தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

ஃப்ளோரிடாவில் திருக்குர்ஆனை எரித்த கிறிஸ்துவ பாதிரி! – அமெரிக்காவில் பரபரப்பு!


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜர்ச்சில் பாதிரியார் ஒருவானால் கடந்த வாரம் திருக்குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கிறிஸ்தவ மதபோதகர் டெர்ரி ஜோன்ஸ் மேற்பார்வையில், தேவாலய பாஸ்டர் வேன் ஸாப் என்பனால் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டுள்ளது.
இந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியார் வெறு யாரும் இல்லை ஏற்கனவே கடந்த ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, தீவிரவாதிகள் 2001 ஆம் ஆண்டு நடத்திய இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று குரானை எரிக்கப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவன் தான்..
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய் களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
அல்குர்ஆன் 61-9,10

அவசரப் பொதுக்குழு அறிவிப்பு – இன்ஷா அல்லாஹ் சென்னையில் மார்ச் 26 ல் !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது, முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மை அளிக்கும் என்பதைப் பற்றி சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஆய்வு செய்யப்பட்டது.
தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் வெளியிடாததாலும் கூட்டணிகள் முடிவாகாததாலும் அப்போது முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை.
இதன் பின்னர் நடத்தப்பட்ட மாநில செயற்குழுவின் போதும் அரசியல் நிலமை தெளிவாகாமல் இருந்தது. ஆனால் தற்போது கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு விட்டன. வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன.
மேலும் தேர்தல் அறிக்கையும் பெரும்பாலும் வெளியிடப்பட்டு விட்டன. தேர்தல் குறித்து முடிவு செய்ய ஏற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் வருகின்ற 26-3-11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை இம்பீரியல் ஹால் – எழும்பூர்- இல் மாநில அவசரப் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இதையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மாநிலப் பொதுச் சேயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

சவுதி அரேபியாவில் அரசியல் கட்சி உதயம் – அரசாட்சிக்கு வேட்டு வைக்கும் புதிய முயற்சியா?


RASMIN M.I.Sc
மத்திய கிழக்கின் மையமாகவும், முஸ்லீம்களின் முக்கிய கேந்திர நிலையமாகவும் செயல்படும் ஒரு நாடாக சவுதி அரேபிய ராச்சியம் செயல்படுகிறது.

முஸ்லீம்களின் முக்கிய வணக்கத் தளங்களான மக்கா, மதினா போன்ற சிறப்பு மிக நகரங்களை உள்ளடக்கிய நாடாக இருக்கும் சவுதி பல காலமாக மன்னர்களினால் ஆட்சி செய்யப்படுகிறது.

சவுதியின் தற்போதைய மன்னர் அப்துல்லாஹ்வின் பாட்டனான அப்துல்லாஹ் பின் சுஊத் அவா்களின் பெயரின் அமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த சவுதி அரேபியா.

தவ்ஹீதுக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளில் ஒன்றாக திகழும் சவுதி அரேபியாவில் தற்போது பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லீம் நாடுகளின் தற்போதைய பிரச்சினைகளின் தாக்கம் சவுதியிலும் எதிரொளிக்கிறதா?

கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு மற்றும், ஆபிரிக்க முஸ்லீம் நாடுகளில் ஏற்பட்டு வரும் அரசியல் போராட்டங்களின் தாக்கம் சவுதியின் கதவுகளையும் தட்ட ஆரம்பித்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஏன் என்றால் டியுனிஷியா மற்றும் எகிப்தின் ஆட்சியாளர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டவுடன் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க மன்னர்கள் மற்றும் அடக்கு முறை ஆட்சியாளர்கள் பலர் சிலாகித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

குவைத் மன்னர் பலவிதமான திட்டங்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.

சவுதி மன்னரோ பல இலவச திட்டங்களையும், மானிய முறைகளையும் அறிமுகம் செய்துள்ளார். இதே போல் பல நாடுகள் ஆட்சி முறையிலேயே மாற்றங்களை செய்துள்ளார்கள்.

இராணுவ ஆட்சியாளர்களாக இருந்த, தற்போது இருக்கும் பலர் அரசியல் ரீதியில் பிரதமர்களை நியமித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படி பல ஆட்சியாளர்கள் அண்மைய அரசியல் புரடசிகளினால் அடி அசைந்து போய் உள்ளதை நாம் காண முடிகிறது.

சவுதியில் முதன் முறையாக ஓர் அரசியல் கட்சி உதயம்.

இது வரை காலமும் மன்னர் ஆட்சியின் மூலம் மாத்திரம் மக்கள் பிரச்சினையை தீர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்த சவுதியல் தற்போது மாற்றம் நிகழ ஆரம்பித்திருக்கிறது.

ஆம் தற்போது அங்கு ஓர் அரசியல் கட்சி உருவெடுத்துள்ளது. ஹிஸ்புல் உம்மா அல் இஸ்லாமிய்யாஹ் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தக் கட்சியில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்விமான்கள், வர்த்தகப் பிரமுகர்கள் என்று பலரும் அங்கம் வகித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தச் செய்தியை ஏ.எப்.பி சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மன்னர் குடும்பம் மாத்திரம் இந்த நாட்டை ஆட்சி செய்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தத் தகவல்களை அதிகாரிகளிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று ஹிஸ்புல் உம்மா கட்சியின் நிறுவனர்களின் ஒருவரான சட்டத்தரணி அப்துல் அஸீஸ் வஹ்ஹாபி  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற ஆட்சி அதிகாரம் அற்ற சவுதியில் அரசியல் கட்சியொன்றின் உதயம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தூண்டியுள்ளது.

இதுவரை சவுதியில் பாராளுமன்ற நடை முறைக்குப் பதிலாக சூரா என்ற அரசியல் ஆலோசனைச் சபையே இருந்து வருகிறது. அதிலும் அந்த ஆலோசகர்கள் மன்னரினாலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள். மன்னர் தனக்கு விரும்பியவர்களை அதில் இணைக்கவும், பிடிக்காதவர்களை அதிலிருந்து நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளார்.

இந்த சூரா சபை  தொடர்பான பல விமர்சனங்களில் ஒன்று சூராவில் அங்கம் வகிப்பவர்களில் அதிகமானவர்கள் மன்னரின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் மாத்திரம் என்பதுதான்.

இந்த சூரா சபைக்கு மாற்றமான பாராளுமன்ற ஆட்சி முறையை சவுதியில் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த கட்சியின் நோக்கமாக இருக்கிறது.

அரசியல் கட்சிகளின் உருவாக்கத்திற்கு சவுதியில் அனுமதி உண்டா?

மன்னர் ஆட்சி நடக்கும் சவுதியில் அரசியல் கட்சிகளின் உருவாக்கத்திற்கு அனுமதியுண்டா என்ற கேள்வி தற்போது சர்வதேச சமூகத்தில் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் சவுதியின் ஜனநாயக மனித உரிமைகள் செயல்பாட்டாளரான முஹம்மது அல் கஹ்தானி அவா்கள் சவுதியில் அரசியல் கட்சிகளை மக்கள் உருவாக்குவதற்கான அங்கீகாரம் அரசியல் ரீதியாக இருக்கத் தான் செய்கிறது. மேலும் சவுதியில் அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டால் அதனை அங்கீகரிக்க வேண்டும் என்று சவுதி அரேபியா சர்வதேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.அதனால் தாராளமாக அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடியும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

எகிப்து மற்றும் டியுனிஷியாவில் ஏற்பட்ட புரட்சியினால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அப்துல் அஸீஸ் வஹ்ஹாபி அவா்கள் இந்தப் புரட்சிகளுக்கு முன்பே சவுதியில் ஜனநாயக முறையிலான அரசியல் கட்சியின் உருவாக்கத்திற்கான தேவை உணரப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.

