தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

எந்த வகையான முகத்திரையை பிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது?

ஹிஜாப் அணிவதில் பல வகை உள்ளது.அதில் எந்த ஹிஜாபை ஃபிரான்ஸ் அரசு தடை செய்கிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.இந்த படத்தில் உள்ள நான்கு முறையான ஹிஜாபையே(தலையை மறைப்பது) அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

(குறிப்p : இந்த அனைத்து வகையிலும் உடலை மறைப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.முகத்தை மறைப்பதில் தான் ஒவ்வொரு வகையும் வேறுபடுகின்றது.)

  1. ஹிஜாப் : முகத்தை மறைக்காமல் காது,தலைமுடி மற்றும் கழுதை மறைப்பதே  இந்த வகையை சேரும்.இந்த முறை தான் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.
  2. நிகாப் : உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் மெல்லிய துணியை பயன்படுத்துவதையே நிகாப் என்கின்றனர்.இது அரபு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் நடை முறையில் உள்ளது.
  3. சாடோர் : இந்த வகை ஈரான் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.படத்தை பார்த்து இதன் வடிவமைப்பை தெரிந்துக்கொள்ளுங்கள். 
  4. புர்கா : இந்த முழு அளவிலான ஆடை ஆப்கானிஸ்தான் பகுதியிலும் இந்தியாவில் சில பகுதியிலும் அதிகமாக நடைமுறையில் உள்ளது.உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் வலைகளை கொண்டிருக்கும் வகையே புர்கா எனப் படுகிறது.
நிகாப் மற்றும் புர்கா வகையையே ஃபிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது.முகத்தை மறைத்து தங்களுடைய அடையாளத்தை மறைப்பதினாலேயே இந்த வகையை ஃபிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது.