இஸ்லாத்திற்கு முரணான திருமணங்கள் மற்றும் அனாச்சாரமான, நிகழ்ச்சிகளுக்கு சொந்த உறவினர்கள் வந்து அழைத்தாலும் தவ்ஹீத் நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தவிர்க்கிறார்கள். மாற்றுக் கொள்கையுடையவர்கள் இந்த தவ்ஹீத் ஜமாஅத் வந்ததில் இருந்து உறவுகள் முறிகின்றன என்று சொல்வது சரியா ?
- கிள்ளை யூசுப்,
? உறவுகள் முறியும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அசத்தியத்தை எதிர்த்து யார் களம் இறங்குகிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த நிலையைச் சந்தித்தே உள்ளனர். தீமைகளைக் கண்டு யாருக்குக் கோபம் வருகிறதோ
தீமையை ஒழிப்பதில் யாருக்கு உண்மையான அக்கறை உள்ளதோ அவர்கள் அனைவரும் இந்த நிலையைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். ஆனால் கொள்கைக்காக உறவை முறிப்பது போற்றுதலுக்கு உரியது தான். விமர்சனத்துக்கு உரியது அல்ல. பார்க்க: நூல்: புகாரி (2613)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது மகள் வீட்டுக்குச் சென்ற போது அங்கே மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத அலங்காரத் துணி தொங்க விடப்பட்டதைக் கண்டு விட்டு அதைப் புறக்கணித்து திரும்பினார்கள். மகளின் உறவு பாதிக்கும் என்றோ மகளின் மனம் புண்படும் என்றோ அவர்கள் நினைக்கவில்லை. எனவே உறவு முறிவதைப் பற்றி நாம் கவலைப்படாமல் தீமைக்கு எதிராக கடும் போக்கை நாம் மேற்கொள்வது தான் நமது கடமையாகும். அதன் மூலம் தான் தீமைகள் ஒழியும்.
உணரவு 16:10
உணரவு 16:10