தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

தனியாக தொழுதால் பாங்கு அவசியமா ?

தனியாகவோ ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையை தொழுதால் அதற்கு பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டுமா ?
                      வீட்டில் கடமையான தொழுகையை ஜமாயத்தாகக் தொழுதாலும் தனியாக தொழுதாலும்  பாங்கும் இகாமத்தும் சொல்ல வேண்டும்.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது ”நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும், இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுவிக்கட்டும்” என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
           அறிவிப்பவர்,மாலிக் பின் ஹூவைரிஸ் (ரலி) நூல்.,புகாரி (2848)
               கூட்டுத் தொழுகை நடத்த வாய்ப்பு கிடைக்காமல் தனியாக தொழுதாலும் பாங்கும் இகாமத்தும் கூறியே தொழவேண்டும். பின்வரும் நபிமொழிகள் இவ்வாறு செய்வதைச் சிறப்பித்துக் கூறுகின்றது.
                அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்“.
     (மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான்.“ பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகின்றான். (ஆகவே) என் அடியானை நான் மன்னி்த்து விட்டேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான்.
                           அறிவிப்பவர், உக்பா பின் ஆமிர் (ரலி) நூல் . அபூதாவூத் 1017

நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந் போது அல்லாஹூ அக்பர் என்று ஒருவர் சொன்னதைச் செவியுற்றோம். (இதை செவியுற்ற) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் இயற்கை மார்க்கத்தில் உள்ளார் என்றார்கள். அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹூஎன்று கூறிய  போது இவர் நரகத்திலிருந்து தப்பித்து விட்டார் என்றார்கள். உடனே நாங்கள் அவரிடம் விரைந்து சென்றோம். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். தொழுகை நேரம் வந்தவுடன் அதற்காக பாங்கு கூறியுள்ளார்.
 அறிவிப்பவர். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல், அஹ்மது 3667