்ப செயற்கைகோள்களை செலுத்தும் நிறுவனமாகவும் மாற்றியுள்ளது. தற்போது பல நாடுகள் குறைந்த செலவில் விண்ணில் செயற்கைகோளை ஏவுவதில் நாட்டம் செலுத்தி வருகின்றன. இன்று உலகில் இந்தியாவில் விண்வெளித் திட்டங்கள் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகக்குறைந்த செலவிலேயே நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பது உலக அரங்கில் சாதனையாகும்.

                                                                                           - எஸ். விஸ்வநாதன்
                                                                                              பொது அறிவு உலகம்

சாய் பாபாவின் ரகசிய அறையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள், தங்கம், வெள்ளி நகைகள்

 
மரணித்த சர்ச்சைக்குரிய சாமியார் சாய் பாபாவின் ரகசிய அறையில் 98 கிலோ தங்கமும்,(மதிப்பு ரூ-201610000.) 307 கிலோ வெள்ளியும்,(மதிப்பு ரூ-17500000.) 11.56 கோடி ரூபாயும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சாய்பாபாவின் ரகசிய அறையான யஜூர்வேத மந்திர் மீண்டும் திறக்கப்பட்டது. அப்பொழுது அங்கு கோடிக்கணக்கான ரூபாயும், தங்கம், வெள்ளி நகைகளும் இருப்பது தெரியவந்தது.

கடந்த மார்ச்-28-ஆம் தேதி மருத்துவமனையில் சாய் பாபாவை உடல் நலக்குறைவினால் அனுமதிக்கப்பட்ட பிறகு யஜுர்மந்திர் பூட்டப்பட்டது.

தற்போது ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சர்ச்சைக்குரிய சாய்பாபா வசித்து வந்த அறை திறக்கப்பட்டது. முன்னாள் தலைமை நீதிபதியும், சத்ய சாய் டிரஸ்ட் உறுப்பினருமான பி.என். பகவதி, செயலாளர் சக்ரவர்த்தி, சாய்பாபாவின் சீடரும் பாதுகாவலருமான சத்யஜித் ஆகியோர் யஜூர் வேத மந்திரினுள் சென்றனர். அந்த அறையைத் திறக்கும் ரகசிய எண் சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித்துக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரே அறையைத் திறந்தார்.

பின்னர் உள்ளே போன போது ஒவ்வொரு அறையிலும் பணமும், நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. பணம் கட்டுக் கட்டாக இருந்ததாம். வைர நகைகள் பெருமளவில் இருந்தன. இவற்றின் மதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பல கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் பணத்தையும், நகைகளையும் வங்கிக்கு கொண்டு சென்று டெபாசிட் செய்தனர்.

ஞாயிறு

மது அருந்துதல் உலக அளவில் 10வது இடத்தில் வந்து கேவலப்பட்ட மலேசியா!

மலேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு என்று சொல்லப்பட்டாலும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படியிலான சட்டங்கள் இங்கு அமுலில் இல்லை இதனால் இங்கு மது விற்பனை சக்கை போடுபோடுகிறது. 
 உலக சுகாதார அமைப்பு அதிகம் மது குடிக்கும் மக்களைக் கொண்ட நாடுகள் பட்டியல் ஒன்றை தயாரித்தது இதில் மலேசியாவிற்கு 10வது இடம் கிடைத்துள்ளது. 
 கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மலேசியர்கள் மதுவிற்காக செலவிட்ட தொகை 2250 கோடியாம் சராசரியாக ஒரு மலேசியன் 11 லிட்டர் பீரை அருந்துகிறாராம்  மலேசியர்கள் அருந்தும் ஆல்கஹால் அதிகம் உள்ள மது சராசரியாக 7 லிட்டராம் சர்வே முலம் கிடைத்த இந்த கணக்கெடுப்புகளைக் கொண்டு உலக அளவில் மலேசியாவிற்கு 10வது இடத்தை தந்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

இந்த புள்ளிவிபரங்கள் வெளியானவுடன் செய்தியாளர்களை சந்தித்த மலேசியா குடும்ப நல அமைச்சர் ஹெயஷ் செய்ஹி மலேசியக கலாச்சாரத்தில் மதுவிற்கு இடமில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்று கூறியதோடு மதுவின் தீமைகள் பற்றி மலேசியா அரசு சார்பில் மலை தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
மலேசியாவில் இந்து கிருத்துவம் தாவோயிசம் புத்தம் ஆகிய மதங்கள் இருந்த போதும் முஸ்லிம்களே பெரும்பான்பையினராக உள்ளனர் ஆனால் இந்த முஸ்லிம்கள் தூய இஸ்லாத்தை பின்பற்றுபவர்களாக இல்லை மாறாக பிற மத கலாச்சாரங்களை காப்பி அடித்து வாழ்பவர்களாகவே உள்ளனர் ஒரு முஸ்லிம் நாட்டில் மதுப்பழக்கம் அதிகமாக இருக்கின்றது என்ற செய்தி முஸ்லிம்களுக்கு மிக கேவலமான ஒன்றாகும்.
மலேசியா முஸ்லிம்களிடம் பணம் இருக்கு அளவிற்கு மார்க்கப் பற்று இல்லை மார்க்கப் பற்றை ஏற்ப்படுத்தும் அமைப்புகளையும் தனி மனிதர்களையும் மலேசியா அரசு ஒருவிதத்தில் ஒடுக்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
 இந்த தவறான அணுகுமுறையை மலேசியா அரசு கைவிட்டால் அங்கு மார்க்கப் பற்று ஏற்ப்படும் அது மதுப்பழக்கத்தை வேரோடு வெட்டிச் சாய்த்துவிடும் இந்த நல்ல சூழ்நிலை ஏற்ப்பட மலேசியா ஆட்சியாளர்கள் மனது வைப்பார்களா?  

