தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்



TNTJ கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்என்ற நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது . இதில் மேலாண்மை குழு உறுப்பினர் ஃ பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் சம்மந்தம்மான அனைதது கேள்விகளுக்கும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மக்களுக்கு புரியும் படியும் பதில் அளித்தார்.
அல்ஹம்துலில்லா...

செவ்வாய்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957) 
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5000/- கல்வி உதவி – கோவை


கோவை மாவட்டம்  சார்பாக கடந்த 28-06-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு கல்வி உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூபாய் 3000/- மருத்துவ உதவி – கோவை

கோவை மாவட்டம்  சார்பாக கடந்த 28-06-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.


ஏழை சகோதரிக்கு ரூபாய் 5000 கல்வி உதவி – கோவை

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 27-06-13 அன்று ஏழை சகோதரிக்கு கல்வி உதவியாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது………



புதன்

மெகா டிவியில் ரமலான் ஸஹர் நேர நிகழ்ச்சி!

மெகா டிவியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் ரமலான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி!

தலைப்பு :
"மாறும் உலகில் மாறாத இஸ்லாம்"

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்



டிஎன்டிஜே மாநிலத்தலைமையகத்தில் ரமலான் முழுவதும் இரவு 10மணி முதல் 11மணி வரை நடைபெறும் உரை அன்று அதிகாலை மெகா டிவியில் ஒளிபரப்புச் செய்யப்படும்.

பாவியாக்கும் பராஅத் இரவு” நோட்டிஸ் விநியோகம் – N.H.ரோடு கிளை


கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த 23-6-13 அன்று    பாவியாக்கும் பராஅத் இரவு என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

”தூய்மை” - G.M நகர் கிளை பெண்கள் பயான்


கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 22-6-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் யாஸ்மீன் ஆலிமா அவர்கள் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

பாவியாக்கும் பராத் இரவு” – செல்வபுரம் தெற்கு கிளை தெருமுனைப் பிரச்சாரம்


கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த  21-06-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. இதில்சகோ.அப்துல் கரீம் அவர்கள் ”பாவியாக்கும் பராத் இரவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

சுகுமார் என்பவருக்கு திருக்குரான் தமிழாக்கம், – சாரமேடு கிளை


கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 22-06-2013 அன்று பிற சமய சகோதரர் சுகுமார் அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம்,  வழங்கி  தஃவா செய்யப்பட்டது…..

நோட்டீஸ் விநியோகம் – பொள்ளாச்சி கிளை


கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 21/06/2013 அன்று  ”பராத்தும்  மத்ஹபுகளும்” என்ற தலைப்பில் நோட்டீஸ் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

ஹஜ் செய்முறை பயிற்சி – பொள்ளாச்சி கிளை


கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த 23/06/2013 அன்று ஹஜ் செய்முறை பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.அவர்களுக்கு நூல் மற்றும் சிடி வழங்கி தஃவா செய்யப்பட்டது. புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளக் கூடியவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்….

நூல் விநியோகம் – பொள்ளாச்சி கிளை


 கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 22/06/2013 அன்று பிற சமய  சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது……

3 யூனிட் அவசர இரத்த தான உதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த 18/06/2013 அன்று அரசு மருத்துவ மனைக்கு அவசர இரத்த தான பிரிவில் 3 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது.

N.H.ரோடு கிளை தஃவா

கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த 17-06-2013 அன்று மெகா 24 டிவி யில் இதுதான் இஸ்லாம் நிகழ்ச்சி குறித்து பேனர்கள் வைக்கப்பட்டது……..


செவ்வாய்

கரூர் காவல் துறை மற்றும் மாவட்ட வருவாய்த்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சன் நீயூஸ் தொலைக்காட்சியில்

NTJ உறுபினர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததையும், இஸ்லாமியா பிரச்சாரத்துக்கும் சமுதாய சீர்திருத்த பணிகளுக்கும் தொடர்ந்து தடை போட்டு வரும் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட வருவாய்த்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பட்டம் கருரில் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. மாநில பேச்சாளர் பக்கீர் மைதீன் அல்தாபி அவர்கள் கண்டன உரையுடன் அல்லாஹ்வீன் மாபெரும் கிருபையால் நடைபெற்றது

கோவை மாவட்டம் காரமடையில்இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி,

கோவை மாவட்டம் காரமடையில் இஸ்லாத்தை தான் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

கோவை மாவட்ட மாணவரணியின் கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
TNTJ கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக 23-6-13 அன்று காலை 10:30மணிக்கு ஆசாத் நகர் ப்[பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் T.A.அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார் பிறகு மாநில பேச்சாளர் சல்மான் அவர்கள் மாணவரணியின் இலக்கு எது? என்ற தலைப்பில் உரையாற்றினார் பிறகு சிறப்புரையாக மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன் அவர்கள் மாணவரணி பணிகளை வீரியபடுதுவது சம்மந்தமாக உரைநிகழ்த்தினார். பிறகு கோவை' மாவட்ட மாணவரணி புதிய ஒருகினைப்பாளர் தேர்வு நடைபெற்றது.இதில் அணைத்து கிளைகளிலிருந்தும் 80 க்கும் மேற்பட்ட மாணவரணி உறுபினர்கள் கலந்து' கொண்டனர். இறுதியில் மத்திய மாநில அரசாங்கம் வழங்கப்பட கூடிய கல்வி உதவித்தொகையை க்கான விண்ணப்பங்களும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வளங்கபடகூடிய கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களும் மற்றும் மாணவரணியின் ஐந்து கட்ட பணிகள் என்ற பட்டியல்களும் அந்தந்த கிளை பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது. புகழுக்கும் பெருமைக்கு சொந்தகாரனும் அல்லாஹ்விற்கே

திங்கள்

பாவியாக்கும் பராத் இரவு” – செல்வபுரம் தெற்கு கிளை தெருமுனைப் பிரச்சாரம்


கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த  21-06-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. இதில்சகோ.அப்துல் கரீம் அவர்கள் ”பாவியாக்கும் பராத் இரவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. தெருமுனைப் பிரச்சாரம்  என்ற பெயரில் நடந்தாலும்  ஓர் பொதுக்கூட்டத்தை போல் ஆண்களும் பெண்களும் திரலாக கலந்து கொண்டு உரையை கேட்டு பயன் அடைந்தனர்.

நோட்டிஸ்கள் விநியோகம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த  21-06-2013 அன்று பராத்தும் மத்ஹப்களும் என்ற தலைப்பில்  நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது….