தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

போராட்டங்களால் பெற்ற இரண்டாவது வெற்றி

தமிழகத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற நமது போராங்களால் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு நமக்கு கிடைத்தது. அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெற்ற முதல் வெற்றி! 

முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு தரவேணடும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றது. வருகின்ற பிப்ரவரி 14ம் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவடடங்கள் தோறும் மாபெரும் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டு தற்போது வீரியத்துடன் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் 4.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! 

இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது தான் எனினும் நம்முடைய போராட்டங்களின பயனாக விளைகின்ற பலனை முதலில் அறுவடை செய்வோம். பிற்காலங்களில் அது அதிகரித்திடவும் தேவையான பணிகளை செய்வோம். இன்ஷாஅல்லாஹ்.

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.aa
Thanks : DINAMALAR