ஜப்பானை பாரிய பூமியதிர்ச்சி மற்றும் சுனாமி பேரலை தாக்கி 4 வாரங்கள் ஆகியது.
பின், சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட அனர்த்த வலயத்திலுள்ள வீடொன்றின் இடிபாடுகளுக்குள் இருந்து 75 வயது வயோதிபர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
குனியோ ஷிகா என்ற விவசாயியே இவ்வாறு தனது இடிந்த பண்ணை வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அவரது பண்ணை வீடானது புகுஷிமா அணுசக்தி நிலையத்தை சுற்றிவர மக்களை வெளியேறப் பணிக்கப்பட்ட 20 கிலோமீற்றர் தூரத்திற்குள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 11 ஆம் திகதி சுனாமி தாக்கியதையடுத்து சரிந்து விழுந்த மரங்கள், இறந்த பன்றிகள், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் சூழ்ந்து காணப்பட்ட இடிந்த வீட்டுக்குள் வெளியேற முடியாத நிலையில் குனியோ ஷிகா சிக்கிக் கொண்டார்.
மின்சாரமோ குடிநீரோ அற்ற நிலையில் வீட்டில் ஏற்கனவே சேமிக்கப்பட்டிருந்த உணவுகளை உண்டும் மென்பானங்களை அருந்தியும் அவர் உயிர் வாழ்ந்துள்ளார். அத்துடன் மிகலங்களால் இயக்கப்பட்ட வானொலி மூலம் அவர் ஒலிபரப்புகளை செவிமடுத்து வந்துள்ளார்.
சுனாமி அனர்த்தத்தின் போது அவரது மனைவி காணாமல் போயுள்ளார். புகுஷிமா அணுசக்தி நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு வெளியேறுவதாக எச்சரிக்கப்பட்டதையடுத்து குனியோ ஷிகாவின் வீட்டின் அருகில் குடியிருந்து சுனாமி அனர்த்தத்தில் உயிர் தப்பிய அயலவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்ததால் வீட்டில் தன்னந்தனியாக சிக்கியிருந்த குனியா ஷிகாவின் நிலையை எவரும் அறிய முடியாது போனது.
“சுனாமி எமது வீட்டை தாக்கிய போது எனது மனைவி இங்கே இருந்தார். அதன் பின் அவரைக் காணவில்லை. அவருக்கு என்ன நேர்ந்தது என எனக்குத் தெரியவில்லை” என்று அவர் கூறினார். சுனாமியையடுத்து இருளிலேயே பொழுதை அவர் கழித்துள்ளார். தன்னால் நடக்க முடியாததால் சேதமடைந்த வீட்டிலிருந்து வெளியேற முடியாது சிரமப்பட்டதாக தெரிவித்த குனியோ ஷிகா, தான் இருப்பது எவருக்குமே தெரியாமல் உயிரிழந்து விட நேரிடுமோ என அஞ்சியதாக கூறினார்.
இந்நிலையில் அவரை மினாமி ஸோமா நகரிலுள்ள அவரது இடிந்த வீட்டிலிருந்து பொலிஸார் வெளியேற்ற முயன்ற போது, அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். “”எனக்கு வயதாகிவிட்டது. தான் இங்கிருந்து சென்றால் யார் என்னைக் கவனித்துக் கொள்வார்கள்” என தெரிவித்து முரண்டு பிடித்த அவரை பொலிஸார் சமாதானப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றி அகதிகள் முகாமொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
thanks;newsonews