தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடந்த 08.04.2011 அன்று கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் TNTJ வினர் மீது அ.தி.மு.க.வினர் ஏவிய கூலிப்படையாக செயல்பட்டு வன்முறையை நிகழ்த்திய மனித நேய மக்கள் கட்சி, அதன் தோழமை அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ யினர்(வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நபர்கள்) மீது செக்சன் 147, 427, 323, 324 மற்றும் 506/2 வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் இது வரை கொலைவெறி தாக்குதல் நடத்திய ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லை. அவர்கள் தேர்தல் அன்றும் கூட சில அத்துமீறல்களிலும்,விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
அக்குற்றவாளிகள் இன்றளவும் சுதந்திரமாக சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.எனவே நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும், நடவடிக்கையை விரைந்து எடுக்க வலியுறுத்தியும் கடந்த 15.04.2011 வெள்ளிகிழமை மாலை 5 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத், மாவட்ட செயலாளர் நவ்சாத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மாநில பொதுசெயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தடையை மீறிய இந்த ஆர்பாட்டம் இறையருளால் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த செய்தி பத்திரிக்கைககளில் வெளியானது.