இது உலக அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இந்தியாவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய நாடுகளின் விமானப்படையும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. லிபியா, வெனிசூலா உள்ளிட்ட பல நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. கடாபியை ஒழிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வந்த அமெரிக்காவுக்கு இதுவரை அது கை கூடவில்லை.
தற்போது லிபியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை தனக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக லிபியா மீது விமானத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் காக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒப்புதல் பெற்றது. இதுதொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை.
இந்தியா, உலக நாடுகள் கண்டனம் அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர. இது அத்துமீறிய தாக்குதல் என்று அவை வர்ணித்துள்ளன. வெனிசூலாவும் இதைக் கடுமையாக கண்டித்துள்ளது. இன்னொரு நாட்டின் மீது எப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம். இது அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான செயல் என்று வெனிசூலா அதிபர் சாவேஸ் கூறியுள்ளார். அமெரிக்காவின் தாக்குதலால் அரபு நாடுகளிலும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.