தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

மாதவிடாயில் உடலுறவுக்குப் பரிகாரம்?


மாதவிடாய் நேரத்தில் மனைவியுடன் கூடினால் அதற்குரிய பரிகாரம் என்ன?  அப்துல்லாஹ்
பதில்
மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
இத்தடையை மீறியவர்கள் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும். இதுவே அந்தப் பாவத்துக்குரிய பரிகாரமாகும்.
230حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ حَدَّثَنِي الْحَكَمُ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ قَالَ أَبُو دَاوُد هَكَذَا الرِّوَايَةُ الصَّحِيحَةُ قَالَ دِينَارٌ أَوْ نِصْفُ دِينَارٍ رواه أبو داود
இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் கூறுகிறார்கள் :

தனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவருடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
நூல் : அபூதாவுத் (230)
ஒரு தீனார் என்பது அன்று வழக்கத்தில் இருந்த தங்க நாணயமாகும். சுமார் நான்கரை கிராம் எடை கொண்ட நாணயம் தீனார் எனப்படும். நான்கரை கிராம் அல்லது இரண்டேகால் கிராம் தங்கத்தின் மதிப்பிலான தொகையை தர்மம் செய்ய வேண்டும் என்பது இதற்கான பரிகாரமாகும்.