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலைவணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹமத்)


அல்லாஹ் கூறுகிறான்:

விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் (வணக்கத்திற்காக) நாட்டப்பட்டுள்ளவை(களான சிலை)களும் குறிபார்க்கும்(சூதாட்ட) அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றிபெறுவீர்கள். (அல்குர்ஆன்
5:90)

                                                                                   நன்றி:உணர்வு இதழ் 

சனி

ஆசாத் நகர் கிளையில் கிரகணத் தொழுகை15.06.11


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்  கிளையில் கடந்த 15-6-2011 அன்று சந்திர கிரகணத் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.
பின்னர் மாவட்ட பேச்சாளர் கிளை தலைவர் காஜாஅவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்.13.06.11


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம்  ஆசாத் நகர் கிளையின் மாணவரணி சார்பாக 13.06.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள், தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில்   உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

உணர்வு அலுவலக மீட்புப் போராட்டம் – தயாராவீர்!

உணர்வு அலுவகம் தமுமுக வினரால் சட்ட விரோதமாக ஆக்ரமிக்கப்பட்டதைப் பற்றியும் அதை மீட்கும் முயற்சி பற்றியும் நாம் முன்னர் விளக்கியுள்ளோம்.

இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் 7 வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004 ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே 29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.
இதை விசாரித்த காவல் துறையினர் நமது புகாரில் உண்மை இருப்பதை அறிந்து தமுமுகவினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆளும் கூட்டணி என்ற பம்மாத்து வேலை எடுபடவில்லை. ஆளும் கட்சிக்கு எதிராக வேலை செய்த தவ்ஹீத் ஜமாஅத் சொத்தையே ஆக்ரமிக்க முடியவில்லையே மற்றவர்களின் சொத்துக்களை எப்படி ஆட்டையைப் போடலாம் என்று தமுமுக கும்பல் இடிந்து போய் உள்ளது.
ஆனால் சாவியை தமுமுகவிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டாலும் தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்படைக்காததன் மூலம் காவல் துறையினர் அநீதி இழைத்துள்ளனர். இந்த அநீதியைத் தட்டிக் கேட்க நான்கு கட்ட போராட்டத்தை மாநில நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
1- ஒரு வாரத்துக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தர்னா – தொடர் முழக்கப்போர்ராட்டம் – நடத்துவது
2- சட்ட சபை கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்துவது
3- நமக்குச் சொந்தமான உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் போரட்டத்துக்கான தேதியை சட்ட சபை முற்றுகைப் போராட்டத்தில் அறிவித்து அந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்துவது
4- உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் அந்தப் போராட்டத்தின் போது நான்காம் கட்டமாக இறுதிக் கட்ட போராட்டத்தை அறிவிப்பது .

உணர்வு அலுவலகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராவீர்.

பலஸ்தீனர்களின் வாழிடங்களைத் தகர்க்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை

 ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் நிலங்களில் இருந்து பலஸ்தீனர்களை முற்றாகத் துடைத்தெறியும் ஸியோனிஸக் கொள்கையின் அடிப்படையில் கர்னாப், ஃபாரா, நெகெவ் ஆகிய மூன்று கிராமங்களில் இருந்த பலஸ்தீனர்களின் வாழிடங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை புல்டோஸர்களால் இடித்து நிர்மூலமாக்கியுள்ளது.

இது குறித்துக் கருத்துரைத்த பிராந்தியக் கவுன்ஸில் தலைவர் இப்றாஹீம் அல் வகீலீ, "அரபுகளின் வாழிடங்களைத் தகர்த்து நிர்மூலமாக்குவதென்பது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபைக்கு மிகுந்த மகிழ்ச்சிதரும் ஒரு விடயமாகவே உள்ளது. மேற்படி மூன்று பலஸ்தீன் கிராமங்களில் உள்ள பலஸ்தீன் மக்களின் வீடுகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினால் வாரந்தோறும் இடிக்கப்பட்டே வருகின்றன" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

"ஸியோனிஸ ஆக்கிரமிப்பு அதிகார சபையின் உள்ளக அமைச்சினால் அமுல்நடாத்தப்பட்டு வரும் கட்டடத் தகர்ப்பு நடவடிக்கை மூலம் இம்முறை அழிக்கப்படுவது வெறுமனே கட்டடங்கள் மட்டுமல்ல, பலஸ்தீனர்களின் வாழ்க்கையும் தான்" என்று குறிப்பிட்ட அவர், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை சரியாக பலஸ்தீன் மாணவர்கள் தமது இறுதித் தவணைப் பரீட்சைகளை எதிர்நோக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமது கட்டடத் தகர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் பலஸ்தீன் மாணவர்களை உளவியல் ரீதியான அழுத்தத்துக்குள்ளாக்கி, அவர்களைப் பரீட்சையில் தோல்வியடையச் செய்வதன் மூலம் கல்வியில் பின்னடைய வைப்பதே ஆக்கிரமிப்பாளர்களின் திட்டமாகும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

வியாழன்

ஒரினச்சேர்க்கை:பிரான்ஸ் பார்லிமென்ட் மறுப்பு

பிரான்ஸ் நாட்டில் எதிர்கட்சியான சோசலிஸ்ட் கட்சி கொண்டு வந்த ஒரினச்சேர்க்கை திருமண மசோதா தாக்கலுக்கு அந்நாட்டு சட்டவல்லுநர்கள் ஏற்க மறுத்ததை அடுத்து பார்லிமென்ட் நிறுத்திவைத்தது.