எகிப்து மற்றும் டியுனிஷியாவின் நிலை சவுதிக்கும் நிகழுமா?

அடக்கு முறை ஆட்சிகளுக்கு எதிராக அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டம் சவுதியிலும் ஏற்படுமா என்ற கேள்வி சர்வதேச சமூகத்தின் முன் தற்போது வைக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் இரண்டு சிறிய ஆர்ப்பாட்டங்கள் சவுதியில் நிகழ்ந்து முடிந்துள்ள நிலையில் இந்தக் கேள்வி ஒரு முக்கியத்துவம் மிக்கதாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

ஜித்தாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பலர் பாதிக்கப்பட்டார்கள். நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாட்டினால் தான் வெள்ள நீர் வடிந்தோடுவதில் சிக்கள் ஏற்பட்டது என்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அவசரமாக செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி நடந்துள்ளதாகவும் அதற்கும் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புருத்தி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதே போல்  தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் உள் நாட்டு அமைச்சினால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி இன்னுமொரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆக இந்தப் போராட்டங்களின் தொடரில் சவுதியிலும் போராட்டம் வெடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஹிஸ்புல் உம்மா அரசியல் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகும் சந்தர்ப்பத்தில் போராட்டத்திற்கான வாசல்கள் திறக்கப்படுவதற்கு வழியேற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொருத்திருந்து பார்ப்போம்.

திங்கள்

சாரமேடு கிளையில் மார்க்க விளக்கக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக கடந்த 20.03.2011 அன்று மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.


இதில் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் “சமூக கொடுமைகள்” என்ற தலைப்பிலும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சுலைமான் அவர்கள் “TNTJ தனித்து நிற்பது ஏன்? “:என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

குழந்தைகளை அடிக்காதீர்கள்!!!

குழந்தைகளை பெற்றோர் அடிப்பது எத் தகைய ஆபத்தை அளிக்கும் என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை. பாட சாலைகளிலும், வீடுகளிலும் குழந்தைகளை பெற்றோர் அல்லது ஆசிரியர் அடிப்பது முற் றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தகைய குடும்ப வன்முறை பலவீனமான குழந்தைகள் மீது பெற்றோரால் நடத்தப்படு வது மிகவும் ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் என்கின்றன ஆய்வுகள். மூத் தோர் இளையோரை அடிப்பது சரியே எனும் வன்முறைக் கலாச்சாரம் மிக எளிதில் குழந் தைகள் மனதில் விதைக்கப்படுகிறது. அத னால் அவர்கள் தமது தம்பி,தங்கைகளை அடிக்க துவங்குகின்றனர். பாடசாலைகளில் மற்ற குழந்தைகளை அடிக்கின்றனர்.
நோர்வே,ஸ்வீடன்,ஆஸ்திரியா,டென்மார்க் போன்ற நாடுகளில் பெற்றோர் குழந்தை களை அடிப்பது சட்டப்படி குற்றம்.இந்த நாடுகளில் பாடசாலை மாணவர்கள் வன் முறையில் ஈடுபடுவது மற்ற நாடுகளை விட மிகவும் குறைவாக இருக்கிறது. எத்தனைக் கெத்தனை அதிகமாக குழந்தைகள் அடிக்கப் படுகின்றனரோ அந்தளவுக்கு அவர்கள் வன்முறையாளர்களாக பிற்காலத்தில் மாறும் அபாயம் இருக்கிறது.
"அடிக்காமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பது?" என்று கேட்கலாம். தனியே உட்கார வைப்பது, பிடித்த உணவை செய்து கொடுக்க மறுப்பது, புத்திமதி சொல்வது, குழந்தைகளுடன் நட்புடன் பழகுவது, வெளியே விளையாடக் கூட்டிபோவதை அந்த நாளுக்கு தவிர்ப்பது என பல வழி முறைகள் இருக்கின்றன. குழந்தைகளிடம் நட்புறவை வளர்த்து காரியம் சாதிக்க தெரியாத பெற்றோர்கள் தமது கடமையில் தவறியவர்களாக ஆகின்றனர் என்பது தான் உண்மை. பல சமயங்களில் குழந்தைகள் என்னென்ன காரணங்களுக்காக பெற்றோ ரால் தாக்கப்படுகின்றனர் என்பது மிகவும் ஆச்சரியமானதாக இருக்கும். குழந்தைகளை அடிப்பது பெரும்பாலும் பெற்றோரின் அந்த நிமிட கோபத்துக்கு ஒரு வடிகாலாக இருக்கி றது என்பதால் தான் பெற்றோர் குழந்தை களை அடிக்கின்றனர்.தாய் குழந்தையை அடிப்பது; பெரும்பாலும் கணவன், மாமி யார் மேல் இருக்கும் கோபத்தில்தான்.. அவர் களை எதிர்த்து பேசமுடியாத ஆத்திரத்தில் குழந்தையை போட்டு அடிக்கிறாள்.
மிகவும் அற்ப காரணங்களுக்காக (பெரிய வர்களுக்கு மரியாதை தரவில்லை, எதிர்த்துப் பேசுவது) போன்ற காரணங்களுக்காக குழந் தைகள் தாக்கப்படுவர். குழந்தைகள் மரியா தையை கற்பது பெரியவர்களிடமிருந்துதான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பெற் றோர் தமது சொந்த கருத்தை குழந்தைகள் மீது இப்படி அடி-உதை மூலம் திணிப்பது குழந்தைகளின் சுயசிந்தனைக்கு தடையாக அமைந்துவிடுகிறது.குறும்பு செய்யும் குழந் தைகள் மிகவும் ஆக்கத்திறன் மிக்க குழந்தை களாக பிற்காலத்தில் வளருவார்கள். அடி உதை எனும் வன்முறைகள் அந்த ஆக்கத் திறனை முளையிலேயே கிள்ளி எறிந்து விடும்.
"என் அப்பா என்னை அடித்து வளர்த் தார். நான் நன்றாகத்தான் இருக்கிறேன்" என்பவர்கள்; தாங்கள் யார் யார் மீது அதே வன்முறையை செலுத்தியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். பெரும்பாலும் தந்தையால் அடிக்கப்படு வர்கள் மனைவி, தம்பி, தங்கை, குழந்தை ஆகியோர் மீது அதே போன்ற உடலியல் அல்லது உளவியல் ரீதியான வன்முறையை பிரயோகித்திருப்பர். (விதிவிலக்குகள் இருக் கலாம்) அடிக்கு பதில் கடுமையான திட்டுக் களை பிரயோகிக்கலாம் எனவும் நினைக்கக் கூடாது.
குழந்தைகள் மனதில் ஆறமுடியாத ரணத்தை ஏற்படுத்துவதில் உளவியல் வன் முறையும் அடங்குகிறது. கட்டுப்பாடு என்பது முக்கியம். ஆனால் அதை வன்முறை யின் மூலம் மட்டுமே கொண்டுவர முடியும் என்று நினைப்பது தவறான வழிமுறையா கும்.

