தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

கோவையில் இஸ்லாம் ஓர் இனியமார்க்​கம்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மதுக்கரை கிளையின் சார்பாக 04.12.2011 அன்று இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் பிறமத சகோதரர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். பிறமத சமுதாய மக்கள் இஸ்லாத்தை
அறிந்துகொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்நிகழ்ச்சியை நடக்கவிடாமல் செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் வல்ல ரஹ்மானின் வல்லமையால் மாற்றுமத சகோதரர்களும், நம் சகோதரர்களும் அலை அலையாய் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வந்தடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பிறமத மக்கள் இஸ்லாம் குறித்து அறிவுபூர்வமாக கேட்ட  கேள்விகளில் சில,,
இறைவனுக்கு உருவம் உண்டா?
இஸ்லாம் பெண் கல்வியை ஏன் மறுக்கிறது?
இறைவனை ஏன் அவன் என்று கூறுகிறீர்கள்?
தந்தை இல்லாமல் பிறந்த ஈசா  இறை தூதரா? இறை மகனா?
உள்ளிட்ட  ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்வி கேட்ட அனைத்து சகோதரர்களுக்கும் குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் குறித்த பிற புத்தகங்கள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து சகோதரர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.