அந்நாட்டு மக்கள் ஆதரவு இருந்தபோதும் பார்லிமென்ட் ஏற்க மறுத்துவிட்டது.மசோதா குறித்து பார்லிமென்ட் கீழவையில் நடந்த ஓட்டெடுப்பில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவாக 222 பேரும் எதிராக 293 பேரும் வாக்களித்ததால் மசோதா மறுக்கப்பட்டது.ஸ்பெயின், பெல்ஜியம்நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூற்றாண்டின் மிக இருண்ட முழு சந்திர கிரகணம்.. ஜூன் 15, 2011


ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரகணத்தின் போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கிரகணத்தின் போது கட்டாயம் பல மேட்டுக்குடி மக்கள் விரதம் இருக்கின்றனர்.

கொஞ்சம் நடுத்தர வர்க்கமும், கொஞ்சம் விபரம் அறிந்தவர்களும், கிரகணத்தின் போது கருவுற்ற பெண்களை, கிரகண நேரத்தில் வெளியே விட மாட்டார்கள்; யாரும் சாப்பிட மாட்டார்கள். முக்கியமாக, அனைத்துக் கோயில்களின் நடை சாத்தப்படுகிறது. கிரகணம் முடிந்த பின், கோயில்களை கழுவி விடுகின்றனர். மக்கள் குளித்த பின்னரே சாப்பிடுகின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெயிலில் வருந்தி பாடுபட்டு, உழைத்து உண்ணும், அடித்தட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது. அது ஒரு பக்கம் இருக்க, உலகில் வாழும் அனைவரும் இப்படித்தான் செய்கின்றனரா? அப்படித்தான் பழக்க வழக்கங்களை நாமும் கடைபிடிக்க வேண்டுமா? கிரகம் பிடிச்சவனே/வளே என்று திட்டுவது, இந்த கிரகணம் பிடிச்ச கிரகணத்தினால்தானா/ காரணத்தினால்தானா ?

"திருமலை திருப்பதி கோவில் ஜூன் 15 ல் மாலை 6 மணி முதல் ஜூன் 16 அதிகாலை 4.30 வரை மூடப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 15 ஆம் தேதி பகல் 12.53 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி கோவில் சுத்திகரிக்கப்பட உள்ளதால் மாலை 6 மணிக்கு கோவில் மூடப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். மேலும் ஜூன் 16 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் கோவிலில் நடைபெற உள்ள திருப்பாவாடை சேவை ரத்து செய்யப்பட உள்ளது." இந்த தகவல் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எது கிரகணம்....?

கிரகணம் என்றால் என்ன? இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது, சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது அந்த வான் பொருள், நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப் படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.


2011 , ஜூன் முதல் தேதியிலிருந்து ஜூலை முதல் தேதிக்குள் (30 நாட்களுக்குள்) வானம் நமக்கு மூன்று அற்புதமான விருந்தினை படைக்கிறது..! ஆமாம். ஜூன் முதல் தேதி அன்று, பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்போது, ஜூன் 15 ம் நாள் 2011ம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் உருவாக உள்ளது. இந்த முழு சந்திர கிரகணத்தின் போது, முழு நிலா நாளில், நிலவு முழுமையாக நம் கண்களிருந்து மறைக்கப்பட்டு விடும். அது மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் மிகக் கருமையான சந்திரக் கிரகணம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு விருந்து..! அடுத்து ஜூலை முதல் தேதி மீண்டும் பகுதி சூரிய கிரகணம்..!

சூரிய குடும்பம், ஒரு மணல் துகள் போல, பால்வழி மண்டலத்தை 22 1/2 கோடி ஆண்டுகளில் ஒரு சுற்று சுற்றி முடிக்கிறது.

பூமி, தன் துணைக் கோளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே சூரியனைச் சுற்றிகொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை, பூமியை 29 1/2 தினத்தில் சுற்றுகிறது. அது மட்டுமல்ல. சூரியனாவது சும்மா இருக்கிறதா? சூரியனும் கூட தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை(MilkyWay galaxy), தனது குடும்ப உறுப்பினர்களான கோள்கள், துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், குயிப்பர் வளையம், ஊர்ட் மேகம், மற்றும் வால் மீன்கள் என தனது அனைத்து குஞ்சு குளுவான்கள் படை சூழ நொடிக்கு சுமார் 250 -270 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு முடிய சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்றும் சொல்லப்படுகிறது

அனைத்து கோள்களும், சற்றே சாய்ந்த நிலையில்

பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட, 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்த காலகதியில், பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஏனெனில் சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, எல்லா முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை. அது போல எல்லா அமாவாசை தினத்திலும், சூரிய கிரகணமும் உருவாவதில்லை.

சூரியனுடன் ஒப்பிடும்போது, சந்திரன் ரொம்ப பொடிசு. அதன் விட்டம், 384,400 கி.மீ மட்டுமே. இதில் சூரியன் சந்திரனைவிட 4,00 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த அரிதான ஒற்றுமையால் தான், குட்டியூண்டு நிலவும், இம்மாம்.. பெரிய் ..ய் ..ய சூரியனும், பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது, ஒரே அளவில் தென்படுகின்றன. ௦௦குட்டியூண்டு ..சின்ன நிலா, நம் குடும்ப தலைவரான, மிகப் பெரிய சூரியனை மறைத்து, முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலேதான். .

பொதுவாக, ஒரு வருடத்தில், 2-5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள் தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின், மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிமிடங்கள் மட்டுமே. எப்போதும் வட, தென் துருவங்களில், பகுதி சூரிய கிரகணமே தெரியும். நிலநடுக்கோட்டு அருகே கிரகணம் நிகழும்போதுதான் முழு சூரிய/சந்திர கிரகணம் உண்டாகிறது. ஒரே மாதிரியான சூரிய கிரகண நிகழ்வுகள், (நேரம், வகை போன்றவை). 18 வருடம் , 11 நாட்கள் (6.585.32 நாட்கள்) நிகழும். இதற்கு சாரோஸ் சுழற்சி(Saros cycle) என்று பெயர். பொதுவாக, கிரகணம் சூரிய உதயத்தில் துவங்கி, பூமியின் ஏதாவது ஒரு பாதியில் சூரியன் மறையும் போது முடிவடைகிறது. ஒரு வருடத்தில் பூமியில், எங்காவது இரு இடங்களில் கட்டாயம் சூரிய கிரகணம் நிகழும். இந்த கிரகணத்தில், கிரகண நிழலின் வேகம் 1,770 கி.மீ./மணி நிலநடுக்கோட்டுக்கு அருகில். ஆனால் துருவங்களில், கிரகண வேகம் பொதுவாக 8,046 கி .மீ/மணி. முழு சூரிய கிரகணம் 1 .5 வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது. சூரிய கிரகண பாதையின் அகலம் 269 கி.மீ. பகுதி சூரிய கிரகணம், பூமியின் மற்ற இடங்களுக்கு, முழு கிரகண பாதை தாண்டி 4,828 கி.மீ தூரம் வரை தெரியும்

முழு சந்திர கிரகணம்

ஜூன் 15 ம் நாள் நமக்கு காட்சி அளிக்கப் போவது, முழு சந்திர கிரகணம். பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் (Totality) அதிக பட்சம் 107 நிமிடங்கள். ஆனால், பூமியில் நிழல் சந்திரனைத் தொடுவதிலிருந்து, சந்திரனின் அடுத்த எதிர் முனையில் விடுவது வரை உள்ள நேரம் சுமார் 4 மணி நேரம் வரை நீட்டிக்கலாம். பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றுவதால், சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால், அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும்.எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.

இந்த ஆண்டின்(2011) முதல் சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள் நிகழ உள்ளது. ஜூன் 15ம் நாள் வரவுள்ள சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் சரியாக 100 நிமிடங்கள். இது சந்திரனின் உயர் சந்திப்பு பகுதியில், தெற்கு ஒபியுக்கசுக்கு(southern Ophiuchus)அருகில், மேற்கு லாகூன் நெபுலா(Lagoon Nebula ,M8)க்கு 7 பாகையில் நிகழவுள்ளது. இங்கே, சந்திரனில் கருமைப் பகுதி/முழு மறைப்பு நேரம் 100 நிமிடங்கள் அதிகமாக நீட்டிக்கும். இதற்கு,முன் ஜூலை 2000 ஆண்டில்தான், இந்த மாதிரி நீண்ட கிரகணம் வந்தது. இந்த முழு கிரணத்தின்போது சந்திரன், நொடிக்கு ஒரு கி. மீ வேகத்தில் கிரகண பகுதியை கடக்கும். கிரகணத்தின் போது, அதன் நிழல் விழும் பகுதியின் கருப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை, முறையே, அம்பரா(Umbra), பெனும்பரா(Penumbera) என்று சொல்கின்றனர். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரிய கதிர்சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்க்க நேரிட்டால், சூரியன் , சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசைகளில் அற்புதமாய் தெரியும். இந்த ஆண்டு, ஜூன் 15ம் நாளில் நிகழ உள்ள கிரகணம் இந்த வகையைச் சேர்ந்தது. இந்த மாலை மயங்கும் வேளையில், நாம் ஒரே நேரத்தில் சூரிய மறைவையும், சந்திர உதயத்தையும் தொடுவானுக்கு அருகில் பார்க்கும்போது, செலனோஹிலியன்(selenehelion ) என்ற நிகழ்வு உண்டாகிறது. மேலும் இந்த சமயத்தில் இப்படி சூரிய மறைவு மற்றும் சந்திர உதயத்தில் சூரிய, சந்திரனுடன், மாலை வேளையில் சந்திர கிரகணம் தெரிவதை படுக்கைவச கிரகணம் என்றும், சொல்கின்றனர்.

ஜூன் 15 நிகழவுள்ள இந்த கிரகண நேரம்:

முழு சந்திர கிரகணம்.. துவக்கம் முதல்.. முடிவு வரை
பெனும்பரா(Penumbra) கிரகணம் துவக்கம்: 17 .24 .34 UT.
பகுதி சந்திரகிரகணம் துவக்கம்: 16 .22 .56 UT
முழு மறைப்பு துவங்குநேரம்:
அதிக பட்ச முழு கிரகணநேரம்:
பகுதி கிரகணம் முடியும் நேரம்:
பெனும்பரா கிரகணம் முடியும் நேரம் :
கிரகண நேரம்:
முழு மறைப்பு நேரம் : 1 மணி, 40 நிமிடம்,52 நொடிகள்
பகுதி கிரகண நேரம்...: 3 மணி, 39 நிமிடம்,58 நொடிகள்.
பெனும்பரா கிரகண நேரம்: 5 மணி,39 நிமிடம், 1 வினாடி.
இந்திய நேரப்படி,2011 , ஜூன் 15 ன், முழு சந்திர கிரகணம்:
பெனும்பரா பகுதிக்குள் : இரவு 10 மணி, 52 நிமிடம், 52 நொடி .ஜூன் 15
. கருமைநிற பகுதி சந்திர கிரணத்துக்குள்:11 மணி,52 நிமிடம், 24நொடி
முழு மறைப்பு கிரகணம் :இரவு ௦0.மணி,51 நிமிடம், 57 நொடி ..ஜூன் 16
அதிக பட்ச கிரகணம் . ....:விடிகாலை,1 மணி,42 நிமிடம்,24 நொடி ஜூன் 16
முழு மறைப்பின் முடிவு..:காலை 2 மணி, 32 நிமிடம்,50 நொடி
கருமை நிற பகுதி கிரகணம் முடிவு:ஜூன் 16 காலை, 3மணி, 32 நிமிடம், 22 நொடி
நிலா பெனும்பராவை விட்டு விலகுவது: ஜூன் 16 , விடிகாலை, 4 மணி, 32 நிமிடம், 02 நொடி.

அரிதான.. மிக .. இருண்ட.. சந்திர.. கிரகணம்..!

இந்த ஆண்டு ஜூன் 15 ம் நாள் ஏற்பட உள்ள முழு சந்திர கிரகணம் ஓர் அரிதான நிகழ்வே..! ஏனெனில் இந்த கிரகணத்தின் போது , சந்திரன் பூமியின் மைய நிழலை ஒட்டி பயணிக்கும். இது போலவே ஒரு முழு சந்திர கிரகணம், கி.பி. 2000 ஆண்டு, ஜூலை 16 ல் உண்டானது. இனி இதனை ஒத்த முழு சந்திர கிரகணம், கி.பி.2018 , ஜூலை 27 ம் நாள்தான் வரும். இந்த கிரகணத்தை முழுமையாக, உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இது ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும். தென்னமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இக்கிரகணம், துவங்குகிறது. மேற்கு ஆசியா , ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்சில், ஜூன் ௧௬ ம் நாள் சூரிய உதயத்துக்கு முன்,கிரகணம் முடிகிறது. இப்போது வந்துள்ள முழு சந்திர கிரகணம், சாரோஸ் சுழற்சியின் 130 வது வகை. இந்த வகையில் மொத்தம் 72 கிரகணங்கள் நிகழும், இது 34 வது கிரகணம்.இந்த வகை சாரோஸ் சுழற்சி, 1262 ஆண்டுகளில் முடியும். இனி அடுத்த சந்திர கிரகணம், 2011 , டிசம்பர் 10 ம் நாள் ஏற்பட இருக்கிறது.

முழு சந்திர கருப்பு கிரகணம்

பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் செம்பு வண்ணத்தில் மிளிரும். ஆனால் இம்முறை அப்படி இருக்காது. நிலா கருப்பு நிலாவாக காட்சி அளிக்கும். இதனைத் தொடர்ந்து பார்த்து பழக்கமில்லாத நண்பர்களுக்கு, கிரகணத்தின் போது, சந்திரனைக் கண்டறிவதே சிரமம்தான். சூரியன், பூமி மற்றும் சந்திரனின் மையங்கள் ஒரே நேர்க் கோட்டில் அமைவதால் /வருவதால்தான் சந்திரன் இப்படி இருட்டாக இருக்குமாம். மேலும் சமீபத்தில் ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை வெடித்து புகை மற்றும் சாம்பலை அள்ளி வளி மண்டலத்தில் வீசியதே..! அதுவும் கூட, இந்த இருண்ட முழு சந்திர கிரகணத்தின் ஒரு காரணியாகும். !முழுமையும் வானம் இருட்டாக, சந்திரனைக் காண முடியாமல் போவதால், மிகவும் ஒளி குறைவாய் தெரியும் விண்மீன்களைக் கூட இப்போது பார்க்கலாம். ! இதற்கு முன்னால், இப்படி ஒரு முழு சந்திரகிரகணம், 1971 , ஆகஸ்ட் 6 ம் தேதி ஏற்பட்டது. அடுத்து இது போல ஒரு முழு சந்திர கிரகணம், இன்னும் 47 ஆண்டுகள் கழிந்து, 2058 , ஜூன் 6 ம் நாள் வரவிருக்கிறது. இப்போதுள்ளவர்களில் எத்தனை மனிதர்கள், 47 ஆண்டுகளுக்கு அப்புறம் இப்படியான சந்திர கிரகணத்தைப் பார்க்கப் போகிறோம்...!

முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கருப்பாகத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கருப்பாக/இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை. சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக,சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதி பலிக்கின்றன. இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கன்னங்கரேல் என கரித்துண்டம்/கருப்பு நிலாவாக காட்சி அளித்திருக்கும். பூமியின் வளிமண்டலம்தான், அதில் பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான் , முழு சந்திர கிரகணத்தின் போது, அதனை சிவப்பான செம்பு நிலாவாகக்(copper moon) காட்டுகிறது.இதுவேதான், சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு-ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்..!

பால்வழி மண்டலம்



சாதாரணமாய் நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும் நமது சூரிய குடும்ப தாய்வீடான, பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும். இம்முறை நீங்களும் பார்த்து மகிழுங்கள். இந்த முறை சந்திர கிரகணத்தின் போது, தெற்கு வானில், தனுசு விண்மீன் படலமும்,அதன் பிரகாச விண்மீனான பூரட்டாதி, அதன் அருகில் வலப்பக்கத்தில், அழகாகத் தெரியும், பால்வழி மண்டலத்தின் மையப் பகுதியையும் கண்டு ரசித்து மகிழலாம்.அது மட்டுமல்ல. இரவு வானின் பிரகாச விண்மீன்களான, வடக்கில் உச்சியில் தெரியும் பருந்து/வடக்குச் சிலுவையின் தெனாப்(Denob),அதன் அருகில் உள்ள கழுku (aquis) விண்மீன் படல திருவோணம்(Altair), கொஞ்சம் தள்ளி யாழ் விண்மீன்(Lyra) படலத்தின் வேகா(Vega), இவை உருவாக்கும், கோடைக்கால முக்கோணம் (Summer Trianle) போன்றவற்றை பார்த்து பரவசப்படலாம்.

சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது. ஏனெனில் முழு சூரிய கிரகணம், உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால்,முழு சந்திர கிரகணம், உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும். சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம் , சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty.) சோயு-சூ புத்தகத்தில், கி.மு 1136 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 29 ம் நாள் நிகழ்ந்ததாய் குறிப்பிடப் பட்டுள்ளது.

பழங்காலத்தில், கிரகணம் என்ன என அறியப்படாதபோது, அவை ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர் முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று. மக்களும் நம்பினர். இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது.அதற்கு முன்னால், கி.மு.413 , ஆகஸ்ட் 28 ம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.மதகுருவின் சொல்படி எதெனியர்கள் நடந்தனர்.ஆனால் சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர்.ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார்.சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால்,ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.

மக்களை.. மிரட்டிய.. கொலம்பஸ்..!

கிறிஸ்டோபர் கொலம்பஸ் உலகை வலம் வந்தவர் என்ற தகவல் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவர் பெரிய கில்லாடி..! அவர், 1503 , ஜூன் 30 , ஜமைக்கா போய் இறங்கி, அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கினார். அங்கிருந்த பூர்வகுடி மக்கள், வந்தவர்களை வரவேற்று உணவும் அளித்தனர். ஆனால் கொலம்பஸின் மாலுமிகள் அம்மக்களிடம் ஏமாற்றி, திருடினர். இதனால் கோபம் கொண்ட மக்கள் அவர்களுக்கு உணவு தர மறுத்து விட்டனர். இந்த சமயம் பார்த்து, அப்போது முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. கொலம்பஸ் கடற் பயணத்துக்காகவும், சொந்த தேடல் மற்றும் ஆர்வத்தாலும், கால நிகழ்வுகள் குறித்த, ஒரு காலண்டரை வைத்திருந்தார். அதில் முக்கிய நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி, அப்போது வரும் முழு சந்திர கிரகணம் அறிந்து, இதன் மூலம் அந்த மக்களை மிரட்ட திட்டமிட்டார். அவர்களின் தலைவனைக் கூப்பிட்டு, கடவுள் உங்கள் மேல் கோபம் கொண்டிருக்கிறார். இரவின் ஒளியை/ சந்திரனை உங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளப் போகிறார், என்றார். தலைவர் இதனை நம்பவில்லை. முழு சந்திர கிரகணம் வந்தது. ஊர் இருண்டது. சந்திரன் மறைந்தான்; ஊர் மக்கள் கொலம்பசிடம் வந்தனர். அவரின் குழுவுக்கு உணவும், உதவியும் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தனர். பின் வழக்கம் போல், பூமியின் நிழல் விலகியதும், சந்திர ஒளி ஜமைக்கா மேல் விழுந்தது. மக்கம் மகிழ்ச்சி கொண்டனர். எப்படி இருக்கிறது.. இந்த வரலாற்றுத் தகவல்..! எப்போதும் மெலிந்தோரை வலியோர் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டே இருப்பது தெரிய வருகிறதா?

மூட நம்பிக்கையால்.. மூடப்பட்ட.. மக்கள்..!

பொதுவாக,தினம் தினம், சந்திரன் உதிப்பதில்லை. காரணம் நாம் அறிவோம். தினமும் சூரியன் நமக்குத் தெரிகிறது. அது நகர்வது போல தோன்றினாலும், அது நகர்வதில்லை. நாம்தான் சூரியனைச் சுற்றுகிறோம். கிரகணத்தின் போது எந்த சிறப்பு கதிரும் சூரியனிடமிருந்து வருவதில்லை . அப்போது வருகிறது என்று சொல்லப்படும் அகசிவப்பு கதிர், காமாக் கதிர்கள், எப்போதும் சூரியனிட மிருந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம் வெயிலில் போனால் உடலோ, பொருளோ சூடாவதுக்கு காரணம் அகச்சிவப்பு கதிர்களே. பிரபஞ்சம் முழுவதும் காமாக் கதிர்கள் உள்ளனவே. ஆனால், கிரகணம் தொடர்பான, கட்டுக்கதைகளையும், மூட நம்பிக்கைகளையும், ஊடகங்கள் சும்மா, சகட்டு மேனிக்கு அவிழ்த்துவிட்டே இருக்கின்றன. கிரகணம் எப்படி வருகிறது என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே, கிரகணம் முடிந்ததும், குளித்து, தர்ப்பணம் செய்கிறார். இது எவ்வளவு சரி? அது மட்டுமல்ல, வானுக்கு விண்கலத்தை அனுப்பும், இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் கூட, சாமி கும்பிட்டு, தீபாராதனை செய்த பின் தான், விண்கலம் அனுப்பும் பட்டனைத் தட்டுகின்றனர். இன்று அறிவியல் உலகின், பல அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அதனுடனே மூட நம்பிக்கைகளையும் போர்த்திக் கொண்டு வாழ்வது என்ன நியாயம்.?

- பேரா.சோ.மோகனா ( mohanatnsf@gmail.com)

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத 4வது நாடு இந்தியா

வன்கொடுமை, பெண் சிசுக் கொலை உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக அதிகளவில் கொடுமைகள் நடைபெறுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் உலக அளவில் மகளிர் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகளவில் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதல் இடம் வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து காங்கோ, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. சர்வதேச பெண்களுக்குக்கான சட்ட அமைப்பு மற்றும் மகளிர் உரிமை கழகத்தின் சார்பில் தாம்சன் என்பவரால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் 3 நாடுகள் ஆசியாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து கண்டங்களில் உள்ள 213 நிபுணர்களால் பெண்களுக்கு எதிராக சுகாதாரம், பாலியன் பலாத்காரம், பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான கொடுமைகள், மதம் சார்ந்த அடக்குமுறை, பொருளாதார ரீதியிலான கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இந்தியாவின் உள்த்துறை செயலராக இருந்த மதுக்கர் குப்தா தெரிவித்த அறிக்கையில் இந்தியாவில் சுமார் 100 மில்லியன் பேர் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறும் கொடுமைகளில் 40 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய திருமணம், கட்டாய வேலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடைபெறுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 50 மில்லியன் ஆகும்.

இந்த வார உணர்வில்.. (ஜூன் 17)


ஃபேஸ்புக் எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை

கூகுளையே மிரள வைக்கும் அளவுக்கு கிடுகிடு வளர்ச்சியை எட்டியுள்ள ஃபேஸ்புக் சமூக வலைத்தளம்இன்றைய இளைய சமூகத்தினரின் இணைய டைரி என்றால் அது மிகையில்லை.

அந்த அளவுக்கு நாட்டு நடப்பு முதல் வீட்டு நடப்பு வரை எல்லாவற்றையும் அதில் எழுதி தள்ளிவிடுகிறார்கள் ஆர்வத்தில் அலைமோதும் இளையதலைமுறையினர்!
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் ஜாலியான வழிமுறை ஃபேஸ்புக் என்றாலும்இத்தகைய சமூக வலைத்தளங்களில் நம்மை பற்றிய குறிப்புகளை வெளியிடும்போது - குறிப்பாக பெண்கள் - மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். 
அவ்வாறு எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை எந்த மாதிரியான விடயங்களில்எது எதை தெரிவிக்கலாம்எவற்றை தெரிவிக்கக்கூடாது என்பது குறித்து நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்.

நமது சொந்த புகைப்படம் (மார்ஃபிங்கில் மாற்றப்படும் ஆபத்து) உள்பட சில வகையான புகைப்படங்களை நமது வலைப்பக்கத்தில் ஏற்றுவது ஆபத்தாக முடியலாம்.யாராவது அவதூறாக பேசலாம் அல்லது ஏதாவது குற்றத்திற்கோ அல்லது அதைவிட மோசமான நிகழ்வுகளுக்கோ ஆட்பட-நேரிடலாம்.

"டேட்டா மைனிங்" - data mining - என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவை ஃபேஸ்புக்கை துளாவி நமது பிறந்த தேதிதொலைபேசி எண்கள்முகவரிகள் போன்றவற்றை எடுத்துவிடும். அப்படி கிடைக்கும் விவரங்கள் கிரிமினல் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு தங்கக்கட்டிக்கு சமமானவை" என்கிறார் பிரபல தகவல் தொழில்நுட்ப நிபுணரான டேவ் ஒயிட்லெக்.
எனவே பிறந்த தேதிதொலைபேசி எண்கள்முகவரிகள் போன்றவற்றை ஃபேஸ்புக் தளத்தில் தெரிவிக்ககூடாது. இந்த விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ள நிலையில்கிரெடிட் கார்டுடெபிட் கார்டு போன்றவற்றின் இணைய பயன்பாட்டின்போது "பாதுகாப்பு கேள்விகள்" - security questions - , கடவுச்சொல் - password - ஆக கேட்கப்படுபவற்றில் மேற்கூறியவைதான் முதன்மை பங்காற்றுகிறது.
எனவே மேற்கூறிய விவரங்களை தெரிவிப்பது எத்தனை ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ளலாம்.
அதேப்போன்றுவங்கி விண்ணப்பங்கள்இணையத்தின் மூலமான வங்கி பண பரிவர்த்தனை போன்றவற்றில் நீங்கள் யார் என்பதன் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்கப்படும் பாதுகாப்பு கேள்விகளில்,உங்களது தாயாரின் முதல் பெயர் என்ன என்பது கேட்கப்படுகிறது.

மேலும் நீங்கள் முதன் முதலில் படித்த பள்ளியின் பெயரும் கேட்கப்படுவது வழக்கமாக உள்ளது. எனவே இத்தகைய விவரங்களையும் தெரிவிக்காமல் தவிர்ப்பது நல்லது.
அவ்வாறு செய்வது நமது அடையாள திருட்டை தவிர்க்க வைப்பதோடுகொள்ளையர்கள் மற்றும் திருடர்களிடமிருந்தும்-நம்மை-காப்பாற்றும்.
மேலும் நீங்கள் உங்களது ஃபேஸ்புக் தளத்தில் உங்களது அன்றாட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தால், " அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டில் இருக்கமாட்டேன்..., 2 ஆம் தேதி ஊருக்கு செல்கிறேன்திரும்பி வர 10 நாட்கள் ஆகும்..." என்றெல்லாம்-தெரிவிக்காதீர்கள்.
இப்படி தகவல்களை உளறிக்கொட்டுவது திருடர்களையும்கொள்ளையர்களையும் நாமே வெற்றிலை பாக்கு வைத்து நமது வீட்டிற்கு கொள்ளையடிக்க வர அழைப்பதற்கு சமமாகிவிடும்.
மேலும் சாதிமதம்இனம் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதோ அல்லது சட்டவிரோத புகைப்படங்களை போடுவதோ கூடாது. அவ்வாறு செய்வது உங்களது வாழ்க்கைக்கே ஆபத்தாகக் கூட-போய்விட-வாய்ப்புள்ளது.
மேலும் நமது தொலைபேசி எண்களை குறிப்பிடுவதால்அதை வாங்குங்கள்...இதை வாங்குங்கள்,லோன் தருகிறோம்மருத்துவக் காப்பீடு போடுங்கள்... என்றெல்லாம் வரும் தொ(ல்) லை பேசி அழைப்புகளையும்-சந்திக்க-வேண்டியதிருக்கும்.
அத்துடன் இப்போதெல்லாம் குழந்தைகள் கடத்தல் அதிகமாகி வருகிறது.அப்படி இருக்கையில் நம்மை பற்றிய விவரங்களை ஃபேஸ்புக் தளத்திலிருந்து சேகரித்துக்கொண்டுநமது குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதோ அல்லது வெளியில் தனியாக செல்லும்போதோ நம்மை பற்றிய விவரங்களை கூறிநான் உனது பெற்றோருக்கு தெரிந்தவன்தான் என்பதுபோல் காட்டிக்கொண்டு நமது-குழந்தைகளை-கடத்தவும்-வாய்ப்புண்டு.
எனவே ஃபேஸ்புக் போன்ற தளங்களில் உங்களது பெயரை தவிரஉங்களைப்பற்றிய வேறு எவ்வித அந்தரங்க தகவல்களையும் தெரிவிக்காதீர்கள்!   

இவற்றையெல்லாம் விட சிறந்தது பெண்கள் இதுபோன்ற குழுமங்களில் இணையாமல் இருப்பது தான் நல்லது !..

புதன்

பலஸ்தீன் விளைநிலங்களுக்குத் தீமூட்டும் இஸ்ரேலிய அராஜகம்

ரமல்லாவில் உள்ள இஸ்ரேலிய பிரிவினைச் சுவரை அடுத்திருக்கும் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை எரியூட்டியுள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (13.06.2011) இரவு ஸஃபா எனும் பலஸ்தீன் கிராமத்தில் இந்த அக்கிரமம் அரங்கேறியுள்ளது. நூற்றுக்கணக்கான தூனம் (1 தூனம் = 1000 சதுர அடிகள்) பரப்புள்ள பெரும் நிலப்பரப்பு தீமூட்டப்பட்டதையடுத்து, கிராவாசிகள் தீயை அணைப்பதற்காக முன்வந்தபோது, அவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டனர் என்றும், பயிர்நிலம் முற்றாக எரிந்து முடியும்வரை இந்த நிலைமை நீடித்தது என்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக, 'அடர்ந்து வளர்ந்துள்ள பயிர்களினூடே பலஸ்தீனர்கள் ஊடுருவிச்சென்று பிரிவினைச் சுவரை அண்மிக்க முடியும் என்ற ஐயப்பாடு நிலவுவதாலேயே இப்பயிர் நிலங்கள் அழிக்கப்பட்டன' என இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்பு கல்கிலியா பிரதேசத்தின் அஸுன் கிராமத்தின் பல தூனம் பரப்புள்ள விவசாய நிலமும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் எரியூட்டி நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான மிகப்பெரும் நிலப்பரப்பு எரியூட்டப்பட்டும் புல்டோஸர்கள் ஓட்டப்பட்டுமாக தொடர்ச்சியாக நிர்மூலமாக்கப்பட்டு வருவதன் மூலம் பலஸ்தீன் விவசாயிகளின் பொருளாதார நிலைமை மிக மோசமாகப் பின்னடைந்துள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் இந்த அழிப்பு நடவடிக்கையின் விளைவால் நட்டமடையும் விவசாயிகளுக்கோ நிலச் சொந்தக்காரர்களுக்கோ எத்தகைய நட்டஈடும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியமான தமது சொந்த மண்ணில் இருப்பிடங்களையும் நிலங்களையும் அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு அகதிகளாகவும், வாழ்வாதாரத்தையே இழந்துவிட்ட வறியவர்களாகவும் வாழ நேர்ந்துள்ள அவலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு சர்வதேச அமைப்புக்களும், உலக மனித உரிமைகள் அமைப்புக்களும் துரிதமாக முன்வரவேண்டும் என பாதிக்கப்பட்ட பலஸ்தீன் மக்கள் விடுக்கின்ற இடையறாத கோரிக்கை, சர்வதேச அரங்கில் ஆங்காங்கே சில அதிர்வலைகளை ஏற்படுத்தவும் தவறவில்லை எனத் தெரிகின்றது.