அல்லாஹ்வின் வார்த்தை

நம்பிக்கை கொண்டோரே!
சகித்துக்கொள்ளுங்கள்!சகிப்புத்தன்மையில்(மற்றவர்களை) மிகைத்துவிடுங்கள்!உறுதியாக நில்லுங்கள்!அல்லாஹ்வை அஞ்சுங்கள்!வெற்றி வெறுவீர்கள்.அல் குர்ஆன்3:200


"...அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றத்தை மன்னித்தும் விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்." (அல்குர்ஆன் 3:134).
"உங்களில் ஒருவர் வெறுக்கத் தக்கதைக் கண்டால் அதைத் தனது கரத்தால் மாற்றட்டும்; அதற்குச் சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும்; அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து ஒதுக்கட்டும். இதுவே ஈமானின் பலவீனமான நிலையாகும்" என நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். (அபூஸயீத் அல் குத்ரி (ரலி), முஸ்லிம்).

"... நன்மைக்கும், பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திலும் வரம்பு மீறுதலிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்." (அல்குர்ஆன் 5:2).
"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள் ..." (3:110). நன்மையைக் கொண்டு தீமையைத் தடுக்கிறீர்கள்; அதானாலே சிறந்த சமுதாயம் என்று குர்ஆன் கூறுகிறது. நபி( ஸல்) அவர்கள் தங்கள் உம்மத்தைப் பற்றிக் கவலை அடைந்ததைப்போல், அறியாமையில் இருக்கும் முஸ்லிம்களைப் பற்றிய கவலை, ஒவ்வொரு முஸ்லிம்களுக்குள்ளும் இருக்கவேண்டும்.

தனியாக தொழுதால் பாங்கு அவசியமா ?

தனியாகவோ ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையை தொழுதால் அதற்கு பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டுமா ?
                      வீட்டில் கடமையான தொழுகையை ஜமாயத்தாகக் தொழுதாலும் தனியாக தொழுதாலும்  பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டும்.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது ”நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்” என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
           அறிவிப்பவர்,மாலிக் பின் ஹூவைரிஸ் (ரலி) நூல்.,புகாரி (2848)
               கூட்டுத் தொழுகை நடத்த வாய்ப்பு கிடைக்காமல் தனியாக தொழுதாலும் பாங்கும் இகாமத்தும் கூறியே தொழவேண்டும். பின்வரும் நபிமொழிகள் இவ்வாறு செய்வதைச் சிறப்பித்துக் கூறுகின்றது.
                அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்“.
     (மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான்.“ பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகின்றான். (ஆகவே) என் அடியானை நான் மன்னி்த்து விட்டேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான்.
                           அறிவிப்பவர், உக்பா பின் ஆமிர் (ரலி) நூல் . அபூதாவூத் 1017

நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந் போது அல்லாஹூ அக்பர் என்று ஒருவர் சொன்னதைச் செவியுற்றோம். (இதை செவியுற்ற) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் இயற்கை மார்க்கத்தில் உள்ளார் என்றார்கள். அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹூஎன்று கூறிய  போது இவர் நரகத்திலிருந்து தப்பித்து விட்டார் என்றார்கள். உடனே நாங்கள் அவரிடம் விரைந்து சென்றோம். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். தொழுகை நேரம் வந்தவுடன் அதற்காக பாங்கு கூறியுள்ளார்.
 அறிவிப்பவர். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல், அஹ்மது 3667

லிபியாவில் அமெரிக்கா தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒப்புதல் கிடைத்ததன் பின்னணியில் லிபியா மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படையினர் அத்துமீறி லிபியாவுக்குள் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இது உலக அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இந்தியாவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய நாடுகளின் விமானப்படையும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. லிபியா, வெனிசூலா உள்ளிட்ட பல நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. கடாபியை ஒழிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்த அமெரிக்காவுக்கு இதுவரை அது கை கூடவில்லை.
தற்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை தனக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் காக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒப்புதல் பெற்றது. இதுதொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை.
இந்தியா, உலக நாடுகள் கண்டனம் அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர. இது அத்துமீறிய தாக்குதல் என்று அவை வர்ணித்துள்ளன. வெனிசூலாவும் இதைக் கடுமையாக கண்டித்துள்ளது. இன்னொரு நாட்டின் மீது எப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம். இது அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான செயல் என்று வெனிசூலா அதிபர் சாவேஸ் கூறியுள்ளார். அமெரிக்காவின் தாக்குதலால் அரபு நாடுகளிலும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பொன்னாடை போர்த்தும் தமிழகத்தின் முதன்மையான தவ்ஹீத் (?) அமைப்பு (சாக்)

நாகர்கோவிலில் ஜாக் அமைப்பின் ஆதரவுடன் நடக்கும் இஸ்லாமிக் சானல் என்ற கேபிள் டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் ஐதுரூஸ் ஃபிர்தௌஸி.

சமீபத்தில் பெரியார் தாசன் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி இஸ்லாமிக் சானல் சார்பாக நாகர்கோவிலில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் இறுதியில் வாழ்த்துரை வழங்கியவர்களுக்கு பொன்னாடை(?!) போர்த்தப்பட்டது.

டிவி சானலின் உரிமையாளர் இன்னாருக்கு பொன்னாடை போர்த்துவார் என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி தொகுத்து வழங்க ஜாக் பேச்சாளர் எம்.சி.முஹம்மது, எஸ்.கமாலுதீன் மதனி, ஃபிர்தெஸியா கல்லூரி முதல்வர் செய்யது முஹம்மது மதனி, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் காதர் மைதீன் என பலருக்கு அவர் பொன்னாடை போர்த்தி கைகுலுக்கினார்.

இறுதியாக வாழ்த்துரை வழங்கிய -------------- என்ற ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்துவார் என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி அறிவிக்க டிவி உரிமையாளர் தனது கையில் ஆடையை வைத்துக் கொண்டு ஆலிமாவைத் தேட நல்ல வேளையாக அவர் உள்ளே மறைந்து கொண்டார். இல்லையெனில் பலருக்கு மத்தியில் அந்த ஆலிமாவுக்கு அவர் பொன்னாடை போர்த்தி இருப்பார். ஒரு சிறுமியிடம் அந்த ஆடை கொடுக்கப்பட்டது. 

மதீனாவில் படித்த ஜாக் அறிஞர்கள் கூட இந்த புகுழுக்கும் பொன்னாடைக்கும் அடிமையாகி விட்டனர்.

கமாலுத்தீன் மதனிக்கு பொன்னாடை போர்த்தும் கண்கொள்ளாக் காட்சி

ஸையித் முஹம்மது மதனிக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி

இன்னொரு ஜாக் மவலவிக்கு பொன்னாடை

ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்த காத்திருக்கும் கேபிள் டிவி உரிமையாளர் 


ஜாக் தாயிகள் அனைவரும் அந்த நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டுதானிருந்தனர்.

அரசியல்வாதிகளுடன் போட்டி போட்டு புகழ் போதையில் தட்டழியும் இவர்களையும் குர்ஆன் ஹதிஸ் பேசுவோர் என்று நீனைத்து ஆதரவளிப்போர் சிந்தியுங்கள்.

பயணுள்ள கற்பனை!! நாளை நிஜமாகும் கற்பனை!!



பயணுள்ள கற்பனை!! நாளை நிஜமாகும் கற்பனை!!



உங்க‌ள் க‌ண்க‌ளை மூடிக்கொண்டு, இத‌ய‌த்தை ச‌ற்றுதிற‌ந்து வைத்துக் கொள்ளுங்க‌ள் ...

இப்போது க‌ற்ப‌னையில் உங்க‌ள் முன்னால் ... 

உங்களைச்சுற்றி உங்கள் ரத்த சொந்தங்கள், நேற்றுவரை அவர்ககோடு உரையாடிக்கொண்டு இருந்த உங்கள் வாய் இன்று திறக்க மறுக்கிறது, புன்ன்கைக்ககூட முடியவில்லை, உங்கள் குழந்தைகளையும் மனைவியும் ஆரத்தழுவிய கைகள், அவர்கள் அனைவரும் அருகே இருந்தும் செயளிழத்து கிடக்கிறது, அழுகை சதம் கண்நீர்களந்த முகங்கள், நான்குபேர் வந்து தூக்கிசெல்கிறார்கள் நீங்கள் குளிக்கவைக்கப்படுகிரீர்கள், உயிரோடு இருக்கும்பொழுது நம் உடல் எப்பொழுது கப்ருக்கு போகும் என்பதை தெரியாமல் இன்னும் எவ்ளோவோ காலம் பாக்கி இருக்கின்றது என்று சொன்ன நம் மனசாட்சி, குளிப்பாட்டி முடித்தவுடன் அதிகபட்சம் போனால் இன்னும் அரைமணிநேரம் என்று சொன்னதும் மனம் படபடக்கிறது

ஜ‌னாஸா, நான்கு பேர் நான்கு மூலைக‌ளையும் சும‌ந்த‌வ‌ண்ண‌ம் உங்க‌ளை நெருங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.

 தொழுகையை நிறைவேற்றுவ‌த‌ற்காக‌ அனைவ‌ரும் அணிவகுத்து நிற்கின்ற‌ன‌ர்..

நான்கு த‌க்பீர்க‌ள் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டைசி த்த‌க்பீருட‌ன் தொழுகை முடிகின்ற‌து.

இப்போது உங்க‌ள் ம‌ன‌தில் ஒரு நெருட‌ல் ...

ஆசைப்ப‌ட்டு உங்க‌ளை மாய்த்துக்கொண்டு உழைத்துத் திரிந்த‌ உங்க‌ள் வாழ்க்கை முடிந்துவிட்ட‌து.

மாடிக்க‌ட்ட‌ட‌ங்க‌ள் க‌ட்டுவ‌த‌ற்காக‌ ஹ‌ஜ் போகாது சேர்த்த‌ உங்க‌ள் ப‌ண‌ம் பிர‌யோச‌ன‌ம‌ற்ற‌தாகிவிட்ட‌து.

தொழும் நேர‌ங்க‌ளை ம‌ற‌ந்த்து நீங்க‌ள் க‌ல‌ந்துகொண்ட கூட்ட‌ங்க‌ள் வீணாகிவிட்ட‌து..

உங்க‌ள் ஆட‌ம்ப‌ர‌வாக‌ன‌ங்க‌ள்,

குழ‌ந்தைச் செல்வ‌ங்க‌ள்,

அன்பும‌னைவி ... எல்லாமே முடிந்துவிட்ட‌து.

இப்போது உங்க‌ளுக்காக எஞ்சி இருப்ப‌து நீங்க‌ள் உடுத்தி இருக்கும் உங்க‌ள் க‌Fப‌ன் பிட‌வைம‌ட்டுமே!

உங்க‌ள் உற்றார் உற‌வின‌ர்க‌ள் உங்க‌ளை சும‌ந்து உங்க‌ள் நிர‌ந்த‌தர வீட்டில் வைத்துவிட்டார்க‌ள்.

ஒரு பிடி ம‌ண் உங்க‌ள் மேல் விழுகிற‌து.

உல‌க‌மே இடிந்து விழுந்துவிட்ட‌து போல் உண‌ர்கிறீர்க‌ள்.

கொஞ்ச‌மாக‌த் தெரிந்து கொண்டிருந்த‌ வெளிச்ச‌ம் இப்போது அடியோடு இல்லாம‌ல் போய்விட்ட‌து.

இந்த‌நிமிட‌ம் .... காரிருளில் நீங்க‌ள் ம‌ட்டுமாக‌ 

த‌னித்துவிட‌ப்ப‌ட்டுவிட்டீர்க‌ள் ...

எல்லோரும் ந‌ட‌ந்துசொல்லும் நில‌ம‌ட்ட‌த்திற்கு கீழால் ஆர‌டி நில‌த்தில் நீங்க‌ள் ம‌ட்டும் ...

நீங்க‌ள் ம‌ட்டும் த‌னித்துவிட‌ப்ப‌ட்டுவிட்டீர்க‌ள்.

காசோ ப‌ண‌மோ,

குழ‌ந்தைக‌ளோ, ம‌னைவியோ இல்லாதத‌னிமை ...

குற‌ந்த‌ப‌ட்ச‌ம் ஓர்கைய‌ட‌க்க‌த் தொலைபேசியாவ‌து, இல்லாதத‌னிமை ...

இர‌ண்டு ம‌ல‌க்குமார் உங்க‌ளை நோக்கிவ‌ந்து கொண்டிருக்கிறார்க‌ள் ...

இப்போது நீங்க‌ள் என்ன‌ ? ப‌தில் கூற‌த்தயாராகி இருக்கின்றீர்க‌ள் ...

அந்த‌ நிமிட‌த்தை கொஞ்ச‌ம் க‌ற்ப‌னையில் கொண்டுவந்து, (இந்த‌க்கேள்விக‌ளை கொஞ்ச‌ம் கேட்டுப்பாருங்க‌ள் ...)

நான் உண்மையான‌  ஒருமுஃமீனா ???

குரானின் ஒளியில் வாழ்கிறேனா ?? தொழுகையை விடாது தொழுகிறேனா ??
வ‌ருட‌ம் ஒரு முறை வ‌ரும் ர‌ம‌லானில் அல்லாஹ்வுக்காக‌ நோன்பு நோற்கின்றேனா ??

க‌ட‌மையான ஹ‌ஜ்ஜை உரிய‌முறையில் நிறைவேற்றுகின்றேனா ?
போன்ற இன்னோர‌ன்ன‌ கேள்விக‌ளுக்கு ஆம் என்ற‌ விடையை தைரிய‌மாக‌ கூற‌ப்போகின்றீர்க‌ளா ?

இல்லை ...

கால‌த்தை வீணாக‌க் க‌ட‌த்திவிட்டேனே ...

ஒரு முறையாவாது அல்ல‌ஹ்வின் திருப்பொருத்த‌த்திற்காக‌ ஹ‌ஜ் செய்திருக்க‌லாமே,

500/=  நோட்டுக்க‌ளை விள‌ம்ப‌ர‌த்துட‌ன் கொடுத்த‌த‌ற்குப்ப‌திலாக, யாருக்கும் தெரியாம‌ல் ந‌ன்மைக‌ளை கொள்ளை அடித்திருக்க‌ளாமே..

என் நோயை சாட்டுவைத்து நோன்புக‌ளை விட்டுவிட்டேனே, கொஞ்ச‌ம் ம‌ன‌ச்சாட்சிக்கு பொருத்த‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டிருக்க‌ளாமே..

வ‌ட்டி எடுக்காம‌ல் லாபமோ ந‌ட்ட‌மோ வியாபார‌த்தையே முழும‌ன‌தாக‌ செய்திருக்க‌ளாமே..

குரான் கூறிய‌ ஹிஜாபின் வாழ்க்கையை வாழ்ந்திருக்களாமே
அன்னிய‌ ஆட‌வ‌ர்க‌ளின் முன்னால் என் அழ‌ங்கார‌த்தை ம‌றைத்து க‌ண‌வ‌னுக்கு ம‌ட்டும் காட்டி இருக்க‌லாமே ...

குழ‌ந்தைக‌ளை சிற‌ந்த‌முறையில் வ‌ள‌ர்த்திருக்க‌லாமே..

தொலைக்காட்சியின் முன்ம‌ண்டியிட்ட‌த‌ற்குப்ப‌திலாக‌ சுஜூதில் இறைவ‌னை நெருங்கி இருக்க‌லாமே..

தொலைபேசியில் அர‌ட்டை அடித்த‌த‌ற்குப்ப‌திலாக‌ குரானுட‌ன் உரையாடி இருக்க‌ளாமே, இல்லைஏதாவ‌துப‌ய‌னுள்ளபுத்த்க‌த்தைவாசித்துஇருக்க‌ளாமே..

என கைசேத‌ப்ப‌ட‌ப் போகின்றீர்க‌ளா??????

சிந்தியுங்க‌ள்!!

உல‌க‌ வாழ்க்கை என்ப‌து ஒரு முறைதான், அதுகாத்திருக்கும் ஒரு இட‌ம‌ல்ல‌.. காத்திருந்தாலும் இழ‌ந்தால் மீண்டும் கிடைப்ப‌தில்லை. இம்மை என்ப‌து ஒரு ப‌ய‌ண‌ம் தாம‌திக்காம‌ல் எம்மை ம‌றுமையின் வாச‌லில்கொண்டு சேர்த்திடும்.. அந்த‌ப் ப‌ய‌ண‌த்தில் க‌ண் மூடித்த‌ன‌மாய் கால‌த்தை க‌ழிக்காம‌ல் திட்ட‌மிட்டு எம்மை நாம் வ‌ள‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ வேண்டும்.

இல்லையேல்.. எம்வாழ்வும் இவ்விறைவாக்குக‌ளின்பிர‌திப‌ளிப்பாகிவிடும். 

நஊதுபில்லாஹிமின்ஹா !

பன்முக அமைப்பினரின் மார்க்க விரோத செயல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்டநல்லூர் கிளை சார்பாக 13.3.2011 அன்று நடைபெற இருக்கும் மார்க்க விளக்கக் கூட்ட வால்போஸ்டர்கள் வியாழன் அன்று கிளையில் ஒட்டப்பட்டது.
ABCD (SDPI,DPI,PFI, MNP etc..) அமைப்பான பலமுகங்களோடு மக்கள் மத்தியில் உலாவந்து கொண்டு இருக்கும் SDPI MNP  யினர் சனிக்கிழமை இரவு இந்த வால்போஸ்டரின் மீது  போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள்.
அழைப்புபணி செய்வதற்காக ஒட்டப்பட்ட  வால்போஸ்டர் மீது போஸ்டரை ஒட்டி அராஜகம் செய்துள்ளனர் இவர்களெல்லாம் எமஎல்ஏ ஆகினால் அது சமுதாயத்திற்கு கேடுதான்.
சிந்தியுங்கள் சகோதரர்களே நமக்கு முதல் குறிக்கோள் மறுமையாகதான் இருக்கவேண்டும் பிறகுதான் இம்மை கொடிக்கு சல்யுட் அடிக்கும் இந்த மார்க்க விரோதிகள் சமுதாய காவலர்களாம் அல்லாஹ்வே இத்கையோர்களிடமிருந்து சமுதாயத்தை  காப்பாற்றவேண்டும்

குர்ஆனும் அறிவியலும்

உடலில் ஏற்படும் நோய்   
உடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.   
இதோ அல்லாஹ் அருள்மறை குர்ஆன் மூலமாக மனிதர்களாகிய நமக்கு மருந்துகளை பற்றி ஆராய்ச்சி செய்ய அழகான வழிவகைகளை போதிக்கிறான் இதை சற்று உண்ணிப்புடன் கவனித்துப் பாருங்கள்.  
 
  உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68)  
   
பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)  
 
குர்ஆன் கூறும் தேனீ மற்றும் தேன் ஆராய்ச்சி படிப்பினை  
அருள்மறை குர்ஆன் தேனீக்கள் பற்றியும் அவற்றின் மூலம் கிடைக்கும் தேன்பற்றியும் மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு தேனீ போன்ற சிறிய ஜீவனிடம் கூட மருந்து உள்ளதாக அருள்மறை கூறுகிறது.  
 சற்று யோசித்துப்பாருங்கள் ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு ஐந்து அறிவு கொண்ட ஈக்களின் இனமான தேனீயிடம் மருத்துவம் என்ற செய்தி மகத்தான உண்மைதானே!  
நீங்கள் இந்த வசனத்தை படித்தவுடன் தேன் என்ன அனைத்து நோய்களையும் தீர்க்குமா? மனிதனுக்கு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் வருகிறது இதற்கெல்லாம் இந்த தேன்தான் மருந்தா என்று சிந்திக்க தோன்றும்.  
ஆனால் இந்த வசனத்தை நீங்கள் பொறுமையாகவும்  வசனம் உணர்த்தும் பொருளை நன்கு உணர்ந்தும் படித்தால் இந்த வசனத்தின் மூலம் இந்த அறிவியில் உலகம் எதை நோக்கி பயனிக்க வேண்டும் என்ற அறிவுரையை நமக்கு விளக்கிக் காட்டுகிறது! வாருங்கள் சிந்தித்து ஆராய்வேமா?  
தேனியிடம் மருந்து உள்ளது மேலும் தேனீ முதற்கொண்டு மற்ற உயிருள்ள ஜீவன்களிடமிருந்தும் நோயை குணப்படுத்தும் மருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுகிறது. இவ்வாறு பட்சிகள், ஈக்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி படிப்பான விலங்கியல் ஆராச்சிகள் தேவை 
தேனீ தானான தேன் என்ற பொருளை தருவதில்லை மாறாக அது பலவகையானகனிகள்மலர்கள் ஆகியவற்றை உட்கொண்டு அதிலிருந்து ஜீரணமாகி வெளியாவதுதான் தேன் எனவே தேனீ உட்கொள்ளும் தாவரங்களை ஆராய்ச்சி செய்ய தாவரவியல் ஆராச்சிகள் தேவை. 
தேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான் அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன்லேசர்கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துள்ளியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம். 
 இறுதியாக இந்த வசனத்தில் தேன் என்பதை அல்லாஹ் கூறுகிறான் அதாவதுதேன் என்ற மருத்துவ குணம் கொண்ட திரவம் அதிக காலம் கெடாமல் இருக்கும். அதே போல மனிதனை நோக்கி இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி என்று கூறுகிறான் அதாவது தேன் அல்லாத மற்ற மருந்துகளுக்கு மருந்தின் தன்மை, கெட்டுப்போகும் காலநிலை, மருந்து கெட்டுப்போனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை சிந்திக்க வேண்டும் இந்த ஆராய்ச்சிகள் மூலமாக மருந்து தயாரிப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி கல்வி மிக அவசியம்! 
உடலளவில் ஏற்படும் ஒரு நோய்க்கு கீழ்க்கண்ட ஆராய்ச்சிகள் இன்றியமையாதவை  
மனிதன் கற்க வேண்டிய ஆராய்ச்சி படிப்புகள்  
 
