தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

நாடாளுமன்ற கூட்டத்தின்போது ஆபாச படம் பார்த்த எம்பி!

நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாவகாசமாக தன் கையடக்கக் கணினியில் ஆபாச படம் பார்த்த எம்பியின் செயல் இந்தோனேஷியாவில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில் பி.கே.எஸ். கட்சியின் எம்.பி. ஆக இருப்பவர் அரிபின்டோ. தற்போது இந்தோனேஷியாவில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தில் அரிபின்டோவும் கலந்து கொண்டார். கூட்டத்தின்போது காரசாரமான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.

இவ்வேளையில் மற்ற எம்.பி.க்கள் விவாதத்தில் கலந்து பேசிக் கொண்டிருந்த வேளையில், அரிபின்டோ தன் கையடக்க கணினியில் ஆபாச படங்களை ரசித்துக் கொண்டிருந்துள்ளார். நாடாளுமன்றத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்படக் கருவியில் இக்காட்சி பதிவானது. அது மட்டுமன்றி நாடாளுமன்றத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகும் இணைய தளத்திலும் இக்காட்சி வெளியானது.

இதனைக் கண்டுகொண்ட பத்திரிக்கைகள் எம்பி அரிபின்டோவின் நாகரீகமற்ற செயலுக்கு எதிராக விமர்சித்து எழுதின. இது மக்களிடையே பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது. அரிபின்டோவின் செயல்பாட்டுக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இவ்விவகராம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்ற கவுன்சில் துணை தலைவர் நுதிர் மன்முனீர் கூறும்போது,

"அவரது இந்தச் செயல் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், மதிப்பையும் இழுக்கு சேர்ப்பதாக உள்ளது. எனவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்வது நல்லது. இல்லாவிட்டால் அவர் எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அரிபின்டோ, "மின்னஞ்சலைத் திறந்துபோது ஆபாச படங்கள் வெளியாகி விட்டன. நான் வேண்டுமென்றே அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை" என தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                         inneram