  • உடலியல் ஆராய்ச்சி படிப்பு
  • விலங்கியல் ஆராய்ச்சி படிப்பு
  • தாவரவியல் ஆராய்ச்சி படிப்பு
  • நவீன உபகரணங்கள் பற்றிய ஆராய்ச்சி படிப்பு
  • மருந்து தயாரிப்பு ஆராய்ச்சி படிப்பு  
  • சிந்தித்துப்பாருங்கள் அருமைச் சகோதரர்களே 1400 ஆண்டுகளுக்குமுன்னர் இந்த ஆராச்சி பற்றிய அறிவு யாருக்கேனும் இருந்ததா? ஆனால் அருள்மறை குர்ஆன் இத்தனை ஆராய்ச்சிகளையும் தேடுங்கள் அந்த தேடுதல் உங்களுடைய நோய்களுக்கு மருந்தாக அமையும் என்று அழகாக வர்ணிக்கிறது நாம் ஆராய்கிறோமா?  
    
தேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி ஆராய்வோமா?  
 
தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை 
சித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம் 
புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம் 
தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம். 
தேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம். 
தேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம். 
தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம். 
இதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம். மேலும்தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம். 
தேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம். 
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம். 
காயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது. 
   
அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கும் இறுதி வேதம் என்பதற்கும் இந்த தேன் மற்றும் தேனீ பற்றிய படிப்பினை ஆதாரமாக இருக்கிறது. நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வரலாமே!  
தேனீக்கள் ஆராச்சிக்கு உதவிய பல்வேறு இணைய தளங்களுக்கு நன்றிகள் பல  
 அல்ஹம்துலில்லாஹ்  
(எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)

புதன்

ஆசிய மக்களுக்கு எச்சரிக்கை ! ஏமாற்றும் எஸ்.எம்.எஸ் - மறுக்கிறது பி.பி.ஸி


போலியான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி அதன் மூலம் இன்பம் கானும் கல்லப் பேர்வழிகள் அடிக்கடி பொது மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக பொய்யான, போலியான செய்திகளை இணையதளங்கள் மூலமாகவும், குறுத்தகவல்கள் மூலமாகவும் பரப்புகிறார்கள்.

இந்தப் போலியான செய்திகளை நம்பும் பலர் தாமும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் நஷ்டப்பட வைத்துவிடுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட சில இலக்கங்களை போட்டு இந்த இலக்கங்களில் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தால் அந்த செய்தியைப்படிக்காதீர்கள் அதனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றெல்லாம் குறிப்பிட்டு குறுந்தகவல்களை அனுப்பினார்கள்.

இறுதியில் அந்த தகவல்களை பரப்பியவர்களை கைது செய்யும் படி ஜனாதிபதியே உத்தரவிட்டதும் நாம் பத்திரிக்கைகளில் படித்த தகவல்தான்.

அந்த தொடரில் தற்போது ஒரு குறுந்தகவல் ஆசிய மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. அதாவது கடந்த வாரம் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியினால் ஜப்பானில் கிட்டத்தட்ட நான்கு அணு உலைகள் இதுவரைக்கும் வெடித்துள்ளன அந்த அணு உலைகளின் வெடிப்பினால் வெளியாகும் அணுக்கசிவினால் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதே அந்தக் குறுந்தகவல் சொல்லும் செய்தி.

மறுக்கிறது பி.பி.ஸி

பி.பி.ஸி உலக சேவையின் பெயரில் பரப்பப்படுகின்ற இந்த குறுந்தகவலை அனுப்புபவர்கள் பி.பி.ஸி உலக சேவையிலிருந்து அனுப்பப்படுவதாக அதில் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் அதனை பி.பி.ஸி மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கள் செய்தி சேவைக்கும் குறிப்பிட்ட தகவலுக்கும் தொடர்பில்லை என்று அந்தத் தகவல் பொய்யானது என்றும் அதனால் அதனை யாரும் நம்ப வேண்டாம், அதனை பரப்ப வேண்டாம் என்று பி.பி.ஸி  உலக சேவை தெரிவித்துள்ளது.

பி.பி.ஸியின் பெயரால் வெளியிடப் பட்டுள்ள தகவல் இதுதான்.

BBC Flash news : Japan Government confirms radiation leak at Fukushima nuclear plants. Asian countries should take necessary precautions. If rain comes, remain indoors first 24 hours. Close doors and windows. Swab neck skin with betadine where thyroid area is, radiation hits thyroid first. Take extra precautions. Radiation may hit Philippine at around 4 pm today. If it rains today or in the next few days in Hong Kong. Do not go under the rain. If you get caught out, use an umbrella or raincoat, even if it is only a drizzle. Radioactive particles, which may cause burns, alopecia or even cancer, may be in the rain. 

இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில்: 

ஜப்பானில் அணுக் கசிவானது அந்நாட்டு அரசினால் உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கவனமாக இருக்கவும். மழை பெய்தால் முதல் 24 மணித்தியாலமும் வீட்டுக்குள்ளேயே இருக்கவும்.கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைத்திருக்கவும். கதிர்வீச்சானது தைரோயிட் பகுதியினையே முதலில் தாக்குவதாகவும் அதனால் கழுத்துப்பகுதியினை பாதுகாக்கவும் என அச் செய்தி தொடர்கின்றது. 

எனினும் இது போலியான செய்தி எனவும் தாங்கள் இதனை அனுப்பவில்லையெனவும் பி.பி.சி தெரிவித்துள்ளது. 

இக் குறுந்தகவல் போலியாதெனவும் இதனை நம்ப வேண்டாம் என்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அறிவித்துள்ளது. 

அத்துடன் விஷமிகள் இது போன்ற குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக இணையத்தாக்குதல் நடத்தலாம் எனவும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்பின் சகோதரர்களே !

உங்கள் கையடக்கத் தொலை பேசிகளுக்கு வரும் இந்தத் தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கும் சிற்றின்பத்திற்காக மற்ற மக்களை கஷ்டத்திற்குள்ளாக்கி மறுமை வாழ்வை வீனாக்கிவிடாதீர்கள்.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.(5-1)
                                                                                                RASMIN M.I.Sc

பாசிச ஜெயாவிற்கு பாடம் புகுட்ட தி,மு.க தலைமையிலான கூட்டணியை ஆதரிப்போம் த.மு.மு.க!!



கருணாநிதி - ஜெயலலிதா: யாரை ஆதரிக்கப் போகிறோம்?

 அன்பார்ந்த சகோதர சகோதரிகளே...
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக முஸ்லிம் சமுதாயம் திமுக - காங்கிரஸ் - கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்றிருக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் வாழுமிடங்களில் அதிமுக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து மக்களும் ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கின் றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு ஆட்டம் கண்டிருக்கிறது. அதனால் சிறுபான்மை சமூக மக்களின் ஆதரவைப் பெற நாடகமாடுகிறார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே பரபரப்பாய் இயங்கும் ஓரிரு முஸ்லிம் அமைப்புகள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேடைதோறும் 'கச்சேரி' நடத்திக் கொண்டிருக் கிறார்கள். தனியார் டி.வி. மூலமாக போயஸ் தோட்டத்தில் பெற்றுக் கொண்ட 'சூட்கேஸ்'களுக்கு விசுவாசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கு திமுக என்ன செய்தது?

சிலர், திமுக ஆட்சியில்தானே கோவைக் கலவரம் நடந்தது என்று குற்றம் சுமத்துகிறார்கள். நாம் அதனை மறுக்கவில்லை. அதேசமயம், திமுக ஆட்சி நடைபெற்ற 1960-71, 1971-76, 1989-91, 1996-2001 ஆகிய காலக்கட்டங்களில் முஸ்லிம் சமூகம் பல நன்மைகளைப் பெற்றுள்ளதை மறந்துவிட முடியாது.

1971லிருந்து 1976வரை நடைபெற்ற திமுக ஆட்சியில்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள், உருது பேசும் முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். இதனால் 94.5 சதவீத தமிழக முஸ்லிம்களுக்கு ஓரளவு சமூக நீதி கிடைத்தது.
சென்னை காயிதே மில்லத் கல்லூரி, மதுரை வக்பு வாரியக் கல்லூரி ஆகியவை தொடங்குவதற்கு அரசு சார்பில் நிலங்கள் வழங்கப்பட்டன.
உருதுமொழி வளர்ச்சிக்காக உருது அகாடமி தொடங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் 1991 முதல் 1996 வரையிலான ஆட்சியில் பாபர் மஸ்ஜித் இடிப்பை தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது 'தடா' கறுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. அவர்களையெல்லாம் 1996லில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு கலைஞர் அரசு தான் விடுதலை செய்தது.
கோவையில் நடைபெற்ற சம்பவங்களில் முஸ்லிம்கள் சாதாரண கிரிமினல் வழக்குகளில் மட்டும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது வேறு பயங்கர சட்டங்கள் ஏதும் பதிவு செய்யப்பட வில்லை.. மாறாக 2005லில் ஜெயலலிதாவின் ஆட்சியில் முத்துப்பேட்டையில் நடைபெற்ற கலவரத்தில் பஷீர் என்பவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா எப்படிப்பட்ட மதவெறியர் என்பது உலகம் அறிந்த உண்மை
சென்னையில் 1991லில் ஜெ. ஆட்சியில் நடைபெற்ற மீலாது விழா கலவரத்தை முஸ்லிம்கள் யாரும் மறக்க முடியாது. அந்தக் கலவரத்தில் இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இக்கலவ ரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டது.

* பாபரி மஸ்ஜித் இடத்தில் கரசேவை நடத்த வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக அல்லாத ஒரே முதலமைச்சர் என்ற 'விருதை' ஜெயலலிதாவுக்கு சங்பரிவாரங்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.



* 1992 டிசம்பர் 6லில் பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது ஜெயலலிதாவின் அரசு கடுமையாக நடந்து கொண்டது. அதிராம்பட்டினம், மேலப் பாளையம். கோவை போன்ற இடங்களில் பாபரி மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்து அமைதி வழியில் போராடிய முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்

ஜெயலலிதாவின் 1991லி1996 ஆட்சியில் முஸ்லிம்கள் மீது அடக்குமுறை தடாச் சட்டம் பாய்ச்சப் பட்டது. காயல்பட்டினத்தில் 'எச்சில் துப்பினார்' என்ற காரணத்தை(?) சுமத்தி ஒருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தார். 14 வயது முஸ்லிம் சிறுவன் மீதெல்லாம் 'தடா' சட்டம் பாய்ச்சப்பட்டது.
ஜெயலலிதாவின் 1991லி1996 ஆட்சியில் கோவை பள்ளிவாசல் இமாம் ஜியாவுதீனும், திண்டுக்கல்லில் பள்ளிவாசல் இமாம் காஸிமும், இராமநாதபுரத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்த கூரியூர் ஜின்னாவும் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் மீது சாதாரண கிரிமினல் வழக்குகளே பதிவு செய்யப்பட்டன. ஆனால் மதுரையில் ராஜகோபாலனை கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் மீது 'தடா' சட்டத்தைப் பாய்ச்சி அநீதியாக நடந்து கொண்டார் ஜெயலலிதா.
அதே வழக்கில் இன்று 'ஜெயா'வின் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் பாக்கர் என்பவரும் ஜெயலலிதாவால் 'தடா'வில் கைது செய்யப்பட்டார். அடுத்து ஜெயினுலாபிதீனும் கைது செய்யப்படும் சூழல் வந்தது. அப்போது அவரைக் காப்பாற்றியது த.மு.மு.க. என்ற கேடயம்தான்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் குற்றப்பரம்பரையாக சித்தரிக்கப்பட்டனர். கோவையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கோட்டைமேடு பகுதியில் 'போலீஸ் செக்போஸ்ட்' அமைத்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தார் ஜெயலலிதா. 1996லில் மீண்டும் கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற போதுதான் அந்த 'செக்லிபோஸ்ட்'கள் அகற்றப்பட்டன.

இன்றைய ஜெயலலிதா அரசின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள்

2002ஆம் ஆண்டில் சங்பரிவார் கும்பல் திருப்பூரில் கலவரம் செய்து முஸ்லிம்களின் பள்ளிவாசலை தீவைத்துக் கொளுத்தியது. 70 லட்சம் மதிப்புள்ள பனியன் கம்பெனிகளும் கொளுத்தப்பட்டன. 10 அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.
2002லில் அதிராம்பட்டினத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துகளில் முஸ்லிம்கள் மீது பழிபோட்டு, பொய் வழக்கு போட்டது ஜெயலலிதா அரசு.
2003லில் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் கள் மீது ஜெயலலிதா அரசின் காவல்துறை அத்துமீறி தாக்குதலை நடத்தியது. அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது.
3,000 முஸ்லிம்களைக் கொன்ற நரேந்திர மோடிக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களையும் வேதனைப்படுத்தினார் ஜெயலலிதா. பிறகு 2004ல், குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த பாஜகவுடன் தேர்தல் கூட்டு வைத்தார்.
2002லில் குஜராத்திற்குச் சென்று நரேந்திர மோடிக்கு பூங்கொத்து கொடுத்த ஜெயலலிதா, 2003லில் நரேந்திர மோடி கோவைக்கு வருகை தந்தபோது, முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தமுமுக நிர்வாகிகளை சிறைப் பிடித்தது.
2005லில், முத்துப்பேட்டையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பாஜகவினர் விநாயகர் ஊர்வலம் நடத்தினர். உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள் ளதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பஷீர் என்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்த ஜெயலலிதா அரசு, கலவரத்தில் நேரடியாகப் பங்குகொண்ட பாஜகவின் மாவட்டச் செயலாளர் கறுப்பு (எ) முருகானந்தத்தை அதே சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் பாரபட்சம் காட்டியது.
2005ல் பழனி பாலசமுத்திரம் பகுதியில் முஸ்லிம் களின் ஜனாஸாக்களை அடக்கவிடாமல் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம்களைத் துன்பத்தில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா.
இஸ்லாத்தை மனமுவந்து ஏற்கும் மக்களைத் தடுக்கும்விதமாக இந்தியா விலேயே முதன் முறையாக 'மதமாற்ற தடைச் சட்டத்தை'க் கொண்டு வந்து சங்பரிவாரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார் ஜெயலலிதா. ஜெயலலிதாவைப் பின்பற்றி பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா ஆட்சியில் கோவையில் சுல்தான் மீரான், அப்துல் சத்தார், சர்தார், கவுண்டம்பாளையம் அப்பாஸ் ஆகியோரும், விழுப்புரத்தில் பள்ளிவாசல் இமாம் உசேன் அவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். கோவையில் இமாம் ஒருவர் பயங்கரமாக தாக்கப்பட்டார். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கையை ஜெயலலிதா எடுக்கவில்லை.
பழனிபாபாவைக் கொன்றவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட்டவர் ஜெயலலிதா.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கடுமையாக எதிர்த்தவர்.
ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம் அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர்.
''அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும், பொதுசிவில் சட்டம் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறினார்.
முஸ்லிம், கிறித்ஸ்வ மற்றும் மதச்சார்பற்ற இந்துக்களுக்கு எதிராக திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சியை பிரவீண் தொகாடியா திருச்சியில் நடத்திட அனுமதி தந்தார் ஜெயலலிதா.
மார்ச் 2006ல் ''தமிழ்நாட்டை குஜராத் ஆக்குவோம்'' என்று வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் பேசியதற்கு நடவடிக்கை எடுக்காதவர் ஜெயலலிதா.
மார்ச் 2006லில் கடையநல்லூரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் ஏற்பட்ட சிறிய பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வு காணாமல் அங்கு நிரந்தரமாக தொழுகை நடைபெறுவதைத் தடுக்கும் வண்ணம் ஜெயலலிதா அரசு பூட்டு போட்டது.

குஜராத்தில் 3,000 முஸ்லிம்களைப் படுகொலை செய்த மாபாதகர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த ஜெயலலிதாவுக்கு வாக்கு அளிக்கலாமா?

கோவை சம்பவங்களை இப்போது சிலர் நினைவுபடுத்தி, திமுகவிற்கு நாம் வாக் களிக்கலாமா? என்று கேள்வி கேட்கிறார்கள். கோவை சம்பவத்தைத் தொடர்ந்து 1998லில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியை ஆதரித்ததை ஜெய்னுலாபுதீன் வட்டாரம் திட்டமிட்டே மறைத்து வருகிறது. அதைத் தொடர்ந்து 2001 சட்டமன்றத் தேர்தலில் கலவரம் நடைபெற்ற கோவை உள்ளிட்ட 100 தொகுதிகளில் அதிமுகவை எதிர்த்து திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்ததையும் 'ஜெய்னுலாபுதீன்' வட்டாரம் வசதியாக மறைக்கிறது! மேலும் 2004லில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுகவை ஆதரித்ததையும் அவர்களால் மறைக்க முடியாது.

அப்போதெல்லாம் திமுகவை ஆதரித்தவர்கள், இப்போது திடீரென திமுகவுக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் பெற்றுக் கொண்ட 'கமிஷன்'தான். தங்களின் சுயநல வாழ்வுக்காக சமுதாயத்தைக் கூறு போடு பவர்கள், அதற்காக அதிமுக செய்த கொடுமைகளை மறைத்துவிட்டனர்.



1999 ஜூலை 4ல் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் ஜெயலலிதா இருந்த போது, ''ஜெயலலிதா இருக்கும்வரை அந்த மேடைக்கே வரமாட்டேன்'' என்று கூறிய ஜெய்னுலாபுதீன், இன்று ''அதிமுகவுக்கு உயிரைக் கொடுத்து வேலை செய்வேன்'' என்று சபதமெடுத்தது போல் பிரச்சாரம் செய்கிறார்,

முஸ்லிம்களுக்கு துரோகம் செய்கிறார். அவரை அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரங் களில், ''அம்மாவின் போர்ப்படை தளபதி'' என்றே அறிமுகப்படுத்துகின்றனர். இதில் திரைமறைவில் நடந்த 'ரகசியம்' என்ன என்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும்.
கருணாநிதி - ஜெயலலிதாவைப் போல் சங்பரிவார் சிந்தனைக் கொண்டவர் அல்ல என்று கூறியவர்கள், இன்று ஜெயலலிதாவிடம் வாங்கிய கமிஷனுக்காக 'பிரச்சார வேலை' செய்து கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவின் பினாமி ஆட்சியாக நடந்துவரும் ஜெயலலிதா அரசை ஆதரிப்பதற் காக 3,000 முஸ்லிம்களைக் கொன்றொழித்த நரேந்திர மோடியின் செயலைக்கூட ஆதரித்துப் பேச முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் துணிந்து விட்டனர். இதைத்தான் சகிக்க முடியவில்லை.

சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!

கலைஞர் கருணாநிதி மீது நமக்கு விமர்சனங்கள் உண்டு. அதை நியாயப் படுத்தவில்லை. அவற்றை அன்றும் கண்டித்தோம், இன்றும் கண்டிக்கிறோம். அதேசமயம் இன்று கலைஞரின் நிலைப்பாடு மாறியிருக்கிறது. தனது தவறை ஒத்துக்கொள்ளும் விதமாக விருதுநகரில் நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டில் ''நாம் போகக்கூடாத இடத்திற்குப் போனது தவறுதான்'' என்று பேசினார். அதில் உறுதியாகவும் உள்ளார். அவரது செயல்பாட்டில் பல மாறுதல்கள் உள்ளன. ஆனால் ஜெயலலிதாவோ ''பாஜகவுடன் கூட்டு சேர மாட்டேன்'' என்று கூறிவிட்டு, மீண்டும் கூட்டு சேர்ந்து வாக்குறுதியை மீறி முஸ்லிம்களை வேதனைப்படுத்தினார்.

ஜெயலலிதா நம்பிக்கைக்குரியவர் அல்ல, அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ்லின் எண்ணங்களைத்தான் அமல்படுத்துவார் என்பதை சமுதாயம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஜெயலலிதா அரசினால் எல்லோருக்கும் துன்பம்!

வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோகக் காரணமாக இருந்தது
ஏழை விவசாயிகளை எலிக்கறி உண்ணும் நிலைக்குத் தள்ளியது
லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வஞ்சித்தது
போலீஸ் இலாகாவைப் பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டியது

என எல்லாத் தரப்பு மக்களையும் துன்பத்தில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா.

எனவே அன்பிற்கினிய சமுதாயமே... நமது சமுதாயத்திற்கு இடஒதுக்கீடும் தராமல், 8 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களுக்கு ஜாமீனும் வழங்காமல் ஆட்சியின் இறுதியில் நாடகமாடும் ஜெயலலிதா அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.

மத்திய மாநில அரசுகளில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு
சிறைவாசிகளுக்கு ஜாமீனில் விடுதலை

ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்திருக்கும் திமுக தலைமை யிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு நமது வாக்குகளை அளிப்போம்.
(சத்தியமா இது த.மு.மு.க வின் கட்டுரைதான் ஆனா படிச்சிட்டு மறந்துடணும் ஏன்னா இது போன தேர்தல் இது இந்த தேர்தல்)